ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

ஸ்வீட் காரம் காபி

ஸ்வீட் காரம் காபி

இந்த தலைப்பை பார்த்ததும் என்னடா நீ ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம்  இந்த தலைப்புல எழுதறே னு நீங்க சலிச்சுகிட்டே சொல்ற மைண்ட் வாய்ஸ் எனக்கு  கேட்டிருச்சு. 
அகம்புறம் குறும்படத்தின் வேலைகள் எழுதுவதை தள்ளி வச்சிடுச்சு. னு காரணம் சொல்லிகிட்டு இருக்கும் போது , சரி சரி விசயத்துக்கு வாங்க னு மனசு குமாரும் நிஜாமுதீனும் மைன்ட் வாய்ஸில் சொல்வதால் விசயத்துக்கு வரேன்.


சமீபமா படம் ஒண்ணுமே பார்க்கல. கடைசியா பார்த்தது  பாகுபலி. நண்பர் அரசனும் நானும் போயிருந்தோம்.வரலாற்று கதைகள் படிப்பதில் எனக்கு செம இண்டரெஸ்ட்.கூடவே ராஜமௌலி டைரக்சன் என்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறா இருந்துச்சு. எப்படி கொடுத்தா ரசிப்பாங்க என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் ராஜமௌலி . நான்  ரொம்ப ரசிச்சது  போர்க்கள காட்சிகள் மற்றும் கவிதையா தந்திருக்கும் லவ் போர்ஷன் தான்.  பாகுபலியின் கேரக்டர் வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.அவன்  மக்கள் மேல் பிரியம் கொண்டவன் என்பதை  பாடலிலோ வசனங்களிலோ காட்டாமல்  காட்சியாய் காட்டியது.   போர்க்களத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எதிரிகளை சாய்ப்பதை உதரணமாக சொல்லலாம்.  (பாகுபலியின் தோள் மீது சிவலிங்கத்தை ஏற்றியது போல் திரைக்கதையின் தோள் மீது இன்னும் வலு சேர்த்திருக்கலாம்) ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையை ஏந்திய படி இருப்பது  போல் ரசிகர்கள் பாகுபலியை உச்சத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்கள். இதை இரண்டாம் பாகத்துல தக்க வைக்கிறது தான் இயக்குனரின் மிக பெரிய சவால். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற மில்லியன் டாலர் கொஸ்டீனோட ரசிகர்கள் காத்துகிட்டு இருக்கோம். 

 தொடர்கதையில் தொடரும் போடுறது போல் நாவல் படிக்கிறதுல நானும் தொடரும் போட்டுட்டு  விட்டுட்டேன். ஆம் நாவல் படிச்சு ஆறு மாசமாச்சு.நூலகத்தில்  போய் எடுத்துட்டு வந்த புக் படிச்சு முடிக்க தாமதமாகி பெனால்டி கட்டும் படி ஆகிடுச்சுனா பார்த்துக்குங்க.  
இருந்தும் அசராம இதோ நூலகத்தில் சுஜாதாவின் தூண்டில் கதைகள் எடுத்துட்டு வந்திருக்கேன்.இயக்குனர் ஸ்ரீதரின் திரும்பி பார்க்கிறேன் அனுபவ தொகுப்பும் எடுத்துட்டு வந்திருக்கேன்.

அனுபவம்னு சொல்றப்ப தான் சமீபத்தில் நம் நண்பர் துளசிதரன் அவர்களின் புதிய குறும்படமான POET THE GREAT பட ஷூட்டிங் ல நடந்த ஒரு அனுபவம் ஞாபாகம் வருது. குறும்படத்தில் நடிப்பதற்காக (நடிக்க ட்ரை பண்றதுக்காக னும் சொல்லலாம் )சென்றிருந்தேன். (கோவை சென்று  கோவை ஆவியுடன் ஒரு நாள் முழுக்க கோவையில் சுற்றிய போது செம ஜாலியா இருந்துச்சு. அவரது டூ வீலரிலேயே  பாலக்காடு சென்று சேர்ந்தோம்.) 

அந்த பட படப்பிடிப்பின் போது  மேக்கப் மேன் எனக்கு மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த கம் பாட்டில் கை தவறி என் சட்டையில் கவிழ்ந்து விட்டது. மேக்கப் மேன் சாரி சொன்னதோடு சட்டையை என்னிடமிருந்து வாங்கி  தண்ணீரில் அலச ஆரம்பித்து விட்டார். நான் மறுத்து சட்டையை வாங்கி கொண்டு விட்டேன். அந்த சட்டை  காய்ந்த பிறகும் மொடமொடப்பாகவே இருந்தது. நான் அதற்காக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் ஷூட்டிங் வந்த போது அவர் சார் நான் காசு தரேன் வேற ஒரு சட்டை எடுத்துக்குங்க என்று சொன்ன போது நான் அதிர்ச்சியாகி "எதுக்கு இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்றீங்க. வேலை நேரத்தில் இதெல்லாம் சகஜம் தான் சார். இதே  நானே கை தவறி கூட என் மேலே கொட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறதே"  என்று சமாதானபடுத்தினேன். ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போது அவரிடம் சென்று  ஸ்பெசலாக விடைபெற்று கிளம்பினேன் அது அவர் எனக்கு போட்ட மேக்கப்புக்காக மட்டுமல்ல,  தன்னால் அடுத்தவருக்கு எந்த இன்னலும்  வந்து விட கூடாது என்ற நினைக்கும் அவரது அந்த உயர்ந்த எண்ணத்திற்காகவும் தான். 

இதோ அந்த குறும்படத்தின் லிங்க் கோவை ஆவி காதல் போயின் காதல் குறும்படம் தொடர்ந்து அவரது இரண்டாம் படமான தலை வாரி பூ சூடி உன்னை வெளியிட்டிருக்கிறார் இதில் அவர் சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்னையை (கொஞ்சம் சிம்பிளாக) கையாண்டிருப்பதுடன்,ஒளிப்பதிவு எடிட்டிங் என்று மற்ற துறைகளையும் எடுத்து செயல்பட்டிருக்கிறார்.  அவரது இந்த தொடர் முயற்சிகளுக்கு எனது வாழ்த்தும் ஆதரவும் என்றும் உண்டு.

குறும்பட சுட்டிமற்ற நண்பர்களின் முயற்சிகள் பற்றி சொல்றியே உன்னோட முயற்சிகள் சில பாதியிலே நிக்குதே னு தானே சொல்ல வரீங்க. இதோ அதை பற்றிய தகவல்கள் உங்களுக்கு சொல்லியாக வேண்டும்.

 நான் 15 அத்தியாயங்கள் வரை எழுதி வெளியிட்ட தொடர்  திருமண ஒத்திகை. இதன் மீதி அத்தியாயங்கள் 6 ஐ எழுதி முடித்து விட்டேன். மொத்தம் 21 அத்தியாயங்கள்.  மற்ற பகுதிகளை வலைத்தளத்தில் வெளியிடுவதை விட புத்தகமாக உங்கள் கைகளில் தந்து விடலாம் என்று புத்தக வேலைகளில் இறங்கவிருக்கிறேன்.
  

அடுத்து காவல் குதிரைகள் என்ற பெயரில் தொடர் எழுத அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.
 இது அறிவிப்பு மட்டும் தானா என்றால் இல்லை . தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் அத்தியாத்திலிருந்து  சில வரிகள்.

அந்த மருத்துவமனையின் காஷ் கவுன்ட்டரில் இருந்த பெண்கள் சிரித்த படி அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் இன்னொரு பெண்ணை அடிக்க கை ஓங்கினாள் .மற்றவள் 
"கேமரா வாட்ச் பண்ணுது எம்.டி பார்த்தால் சீட்டை கிழிச்சிடுவார்" என்று எச்சரித்தாள்.  
"கேமரா வை வச்சாங்க சரி,  சூப்பர் வைசர் எதுக்கு வச்சிருக்காங்க சொல்லு பார்ப்போம்" என்று ஒரு பெண் புதிர் போட, "தெரியலையே" என்றாள் மற்றவள். அது அதட்டாது திட்டாது இல்லியா அதுக்காக தான்" என்றவுடன் மற்றவள் சிரிக்க  ஆரம்பிக்க இங்கே என்ன சிரிப்பு என்ற படி வந்தார் சூப்பர் வைசர்.

"நடுத்தர வர்க்கம் நோய்க்கும் பணத்துக்கும் நடுவுல நின்னுகிட்டு சிரிப்பாய் சிரிக்கிறதை பற்றி சொல்லி சிரிக்கிறாங்க " என்றார்  பணம் கட்ட நின்றிருந்த அந்த வயதானவர்.  அந்த பெண்கள் முகத்தில் அதிர்ச்சி காட்ட  சூப்பர் வைசர் காது கேட்காதவர் போல் நழுவ ஆரம்பித்தார்.

இந்த கதையும் சினிமா திரைக்கதை போன்று தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முழுக்க எழுதி முடித்து பின் காலமும் நேரமும் (நிதியும்) ஒத்து வந்தால் புத்தகமாக வெளியிட்டு விடலாம் என்றிருக்கிறேன்.பார்க்கலாம். எனது சில நொடி சினேகம் குறும்படத்தை தொடர்ந்து அகம் புறம் குறும்படம். இதன் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பில் இறங்கியிருக்கிறோம். அது பற்றிய தகவல்கள் அனுபவங்கள் தனி பதிவாக வருகிறது. குறும்படம் விரைவில் 
இப்படி தொடர்ந்து நான் பயணிப்பதில் வலைப்பதிவு மற்றும் முகநூல் நண்பர்களின் 
ஊக்கமும் ஒரு காரணம்.

சென்னை, மதுரையை தொடர்ந்து இந்த வருடம் புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா.நடைபெறுகிறது.  பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அதே ஆர்வம் குறையாமலே இதோ இந்த வருட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தயாராகி கொண்டிருக்கிறேன்.பதிவர் திருவிழா பற்றிய தகவல்கள் அய்யா திரு. முத்துநிலவன் 
அவர்களின்  வளரும் கவிதை  வலைபதிவில்

ஆர்.வி.சரவணன் 

29 கருத்துகள்:

 1. சுவீட் காரம் காபி அருமை...
  காவல் குதிரைகள் வரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. காவல் குதிரையும் விரைவில் முழுமையடைய வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 3. அகம் புறம் போஸ்டர் சூப்பர்

  பதிலளிநீக்கு
 4. அகம்புறம் போஸ்டர் சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். குறும்படம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. உண்மையில் உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இவ்வளவு பிஸி செட்யூலையும் உங்கள் வேலைகளுக்கு இடையே செய்கிறீர்கள். நான் மூன்று மணிநேர வேலைக்கு பிறகு நாள் முழுக்க சும்மா தான் இருக்கிறேன். ஆனால் ஒரு பதிவு எழுத கூட நேரமில்லைன்னு நினைக்கும் சோம்பேறி. கற்றுக் கொள்கிறேன் உங்களிடமிருந்து, டைம் மேனேஜ்மெண்ட்டை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. பொறாமைப்படும் அளவுக்கு எல்லாம் நான். ஒன்றும் சாதிக்கவில்லை. நான் வெளியிட்ட சில அறிவிப்புகளின் நிலையை தான் இங்கே வெளியிட்டிருக்கிறேன். நானும் சோம்பேறி தான் பாருங்கள் சென்ற அக்டோபரில எழுதிய இந்த தலைப்பில் இப்போது தான் எழுதியிருக்கிறேன் தங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. பலவிதப் பணிகளை வைத்துக்கொண்டு தாங்கள் இயங்கும்விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து தடம் பதித்து, பிரகாசிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அது தான் இயங்க வைக்கிறது் தங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்

   நீக்கு
 8. பிஸியாக இருக்கிறீர்கள்! முகநூலில் அதிகம் செலவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிஸி எல்லாம் இல்ல சார்ஆரம்பித்த வேலைகள் கிடப்பில் போட்டிருந்தேன் அவற்றை ஒவ்வொன்றாக முடித்து கொண்டு வருகிறேன். வாழ்த்துக்கு நன்றி

   நீக்கு
 9. //துக்கு வாங்க னு மனசு குமாரும் நிஜாமுதீனும் மைன்ட் வாய்ஸில் சொல்வதால் விசயத்துக்கு வரேன்.//

  'ஸ்வீட் காரம் காபி' தலைப்பைப் பார்த்ததும் நினைத்தேன்,
  'திடீர்னு எழுதராறு, திடீர்னு விட்டிர்றாரு'ன்னு...
  அந்த மைண்ட் வாய்ஸ், நல்லவேளை உங்களுக்கு
  கேட்கலை!!!

  பதிலளிநீக்கு
 10. //இருந்தும் அசராம இதோ நூலகத்தில் சுஜாதாவின் தூண்டில் கதைகள் எடுத்துட்டு வந்திருக்கேன்.இயக்குனர் ஸ்ரீதரின் திரும்பி பார்க்கிறேன் அனுபவ தொகுப்பும் எடுத்துட்டு வந்திருக்கேன்.//

  கிரேட் சார்.
  எனக்கு புத்தகம் படிக்க (நேரம்) இல்லையேனு அடிக்கடி நினைப்பேன்.
  இப்பதான், ஊரிலிருந்து வந்த நண்பர் மூலமாக,
  நிஷா மன்சூர் எழுதிய 'இருளில் படரும் நிழல்கள்' கவிதை நூல்,
  வலங்கைமான் நூர்தீன் எழுதிய 'ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 7-ஆவது தளம்' கவிதை நூல், 'தினமணி ஈகைப் பெருநாள் மலர்' மற்றும் இந்த வார ஆனந்த விகடன் ஆகியவற்றை வாங்கியுள்ளேன்...
  இனிதான் படிக்கணும்!

  பதிலளிநீக்கு
 11. 'தலைவாரி பூச்சூடி உன்னை' பார்த்துவிட்டேன். சிறப்பாய் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 12. 'திருமண ஒத்திகை' நூலுக்கு நல்வாழ்த்துகள்!
  'காவல் குதிரைகள்' நூலுக்கு வாழ்த்துகள்!
  'அகம் புறம்' குறும்படத்திற்கு வாழ்த்துகள்!
  அனைத்தும் உங்களுக்கே!

  பதிலளிநீக்கு
 13. இதோ அந்த குறும்படத்தின் லிங்க்

  POET THE GREAT
  - சுட்டி வேலை செய்யவில்லையே!

  பதிலளிநீக்கு
 14. அகம் புறம் வெற்றி அடைய வாழ்த்துகள். பதிவு சுவாரஸ்யம். புத்தக முயற்சி வெற்றியடையவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. சார் தங்களின் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்! நிச்சயமாக வெற்றிப் படிகளைத் தொட்டு விடுவீர்கள்!

  எங்கள் மேக்கப் மேன் பற்றிக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 16. அருமையான ஸ்வீட் ,காரம் ,காப்பி சூப்பர்...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்கு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்..சார்..

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்...

  தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

  visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

  how is it ...? excited...? put a comment... thank you...

  அன்புடன்
  பொன்.தனபாலன்
  9944345233

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்