திங்கள், மே 18, 2015

நீ யோசிக்க நான் யாசிக்க....




நீ யோசிக்க நான் யாசிக்க....

ஓவியர் மணியன் செல்வம் அவர்களின்  இந்த ஓவியத்திற்கு கவிதை எழுதுமாறு 
ஜனவரி மாத ஜன்னல் இதழில் கவிதை போட்டி அறிவித்திருந்தார்கள். நானும் 
எழுதி அனுப்பியிருந்தேன். தேர்வாகவில்லை. அதனாலென்ன என்று இதோ
 தளத்தில்  வெளியிட்டிருக்கிறேன். படித்து விட்டு சொல்லுங்கள் .


வண்ணத்து பூச்சியின் படபடப்பை தீட்டிக் கொண்ட 
இமைகள் 

மலரிதழ்களை  பொருத்தி கொண்ட 
அதரங்கள்

ஆடைச் சோலையில் நடை பயிலும் விரல்களுடன் 
ஒரு கரம்  


நந்தவனத்தையே தாங்கி நிற்கும் தூணாக 
மறு கரம் 

அள்ளி முடிந்தாலும் காற்றோடு உலவ அடம்பிடித்து 
கொண்டிருக்கும்  கேசம் 


அணிகலனுக்கு அபயம் அளித்திருக்கும் 

மேனி 



இப்படியாக 

என் எண்ணங்களை 
வரிகளுக்கு  யாசிக்க வைத்த 
நீ 
அப்படி 
என்னத்தை  யடி
யோசிக்கிறாய் ?

ஆர்.வி.சரவணன் 

8 கருத்துகள்:

  1. என் எண்ணங்களை........கடைசி வரிகள் மிக மிக அருமையாக உள்ளன. மிகுந்த ரசனையுடன் எழுதியுள்ளீர்கள். இதனைப் பின் புலமாகக் கொண்டு மற்றொரு தொடர் உருவாக்கப் போகின்றீர்களா?

    பதிலளிநீக்கு
  2. அருமை. பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. அழகிய வர்ணனை காதல் மனங்கொண்ட உருவத்தை அழகாக காட்சிப்படுத்திப்போகும் வர்ணனை...

    பதிலளிநீக்கு
  4. அந்தப் பெண் உண்மையில் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பவள் போல் அல்லவா தோற்றம் அளிக்கிறாள்! இருந்தாலும் உங்கள் கவிதை அழகானதே. - இராய செல்லப்பா சென்னை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்