வியாழன், டிசம்பர் 22, 2011

இளமை எழுதும் கவிதை நீ....10




இளமை எழுதும் கவிதை நீ....10


அத்தியாயம் 10


உன் வெற்றிக்கு சந்தோசப்படவே எனக்கு நேரம் போதவில்லை
இதில் எங்கே என் தோல்விக்கு நான் கவலைபடுவது



சிவாவை நோக்கியே எல்லோரது கவனமும் இருக்க கார்த்திக் மிகுந்த ஆத்திரத்தில் "சிவா எப்படி உன்னாலே இதை ஜீரணிக்க முடியுது என்னால் முடியவில்லை இந்த தோல்வியை தாங்கும் சக்தி என்னிடமில்லை" என்று காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினான்

சிவா அதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் தரையை பார்த்தபடியே இருக்கவே

"உமாவுக்கு நீ ஜாஸ்தி இடம் கொடுத்துட்டே சிவா" என்றான் கார்த்திக்

சிவா இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கவே


"அவளை பதிலுக்கு பதில் வாயாட விட்டதே தப்பு அதனோட மட்டுமில்லாம அவ வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணமே அப்ப ஊரையே கூப்பிட்டு வச்சி அவங்களை அவமானபடுத்தி இருக்கணும் விட்டுட்டு வந்தது தப்பா போச்சு"

"நான் கூட எதிர்பார்க்கலை உமா இவ்வளவு விஸ்வருபம் எடுப்பானு" பாலு


"அவளை விட கூடாது" என்று கார்த்திக் பரபரக்க சிவா தலை நிமிர்ந்தான்.

அவசரமாய் எழுந்தவன் உச்ச கட்ட கோபத்தில் இருப்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது



தொடரும்


ஆர்.வி.சரவணன்


he story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites

7 கருத்துகள்:

  1. ஓவியம் வரைந்த நம் சக வலை பதிவர் சகோதரி தென்றல் சரவணன் அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அதிரடியாய் கதை செல்கிறது ...
    அழுத்தமாய் பதிகிறது கதையின் கரு ..
    வாழ்த்துக்கள் சார் .. தொடருங்கள் ...

    பதிலளிநீக்கு
  3. அருமை! வாழ்த்துக்கள்!
    பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
    பகிர்விற்கு நன்றி!
    படிக்க! சிந்திக்க! :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    பதிலளிநீக்கு
  4. தொடருங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. :-) நன்றாக உள்ளது... கோமா வில் உள்ளவர் எழுந்து திரும்ப படுப்பதும் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்தத் தொடர் முழுமையையும் படிக்கும் விருப்பத்தை இந்த அத்தியாயம் ஏற்படுத்தி விட்டது. அருமை சரவணன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. "A coma is a state that lacks both awareness and wakefulness. Patients in a vegetative state may have awoken from a coma, but still have not regained awareness. In the vegetative state patients can open their eyelids occasionally and demonstrate sleep-wake cycles, but completely lack cognitive function. The vegetative state is also called a "coma vigil". The chances of regaining awareness diminish considerably as the time spent in the vegetative state increases".
    From the above reference it is understood that a patient in a coma state can regain conscious for a while and can go back to unconscious state. the story is explaining the same in a dramatic way. i think now Mr Giri understood from this medical reference. thanku

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்