செவ்வாய், மே 31, 2011

நட்புக்குத் தங்க மனசு


நட்புக்குத் தங்க மனசு

நட்பை அவமரியாதை செய்யும் செயல் இது என்று முனுமுனுத்தான் கார்த்திக்

கோவை செல்லும் ரயிலில் மனம் முழுக்க சந்தோசமாய் ஏறியவன் தான், சிறிது நேரத்திலேயே வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சலிப்படைந்து இவ்வாறு கூறினான்

அவன் அப்படி சலிபடைந்ததன் காரணம் என்னவென்றால் கல்லுரி காலங்களில் அவன் கூட படித்த உயிர் தோழி கீதா வுடனான நட்பு படித்து முடித்து வேலைக்காக சென்னை வந்த பின் தொடர முடியாமல் விட்டு போனது. சமீபத்தில் அவளது உறவினர் ஒருவரை பார்க்க நேர்ந்த போது அவர் கோவையில் இருப்பதாக சொல்லவே ,இவன் உடனே செல் நம்பர் வாங்கி போன் செய்து பேசினான்

பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.

கீதாவும் அவள் கணவரும் எப்பொழுது வருகிறீர்கள் என்று அழைப்பு விடுக்கவே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவளுக்கு அவள் கணவருக்கு குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் வாங்கி கொண்டு சந்தோசமாய் கிளம்பியவன், தான் கிளம்பி விட்டதை உறுதிபடுத்த போன் செய்தான்

சுவிட்ச் ஆப் என்றதும் டென்சனாகி தொடர்ந்து அரை மணி நேரமாக முயற்சித்தும் அதே பதிலால் சலிப்படைந்து போய் சொன்ன வார்த்தை தான் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது

சரி என்று அவளது கணவர் செல்லுக்கு முயன்றான் அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிவிக்க, அவர்களுக்காக வாங்கி கொண்டு செல்லும் பொருட்கள் அவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது

"அப்பொழுதே அவன் மனைவி உமா ,நீங்க உங்க தோழியை பார்க்க போவதற்கும் அவர் கூட பழகுவதற்கும் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் கீதாவின் கணவர் இதை எப்படி எடுத்து கொள்கிறார் என்பதை தீர விசாரித்து கொண்டு செல்லுங்கள்" என்று சொன்னாள்

ஒருவேளை தான் யோசிக்காமல் கிளம்பி விட்டோமோ கீதாவின் கணவர் தான் பழகுவதை விரும்பவில்லையா இல்லையே நல்லா தானே பேசினார் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாரே ஒருவேளை ஒப்புக்கு அழைத்திருப்பாரோ தாம் உடனே கிளமிபியது தப்போ என்று எந்த அளவுக்கு குழப்பி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன் மனதை குழப்பி கொண்டான். கோவை சென்று இறங்கி அடுத்த ரயில் பிடித்து உடனே திரும்ப வேண்டியது தான் என்று மனசு வெறுத்து போய் முடிவும் செய்து கொண்டான்.

அப்பொழுது பார்த்து போன் அடிக்கவே எடுத்து பார்த்தான். ஏதோ புது நம்பர் ஹலோ சொன்னான்.எதிர்முனையில் பேசியது ஒன்றும் புரியாமல் போகவே கடுப்பாகி போனை கட் செய்தான் மீண்டும் சிறிது நேரம் சென்ற பின் செல் அடிக்கவே எடுத்து பார்த்தால் அது கீதாவின் நம்பர்.

"இது தான் உன் நட்பின் லட்சணமா நான் வர்றது பிடிக்கலைனா வராதே னு சொல்லலாம் இல்லே அதை விட்டுட்டு வர சொல்லிட்டு இப்படி போன் ஆப் பண்ணா என்ன அர்த்தம் "என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான்

இதையெல்லாம் கேட்ட அவள் "அப்ப இருந்த அந்த உன் முன் கோபம் அப்படியே இருக்கு ஆனால் என் மேலே உள்ள நம்பிக்கை தான் குறைஞ்சிடிச்சு உனக்கு. முதல்லே என்ன நடந்துச்சின்னு கேளு " என்றாள்

"அதான் இப்ப அனுபவப்பட்டேனேஅப்புறம் அதை நீ சொல்லி வேறே தெரிஞ்சிக்கனுமா "என்றான் கடுப்பில்

"இதோ பார் நீயா எதுனா நினைச்சுகிட்டு பேசாதே அப்புறம் உனக்கு வர கோபம் எனக்கும் வரும் நானும் பேசுவேன் "என்றவள்

"என் பையன் செல் போனை கை தவறி தண்ணீரில் போட்டு விட்டான் அதை எடுத்து துடைச்சி என்ன தான் ஆன் பண்ணாலும் ஆன் ஆகலே நீ போன் பண்ணுவியே என்று டென்சன் ஆகி உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அவங்க போன் வாங்கி உனக்கு பண்ணேன் நீ ஹலோ னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டே நான் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்த என் கணவருக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி உனக்கு போன் பண்ண சொல்லலாம் னு பார்த்தா அவர் லைனும் கிடைக்கலே சரி என்று உடனே எங்க தெரு முனையில் இருக்கும் செல் ஷோ ரூம் போய் புது மொபைல் போன் வாங்கி சிம் கார்டை போட்டு உனக்கு போன் பண்ணி பேசறேன் நீ என்னடான்னா நம்ம நட்பையே கேவலபடுத்தர மாதிரி பேசறே "

என்று அவள் இப்போது எகிற ஆரம்பித்தாள்

இவன் சாரி என்று சொல்ல சொல்ல எனக்கு "சாரி எல்லாம் நீ தர வேணாம் என் கணவர் இருக்கிறார் அதை வாங்கி ஆசையாய் தருவதற்கு "என்று கோபமாய் சொன்னாள்

சரி புது மொபைல் பில் காசு நான் தந்திடறேன் இது தான் எனக்கு
தண்டனை ஓகே யா என்றான் சிரிப்புடன்

அவள் கோபம் குறைந்து சிரித்து கொண்டே

"அட என் நண்பனே நீ என் போனை எதிர்பார்த்து தவிக்க கூடாது என்பதற்காகவும் என் நட்பை அந்த நேரத்தில் உறுதிபடுத்தவும் நான் கொடுத்த விலை தான் இந்த மொபைல் போன் காசு என்று பெருமையாய் சொன்னாள்

ஆர்.வி.சரவணன்

17 கருத்துகள்:

  1. அருமையான நட்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிறுகதை, அதற்கேற்ற தலைப்பு, நல்லா எழுதி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  3. சூப்பராயிருக்குங்க.. ரெண்டுபேர் உரையாடல்லயும் கலக்கியிருக்கீங்க.. ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  4. க‌தை ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌ர‌வ‌ண‌ன்..

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  6. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ராஜராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்

    பதிலளிநீக்கு
  9. இப்படிப்பட்ட நட்பு வாழ்க!
    இது உங்கள் அனுபவமா?
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. சரியான தலைப்பும் அதற்கேற்ற வரிகளும் ...
    இது போன்ற நிகழ்வுகளை படிக்கும் போதே நெகிழ்ந்து போகிறேன் ...

    பதிலளிநீக்கு
  11. இப்படிப்பட்ட நட்பு வாழ்க!
    இது உங்கள் அனுபவமா?//

    அக்கா சரியான கேள்வி ...
    இன்னும் கேளுங்க .////

    பதிலளிநீக்கு
  12. இப்படிப்பட்ட நட்பு வாழ்க!
    இது உங்கள் அனுபவமா?
    வாழ்த்துக்கள்!

    ஆம் கொஞ்சம் உண்மை கதை தான்


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  14. படிக்கும் போதே காட்சிகள் தெரியுதுங்க பால்ய கால நட்பை மறவாத ஆணும் பெண்ணும் எப்படி இருப்பார்களோ அதை படம் பிடித்து காட்டிய வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  15. வலைச்சரம் மூலம் வந்தேன். அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    நட்பை நல்லபடியாக காப்பாற்றிவிட்டீர்கள், பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  16. இப்படியான நட்பு அதீதம்.... நட்பு அருமையாகத் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்