வியாழன், டிசம்பர் 01, 2011

இளமை எழுதும் கவிதை நீ....7


இளமை எழுதும் கவிதை நீ....7





நண்பர்களே ஏழாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஓவியம் இது (உமாவின் அப்பா சிவாவை தட்டி கேட்பதற்காக காலேஜ் வருவதை ஓவியமாக வரைய சொல்லியிருந்தேன்) இதை பார்க்கும் போது அவனது கற்பனைத்திறன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்


அத்தியாயம் 7



என் உடலின் அனைத்து செல்களும் செவி முளைத்து
தயார் நிலையில் உன் சொல்லை கேட்பதற்காக




மாவின் வீட்டுக்குள் சிவா தன் படையுடன் நுழைந்த அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸ் ஆக அவர்கள் பேசி கொண்டிருக்கும் நேரம் அது. அன்றும் அதே போல் அவர்கள் பேசி கொண்டிருந்த வேளையில், கார்த்திக்குடன் நுழைந்த சிவா வை பார்த்து முதலில் அதிர்ச்சியுற்றவள் உமாவின் தாய் தான். அவளது முக பாவம் பார்த்து தான் அவள் பார்வை போன திக்கில் பார்த்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அதிர்ந்தார்.படிப்பதில் மும்முரமாகியிருந்த உமா திடுக்கிட்டாள்

"நீங்க எப்படி இங்கே" என்று இரைந்தார் ஜெயச்சந்திரன்

"நீங்க எங்க மேலே படை எடுத்தீங்க பதிலுக்கு நாங்க படை எடுத்து வந்திருக்கோம் "கார்த்திக்

"ஆமா எப்படி வந்தீங்க"

"மாடி படி வழியா தான்"

"சீ வாசல்லே கதவை தட்டி வராமே திருட்டு பசங்க மாதிரி வரீங்க"உமா


"திருட்டு பசங்க நாங்க னு சொல்லாமே சொல்றாங்க"இன்ஸ்பெக்டர்

"கதவை தட்டி வரலை தான், ஆனா இதோ அதற்கு பதிலா கதவை உடைச்சிடுறேன்" என்று கோபத்தில் தன் காலால் கதவை ஓங்கி உதைத்தான் சிவா


தொடரும்


ஆர்.வி.சரவணன்


The story is copyrighted to kudanthaiyur and may not be used in any model or in any ways

16 கருத்துகள்:

  1. என் உடலின் அனைத்து செல்களும் செவி முளைத்து
    தயார் நிலையில் உன் சொல்லை கேட்பதற்காக/

    அருமையான கதை.

    படம் வரைந்த வளரும்
    பயிருக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஹர்ஷவர்தனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நல்ல கற்பனை திறன்... வரையும் ஆற்றல் என வளர்ந்துவருகிறார். என்றும் இவற்றை தொடர்ந்திட வேண்டுமென்பது எனது விருப்பம்.
    (சார் தொடரை முழுவதும் படிச்சிட்டு திரும்ப வருகிறேன்)

    பதிலளிநீக்கு
  3. நல்லா இருக்கு.... பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். கதை விறுவிறுப்பாக போகிறது. சிவாவின் நெகட்டிவ் கேரெக்டரின் ரசிகனாகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. முதலில் தம்பிக்கு வாழ்த்துக்கள் அழகிய ஓவியம் வரைந்தமைக்கு ...

    எதிர்பார்க்காத திருப்பங்கள் நிறைய இருக்கும் போல...
    நாங்க எதிர்பார்த்து காத்து இருக்கோம்...
    எழுத்து நடையின் நளினம் சுவை கூட்டி மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது...
    வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  6. சபாஷ் சரியான போட்டி ,விருவிருப்பு கூடுது

    பையனின் திறமை அருமை ,மேலும் வளர்த்து விடுங்கள்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ராஜ ராஜ ராஜேஸ்வரி மேடம்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரியா தொடர்கதை படித்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலா நீங்கள் சிவாவின் ரசிகனாகிவிட்டேன் என்று சொன்னதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி எம்.ஆர்

    பதிலளிநீக்கு
  12. விறுவிறுப்பாக இருக்கிறது.
    தொடருங்கள்.
    வாழ்த்துகள்.
    ஹர்ஷவர்தனனுக்கு வாழ்த்துகள் நல்ல ஓவியத்திற்கு.

    பதிலளிநீக்கு
  13. திரு சரவணன்... கதையை நான் படிக்கவில்லை.... ஆனா உங்க முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்.

    உங்க மகன் வரைந்த ஓவியம் மிக சிறப்பு.
    மிக வியந்தேன்.... உங்க மகனுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. முதலில் ஹர்சவர்தனனுக்கு வாழ்த்துக்கள்!கலக்கியிருக்கிறார்....கதையின் ஓட்டம் மிகவும் நன்றாக உள்ளது.
    கவிதையின் சாரமும் கதைக்கு முத்தாயிப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  15. கதை அசுரப் பாய்ச்ச்சலில் பாயத் துவங்கிவிட்டது
    சம்பவங்களை ரசிக்கும் படியாக அமைக்கிறீர்கள்
    உண்மையில் படம் மிக மிக அருமை
    தங்கள் புதல்வனுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. சரவணன், ஹர்ஷவர்தன் பற்றிய விவரங்களை, அவனுடைய புகைப்படத்துடன் எனக்கு இன்னொரு முறை அனுப்புங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்