வியாழன், அக்டோபர் 24, 2013

முக நூல் கிறுக்கல்கள்


உழைப்பும்  உனை கண்டு  மரியாதை செய்யும்  


முக நூல் கிறுக்கல்கள் 


இன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள் 
அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது 

******

மும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் "இந்தி நகி மாலும்" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு 


******

இன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான் 
சாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன் 
வீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)


******

நெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே

******

இரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய 
தமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந்தது.
விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால்  டிவி யை ஆப் செய்து விட்டேன்

******

பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.

******

ஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்

******

சகிப்பு தன்மை என்பது....

ஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை 
பக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு 
அவசரமாய் அள்ளி உண்பது******

நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில் 
ஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் "சீக்கிரம் வா" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன். 

ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. "வேலைக்கு போகணும் வா" என்று

FINAL PUNCH

உன் பயம் உள்ளே உறங்கட்டும் 
உன் தைரியம் வெளியே நடமாடட்டும்ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

 1. சகிப்பு தன்மை, டிவியை ஆப் செய்தது உட்பட அனைத்தும் ரசிக்கத் தக்கவை.... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் நல்லாயிருக்கு

  //விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால் டிவி யை ஆப் செய்து விட்டேன்//

  எல்லாத்துக்கும் தனித்தனி சேனல் வந்துடுச்சி. விளம்பரத்துக்கும் தமிழ்ல ஒரு சேனல் வரப் போகுதாம். சார்... கவனமாயிருங்க....

  பதிலளிநீக்கு
 3. //"இந்தி நகி மாலும்"//

  ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா....


  //பைக்கின் முன்
  வீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. //

  நடந்து போகக்கூட முடியலை... என்ன உலகம் இது?

  கடைசி பஞ்ச் கலக்கல்....

  பதிலளிநீக்கு
 4. அத்தனையும் அருமை!
  முதலில் இருக்கும் படம் ஹார்ட் டச்!...
  என்ன ஒரு சுய நம்பிக்கை.. முயற்சி! அபாரம்!

  நடுவில் இருக்கின்ற அனைத்தும் உள உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

  வெள்ளி தோறும் ரயிலை நீங்கள் இழுத்துச் செல்வதும்
  ஞாயிறில் அது உங்களை இழுத்து வருவதும் நல்ல நகைச்சுவை...
  ஆனாலும் பாவம் சகோ நீங்கள்...:)))

  இறுதிப் பஞ்... செம... சூப்பர்!..

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  பதிலளிநீக்கு
 5. சிலவற்றை ரசித்தேன். சில கிறுக்கல்கள் சிரித்தேன்.... பகிர்தலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. படம் மனதை கட்டி இழுக்கிறது ஐயா. கைகள் இல்லாவிட்டாலும், என்னவொரு நம்பிக்கை. போற்றப்பட வேண்டியவர்

  பதிலளிநீக்கு
 7. ஏற்கனவே இவற்றை உங்கள் முகநூல் பக்கத்தில் வாசித்திருந்தாலும் மீண்டுமொருமுறை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன் :-))))))

  பதிலளிநீக்கு
 8. படம் பாடம்.. ஹிந்தி, டி.வி. ஆஃப் செய்தது, மொபைல் ஃப்போன், ஹோட்டல்..எல்லாமே அருமை....ரசிச்சோம்க....நண்பரே!

  பதிலளிநீக்கு
 9. நம்பிக்கையை விடாத - அந்த மனிதர்!.. ஏற்கனவே Fbல் கண்டிருந்தாலும் மனதை அழுத்துகின்றது!..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்