புதன், மே 14, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-4
கேமராவுக்கு முன்னும் பின்னும்-4

எனது பிறந்த நாளுக்கு முகநூலிலும்,இன் பாக்ஸ் சிலும் அலைபேசியிலும் 
வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி 

இந்த தலைப்புக்கு உரிய நிகழ்வுகள் முடிந்து விட்டாலும் சுற்றுலா என்பதும் ஒரு படைப்பாளிக்கு லோகேசன் பார்ப்பது போல் தானே. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் எடுத்து கொள்வோம் இந்த பகுதியை.

அன்று காலை 8 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார் துளசிதரன். அதே போல் ஷார்ப்பாக 8 மணிக்கு கிளம்பலாமா  என்று வந்து விட்டார். . அவரது குடும்பமும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் என்ற போது கொஞ்சம் தயக்கம் வந்தது. சார் உங்க பாமிலி கூட நீங்க போறப்ப எங்களால் இடைஞ்சல் 
தானே என்றேன். அதற்கு அவர் சிரித்த படியே அதெல்லாம் ஒன்றும் இடைஞ்சலில்லை வாருங்கள் என்று சொல்லி விட்டார். கீதா ரங்கன் மேடம் மற்றும் குடும்பத்தை நேராக ஸ்பாட்டுக்கு வர சொல்லி விட்டு எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார். 

அங்கிருந்து ஒரு மணி நேர பிரயாணத்தில் முக்காலி என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். வழியில் இரு மருங்கிலும் தென்பட்ட பசுமை சூழ்ந்த மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.ஓரிடத்தில் நின்று போட்டோ எடுக்க விரும்பினேன். வண்டியை நிறுத்தினார். அங்கிருந்த ஒரு கடையின் மதில் மேல் ஏறி நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள்.
நாங்கள் அனைவரும் முக்காலிக்கு வந்தவுடன் அங்கே வண்டியை 
அரசாங்க தகவல் மைய அலுவலகம் உள்ள காம்பௌண்டில் நிறுத்தி 
விட்டு அங்கிருந்து அரசாங்கம்  தந்த ஜீப்புகளில் கிளம்பினோம். 
ஒரு ஜீப்புக்கு 5 பேர் வீதம் ரெண்டு ஜீப் எடுத்து கொண்டு கிளம்பினோம் 
(ஒரு நபருக்கு 300 ரூபாய் ) அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயணம் 
அங்கே இரண்டு மணி நேரம் தங்கி விட்டு மீண்டும் ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்து விட வேண்டும். மொத்தம் 5 மணி நேர பயணத்திற்கு மட்டுமே அனுமதி. 
காட்டிலாகா அதிகாரிகள் டிக்கெட் செக் செய்து கேட் திறக்க இயற்கை அன்னை வீற்றிருக்கும் அந்த SILENT VALLY க்குள் பயணித்தோம். எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கும் அழகு கண்ணுக்கு தான் எவ்வளவு குளிர்ச்சி இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற பிரமை.

 ஜீப் செல்கின்ற பாதையே  ஒரு அழகு. ஜன நடமாட்டம் ஏதுமில்லாமல் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க அதை எங்களின் ஜீப் சத்தம் கலைத்து போட முயற்சிக்க அதையும் மீறி அந்த இயற்கையின் அமைதி அரசாட்சி செய்து கொண்டிருந்தது.ஆங்காங்கே பறவைகளின் குரல்கள் மட்டுமே 
விலங்குகளின் நடமாட்டம்  ஏதும் எங்கள் பாதையில் இல்லை என்றாலும் அவை எங்கோ உலவி கொண்டு இருக்கிறது என்பதை  அந்த அமைதி 
எங்கள் காதுகளுக்குள் ரகசியம் சொல்வது போலவே இருந்தது. ராய செல்லப்பா சார் "சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன" என்று ஹாஸ்யத்துடன் கேட்க,  சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம  அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்.மலை உச்சிக்கு சென்று ஜீப்பை நிறுத்தினார்கள்.  அங்கிருந்த டவரில் ஏறி எங்கும் சூழ்ந்திருந்த மலைகளின் அணிவகுப்பை பார்த்தோம். மனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம்  நமக்கு சொல்லும் செய்தி பின் காட்டிலாகா அலுவலகம் முன் வளர்க்கப்படும் பூ தொட்டிகள் பார்த்தவுடன் போட்டோ எடுத்தேன். அதிகாரி என்னருகில் வந்தார். நான் பறிக்க தானே கூடாது போட்டோ எடுக்க்கலாம்லே என்றேன் அனுமதி என்பது போல் அவர் தலையாட்டினார். அவர் என்னருகில் வந்தது நான் ரசித்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு என்று புரிந்தது. 
அங்கிருந்து பாதை இறங்க, அங்கே  சாப்பிடுவதற்கு என்று ஒரு தனி ஷெட் போல் கட்டபட்டிருந்தது. அங்கே துளசிதரன் வீட்டிலிருந்து  கொண்டு வந்த 
சாப்பாடு சாப்பிட்டோம். பிளாஸ்டிக் கவர் ஏதும் அங்கே போட கூடாது என்பது விதி. எனவே சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வைத்து கொண்டோம். அங்கிருந்து இன்னும் கீழே இறங்கினோம்.
எங்களை அழைத்து வந்த ஜீப் டிரைவர் ( அவர்கள் தான் இங்கே கைடு) சொன்ன செய்தி எங்களை  அதிர்ச்சிகுள்ளாக்கியது.ஒரு வருடத்திற்கு முன் புலி ஒன்று யானையை அடித்து சாப்பிட்ட இடம் என்று ஓரிடத்தை காட்டினார். யானையை அடித்த புலி 8 நாட்கள் அதை வைத்து சாப்பிட்டதாம்.தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பள்ளத்தாக்கு க்கு அது இழுத்து சென்றதாக சொன்ன போது அந்த 
இடத்தில் நின்று கவனித்து கொண்டிருந்த எனக்கு புலியும் எங்கிருந்தேனும் எங்களை  கவனித்து கொண்டிருப் போல் ஒரு சிலிர்ப்பு பரவியது. 
இப்படி புலியிடம் அது மாட்டியிருப்பதை நினைத்த போது யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லும் வார்த்தை உண்மை தான் போல. 

 எனக்கு யானை என்றால் ரொம்ப ப்ரியம். அது புலியிடம் மாட்டி சாகும் தருவாயில் எப்படி போராடியிருக்கும் அந்த நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
விலங்குக்கு விலங்கே உணவு என்பது எவ்வளவு கஷ்டம். எந்த நேரம் தன்னுயிர் போகுமோ என்ற பயத்துடன்  வாழும் வாழ்க்கை இது.

 அங்கிருந்து நகர்ந்து வந்த பின்னும் கொஞ்ச நேரத்திற்கு யானையின் 
மேல் பச்சாதாபம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கே நாங்கள் அலுவலகம் சென்ற போது புலி யானையை அடித்து சாப்பிட்ட நிகழ்வை கேமராவில் படம் பிடித்து அதை பெரிய லேமினேட் செய்து மாட்டியிருந்தார்கள். அவஸ்தையுடனே படம் பிடித்தேன்பின் அங்கிருந்து நானும் ராய செல்லப்பா சாரும் பாலக்காடு 
கிளம்பினோம். துளசிதரன்  பேருந்தில் ஏறி எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து எங்களை ஏற்றி  விட்டார். அவரிடமும் அவரது குடும்பத்திடமும் விடை பெற்று கிளம்பினோம். பாலக்காடு வந்து நாங்கள் கோயம்புத்தூர்  செல்ல பேருந்து ஏறினோம். அவரவர் திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கைக்கு என்று ஒரு  ரீவைண்ட் பட்டன் இருந்தால்  நம்மை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் மீண்டும்  பயணிக்க நினைப்போம் இல்லியா. அப்படி ஒரு மகிழ்ச்சியான் நிகழ்வு இது. பள்ளி மாணவர்களின் சமுதாய அக்கறை பற்றி சொல்லப்படும் 
நல்ல மெசேஜ் உள்ள இந்த குறும்படத்தில் பணியாற்றியதில் ஒரு 
மகிழ்ச்சி கலந்த திருப்தி. துளசிதரன் அவர்களின் இந்த பரோட்டா 
கார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.

FINAL PUNCH

நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கடவுள் நம் உதவிக்கு எல்லாம் 
வர மாட்டார்.மாறாக நம் குறிக்கோள் நல்லது என்றால் யாரையேனும் 
நம் உதவிக்கு அனுப்பி  வைப்பார். என்று சொல்லபடுவதுண்டு.நான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவித்த போது என்னை என்வழி வினோ 
இணையத்துக்குள் அழைத்து வந்தார். படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார்.  

அப்ப நாங்க என்று கேட்கிறீர்களா. நான் தான் முன்னமே சொல்லி விட்டேனே நீங்கள் நீதிபதிகள் என்று 

என்றும்மாறாத அன்புடன்

ஆர் .வி.சரவணன்


20 கருத்துகள்:

 1. புலி யானைய? ஆச்சரியம்தான்...குறும்படம் ரிலீஸ் எப்போ? ரீவைன்ட்டுக்குதான் பதிவு எழுதி வைத்தாச்ச்சேண்ணா ...குறும்பட உழைப்புக்கு சிறப்பு வாழ்த்துக்கள் மொத்த குழுவினருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அழகான இடம்... சிலிர்ப்பான அனுபவம்... வாழ்த்துக்கள் சரவணன் சார்...

  பதிலளிநீக்கு
 3. //ராய செல்லப்பா சார் "சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன" என்று ஹாஸ்யத்துடன் கேட்க//

  சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் சிங்கத்தின் நிலை என்ன" ன்னு தானே அவர் கேட்டிருக்கணும்.. ஹஹஹா

  பதிலளிநீக்கு
 4. //கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம்//

  பார்றா, எங்க ஊர் வழில வந்துட்டு என்னை கூப்பிடல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரம் இரவு பத்து மணி என்பதால் தொந்தரவு வேண்டாம் என்று அழைக்கவில்லை நன்றி நண்பா

   நீக்கு
 5. //பரோட்டா
  கார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.//

  கோவையின் வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு
 6. மனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் சொல்லும் நமக்கு சொல்லும் செய்தி

  சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 7. அழகான பதிவுகள் நண்பரே! நீங்கள் நடித்த குறும்படம் விரைவில் வரட்டும். (கோச்சடையான் மாதிரி தாமதம் ஆகாமல்!) . அத்துடன் தங்கள் நீண்ட நாள் கனவான திரைப்பயணம் தொடங்கட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் நடித்திருக்கின்றீர்கள் சார் நாம் நடித்த படம் என்று சொல்லுங்கள்

   மேலும் தாமதமாகும் ஒரு படத்தை கிண்டல் செய்ய வேண்டாமே அதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம் சாதாரண ஒரு வேலைக்கே ஆயிரம் குறுக்கீடுகள் வரும் போது ஒரு பிரம்மாண்ட படத்திற்கு வராதா என்ன

   நீக்கு
 8. அழகிய படங்களுடன் சுற்றுலா அனுபவம் சிறப்பு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 10. //ராய செல்லப்பா சார் "சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்//

  சரவணன் சார்... நீங்க சொன்னது பஞ்ச் டயலாக்கா?
  அல்லது லஞ்ச் டயலாக்கா?

  பதிலளிநீக்கு
 11. இயற்கையின் பிரமாண்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை அண்ணா..சுற்றுலா அனுபவங்கள் சிறப்பு...குறும்படத்தில் நடித்த உங்களின் குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான தொடர்.... சைலண்ட் வேலி படங்கள் அனைத்தும் அருமை.....

  குறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. சரவணன் சார் தங்கள் குடந்தையூர் வாழ்த்திற்கும்....ஆவி தங்கள் கோவை வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி!

  //படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார். //

  நன்றி எனக்கு சொல்லுவதை விட இறைவனுக்கு நாம் நன்றி சொல்லுவோம்! எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே! அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்! இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம்! இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை! இனியும் அவரது அருள் நமக்கு கிடைக்கும்! நாம் பதிவர்கள் அனைவரும் பல வெற்றிகள் அடைவோம்!

  நாங்களும் குறும்பட பதிவுகள் எழுத வேண்டும் என நினைதிருக்கின்றோம். ஆனால் அது இன்னும் சாத்தியமாகவில்லை! தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி! சார்!

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. யானையை புலி.. ரைட்டு. நாமெல்லாம் போகும் போது எலி கூட வராது.. அதனால் தைரியமாக போகலாம் :-)

  சரவணன் உங்களுக்கு இந்தப் பயணம் மிக சுவாரசியமாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. குறிப்பாக நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.

  சீக்கிரம் குறும்படம் எடுத்துடுவீங்க என்று சொல்லுங்க ;-) பட்டையைக் கிளப்புங்க.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்