திங்கள், நவம்பர் 12, 2012

தீபாவளி சிறப்பிதழ்

 தீபாவளி சிறப்பிதழ்



 



இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும்  என்னை தொடரும் நண்பர்களுக்கும் 
மற்றும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


கடவுள் தரிசனம்

கும்பகோணம் அருகே உள்ளது  தாராசுரம் இங்கே வரலாற்று சிறப்பு மிக்க ஐராவதேஸ்வர் கோவில் உள்ளது எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட இக் கோவிலின் ஒரு படம்  இங்கே கடவுள்   தரிசனம்  பகுதியில் இக் கோவிலின் தகவல் படங்கள்   பின்  ஒரு  பதிவில்)





------


நகைச்சுவை







ஒருவர் அல்வா கிண்டுவதற்காக சமையல் கலை புத்தகத்தை வைத்து கொண்டு அதில் சொல்லியுள்ள படி அல்வா கிண்டி கொண்டிருந்தார். அல்வா கிண்டி முடித்தவர் தீடீரென்று ஒரு கிலோ நூறு ரூபாய் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் மனைவி அவர் கத்துவதை   பார்த்து என்னங்க ஏன் இப்படி குரல்  கொடுக்கறீங்க என்று கேட்டார் அதற்கு அவர் புத்தகத்தில் அல்வா கிண்டி முடித்தவுடன் ஏலம் போடவும் னு சொன்னங்க அதான் ஏலம் போட்டுட்டிருக்கேன் என்றார் ( இது எனது அனுபவம் அல்ல எனது உறவினர் தான் கேள்விப்பட்ட இந்த ஜோக்கை என்னிடம் பகிர நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் )

------


தீபாவளி கவிதைகள் 










செல்வ   சிறார்கள் பட்டாசை வெடித்து மகிழ 
ஏழை சிறுவன் மட்டும் அதை பார்த்து  மகிழ்ந்தான் 


ஏழை பணக்காரன் எனும் பேதம் எல்லாம் பார்த்து  
பட்டாசு வெடிப்பதில்லை 



இரவு எனும் நந்தவனத்தில் இன்று மட்டும் 
ஓராயிரம் வெளிச்ச பூக்களின் மலர்ச்சி 


இரவு  எனும் கரும் பலகையில் வித விதமாய்  மத்தாப்பு கொண்டு
வர்ணம் தீட்டுகிறோம் 



------
என் சமையலறையில்

தீபாவளி சிறப்பிதழ் எனும் போது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு பங்கு தர வேண்டும் அல்லவா  எனவே இதோ எனக்கு மிகவும் பிடித்த  பலகாரமான சீப்பு முறுக்கு . இதன் செய்முறை பற்றி எனது அம்மா,மனைவி தெரிவித்ததை இங்கு தந்திருக்கிறேன் 

சீப்பு  முறுக்கு 








தேவையான பொருட்கள் 

ஒரு  ஆழாக்கு பச்சரிசி மாவு , கால் ஆழாக்கு வறுத்து அரைத்த பயித்தம்பருப்பு மாவு,வெண்ணெய் 50 கிராம், சர்க்கரை 100  கிராம்,தேங்காய்  ஒரு மூடி, ஏலக்காய் , வெள்ளை எள், உப்பு ,எண்ணெய் தேவையான  அளவு 

 ஒரு  பாத்திரத்தில் அரிசி மாவு பயித்த மாவு  இரண்டையும் கலந்து கொண்டு எள் உப்பு இவற்றுடன் வெண்ணெய் போட்டு  பிசறி வைத்து கொள்ளவும்  அடுத்து தேங்காய் பால்  ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு   சர்க்கரை ஏலக்காய் போட்டு சர்க்கரை கரையும் வரை மட்டும் மிதமான  சூட்டில் அடுப்பில் (சிம் கண்டிசன் ) வைத்து உடனே இறக்கி , பிசறி வைத்த மாவில் அதை ஊற்றி பிசைந்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ளவும்.  பின் டிசைனிங் தட்டு ஏதேனும் எடுத்து கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து   அப்பள பூவுக்கு இடுவது போல்  இட்டு  விரல்களில் சுற்றி ஒரு பிளேட்டில் (மேலே படத்தில் உள்ளது போல்) ஒரு பத்து  நிமிடம் காய  வைக்கவும். பின் வாணலியில்  எண்ணை ஊற்றி காய வைத்து மிதமான சூட்டில் போட்டு வறுத்து எடுக்கவும் இதோ சீப்பு முறுக்கு தயார் இங்கே தஞ்சாவூரில்  இது தீபாவளி ஸ்பெஷல்  (எனக்கும் இது ஸ்பெஷல் )





------


என் கேள்விக்கு எனது பதில்

இலவசங்களை பற்றி என்ன நினைக்கீறீர்கள் ?

இப்ப நம்ம கிட்டே ஒருத்தர் வந்து இலவசமா எனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்து 
கொடுங்கனு கேட்கிறார் .அதுக்கு நாம என்ன  சொல்லுவோம்.  நான் எதுக்கு உனக்கு எடுத்து கொடுக்கணும் 
நீ என்ன என் கிட்டே கொடுத்தா வச்சிருக்கே இப்படி அடுத்தவங்க காசிலே வாழணும்னு நினைக்கறியே உனக்கு வெட்கமா இல்லே இப்படி தானே  கேட்போம். இல்லே மனசிலேயாவது  நினைப்போம்  இல்லீங்களா. இதுவே  இப்படி தின்க்  பண்ணி பாருங்களேன்  இலவசமா நமக்கு யாரோ டிரஸ் தர்றதா சொல்றாங்க. அப்ப சந்தோசமா வாங்கலாம் னு நினைக்கிறோம் அப்ப    மேலே சொன்ன  வரிகள் நம்ம முன்னாடி வந்து  நின்னு கை கொட்டி  சிரிக்குமே 

------
திரையுலகம் 






பீட்சா படம் பார்த்தேன் எனக்கு அவ்வளவாக பேய் படங்கள் பிடிக்காது. இருந்தும் இப் படத்தை பற்றி வந்த பாசிடிவ் ரிப்போர்ட் என்னை ஆர்வமுடன் படம் பார்க்க வைத்தது.  படம் பார்க்க ஆரம்பித்து  இருபது நிமிடங்களுக்கு படம் சாதாரணமாக செல்வது போல்  எனக்கு  தோன்றியது   ஆனால் அதற்கு பின் படம் எடுக்கிறது பாருங்கள் வேகம். அந்த வேகம்  படத்தின் முடிவு வரை இருக்கிறது.    அந்த பங்களாவில் ஒரு மணி நேரம் ஹீரோ விஜய் சேதுபதிக்கு கிடைக்கும் பயம், திகில், சஸ்பென்ஸ் அனைத்தும் படம் பார்க்கும் நமக்கும் கிடைக்கிறது. குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே கொண்டு இந்த  த்ரில்லர் படத்தை  தந்திருக்கும்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.குறும்படங்கள்  மூலம் கவனம் ஈர்த்தவரின் முதல் முயற்சி இது. சினிமாவா,வேலையா எனும் போது சினிமா தான் என்று முடிவெடுத்து  தான் சினிமாவுக்கு வந்து விட்டதாக இயக்குனர்  விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார்.  சரியான பாதையை தேர்ந்தெடுத்த அவருக்கு ஒரு நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள். (பீட்சா இருக்கு பேஷா ) 


------


தீபாவளி சிந்தனை

தினந்தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு சூரிய உதயம்  என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு பௌர்ணமி என்று பெயர் வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது  அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம். ஆவளி என்றால்  வரிசை என்று பொருள்  ஸ்வரங்களை  வரிசைபடுத்தினால் ஸ்வராவளி ஆண்டவனை அர்ச்சிக்கும்  போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி அது போல் தீபங்களை வரிசைபடுத்தினால்  தீபாவளி.கண்ணை மறைக்கும் புற இருளை  மாற்ற தீபம் ஏற்றுவது போல் கருத்தை மறைக்கும் அக இருளை நீக்க ஞான தீபம் ஏற்ற வேண்டும் (மாலை மலர் 2010 தீபாவளி மலரில்  திரு . சுகிசிவம் அவர்கள்)  


------




 பேசும் படம்





------


ஹர்ஷவர்தன்  கார்னர் 

எங்கள் மகன்   ஹர்ஷவர்தன் தீபாவளி வாழ்த்துக்களை  உங்களுக்கு சொல்லும்  ஓவியம் 






கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் 



FINAL PUNCH

தீபாவளியை சந்தோசமாய்  கொண்டாடுவோம் நம்மை சுற்றி உள்ளவர்களும் அதே சந்தோசத்துடன்  கொண்டாட அக்கறை கொள்வோம் 



ஆர்.வி.சரவணன் 

16 கருத்துகள்:

  1. பீட்சா படத்தில் சின்ன தலைவி ரம்யா பற்றியும் ஒரிரூ வரி சொல்லிருக்கலாம்

    சீப்பு முறுக்கு.. ஆஹா நம்ம ஊரில் மட்டும் தான் சாப்பிட்டுருக்கேன்

    தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கமா எழுதலாம் என்பதால் ஹீரோயின் பற்றி குறிப்பிடவில்லை பரவாயில்லை இந்த படம் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான்

      நீக்கு
  2. அருமை... நன்றி...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன் சார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  3. அருமையாக பல்சுவையாக விருந்தளித்தது தீபாவளி சிறப்பிதழ்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  4. உங்களுக்கும் இல்லத்தில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! (1)

    பதிலளிநீக்கு
  5. பின் தொடர்வோர் 100- இலக்கைத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள். (2)

    பதிலளிநீக்கு
  6. பத்திரிகைகளின் தீபாவளி சிறப்பிதழ் போல் வலைப்பூவிலும் சிறப்பிதழா?!
    தொகுப்பில் இடம்பெற்ற கருத்துக்களும் பொருத்தமான படங்களும் அருமை. (3)

    பதிலளிநீக்கு
  7. அடுத்தது ஸ்.கா.கா.யா?
    தொடர்கதையா?
    ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடர்கதைக்கு.(4)

    பதிலளிநீக்கு
  8. சீப்பு முறுக்கு செய்முறை தெளிவாய் இருக்கிறது.
    நல்ல, டேஸ்ட்டாய் இருக்குமா? (5)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளி வாழ்த்திற்கு நன்றி நிசாமுதீன்

      தங்கள் இடைவிடாத கமெண்ட் க்கும் நன்றி

      அடுத்து தொடர்கதை தான்

      நீக்கு
  9. பல்சுவையாய் இனிக்கிறது....

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குமார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள

      நீக்கு
  10. தீபாவளி முடிச்சிட்டு வந்து சிறப்பிதழ் பார்க்கிறேன் தவறாக நினைக்கவேண்டாம்.

    ஓவியம் சிறப்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கலக்கல் தீபாவளி மலர் ./..தம்பிக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்