வியாழன், மார்ச் 25, 2010


அன்பே


சிறுவயதில் விளையாடிய பொழுதுகளில்


நாம்எங்கு சென்றாலும் நிலா தொடர்வதை கண்டு அதிசயித்தோம்


நான் வாசலிலும் நீ பின் வாசலிலும் நின்று


நிலவை உற்று கவனித்தோம்


நிலா


அங்கும் இருந்தது இங்கும் இருந்தது


இரு பக்கமும் இருப்பதாக சொல்லி கொண்டதில்


இருவர் சொல்வதும் பொய்யென்று சண்டையிட்டு கொண்டோம்


இன்று அதை நினைக்கையில் நாம் சிரித்து கொள்கிறோம்


நாம் சிரிப்பது இருக்கட்டும்


அன்று


நிலா நம்மை பார்த்தல்லவா சிரித்திருக்கும்


r.v.saravanan

1 கருத்து:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்