திங்கள், டிசம்பர் 27, 2010

சங்கமம் 2010


சங்கமம் 2010

ஈரோட்டில் நடைபெற்ற சங்கமம் விழாவில் கலந்து கொள்ள நான் மிகுந்த ஆர்வமுடன் சென்றிருந்தேன்.

ஈரோடு வழியே மற்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் ஈரோட்டில் நான் சென்று தங்குவது இது தான் முதல் முறை

தங்குமிடம் , போக்குவரது உணவு உபசரிப்பு என்று அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ஈரோடு தமிழ் வலை பதிவாளர்கள் குழுமத்தினர்


உதாரணம் ஈரோடு சென்று நான் இறங்கும் போது புது ஊர் என்பதால் எனக்கு தயக்கம் இருந்தது ஆனால் நண்பர் பாலாசி ,ஜாபர் ஆகியோருக்கு போன் செய்தவுடன் ஹோட்டல் பெயர் சொல்லி எனக்கான ரூம் கொடுத்து என் தயக்கத்தை முற்றிலுமாக தகர்த்து ஊருக்கு நான் புதுசு என்ற எண்ணத்தையே ஒரு மணி நேரத்திற்குள் மாற்றி விட்டனர் .

ஈரோடு கதிர் ஹோட்டல் அறைக்கு வந்திருந்து நட்புடன் விசாரித்தார்ஈரோடு கதிர் ,பாலாசி, சங்கவி, பிரபாகர், ஜாக்கி சேகர், கார்த்திகை பாண்டியன், பரிசல்காரன், வலைச்சரம் சீனா ,வால்பையன், இன்னும் ஏனையோரை நேரில் சந்தித்தது ஒரு புதுமையான இனிமையான அனுபவமாகவே இருந்தது

நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த தலைப்புகள் அனைத்தும் பயனுள்ளவை என்றால் அதற்க்கு உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் சுவை பட உரையாற்றி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் துணை புரிந்தனர்.

பதிவர்களின் கலந்துரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது

எழுத்துலகம் மேல் தீராத தாகம் கொண்ட என்னை இந்த விழா ஈரோட்டுக்கு
எனை ஈர்த்தது பல புதிய நட்புகளை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது
எழுத்துலகின் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வத்தை இன்னும் பல படிகளுக்கு உயர்த்தியிருக்கிறது

என்னை பதிவுலகில் மென் மேலும் வலுப்படுத்த இது உதவும்

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

ஆர்.வி.சரவணன்

16 கருத்துகள்:

 1. நிச்சயமாக உங்களின் வருகையும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது அன்பரே..

  பதிலளிநீக்கு
 2. உங்களை சந்தித்ததிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. நம்மால கலந்துக்க முடியலியே என்ற வருத்தம் தான் சார் எனக்கு கண்டிப்பா அடுத்த வருடமாவது கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கிறேன் எல்லாம் அவன் செயல்

  பதிலளிநீக்கு
 5. ந‌ல்ல ப‌கிர்வுங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 6. நமக்கான விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு
  குழுமம் சார்பாக நன்றி.

  பதிலளிநீக்கு
 7. //பகிர்விற்கு நன்றி, நீங்கள் அஜித் ரசிகரோ ? //

  உங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும்

  பதிலளிநீக்கு
 8. விறுவிறுப்பாய், சுவைபட பதிவர் சந்திப்பை
  விளக்கினீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 9. சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சிங்க சரவணன்

  பதிலளிநீக்கு
 10. இன்னும் சற்று விரிவாக படங்களுடன் எழுதி இருக்கலாமே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சரவணன்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி பாலாசி

  நன்றி சங்கவி

  கண்டிப்பா அடுத்த வருடம் கலந்துக்குங்க தினேஷ் நன்றி

  நன்றி இர்ஷாத்

  பதிலளிநீக்கு
 12. நன்றி தாமோதர் சந்துரு

  நன்றி ஜீவதர்ஷன் எதுக்கு கேட்கறீங்க அஜித் ரசிகரான்னு

  நன்றி நிஜாமுதீன்

  நன்றி ஈரோடு கதிர்

  நன்றி சுசி

  நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 13. நன்றி சைவ கொத்துபரோட்டா நான் கேமரா கொண்டு செல்லவில்லை எனவே என்னால் படங்கள் எடுக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்