செவ்வாய், பிப்ரவரி 04, 2014

கோலி சோடா




கோலி சோடா

 அனாதை சிறுவர் சிறுமியரை  ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி நின்று கவனித்தால் அவர்களிடமும் ஒரு கதை இருக்குமே அதை தான் கோலிசோடா வாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன் 

கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதை சிறுவர்கள் நான்கு பேர் மூட்டை தூக்குபவர்களாக இருந்து தங்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என்று ஹோட்டல் ஆரம்பிக்க அந்த இடத்தை கொடுத்தவரின் உறவினர் ( கையாள்)  அங்கே அசிங்கங்களை நிறைவேற்ற பொறுக்காதவர்கள் பொங்கி எழுந்து  அவர்களை எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை. இவ்வளவு தானா  என்று நினைக்க வைக்காமல் அந்த சிறுவர் சிறுமியரும் இயக்குனரின் திரைக்கதையும் சீட் பெல்ட் போட்டு நம்மை உட்கார வைத்திருக்கிறார்கள் 

பசங்க படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல ஒண்ணு. அதிலே நடிச்ச பசங்க நான்கு பேரும் இங்கே வளர்ந்த பசங்களாக.  கடற்கரையில் அந்த பெண்ணின் கோலத்தை பார்த்து (சித்தப்பா) பையன்  அழும் காட்சி ஒரு சாம்பிள் 

 அந்த எ டி எம் சிறுமி சூப்பர் கேரக்டர் அந்த பெண்ணும் அதை கரெக்டா மேட்ச் பண்ணிருக்கு.அது ஏதோ காமெடியாய் ஓரிரு காட்சிகள் தான் வர போகிறது என்று நினைத்திருக்கையில் முக்கிய கேரக்டரில்  படம் முழுக்க பட்டையை கிளப்புகிறது அந்த பெண்ணின் பார்வை உடல் மொழி எல்லாம் கலக்கல். 

ஆச்சியின் மகளாக வரும் பெண்ணும் கண்கள் லட்சணமான முகம் என்று தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறது 


நம்ம அண்ணாச்சி போலீஸ் ஸ்டேசனில் பேசும் 
வசனங்கள் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மேலும் கேட்க 
வைக்கும் விதத்தில்.தியேட்டரில் கரவொலி ஏற்படுத்துகின்றன
 \

சுஜாதா ஒரு தாய் போல் அரவணைப்பதிலும் இதுல யாருடா என் மருமகன் என்று கேட்பதிலும்  நான் செத்து ரெண்டு மணி நேரமாச்சு என்று  கொடுக்கும் உருக்கத்திலும்  படு பாந்தம்

அந்த மயில் கேரக்டர் (விஜய் முருகன் )எழுந்து போய் அறையலாமா என்று தோன்ற வைக்கும்  கடுப்பை  நடிப்பில்  தந்திருக்கிறார். நாயுடுவாக வருபவர்  ஆரம்பத்தில் மரியாதையாக பேசுவதாகட்டும் பின் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன்  சுயரூபம் காட்டுவதாகட்டும்  அதற்கேற்ற குரல் மற்றும் முக பாவங்களில் மிரட்டுகிறார் 

 ஆச்சி திரும்ப வந்திருக்கும் சிறுவர்கள் நான்கு பேரையும் கட்டி பிடித்து கொண்டு அழ, அந்த புள்ளி (கதாநாயகன்)  கை நீட்டி ஆச்சி மகளின் கை பற்றி கொள்வது கிளாஸ்

"ஆசைப்பட்டு அரிவாள் வாங்கி  என்னையே கிழிச்சிகிட்ட மாதிரி என் கிட்டே காசு வாங்கி என் பெண்ணையே டாவடிகிறீங்களா" ,"நல்லா படிக்காதது க்கு தான் நான் கவலைப்படணும் நல்லா பிறக்காத தற்கு நான் ஏன் கவலைப்படணும்"

 பாண்டிராஜ் வசனம் அங்காங்கே நச் சென்று காட்சிகளுக்குள் தன்னை பொருத்தி கொள்கிறது 


ரசிக்க நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் இடைவேளைக்கு பின் வரும் முதல் சண்டை காட்சி விறுவிறுப்பா இருந்தாலும், சண்டைகள் சிறுவர்கள் சித்ரவதை தொடர்வதை தவிர்த்திருக்கலாம். நாயுடுவின் இடத்தில கடை போடாமல் எதிரிலோ பக்கத்திலோ கடை போட 
அங்கேயும் தொல்லை தொடர்கிறதாக காட்டியிருக்கலாம்.  சின்ன வயசு பையன்கள் காதலை (கொஞ்சம் அவஸ்தையுடன்) ரசிக்க முடிகிறது.கோயம்பேடு தான் கதை களம் எனும் போது இவர்களை தவிர அங்கிருக்கும் மற்றவர்களுக்கும்  கதையில் இடம் கொடுத்திருக்க வேண்டும். 

ஒவ்வொருவருக்கும் அடையாளம்  என்பது எவ்வளவு முக்கியம் 
என்பதே படத்தின் மையக்கருத்து. இந்த படத்தில் நடிதிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனருக்கும் அடையாளம் தந்திருக்கிறது இந்த 
கோலி சோடா.   



FINAL PUNCH

சிறுவர் கதை என்றாலும் அவர்களை குடிப்பவர்கள புகைப்பவர்கள என்றெல்லாம் காட்டாமல் அக்கறையுடன் உழைக்க துடிப்பவர்களாய் காட்டிய விதத்தில் சபாஷ் பெறுகிறார், இயக்குனர் விஜய் மில் டன் 

ஆர்.வி.சரவணன் 



13 கருத்துகள்:

 1. எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது அண்ணா.

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு விமர்சனம்! அதுவும் ஃப்பைனல் பஞ்ச் படத்தின் இயக்குனர் குறித்து ஒரே வரியில் சொல்லிவிடுகின்றது!

  விமர்சனப் பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. இனிமேல் செல்ல வேண்டும்... விமர்சனத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. உறவுகளின் வாழ்க்கை உட்பட பதவி ஒன்றே ஆசை என்றிருந்தால், வெற்றிப்படிகள் கார்மேகத்தில் மறைந்து விடும் அல்லவா...?

  Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html

  பதிலளிநீக்கு
 5. படத்தை நல்ல விதமாக சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் படம் பிடித்திருந்தது... சின்ன பசங்க ஒரு தாதாவுடன் சண்டைபோட்டு ஜெயிப்பது கொஞ்சம் சினிமா தனமாக இருந்தாலும், படம் போரடிக்காமல் நன்றாக தான் இருந்தது... ஃபைனல் பஞ்ச் சூப்பர் !!!!

  பதிலளிநீக்கு
 7. சிலர் படம் சரியில்லை என்பதாக பதிவு போட்டிருந்தார்கள்..உங்கள் பதிவைப் படித்தால் படம் பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
 8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 9. படத்தை நல்ல விதமாக சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 11. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

  அருமை ...!!!

  எழுத்து பணி ...தொடர வாழ்த்துக்கள் ...!!!

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப நாளாயிற்று, தியேட்டருக்குப் போய்ப் படம் பார்த்து. உங்கள் விமர்சனத்தை நம்பிப் போகப்போகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி குமார்
  நன்றி துளசிதரன் சார்
  நன்றி தனபாலன் சார்
  நன்றி முரளிதரன் சார்
  நன்றி விமல் ராஜ் சார்
  நன்றி எழில்
  நன்றி ஜெயக்குமார் சார்
  நன்றி ஜெயசரஸ்வதி
  நன்றி செல்லப்பா சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்