புதன், பிப்ரவரி 23, 2011

சில்லறை பிரச்னை


சில்லறை பிரச்னை

ஏதோ ஒரு சின்ன பிரச்னை பத்தி சொல்ல போறேன்னு தானே நினைக்கீறீங்க
அதான் இல்லை நிஜமாவே சில்லறை பற்றிய பிரச்னை தான்

இந்த என் அனுபவத்தை படிங்க

சென்ற வாரம் நான் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் சென்றேன் காலை ஏழு மணி பேருந்து நிலையத்தில் இறங்கியவன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று நான் வழக்கமாய் செல்லும் ஹோட்டல் சென்றேன் காப்பி சாப்பிட்டு விட்டு பாக்கெட்டில் கை விட்டால் சில்லறை இல்லை நூறு ரூபாய் நோட்டாக தான் இருந்தது ஆகா சில்லறை இல்லன்னு கடுப்படிக்க போறாங்க என்று கொஞ்சம் தயக்கத்துடன் நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன்

கல்லாவில் இருந்தவர் சில்லறையா கொடுங்க காலை நேரம் சில்லறையில்லே என்றார் நான் பரிதாபமாய் என்கிட்டே நிஜமாவே இல்லைங்க என்றேன் அவர் ஏங்க ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு கேட்டா கொடுக்கலாம் ஒரு காப்பி சாப்பிட்டுட்டு கேட்டீங்கன்னா எப்படிங்க என்ற அவர் சலிப்புடன் சொன்னதும் எனக்கு கடுப்பாகி விட்டது ஏங்க டிபன் சாப்பிட வேண்டி இருந்தா தான் சாப்பிட முடியும் சில்லறைக்காக சாப்பிட முடியுமா என்றவுடன் அவர்சில்லறை இல்லைங்க சில்லறை கொடுங்க என்று உறுதியாக சொல்ல

நான் கோபமாய் நூறு ரூபாய் வச்சிக்குங்க சில்லறை மாத்தி கொடுத்திட்டு வாங்கிக்கிறேன் என்று வீராப்பாக சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.
காலை நேரம் என்பதால் கடைகள் அவ்வளவாக திறக்கவில்லை சரி என்ன செய்வது என்று ஒரு மாத இதழ் அன்றைய நியூஸ் பேப்பர் வாங்கி கொண்டு சில்லறை கொண்டு போய் கொடுத்திட்டு நூறை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

அதோடு முடியலே பிரச்னை திருமணம் சென்றுவிட்டு திரும்பும் போது பத்து ரூபாய் நோட்டு ஒன்றை பேருந்தில் நான் டிக்கெட் வாங்குவதற்காக கொடுக்க கண்டக்டர் மூணு ரூபாய் சில்லறையா கொடுங்க என்றார் சில்லறை இல்லை என்றவுடன் இறங்கிடுங்க என்றார் நான் என்னங்க எல்லாரும் சில்லறை கேட்டால் நான் எங்க போறது என்று வேகத்துடன் கேட்க, அவரும் அதே டயலாக் ரீபிட் செய்து சொல்லி என்னை இறக்கி விட்டு விட்டார். வெறுத்து பொய் விட்டேன் அடுத்து வந்த பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு டிக்கெட் கேட்க அவர் சில்லறை என்று கேட்டு நான் இல்லை என்று சொன்னவுடன் அவர் பாவப்பட்டு சில்லறை கொடுத்தார்.

இப்படியாக எனக்கு அந்த ஒரே நாளில் சில்லறை பிரச்னை பெரும் பிரச்சினையானது

இதிலே கிளைமாக்ஸ் என்ன தெரியுமா

அதே நாளில் நான் மாலை பேருந்து ஏறிய போது 3.50 டிக்கெட் க்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன் கண்டக்டர் 50 பைசா இருந்தா கொடுங்க என்றார் நான் நிறைய சில்லறை வைத்திருந்தேன் அதை எல்லாம் எடுத்து 50 பைசா தேடி எடுத்து நீட்ட அவர் சில்லறை தான் வச்சிருக்கீங்களே சில்லரையாவே கொடுத்துடுங்க என்று கேட்டார் நான் அஸ்கு புஸ்கு என்று (மனதிற்குள் தாங்க சொல்லி கொண்டு) இந்த சில்லறை இல்லன்னு தான் காலையிலே என்னை பேருந்தை விட்டே இறக்கி விட்டுட்டாங்க சார் என்றேன் .அவர் என்னை ஒரு பார்வை பார்த்த வாறே சென்று விட்டார்

அதனாலே இப்ப நான் வெளியில் கிளம்புறப்ப சில்லரையோட தான் கிளம்புறதுஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

 1. ஓ... நீங்க சில்லறை ஆளா?
  கடுப்பாவாதீங்க......
  நீங்க எப்பவும் சில்லறை வச்சிருக்கிற
  ஆளா என்று கேட்டேன்.
  நானும் எப்பவும் சில்லறை வச்சிக்கிறது
  வழக்கம்.

  பதிலளிநீக்கு
 2. சில்லறை பிரச்சினை பெரிய பிரச்சினைதான்.

  பதிலளிநீக்கு
 3. உங்க பிரச்சினையை நானும் ஒரு நாள் அனுபவித்து இருக்கிறேன் ,.,.
  அதே தஞ்சாவூர் பக்கம் இருக்கின்ற அரியலூரில் ....
  பதிவுக்கு நன்றிங்க தோழமையே

  பதிலளிநீக்கு
 4. உங்க சில்லறை பிரச்சினையை நானும் ஒரு நாள் அனுபவித்து இருக்கிறேன்... Nice.,

  பதிலளிநீக்கு
 5. தினமும் அலுவலகம் செல்லும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை. காலங்காலமாக தீராத ஒன்று.

  பதிலளிநீக்கு
 6. சில்லறை பிரச்சினை பெரிய பிரச்சினை தான் போங்கள்!

  பதிலளிநீக்கு
 7. நண்பரே, இந்த சில்லறை பிரச்சனையை கவிதையாகவும், கதையாகவும் வடிவமைத்திருக்கிறேன். முடிந்தால் படித்து கருத்து தெரிவியுங்கள்.

  http://sankarganeshs.blogspot.com/2011/10/blog-post_18.html

  http://anoutlook.blogspot.com/

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்