வெள்ளி, ஜூலை 22, 2011

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....




ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....



எனது செல் போன் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ .... என்று அழைக்க ஆரம்பிக்க (எனது செல் ரிங் டோன் அது தான் ) நான் கையில் எடுத்து நம்பர் பார்க்கிறேன்

ஏதோ புது நம்பர், யாராயிருக்கும் என்ற யோசனையில் ஆன் செய்து

ஹலோ என்கிறேன்

ஆர்.வி.சரவணன் தானே பேசறது

என்று ஒரு வசீகர குரல் கேட்கிறது

நான் தயக்கமாய்
ஆமாம் நீங்க என்கிறேன்

நான் ரஜினிகாந்த் பேசறேன்

என்ற குரலை கேட்டு ஒரு விநாடி சிலையாகிறேன் உடனே சுறுசுறுப்பாகி யாராவது என்னை கிண்டல் பண்றதுக்காக பேசறாங்களோ
என்று மனம் தயக்கமடைகிறது அடுத்து என்ன பேசுவது என்று நான் தடுமாறுகிறேன்

என்னப்பா நம்பலையா நீ நிஜமா நான் தான் பேசறேன்

என்று கூறி அவருக்கே உரிய அந்த சிரிப்பொன்றை உதிர்க்கவும் நிஜம் தான் என்று என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது
நான் சந்தோசத்தின் உச்சிக்கு செல்கிறேன் எனக்கு திடீரென்று சிறகுகள்
முளைத்தது போல் தோன்றுகிறது

மீண்டும் அவர் என்னப்பா ஒன்னும் பேச மாட்டேங்குறே என்கிறார்

சந்தோசத்தில் பேச வாய் வரவில்லை
தலைவா

என்கிறேன்

நான் போனில் பேச வந்ததும் உனக்கு வாய் பேச வரவில்லையோ

ஆம் தலைவா சாதாரண மனிதன் நான் இந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சிருக்கே அதான்

நீயே ஏன் உன்னை தாழ்த்திக்கிரே

உண்மை அது தானே
தலைவா

தன்னடக்கமா தான் பேசறே

உங்க கிட்டே கத்துகிட்டது தான் தலைவா

ஹா ஹா

என்று சிரிக்கும் அவர்

தலைவான்னு சொல்லாதே
அது என்னை உங்களிடமிருந்து அந்நியப்படுத்துவது போல் இருக்கு அதனாலே அண்ணா னே சொல்லு

சரி தலைவா ச்சீ அண்ணா

அப்புறம் எப்படி இருக்கே வீட்டில் எல்லோரும் சவுக்கியமா

நாங்க நல்லா இருக்கோம்
என்னை விடுங்க அண்ணே நான் தான் உங்க கிட்டே கேட்கணும் நீங்க எப்படி இருக்கீங்க உங்கள் உடல் நலம் எப்படியிருக்கு

இப்ப நான் உன் கிட்டே பேசறேனே எப்படி தெரியுது

எப்போதும் போல் நல்லா தான் பேசறீங்க அண்ணே, உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நண்பர்கள் நாங்க எல்லோரும் உங்களை பார்க்க ஏர்போர்ட் வந்திருந்தோம்

அப்படியா என்னை பார்த்தீங்களா ஆச்சரியமாய் கேட்கிறார்

நான் மட்டும் பார்க்க முடியலை

ஏன்

ரசிகர் வெள்ளத்தில் உங்கள் கார் சூழ்ந்ததில் நான் பின்னுக்கு தள்ளப்பட்டேன் நான் நெருங்கி முன்னேறி வர முடியலை உங்களை பார்க்க முடியாம மனசு கஷ்டமாகி ஒரு நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் மூட் அவுட் லே இருந்தேன்

டோன்ட் வொர்ரி அதான் இப்ப போன்லே பேசறேனே

சொல்ல போனா நான் உங்க ரசிகன் தான் ஆனா என்னை விட எத்தனையோ கோடிகணக்கான ரசிகர்கள் உங்க மேல உயிரா இருக்காங்க இருந்தும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குதே ரொம்ப சந்தோசமாவும் இருக்கு அதே நேரத்திலே நீங்க என்கிட்டே பேசினதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கலே னு தவிப்பாவும் இருக்கு

கண்ணா , ஒரு தாய் தன் பிள்ளைகளை ஒண்ணா தான் நினைப்பாள் நானும் அப்படி தான் என்னோட ரசிகர்கள் அத்தனை போரையும் ஒண்ணா தான் நினைக்கிறேன் என்னோட ரசிகர்கள் சாம்ராஜ்யத்தில் பணக்காரன் ஏழை என்ற எந்த பேதமும் கிடையாது எல்லோரும் ஒண்ணு தான்

சரி அண்ணே என்னை எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு

அதுவா ரசிகர்கள் நிறைய பேர் இணைய தளத்தில்
எழுதறதா சொன்னாங்க சரின்னு இணைய தளம் ஓபன் பண்ணி பார்த்துகிட்டிருந்தேன்
அதுலே உன் ப்ளாக் பார்த்தேன்
என்னை பற்றி நீ எழுதியுள்ள பதிவும் படிச்சேன்
உடனே பேசணும்னு தோணிச்சு போன் பண்ணிட்டேன்

god gift இது எனக்கு

என் கிட்டே ஏதாச்சும் கேட்கணும்னா கேள் சரவணா


உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க ரசிகர்களை சந்திக்கணும் அவங்க கூட பேசி மகிழணும் மகிழ வைக்கணும் அப்படி ஒரு ரசிகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணீங்கன்னா என் முறை வர ஒரு வருஷம் ஆனாலும் சரி ரெண்டு வருஷம் ஆனாலும் சரி உங்களை சந்திக்க காத்துகிட்டிருப்பேன்

ஹேய் குட் யா ஏற்பாடு பண்ணலாம் வேற என்ன சொல்லு

அண்ணே எனக்கு அறிவுரை ஏதாச்சும் சொல்லுங்களேன்

நான் என்னப்பா சொல்றது உன் வாழ்க்கை உன் கையில் இருக்கு

அண்ணே எனக்காக ஒன்று ஸ்பெஷல் லா சொல்லுங்களேன்

அப்படியா

என்று ஒரு விநாடி யோசிப்பவர்

நீ சுவற்றில் விட்டெரியும் பந்து போன்றது தான் நீ செய்யும் நன்மையும் தீமையும் உன்னிடமே திரும்பி வரும் ஆகவே கவனமாய் இரு நன்மையை மட்டும் செய்
ஹவ் இஸ் இட்

சூப்பர்
ஓகே சரவணா உன் குடும்பம் தான் உனக்கு முக்கியம் முதல்லே அதை பார் அப்புறம் என்னை பார்க்கலாம் சரியா

என்ன அண்ணே இப்படி பிரிச்சு பேசறீங்க எங்க குடும்பத்திலே நீங்களும் ஒருத்தர் அதனாலே குடும்பத்தோடு சேர்த்து உங்களையும் நல்ல படியா பார்த்துக்குவோம்

என்று நான் சொன்னவுடன்

வெரி குட் ஐ லைக் இட் என்று சொல்லி

அவருக்கே உரித்தான அந்த சிரிப்பை
மீண்டும் உதிர்த்து

வாழ்த்துக்கள் ஆர்.வி. சரவணன்
அப்புறம் பார்க்கலாம் வச்சிரட்டா


என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்

நான் போனை கீழே வைக்க கூட மனமில்லாமல் கையிலேயே வைத்து கொண்டிருக்கிறேன்

திடீரென்று விழிப்பு வருகிறது எனக்கு

தூக்கத்தில் கனவு கண்டிருக்கிறேன் என்பது புரிகிறது

அட இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா

ஏமாற்றத்தில் என் மனம் சோர்வடைகிறது

கனவு தான் இது என்றாலும்
என் வாழ் நாளின்

இனிமையான

சுகமான

முக்கியமான

கனவுகளில்ஒன்றாய் இது இருந்து விடட்டும்

ஆர்.வி.சரவணன்

*****
நமது நண்பர் ஜீவதர்ஷன் எழுதிய ரஜினி, ரசிகர்கள் கற்பனை சந்திப்பு பதிவு தான் இந்த பதிவிற்கான inspiration

நன்றி
ஜீவதர்ஷன்

*****

20 கருத்துகள்:

  1. sir migavum arumaiyaana padhivu...
    migavum rasithen...
    kanavu ninaivaagattum...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ஆர்.வி. சரவணன்
    அப்புறம் பார்க்கலாம் வச்சிரட்டா

    அழகான கனவு...

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு பாசமுள்ள ரசிகர்களும் இருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது!!!!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  6. நன்றி
    ஜீவதர்ஷன்

    http://eppoodi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. நீங்க எனக்கு நன்றி சொல்லியிருக்க தேவையில்லை!!!

    அருமையான கனவு, ஒருநாள் தலைவர் உங்களுக்கு உண்மையிலேயே அழைப்பை ஏற்ப்படுத்தி ஆச்சரியத்தை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. அழகான கனவு! கனவு நனவாக‌ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நான்கூட உண்மையோன்னு நெனைச்சேன்.
    உங்கள் கனவு பலிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  10. சில கனவுகள் வாழ்க்கைக்கு சுவரஸ்யம் அளிப்பவை... ரஜினியுடன் உங்களின் கனவு நனவாக வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. தாங்கள் சொல்லிச் செல்லும் விதம் அருமை
    நீங்கள் கடைசியில் கனவு எனச் சொல்லாதவரையில்
    நிஜம் எனத்தான் நினைத்துக்கொண்டேன்
    காரணம் நீங்கள் அவர் பாணியிலேயே
    சொல்லிப்போனது
    இரண்டாவது தலைவரும் அப்படித்தான்
    திடீரென வாய்ப்பிருந்தால் பேசக்கூடியவர்தான்
    நல்ல சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. ஒருநாள் தலைவர் உங்களுக்கு உண்மையிலேயே அழைப்பை ஏற்ப்படுத்தி ஆச்சரியத்தை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.


    அப்படியா சொல்றீங்க ஜீவதர்ஷன் தாங்க்ஸ் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரியா
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  14. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சிவகுமாரன்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்டீபன்

    பதிலளிநீக்கு
  15. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி சார்

    பதிலளிநீக்கு
  16. சரவணன் கவலையே படாதீங்க! நாம் தலைவர சந்தித்து விடுவோம் :-)

    கனவல்ல நிஜமாக்கிடுவோம் ;-)

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு (கனவு)... கலக்கிடீங்க சரவணன் சார்...
    எனகென்னமோ நீங்க நிஜமாவே தலைவர் கிட்ட பேசிட்டு கனவுன்னு சொல்ற மாதிரி இருக்கு... :-)
    நாங்களும் உங்களுடன் சேர்ந்து தலைவர்கிட்ட பேசின மாதிரி ஒரு உணர்வை எற்படுதிடீங்க... நன்றி...
    இந்த மாதிரி ஒரு கனவு வந்த 24 மணி நேரமும் துன்கிடே இருக்கலாம் போலருக்கே.. இந்த கனவு விரைவில் நிஜமாக வாழ்த்துக்கள்...
    அடிகடி கனவு காணுங்க சரவணன் சார்...

    அன்புடன்
    ஆனந்த்

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாஆகஸ்ட் 01, 2011 2:28 AM

    உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கிறது. இப்படி ஒரு ப்ளாக் இருப்பதே இப்போது தான் என் வழி மூலமாக தெரியவந்தது.
    இது கனவு அல்ல. நீங்கள் தலைவரிடத்தில் உள்ள அன்பின் வெளிப்பாடு. இக்கனவு ஒரு நாள் பலிக்கும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்