வெள்ளி, மே 20, 2016

வீடெங்கும் திண்ணை வைத்து ....வீடெங்கும் திண்ணை வைத்து ....நண்பர் துளசிதரன் ஒவ்வொரு வருடமும் மே மாதம்  ஒரு குறும்படம் எடுப்பது வழக்கம். அவருடன் நான் அறிமுகமாகிய இந்த மூன்று வருடங்களில் அவரது மூன்று படங்களின் படபிடிப்பில் பங்கு கொண்டு விட்டேன். ( பரோட்டா கார்த்திக், பொயட் த கிரேட், செயின்ட் த கிரேட் ) இதில் முன்றாவது குறும்படமான செயின்ட் த கிரேட் குறும்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பாலக்காட்டில், திருநல்லாயி என்ற இடத்தில் நடைபெற்றது. கோவை ஆவியும் நானும் சென்றிருந்தோம். இங்கே நான் குறிப்பிடபோவது படப்பிடிப்பை பற்றியோ குறும்படத்தை பற்றியோ அல்ல. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு தெருவை  பற்றி தான் இந்த பதிவில் சொல்ல இருக்கிறேன்.காலையில் நாங்கள் சென்று இறங்கிய போது இது ஏதடா, எதாவது சினிமா செட் போட்ட இடத்திற்கு தான் வந்து விட்டோமா என்று தான்  ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி எல்லாம் இல்லை எனும் போது என் ஆச்சரியம் பல மடங்கானது. காரணம் சொல்லாமல் நான் ஆச்சரியத்தை அடுக்கி கொண்டே சென்றால் நீங்கள் சலிப்படைய கூடும் . ஆகவே விசயத்துக்கு வருகிறேன். 

அந்த தெருவின் சிறப்பே, தெருவின் இரு புறமும் உள்ள வீடுகள் அனைத்துமே திண்ணை வைத்து கட்டபட்டிருந்த  ஓட்டு வீடுகள். மாடி வீடாக இருந்தால் கூட
திண்ணைக்கு மட்டுமாவது கட்டாயம் ஓடு போடப்பட்டிருக்கிறது. 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடுகள் அனைத்தும் முன்னே பின்னே என்றில்லாமல் ஒரே சீராக வரிசையாய் கட்டப்பட்டிருப்பது தான்.(ஓரிரு வீடுகளில் அப்படி இருக்கலாம்)

அந்த தெருவை பார்க்கையில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒரு செட் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கே தான் படப்பிடிப்பு என்றவுடன் எனக்கு குதுகலம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில வீடுகளின் திண்ணையில் சென்று (வீட்டாரின் அனுமதி பெற்று) அமர்ந்தபடி படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். அந்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.


அன்று முழுதும் சிறு வயது ஞாபகங்களின் கரம் பிடித்த படியே அலைந்து கொண்டிருந்தது மனசு. மாலை அங்கிருந்து கிளம்பிய போது, வர மறுத்து அடம் பிடித்த மனசை அதட்டி தான் அழைத்து வர வேண்டியதாயிற்று.

ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

 1. அற்புதமான செய்தி
  படங்களுடன் பகிர்ந்த விதம்
  எங்கள் மனங்களையும்
  கொள்ளை கொண்டது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. எங்களது பழைய வீட்டில் திண்னை உண்டு
  பழைய நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன நண்பரே

  பதிலளிநீக்கு
 3. எங்கள் வீட்டிலும் திண்ணை உண்டு ... பதிவு அருமை http://ethilumpudhumai.blogspot.in/... தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. அருமையான இடம் சார். எனக்கும் எங்கள் ஊர்தான் நினைவுக்கு வந்தது. அந்த வீடுகளின் ஷூட்டிங்க் எடுக்கப்பட்ட வீட்டு வரிசைகளின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் வீடுகளின் பின் புறம், கொல்லைப்புறத்தின் பின்னால் ஆறு சார்...அருமையான இடம் சார்....

  கீதா

  பதிலளிநீக்கு
 5. நான் பிறந்த ஆங்கரை கிராமத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று இருந்தபோது பார்த்தேன்.
  எங்கள் சித்தப்பா வீட்டுத் திண்ணை மட்டும் அல்ல, அந்த வீதியின் வீடுகள் அனைத்திலுமே திண்ணைகள் இன்னமும்
  வரவேற்பு மையங்களாக திகழ்கின்றன.

  அந்தக் காலத்தில்
  சீட்டாட்டமும் சிந்தனை மேடையும்,
  திண்ணை தான்.

  அடடா !1 நானும் படங்கள் எடுத்து வந்திருக்கலாம் .

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் திண்ணை உண்டு. தஞ்சாவூரில் கடந்த மகாமகத்தின்போது வீடு கட்டியபோது திண்ணைக்கு பதிலாக எவரும் வந்து அமரும் வகையில், கட்டியுள்ளேன். திண்ணையாக எங்களுக்கு அவை உதவுகின்றன.

  பதிலளிநீக்கு
 7. திண்ணை வைத்த வீடுகள் இப்போதெல்லாம் காண்பது அரிதாகி வருகிறது! எங்கள் வீட்டிலும் முன்பு திண்ணை இருந்தது. அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. திண்ணை வீடுகள்..... ஆஹா அது ஒரு சுகம்.....

  பதிலளிநீக்கு
 9. இப்போது திண்ணைகள் இல்லாது போகின்ற நிலையில் இன்னும் பாரம்பரியம் பேனும் கிராமத்தை பாராட்ட வேண்டும் அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்