செவ்வாய், டிசம்பர் 20, 2011

என் கேள்விக்கு எனது பதில்


என் கேள்விக்கு எனது பதில்

நம்மிடம் வேடிக்கையாக பேசுபவர்களை எப்படி எதிர் கொள்வது ?

ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் தாஜ்கந்த் சென்றிருந்த போது ஒரு பத்திரிகை நிருபர் நீங்கள் ரொம்ப குள்ளம் என்று வேடிக்கையாக கூறினாராம்.
அதற்கு அவர் இருக்கலாம் அதனால் எனக்கு நன்மை தான் நான் மற்றவர்களிடம் பேசும் போது நிமிர்ந்து இருப்பேன் அனால் மற்றவர்கள் என்னிடம் பேசும் போது தலை குனிய வேண்டும் என்றார் சிரித்து கொண்டே



ஆசை என்பது ஒரு தொடர்கதை சரி தானே ?

கண்டிப்பாங்க, இதற்கு வேற எங்கியும் போக வேண்டாம் என் கிட்டயே உதாரணம் இருக்கு போன மாசம் நான் கும்பகோணம் போறதுக்கு கிளம்பறப்ப என் நண்பன் கேட்டான் என்னடா படுக்கிறதுக்கு இடம் கிடைக்குமா, உட்கார சீட் கிடைச்சா போதாதா என்று சொல்லி கிளம்பினேன். அங்கு போய் நான் வரிசையில் நிற்கும் போது கண்டிப்பா சீட் கிடைச்சுடும் என்று எனக்கு நம்பிக்கை வந்துச்சு கூடவே ஜன்னலோர சீட் கிடைச்சா நல்லாருக்கும் னு மனசு ஆசைபட்டுச்சு ஜன்னலோர சீட்டும் கிடைச்சுது. நிம்மதியா உட்கார்ந்தேன் எதிர் சீட்டில் வயதானவர் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார் ட்ரெயின் கிளம்பி நேரமாக நேரமாக எனக்கு வந்த இன்னொரு ஆசை என்ன தெரியுமா எதிர் சீட்டில் இதே நம் வயசுள்ள ஆள் உட்கார்ந்திருந்தால் கால்களை அந்த சீட்டில் நீட்டி வைத்து கொண்டு செல்லலாமே என்று தான்
இப்ப உங்களுக்கு என் மேல் கோபம் வந்திருக்குமே அதனால் ஒன்னும் தப்பில்லை ஏன்னா எனக்கே என் மேல் கோபம் வர்றப்ப உங்களுக்கு வராதா என்ன
ஆகவே ஆசை ஒரு தொடர்கதை தான்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

  1. இரண்டுமே அசத்தல் சார் ..
    இரண்டவாது தான் செம கலக்கல் ...
    எல்லோருக்கும் ஏதோ ஒரு ஆசை தொடர்கதையாகி போகின்றது ,...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ரெண்டுமே உண்மைதான்.. ஒத்துக்கிற மனம்தான் கம்மியா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  3. தங்கள் இரு கேள்விகளும் அதற்கான பதிலும் அருமை
    படித்து ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இரண்டு கேள்விக்கணைகளுமே நல்லாயிருக்கு...எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றமில்லை!!!

    பதிலளிநீக்கு
  5. இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அருமை அதிலும் முதல் பதில் அசத்தல்

    பதிலளிநீக்கு
  6. கலக்கலாய் கேள்விகள்;
    நறுக் - நச்'னு பதில்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்