செவ்வாய், டிசம்பர் 27, 2011

பேசச்சொல்லும் மௌன குரு




பேசச்சொல்லும் மௌன குரு


நாம் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் தான் மௌனகுரு

இந்த படத்தின் கிளிப்பிங்க்ஸ் ஒன்று டிவி யில் பார்த்தேன்
அது என்னவென்றால் அருள்நிதி ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து இந்த குழந்தையின் அப்பாவை (அவர் கான்ஸ்டபில்) அடித்து விட்டேன் அவர் அதில் மயங்கி விழுந்து விட்டார் இந்த குழந்தை வீட்டுக்கு போக வேண்டும் என்கிறது எனக்கு அட்ரஸ் தெரியாது என்று சொல்வார் இன்ஸ்பெக்டர் உமா ரியசிடம். அவர் அதிர்ந்து போவார். இந்த காட்சியை பார்த்தவுடனே சுவாரசியம் வந்து என் எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவே அன்றே தியேட்டர் சென்று பார்த்தேன் என் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஏமாற்றாமல் படம் ரசிக்கும் படி இருந்தது.

கதை போலீஸ் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனை வாழ்க்கையில் எந்த அளவு மோசமான நிலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதை, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் commercial விஷயங்கள் என்று எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழகாக நேர்த்தியாக ஒரு திரில்லர் படத்தை தந்திருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு ஒரு வெல்கம்

திரைக்கதை தான் படத்தின் ஹீரோ திரைக்கதையை பக்காவாக அமைத்து கேரக்டர்களை சிறப்பாக வடிவமைத்து அந்த கேரக்டர்களுக்கு நடிகர்களை பொருத்தமாக தேர்வு செய்து
ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் அருமையாய் அமைத்திருக்கிறார்.

உதாரணமாக அண்ணி கேரக்டர். வள வளவளவென்று எல்லாம் பேசாமல் தன கண்களாலேயே அருள்நிதியை தனிமைபடுத்தும் விதம்

உமா ரியாஸ் நிறை மாத கர்ப்பிணியாக, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மனசாட்சியுடன் நேர்மையாய் செயல்படுவதாக காட்டும் விதம்

தம்பியை தனியே விடவும் முடியாமல் அதே நேரத்தில் வீட்டில் சேர்த்து கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அண்ணன் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அருமையாய் அமைத்திருக்கிறார்.

அருள்நிதி இந்த படத்தில் கருணாகரன் கேரக்டரில் கன கச்சிதமாய் பொருந்துகிறார் அவர்
ஒரு சாதாரண மனிதனை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அருள்நிதி இந்த படம் வளர்ந்து வரும் அவருக்கு கண்டிப்பாக முக்கியமான படம் எனலாம்

இனியா இந்த படத்தில் பெயருக்கேற்றார் போல் இனிமை சேர்க்கிறார் வீட்டில் எல்லாரும் அருள்நிதியை உதாசீனப்படுத்த இனியா மட்டும் அவரை கண்களால் பரிவாய் பார்க்கும் காட்சிகள் காதல் வருடல். அவர் தலையை கலைப்பதாகட்டும் காஸ் சிலிண்டர் தான் வந்திருக்கு என்று நிம்மதியுடன் அவர் தோளை தட்டுவதாகட்டும் உங்களையும் யாரவது இப்படி ஓவியம் வரையலாம் என்று சொன்னவுடன் அருள்நிதியை கட்டி கொண்டு அவர் மீது சாய்ந்து கொள்வதாகட்டும். இந்த காட்சிகள் மனதை வருடுகிறது


மற்ற கேரக்டர்கள் என்று பார்க்க போனால் ஜான் விஜய் தன் வில்லன் நடிப்பாலும் காலேஜ் பிரின்சிபால் தன் குணசித்திர நடிப்பாலும் அருள்நிதி யின் தாய் பாசத்திலும் நம்மை ஈர்க்கிறார்கள்


எனக்கு உறுத்தலான விஷயங்கள் என்னவென்றால்

இனியா தன் காதலனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து அவரை மீட்க ஏன் முயற்சி எடுக்கவில்லை.


அதே போல் மன நோய் மருத்துவமனை காட்சிகளை குறைத்திருக்கலாம்

தமனின் பின்னணி இசையும் ஒளிபதிவும் இயக்குனருக்கு பக்க பலமாய் இருக்கிறது

அருள்நிதியின் அடுத்த படத்தை, சாந்தகுமாரின் அடுத்த படத்தை பார்பதற்காக ஒரு கர்ச்சிப் (அதாங்க ரிசெர்வேசன்) இப்போதே போட்டு வைத்து விடலாம் என்று நினைக்க வைக்கிறது இந்த படம்.

மௌன குரு பேசப்பட வேண்டியவன்

ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

  1. எனக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது..

    பதிலளிநீக்கு
  2. படம் இன்னும் பார்க்கலை....ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்....

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் நன்றாக இருக்கிறது... படம் பார்க்க தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  4. //இனியா தன் காதலனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து அவரை மீட்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. //

    இனியா சாதாரண மருத்துவ மாணவி அவரளவில் வேறு எதுவும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்.

    படம் இன்னொருமுறை பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் நண்பரே ,நானும் இந்த படம் பார்த்தேன் பிடித்திருந்தது .

    அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. நல்ல நடையில் ஒரு தரமான விமர்சனம் ...
    கடைசி ஒரு வரி பஞ்ச் அழகு ..
    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  7. This is the true criticism. I will try to see this movie soon.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்