
விளையாடிய பொழுதுகளில்
அன்பே
சிறுவயதில்
விளையாடிய பொழுதுகளில்
நாம் எங்கு சென்றாலும்
நிலா தொடர்வதை கண்டு
அதிசயித்தோம்
நான் வாசலிலும்
நீ பின் வாசலிலும்
நின்று
நிலவை உற்று
கவனித்தோம்
நிலா
அங்கும் இருந்தது
இங்கும் இருந்தது
இரு பக்கமும் இருப்பதாக
சொல்லி கொண்டதால்
இருவர் சொல்வதும்
பொய்யென்று
சண்டையிட்டு கொண்டோம்
இன்று அதை நினைக்கையில்
நாம் சிரித்து கொள்கிறோம்
நாம் சிரிப்பது இருக்கட்டும்
அன்று
நிலா நம்மை பார்த்தல்லவா
சிரித்திருக்கும்
ஆர்.வி.சரவணன்
**********
ஆடுகளம் படம் பார்த்தேன்
வெற்றி மாறனின் பொல்லாதவன் படம்
பார்த்து விட்டு
ஆடுகளம் படத்தின் மேல்
கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருந்தேன்
வெற்றிமாறன் பெயருக்கேற்றார் போல்
வெற்றி களம்
கண்டிருக்கிறார்
படத்தில்தனுஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்
இல்லை இல்லை
கருப்பு வாகவே
மாறியிருக்கிறார்
வாழ்த்துக்கள் தனுஷ் ,வெற்றிமாறன்
ஆடுகளம் படம் பற்றி நான் ஏற்கனவே இடுகையில் குறிப்பிட்டது இது
தேசிய விருதுகளை குவித்திருக்கும் ஆடுகளம் திரைப்பட குழுவினருக்கு
எனது வாழ்த்துக்கள்
**********
உண்மைதான் சார் ..
பதிலளிநீக்குபால்யகால நினைவுகளை கண் முன் நிறுத்தி விட்டிர்கள் ...
மிகவும் ரசித்தேன் ..
நன்றி ..
Nanbare! Kavithai arumai!
பதிலளிநீக்குநினைவுகள் நல்லாயிருக்குங்க....... :)
பதிலளிநீக்குரசிக்கக் கூடிய அனுபவம்!
பதிலளிநீக்கு