ஞாயிறு, ஜனவரி 10, 2016

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?





பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?

இந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா? அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

அதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு. 

பிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற  பாடல்களை கேட்கறதுக்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா  டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக  தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு. 

அதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.

ஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்கு ப்ரோமோசன் ஆகிடுச்சு.  பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.

படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன்  பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில்  வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க.  அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).  

என் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, "நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன்.  அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் "உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா  நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, "சங்கீதம் கத்துக்கணும்" என்றவர் "இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு" என்றார். 35 என்றேன் . "இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை  தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

கல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் "இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.  

சென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி  டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)



ஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான்  பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள். 

இந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.




என்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட் 
பண்ணி எழுதிருக்கீங்க.

 நீ ஆணியே புடுங்க வேணாம்.

ஆர்.வி.சரவணன் 

எனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம். 

  

12 கருத்துகள்:

  1. உங்க பாடற ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். உங்க இஷடத்துக்கு பாடுங்க யூ ட்யூப்ல ஏத்துங்க.ரெகார்ட் பணறதுக்கு செல்போனே போதும். சிஸ்டம் மைக் ஒண்ணு வாங்குங்க கம்ப்யூட்டர்லயே பாடி ரெகார்ட் பண்ணுங்க.ஏராளமான பாடல்களோட கரோக்கி கிடைக்குது.அதை போட்டு உங்கள் வாய்ஸ்ல எந்த பாட்டையும் பாடலாம். வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு இணையம் ஒரு வரப்ரசாதம்.

    பதிலளிநீக்கு
  2. ஆர்வம் ஒரு நாள் நிறைவேறட்டும்...

    பதிலளிநீக்கு
  3. அப்ப குடந்தை ஆடியோஸ் விரைவில் எதிர்பார்க்கலாம்..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. //டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று //

    பந்திக்கு சாப்பிட போவீங்களா, இல்லையா?

    பதிலளிநீக்கு
  5. //(பாடற மாதிரி இருக்குல்ல)//

    வாயை மூடிப் பாடவும்!

    பதிலளிநீக்கு
  6. //கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். //

    பாடுங்க... பாடுங்க...
    பாடிட்டே இருங்க...!

    பதிலளிநீக்கு
  7. நேற்று தாங்கள் பகிர்ந்ததும் வாசித்தேன்....
    ரொம்ப ரசித்தேன்... பாடுங்க அண்ணா... பாடுங்க....
    அருமை...
    உங்கள் ஆசை நிறைவேறட்டும்.

    அப்புறம் பயணம்தான் உங்களுக்கு ரொம்பப்பிடிக்குமே. அதனால...
    அடுத்த தொடர்பதிவில் மாட்டிவிட்டிருக்கேன்.

    மனசுல பாருங்க.... நேரம் கிடைக்கும் போது எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. பாட்டுப்பாடணும் எனும் ஆர்வத்தினை அழகாக சொல்லி இருக்கிங்க சார்!

    பதிலளிநீக்கு
  10. Anna ungalukku paada theriyumnu enaku theriyathu. Kandippa next time paakum Pattu paadi kaaminga

    பதிலளிநீக்கு
  11. சார் இப்போதும் பாடலாமே. அதில் ஒன்றும் இல்லையே..ப்ராக்டிஸ் தேவைதான். ஆனால் இப்போதும் கூட பாட்டுக் கற்றுக் கொள்ள முடியும் சார். முயன்றால் முடியாதது இல்லையே. பாடுங்கள் ரெக்கார்ட் பண்ணி பதிவு செய்யுங்கள்.

    வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்