செவ்வாய், பிப்ரவரி 14, 2012

வாழும் வரை காதலோடு....


வாழும் வரை காதலோடு....


அன்பே உனை பார்க்கும் வரை என் பொழுதே போகவில்லை
பார்த்த பின்னோ என் பொழுதே போதவில்லை


பிரம்மன் உனை மிக அழகாய் படைத்திருக்கிறான் இருக்கட்டும்
என்னை படைத்தது உனக்காக தானா ?


அன்பே உன் சொந்தங்களை கொண்டு நீ எனை கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லுமே


உன் கண்ணீர் துளியை கூட தாங்கும் வலிமை
இல்லாதது என் கருங்கல் இதயம்


என் உடலின் அனைத்து செல்களுக்கும் செவி முளைத்தது
உன் சொல்லை கேட்பதற்காகவே


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா


நான் எழுதி வரும் இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதையில்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் வரிகள் இவை


சென்ற வருடம் நான் எழுதி வெளியிட்ட காதலர் தினம் சிறுகதை இதோ

http://kudanthaiyur.blogspot.in/2011/02/blog-post_14.html

ஆர்.வி.சரவணன்

புதன், பிப்ரவரி 08, 2012

மின் வெட்டில் .....


மின் வெட்டில் .....


சிம்னி விளக்கொளியில்
வாழ்ந்த பொழுதுகளை
நம் நினைவில்
எப்பொழுதும்
முன்னிறுத்து கிறதே
முப்பொழுதும்
சென்று வரும்
இந்த
மின் நிறுத்தம்

ஆர்.வி.சரவணன்


வெள்ளி, பிப்ரவரி 03, 2012

இது எனது ராஜபாட்டை....


இது எனது ராஜபாட்டை....

எனது நண்பர் ஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள்(pensil vs camera) உங்கள் பார்வைக்கு
கூடவே எனது கமெண்ட்ஸ்




இது எனது (சேட்டைக்கான) ராஜபாட்டை





கள்ளம் (இல்லா) சிரிப்பு


அரங்கத்தில் ஒரு சதுரங்கம்


வான்வெளிக்கும் இங்கே வழியுண்டு



விண்ணிலே ஒரு பெண் நி(ல்)லா


காதலுக்கும் பால(ஆழ)முண்டு
ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜனவரி 31, 2012

இளமை எழுதும் கவிதை நீ....12





இடைவேளை விட்டு கொஞ்சம் அதிக நாள் எடுத்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே இதோ தொடர்கிறேன்

இளமை எழுதும் கவிதை நீ....12

அத்தியாயம் 12


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா

விநாயகர் கோவிலின் வாசலில் மழையில் நனைந்த படி அமர்ந்திருந்த சிவாவுக்கு மனதில் யோசனை ஓடி கொண்டே இருந்தது தன் வாழ்க்கை இனி எப்படி இருக்க போகிறது என்ற கேள்விகுறி உள்ளத்தை மொத்தமாய் ஆக்ரமித்து கொண்டிருக்க என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
மழை விட்டு கொஞ்ச நேரம் ஆகியும் கூட உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அவன் நகரவில்லை.
அப்போது திடீரென்று வந்து நின்ற பைக்குகளில் இருந்து இறங்கிய அவனது நண்பர்கள் சிவாவை நெருங்கினர்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் நன்றி இளையராஜா அவர்கள்

வெள்ளி, ஜனவரி 20, 2012

என் ப்ரண்டை போல யாரு மச்சான்....



என் ப்ரண்டை போல யாரு மச்சான்....

நட்பை பற்றிய ஒரு பதிவு என்பதால் இந்த தலைப்பு
என் பையன் ஹர்ஷவர்தன் ஏழாவது படிக்கிறான். அவன் பள்ளியில் பூனையும் எலியும் பேசி கொண்டால் என்ன பேசுவார்கள் என்ற கான்செப்டில் எழுதி கொண்டு வர சொன்னார்களாம். அவன் எங்கள் யாருடைய உதவியும் இன்றி எழுதியதை பெற்றோர் நாங்கள் படித்த போது, அவனது கற்பனை திறன் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.



அதை அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டிருக்கிறேன்
நண்பர்களாகிய நீங்கள் படித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்களேன்
டாம் அண்ட் ஜெர்ரி படம் வரைந்ததும் அவன் தான்

பூனையின் நண்பன் எலி

ஒரு வீட்டில் பூனை உறங்கி கொண்டிருந்தது.
திடீரென்று சமையலறையில் தட....புட....என்ற சத்தம் கேட்டவுடன் பூனை எழுந்து சமையல் அறைக்குள் சென்றது

பூனை அங்கிருந்த எலியை பார்த்து : வாப்பா என்ன காலையிலேயே அடி வாங்குவதற்கு வந்து விட்டாயா

எலி :பூனையே உன்னால் என்னை பிடிக்க முடியாது (என்ற படியே வேகமாக ஓடியது)

பூனை : அதையும் பார்க்கலாம் என்று கூறிய படி எலியை பிடித்தது

வீட்டு கதவை எவரோ டக்....டக்....டக்....டக்.... என தட்டினர்

எலி : (தன் மனதில் நினைத்து கொண்டது ) அப்பாடா எப்படியோ தப்பித்தேன்

பூனை : உமக்கு நல்ல காலம் இங்கிருந்து சென்று விடு

எலி வேகமாக ஓடி வலைக்குள் சென்றது

எலி வேகமாக ஓடியதை பார்த்து கொண்டே பூனை வேகமாக கதவை திறந்தது

வீட்டுகாரர்கள் வந்து விட்டார்கள் என்று கூறியபடி மியாவ் மியாவ் என்று கத்தியது

வீட்டுகாரர்கள் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள்
கீழே விழுந்து கிடந்தன. வீட்டுகாரர்கள் அப் பூனையை திட்டினர். "வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டாயே இவ் வீட்டை விட்டு வெளியே செல்" என்று கூறினர்.

இதை கேட்ட எலி பூனையை பார்த்து நான் ஒரு யோசனை கூறுகிறேன் கேள் என்றது

பூனை : நான் இனி உன் பேச்சை கேட்க மாட்டேன்

எலி : என்னை மன்னித்து விடு நான் செய்த தவறு உனக்கு வந்து விட்டது ஆகவே ஒரு யோசனை சொல்கிறேன் கேள்

பூனை : சரி கூறு

எலி கூறிய யோசனை

எலி : என்னை பிடிக்கத்தான் உன்னை வைத்திருக்கிறார்கள். தற்பொழுது உனக்கும் இவ் வீட்டில் இடம் வேண்டும் எனக்கும் இடம் வேண்டும். ஆகவே நீ என்னை பிடித்து காட்டுவது போல் நடி. வீட்டுக்காரர்களிடம் நீ , "சமையல் அறையில் பொருள்கள் கீழே விழுந்து கிடப்பதற்கு காரணம் இந்த எலி தான்" என்று கூறு என்று சொல்லியது

எலி கூறிய யோசனை படி பூனையும் நடந்தது

எலியை பிடித்து காட்டுவது போல் நடித்த பூனைக்கு வீட்டுகாரர்கள் தின் பண்டங்களை கொடுத்து பாராட்டினர்

பூனை யாருக்கும் தெரியாமல் அத் தின்பண்டங்களில் பாதியை எலிக்கு கொடுத்தது பூனையும் எலியும் நண்பர்களாகின.


இப்ப பூனை, என் பிரெண்டை போல யாரு மச்சான் என்று தானே பாடும்
ஆகவே தான் இந்த தலைப்பில் கொடுத்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்



சனி, ஜனவரி 07, 2012

நான் சொல்வது யாதெனில் ....




நான் சொல்வது யாதெனில் ....

(பாக்யராஜ் + புத்தக காட்சி + கொலைவெறி + ஏ.ஆர்.ரகுமான்)

முதல்லே உங்க எல்லாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை உளமார பிரார்த்திக்கிறேன்
(தாமதமா சொல்றதுக்கு மன்னிக்கவும் )




பார்த்தது


நேற்று என் ரத்தத்தின் ரத்தமே படம் பார்த்தேன் டிவி இல் பாக்யராஜ் நடித்த படம் இந்த படத்தில் பாக்யராஜ் தான் வளர்க்கும் சிறுவர்களுக்கு கதை சொல்வார். ஒரு ஊரில் மன்னாங்கட்டியும் இலையும் நண்பர்களா இருந்தாங்க மழை பெய்யும் போது இலை, மண்ணாங்கட்டியின் மேல் இருந்து அது கரையாமல் பாதுகாக்கும். காற்றடிக்கும் போது மண்ணாங்கட்டி, இலையின் மேல் அமர்ந்து இலை காற்றில் பறக்காமல் பாதுகாக்கும் என்று சொல்லி கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் கேட்பான் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால் என்னாகும் என்று. அதற்கு பாக்யராஜ் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிப்பார் பாருங்கள் அது வல்லவோ பாக்யராஜ் டச். இது எதற்கு இப்ப என்கிறீர்களா

(இன்று ஜனவரி 7 பாக்யராஜ் பிறந்தநாள் ஹாப்பி பர்த்டே பாக்யராஜ் சார் )


படித்தது

புத்தக கண்காட்சி ஆரம்பமாகி விட்டது சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவல் வாங்க வேண்டும் சாண்டில்யனின் ஜலதீபம் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது எனக்கு. எல்லா புத்தகத்தையும் வாங்க முடியாது என்றாலும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் எனக்கு பிரியம் ஜாஸ்தி. ஒரு ஸ்டாலையும் விடமாட்டேன் சுற்றி சுற்றி வருவேன் எப்படியும் நான் அந்த அரங்கை சுற்றி முடித்து விட்டு வெளி வர ஐந்து மணி நேரமாவது ஆகும். அந்த நேரங்களில்வெளி உலகமே மறந்து போய் விடும் எனக்கு

(புத்தகம் வாங்குறியே படிக்கிறியானு கேட்கறீங்களா நான் ஏற்கனவே வாங்கிய மன்னன் மகள், யவன ராணி இன்னும் தொட கூட இல்லை)


கேட்டது

கொலைவெறி பாடல் இந்த ஒரே பாடல் மூலம் தனுஷ் இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் எல்லாரும் இதையே சொல்றாங்களே னு நானும் இந்த பாடலை கேட்டேன். முதல் முறை கேட்ட போது ஒன்றும் இம்ப்ரெஸ் ஆகவில்லை. தொடர்ந்து கேட்டதில் பாடல் பிடித்து போய் இப்போது என் ஹம்மிங்கே இந்த பாடல் தான்

(ஒரு படத்தில் தனுஷ் பார்க்க பார்க்க தான் பிடிக்கும் னு சொல்வது போல் தொடர்ந்து கேட்க கேட்க தான் பிடிச்சுதோ)




எழுதியது

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற போது நான் எனது டைரி யில் எழுதி வைத்திருந்ததை இதோ உங்களுக்காக தருகிறேன் நல்லா இல்லேன்னா திட்டாதீங்க (அப்போது நான் வலை தளம் ஆரம்பிக்கவில்லை )

ஆஸ்கர் என்பது அனைவருக்கும் ஒரு கனவானது
உனக்கோ அது இங்கே நனவானது

ஆஸ்கர் அரங்கில் உன்னால் தமிழ் பேசப்பட்டது
தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் உன் வசப்பட்டது

உன் இசை எம் இதய அரங்கில் இன்பம் வார்த்தது
உலக அரங்கையே உன் பால் ஈர்த்தது

செய்த சாதனைகளை இறைவனுக்கே சமர்ப்பிக்கிறாய்
செய்ய போகும் சாதனைக்கு உன் உழைப்பை வித்திடுகிறாய்

அடக்கத்திலும் ஆன்மீகத்திலும் இன்னொரு ரஜினி நீ
சிகரங்களை தொட முயற்சிப்பதில் இன்னொரு கஜினி நீ


(இது எதற்கு என்கிறீர்களா ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள்
ஹாப்பி பர்த் டே ஏ.ஆர்.ரகுமான் சார் )




ஆர்.வி.சரவணன்








வியாழன், டிசம்பர் 29, 2011

இளமை எழுதும் கவிதை நீ....11






இளமை எழுதும் கவிதை நீ....11

அத்தியாயம் 11


சாம்ராஜ்யத்தையே நான் துறக்கிறேன்
உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி




சிவா வந்து இறங்கிய வேகத்தில் அந்த மிக பெரிய வரவேற்பறையான ஹாலே அதிர்ந்தது கண்ணாடி துகள்கள் ஹால் எங்கும் சிதற அங்கிருந்த அனைவரும் இதை எதிர்பார்க்காததால் திடுக்கிட்டனர். சிவா பைக்கை அப்படியே சாய்த்து விட்டு அதிரடியாய் இறங்கியவன் தன் மாமாவை முறைத்தான்.


சிவா மீண்டும் விநாயகர் கோவிலுக்கே வந்து மழையில் நனைந்த படி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான்.

இடைவேளை

தொடரும்



இந்த தொடர்கதை எண்பதுகளில் வரும் சினிமா போல் இருப்பதாக சொன்னார்கள் இந்த கதை நான் கல்லூரியில் படிக்கும் போது சினிமா திரைக்கதை போல் உருவாக்கியது அதாவது வருடம் 1989 ஆகவே தான் அப்படி இருக்கிறது.





இந்த தொடர்கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி.நிறைய பேர் படிக்கிறீர்கள் எனபதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அதே போல் உங்கள் எண்ணம் என்ன என்பதை அறியும் ஆவலிலும் இருக்கிறேன் எனவே கருத்துரையிடுங்கள் நண்பர்களே
ஆர்.வி.சரவணன்

செவ்வாய், டிசம்பர் 27, 2011

பேசச்சொல்லும் மௌன குரு




பேசச்சொல்லும் மௌன குரு


நாம் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் தான் மௌனகுரு

இந்த படத்தின் கிளிப்பிங்க்ஸ் ஒன்று டிவி யில் பார்த்தேன்
அது என்னவென்றால் அருள்நிதி ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து இந்த குழந்தையின் அப்பாவை (அவர் கான்ஸ்டபில்) அடித்து விட்டேன் அவர் அதில் மயங்கி விழுந்து விட்டார் இந்த குழந்தை வீட்டுக்கு போக வேண்டும் என்கிறது எனக்கு அட்ரஸ் தெரியாது என்று சொல்வார் இன்ஸ்பெக்டர் உமா ரியசிடம். அவர் அதிர்ந்து போவார். இந்த காட்சியை பார்த்தவுடனே சுவாரசியம் வந்து என் எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவே அன்றே தியேட்டர் சென்று பார்த்தேன் என் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஏமாற்றாமல் படம் ரசிக்கும் படி இருந்தது.

கதை போலீஸ் நினைத்தால் ஒரு சாதாரண மனிதனை வாழ்க்கையில் எந்த அளவு மோசமான நிலைக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதை, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் commercial விஷயங்கள் என்று எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் அழகாக நேர்த்தியாக ஒரு திரில்லர் படத்தை தந்திருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு ஒரு வெல்கம்

திரைக்கதை தான் படத்தின் ஹீரோ திரைக்கதையை பக்காவாக அமைத்து கேரக்டர்களை சிறப்பாக வடிவமைத்து அந்த கேரக்டர்களுக்கு நடிகர்களை பொருத்தமாக தேர்வு செய்து
ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் அருமையாய் அமைத்திருக்கிறார்.

உதாரணமாக அண்ணி கேரக்டர். வள வளவளவென்று எல்லாம் பேசாமல் தன கண்களாலேயே அருள்நிதியை தனிமைபடுத்தும் விதம்

உமா ரியாஸ் நிறை மாத கர்ப்பிணியாக, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் மனசாட்சியுடன் நேர்மையாய் செயல்படுவதாக காட்டும் விதம்

தம்பியை தனியே விடவும் முடியாமல் அதே நேரத்தில் வீட்டில் சேர்த்து கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அண்ணன் என்று ஒவ்வொரு கேரக்டரையும் அருமையாய் அமைத்திருக்கிறார்.

அருள்நிதி இந்த படத்தில் கருணாகரன் கேரக்டரில் கன கச்சிதமாய் பொருந்துகிறார் அவர்
ஒரு சாதாரண மனிதனை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அருள்நிதி இந்த படம் வளர்ந்து வரும் அவருக்கு கண்டிப்பாக முக்கியமான படம் எனலாம்

இனியா இந்த படத்தில் பெயருக்கேற்றார் போல் இனிமை சேர்க்கிறார் வீட்டில் எல்லாரும் அருள்நிதியை உதாசீனப்படுத்த இனியா மட்டும் அவரை கண்களால் பரிவாய் பார்க்கும் காட்சிகள் காதல் வருடல். அவர் தலையை கலைப்பதாகட்டும் காஸ் சிலிண்டர் தான் வந்திருக்கு என்று நிம்மதியுடன் அவர் தோளை தட்டுவதாகட்டும் உங்களையும் யாரவது இப்படி ஓவியம் வரையலாம் என்று சொன்னவுடன் அருள்நிதியை கட்டி கொண்டு அவர் மீது சாய்ந்து கொள்வதாகட்டும். இந்த காட்சிகள் மனதை வருடுகிறது


மற்ற கேரக்டர்கள் என்று பார்க்க போனால் ஜான் விஜய் தன் வில்லன் நடிப்பாலும் காலேஜ் பிரின்சிபால் தன் குணசித்திர நடிப்பாலும் அருள்நிதி யின் தாய் பாசத்திலும் நம்மை ஈர்க்கிறார்கள்


எனக்கு உறுத்தலான விஷயங்கள் என்னவென்றால்

இனியா தன் காதலனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து அவரை மீட்க ஏன் முயற்சி எடுக்கவில்லை.


அதே போல் மன நோய் மருத்துவமனை காட்சிகளை குறைத்திருக்கலாம்

தமனின் பின்னணி இசையும் ஒளிபதிவும் இயக்குனருக்கு பக்க பலமாய் இருக்கிறது

அருள்நிதியின் அடுத்த படத்தை, சாந்தகுமாரின் அடுத்த படத்தை பார்பதற்காக ஒரு கர்ச்சிப் (அதாங்க ரிசெர்வேசன்) இப்போதே போட்டு வைத்து விடலாம் என்று நினைக்க வைக்கிறது இந்த படம்.

மௌன குரு பேசப்பட வேண்டியவன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், டிசம்பர் 22, 2011

இளமை எழுதும் கவிதை நீ....10




இளமை எழுதும் கவிதை நீ....10


அத்தியாயம் 10


உன் வெற்றிக்கு சந்தோசப்படவே எனக்கு நேரம் போதவில்லை
இதில் எங்கே என் தோல்விக்கு நான் கவலைபடுவது



சிவாவை நோக்கியே எல்லோரது கவனமும் இருக்க கார்த்திக் மிகுந்த ஆத்திரத்தில் "சிவா எப்படி உன்னாலே இதை ஜீரணிக்க முடியுது என்னால் முடியவில்லை இந்த தோல்வியை தாங்கும் சக்தி என்னிடமில்லை" என்று காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிபடுத்தினான்

சிவா அதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் தரையை பார்த்தபடியே இருக்கவே

"உமாவுக்கு நீ ஜாஸ்தி இடம் கொடுத்துட்டே சிவா" என்றான் கார்த்திக்

சிவா இதற்கும் பதில் ஒன்றும் சொல்லாமல் மவுனம் காக்கவே


"அவளை பதிலுக்கு பதில் வாயாட விட்டதே தப்பு அதனோட மட்டுமில்லாம அவ வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணமே அப்ப ஊரையே கூப்பிட்டு வச்சி அவங்களை அவமானபடுத்தி இருக்கணும் விட்டுட்டு வந்தது தப்பா போச்சு"

"நான் கூட எதிர்பார்க்கலை உமா இவ்வளவு விஸ்வருபம் எடுப்பானு" பாலு


"அவளை விட கூடாது" என்று கார்த்திக் பரபரக்க சிவா தலை நிமிர்ந்தான்.

அவசரமாய் எழுந்தவன் உச்ச கட்ட கோபத்தில் இருப்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது



தொடரும்


ஆர்.வி.சரவணன்


he story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites

செவ்வாய், டிசம்பர் 20, 2011

என் கேள்விக்கு எனது பதில்


என் கேள்விக்கு எனது பதில்

நம்மிடம் வேடிக்கையாக பேசுபவர்களை எப்படி எதிர் கொள்வது ?

ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் தாஜ்கந்த் சென்றிருந்த போது ஒரு பத்திரிகை நிருபர் நீங்கள் ரொம்ப குள்ளம் என்று வேடிக்கையாக கூறினாராம்.
அதற்கு அவர் இருக்கலாம் அதனால் எனக்கு நன்மை தான் நான் மற்றவர்களிடம் பேசும் போது நிமிர்ந்து இருப்பேன் அனால் மற்றவர்கள் என்னிடம் பேசும் போது தலை குனிய வேண்டும் என்றார் சிரித்து கொண்டே



ஆசை என்பது ஒரு தொடர்கதை சரி தானே ?

கண்டிப்பாங்க, இதற்கு வேற எங்கியும் போக வேண்டாம் என் கிட்டயே உதாரணம் இருக்கு போன மாசம் நான் கும்பகோணம் போறதுக்கு கிளம்பறப்ப என் நண்பன் கேட்டான் என்னடா படுக்கிறதுக்கு இடம் கிடைக்குமா, உட்கார சீட் கிடைச்சா போதாதா என்று சொல்லி கிளம்பினேன். அங்கு போய் நான் வரிசையில் நிற்கும் போது கண்டிப்பா சீட் கிடைச்சுடும் என்று எனக்கு நம்பிக்கை வந்துச்சு கூடவே ஜன்னலோர சீட் கிடைச்சா நல்லாருக்கும் னு மனசு ஆசைபட்டுச்சு ஜன்னலோர சீட்டும் கிடைச்சுது. நிம்மதியா உட்கார்ந்தேன் எதிர் சீட்டில் வயதானவர் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார் ட்ரெயின் கிளம்பி நேரமாக நேரமாக எனக்கு வந்த இன்னொரு ஆசை என்ன தெரியுமா எதிர் சீட்டில் இதே நம் வயசுள்ள ஆள் உட்கார்ந்திருந்தால் கால்களை அந்த சீட்டில் நீட்டி வைத்து கொண்டு செல்லலாமே என்று தான்
இப்ப உங்களுக்கு என் மேல் கோபம் வந்திருக்குமே அதனால் ஒன்னும் தப்பில்லை ஏன்னா எனக்கே என் மேல் கோபம் வர்றப்ப உங்களுக்கு வராதா என்ன
ஆகவே ஆசை ஒரு தொடர்கதை தான்

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

இளமை எழுதும் கவிதை நீ....9




இளமை எழுதும் கவிதை நீ 9


அத்தியாயம் 9

நீ அடையும் தோல்வியில் பங்கெடுக்க வருகிறேன்
நான் அடையும் வெற்றியில் பாதியை உனக்கு தருகிறேன்


உமா மாணவிகள் படை சூழ எதிரே கம்பீரமாய் வந்து கொண்டிருக்க, அவளை பார்த்த சிவா வுக்கு கோபம் வராமல் இதழ்களில் புன்முறுவல் தான் தோன்றியது

தன் இரு பேண்ட் பாக்கெட்களிலும் கை விட்ட படி ஸ்டைலாய் நின்றிருந்த சிவா உமா கிட்டே வந்தவுடன் ,"ஏன் இந்த கொலைவெறி" என்றான்

அவன் சொல் கேட்டு நின்றவள் "நீ சொல்றது புரியலை" என்றாள்

"தேர்தல்லே நிக்க போறியாமே அதை சொன்னேன் ஏன் இந்த வேண்டாத வேலை"

"ஏன் நீ மட்டும் தான் நிக்கலாம்னு எதுனா சட்டம் இருக்கா என்ன

"நீ ரொம்ப எல்லை மீறி போறே"

இந்த பதிலால் கோபமடைந்தவள் "அதை கேட்க நீ யார்" என்றாள்

"உன்னை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு "

"உன்னை பார்த்தா எனக்கு கேவலமா இருக்கு"

இந்த பதிலால் அதிர்ச்சியுற்ற சிவா கோபமாய் கை சொடக்கு போட்டு

"தோத்து போயிட்டா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தலை நிமிர்ந்து போக முடியாது "

"அதே தோல்வி உனக்கும் வரலாம் இல்லையா அப்ப உன் நிலைமையும் அதானே"

"வார்த்தைக்கு வார்த்தை பேசறியே" எரிச்சலை வார்த்தைகளில்
கொட்டினான்


"ஏன் தோத்து போயிடுவோம்னு பயமா இருக்கா"

"எனக்கு ஒன்னும் பயமில்லை "

"அப்புறம் என்ன நீ மட்டுமே நின்னு ஜெயிக்கிறதை விட்டுட்டு என் கூட எதிர்த்து நின்னு ஜெயிச்சு பாரு அது தான் உண்மையான வெற்றி யா இருக்கும் நான் உன் கிட்டே போட்ட சபதத்தில் இது தான் முதல் ஸ்டேப் னு கூட நீ எடுத்துக்கலாம் "


"கண்டிப்பா ஜெயிப்பேன்"


தொடரும்


ஆர்.வி.சரவணன்

இந்த ஓவியம் வரைந்தது நம் சக வலை பதிவர் சகோதரி தென்றல் சரவணன் அவர்கள் அவருக்கு என் நன்றி

வியாழன், டிசம்பர் 08, 2011

இளமை எழுதும் கவிதை நீ.... 8


இளமை எழுதும் கவிதை நீ.... 8


அத்தியாயம் 8



எனை எதிர்த்து நீயே களமிறங்கினால்
என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா


உமாவுக்கு அன்று முழுதும் பேரவை தேர்தல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது அது வரை அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இல்லையென்றாலும் சிவாவின் அத்துமீறிய கலாட்டாக்கள் அவள் மனதை ரொம்பவும் ரணப்படுதியிருந்தன

அவனுக்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவள் மனது அலை பாய்ந்த நேரத்தில் தோழி சொன்னதும் நின்னு பார்ப்போமே என்று தோன்றியது தோற்று போயிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே இருந்தது. தன் தாயிடம் இது பற்றி கேட்டாள் .

கேட்ட அடுத்த நிமிடம் அவள் தாய், "வம்பை விலை கொடுத்து வாங்கனுமானு சொல்வாங்க நீ சும்மாவே வாங்கறேன்றே வேணாம்மா அதுவும் அவனை எதிர்த்து கண்டிப்பா வேணாம் "என்று சொல்லி விட்டாள்.

"நீ படிக்கிற வேலையை மட்டும் பார்" என்று அவள் தந்தையும் அதையே ஆமோதித்தார்.

அடுத்த நாள் ஹலோ என்ற பெண் குரல் கேட்டு உமா தன் ரூமை விட்டு வெளி வந்தாள். அங்கே வாசலில் கீதா நின்று கொண்டிருந்தாள்


தொடரும்

ஆர்.வி.சரவணன்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


வியாழன், டிசம்பர் 01, 2011

இளமை எழுதும் கவிதை நீ....7


இளமை எழுதும் கவிதை நீ....7





நண்பர்களே ஏழாவது படிக்கும் என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஓவியம் இது (உமாவின் அப்பா சிவாவை தட்டி கேட்பதற்காக காலேஜ் வருவதை ஓவியமாக வரைய சொல்லியிருந்தேன்) இதை பார்க்கும் போது அவனது கற்பனைத்திறன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்


அத்தியாயம் 7



என் உடலின் அனைத்து செல்களும் செவி முளைத்து
தயார் நிலையில் உன் சொல்லை கேட்பதற்காக




மாவின் வீட்டுக்குள் சிவா தன் படையுடன் நுழைந்த அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸ் ஆக அவர்கள் பேசி கொண்டிருக்கும் நேரம் அது. அன்றும் அதே போல் அவர்கள் பேசி கொண்டிருந்த வேளையில், கார்த்திக்குடன் நுழைந்த சிவா வை பார்த்து முதலில் அதிர்ச்சியுற்றவள் உமாவின் தாய் தான். அவளது முக பாவம் பார்த்து தான் அவள் பார்வை போன திக்கில் பார்த்த இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அதிர்ந்தார்.படிப்பதில் மும்முரமாகியிருந்த உமா திடுக்கிட்டாள்

"நீங்க எப்படி இங்கே" என்று இரைந்தார் ஜெயச்சந்திரன்

"நீங்க எங்க மேலே படை எடுத்தீங்க பதிலுக்கு நாங்க படை எடுத்து வந்திருக்கோம் "கார்த்திக்

"ஆமா எப்படி வந்தீங்க"

"மாடி படி வழியா தான்"

"சீ வாசல்லே கதவை தட்டி வராமே திருட்டு பசங்க மாதிரி வரீங்க"உமா


"திருட்டு பசங்க நாங்க னு சொல்லாமே சொல்றாங்க"இன்ஸ்பெக்டர்

"கதவை தட்டி வரலை தான், ஆனா இதோ அதற்கு பதிலா கதவை உடைச்சிடுறேன்" என்று கோபத்தில் தன் காலால் கதவை ஓங்கி உதைத்தான் சிவா


தொடரும்


ஆர்.வி.சரவணன்


The story is copyrighted to kudanthaiyur and may not be used in any model or in any ways

வியாழன், நவம்பர் 24, 2011

இளமை எழுதும் கவிதை நீ....6


இளமை எழுதும் கவிதை நீ....6

அத்தியாயம்
6


உன் கண்ணீர் துளியை தாங்கும் வலிமை கூட இல்லாதது
என் கருங்கல் இதயம்

தான் வந்தது பற்றி அலட்டி
கொள்ளாமல் அலட்சியமாய் சாய்ந்திருக்கும் சிவாவை பார்த்த போது இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு அப்படியே நாலு மிதி மிதிக்கலாமா என்று தான் தோன்றியது

"கேட்கறேன்லே சொல்லு" என்று அதட்டினார்

சிவா அவருக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் விரல்களால் அவசரமாக தன் நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பினான். இதை கவனித்த அவர் உடனே செல் போனை பிடுங்கினார்

"உங்களுக்கு இங்கே என்ன வேணும் எதுக்கு வந்தீங்க "

"தவறு எங்கே நடந்தாலும் நாங்க வருவோம் "

சிவா உடனே "நீ கிளம்பு" என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னான்

"போக கூடாது ஏய் நில்லு" என்று அவர் சொன்னவுடன் அந்த பெண் அங்கேயே நின்று விட்டாள்.

"பழி வாங்கறீங்க இல்லே "

"உனக்கு அப்படி தோணலாம் எனக்கோ இது கடமை"

"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை"

"நீங்க கெட்டது பண்ணுவீங்க அதை தடுத்து பிடிக்கலாம்னு வந்தா உங்களுக்கு நல்லாயில்லை யா வெட்டி பேச்சு பேசாதே கிளம்பு"

"வரலைனா"

"சட்டையை கொத்தா பிடிச்சு தர தர னு இழுத்துட்டு போவேன் மீடியாவை கூப்பிட்டு உன்னை சந்தி சிரிக்க வச்சுடுவேன்"

எழுந்த சிவாவுக்கு அப்பொழுது தான் உரைத்தது. கார்த்திக் மாட்டிற போறானே என்று. தான் மாட்டினாலும் பரவாயில்லை தம்பிக்கு எந்த இழுக்கும் வர கூடாது என்று கொஞ்சம் பதைப்புடன் அவசரமாக வெளி வந்தான்



தொடரும்


நண்பர்களே நிறைய பேர் இந்த எனது தொடர்கதையை படிக்கிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி நீங்கள் மனதில் நினைப்பதை கருத்துரையிடுங்கள

ஆர்.வி.சரவணன்

The story copyrighted to kudanthaiyur may not be reproduced on other websites.

சனி, நவம்பர் 19, 2011

இளமை எழுதும் கவிதை நீ .... 5



இளமை எழுதும் கவிதை நீ .... 5






அன்பே உன் சொந்தங்களால் எனை நீ கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லும்



உமா வகுப்பறையிலிருந்து வெளிவந்து செல் போனில் தன் தந்தையிடம் விவரம் சொல்லி அவரை கல்லூரிக்கு உடனே வர சொன்னாள். அவர் வந்து சேர்வதற்கு முன் நாம் கொஞ்சம் பிரின்சிபால் ரூம் சென்று வந்து விடுவோம்

கோபமுடன் கிளம்பிய பேராசிரியர் பிரின்சிபாலிடம் சென்று நடந்த விவரங்களை கோபமுடன் தெரிவித்தார்

"எப்படி சார் இங்க வேலை பார்க்க முடியும் "என்றார்

அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்த பிரின்சிபால்

"என்ன பண்றது பிரச்னை இல்லாத இடம் ஏது நமக்கு முக்கியம் காலேஜ் தான் சேர்மனும் சரி மினிஸ்டரும் சரி ரொம்ப நல்லவங்க அவங்களுக்காக தான் நாங்க இங்கே வேலை பார்க்கிறோம் நாங்க அவங்களை கண்டுக்கிறதில்லை நீங்களும் கண்டுக்காதீங்க நாளைக்கு சேர்மன் வரார் அவர்கிட்டே சொல்லுவோம் அப்புறம் அவர் பாத்துக்குவார் நீங்க அவர் வர வரைக்கும் அந்த கிளாஸ் போக வேண்டாம் "

என்று சமாதானம் செய்தார்

சுப்ரமண்யன் ஒரு பெருமூச்சுடன் தனது அடுத்த வகுப்பு என்ன என்று பார்த்து அங்கே செல்ல ஆயத்தமானார்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், நவம்பர் 15, 2011

புத்தகம் பேசுது



புத்தகம் பேசுது


சென்ற வாரம் தீபாவளி சினிமா படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன் படம் ஆரம்பிக்கும் போது பக்கத்தில் உள்ளவர் ப்லொக்கில் டிக்கெட் ஐம்பது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்ததாக சொன்னார் .நான், நல்ல வேலை கவுன்டரில் ஒரு டிக்கெட் ஓர சீட் தான் இருப்பதாக சொன்னார்கள் பரவாயில்லை என்று வாங்கி கொண்டு வந்து விட்டேன் எனக்கு லாபம் தான் என்றேன் கொஞ்சமே கொஞ்சம் பெருமையுடன்.

சரி விசயத்திற்கு வருகிறேன்

எப்போதும் என் கையில் புத்தகம் இருக்கும் அன்றும் எடுத்து சென்றிருந்தேன் படம் பார்க்கும் போது சீட்டில் வைத்து விட்டு படம் பார்த்தேன் இண்டர்வெல்லின் போது புத்தகத்தை மறந்து விட்டு எழுந்து சென்று விட்டேன் அப்புறம் நினைவு வந்து உடனே அவசரமாய் வந்து பார்க்கையில் புத்தகம் சீட்டில் இல்லை. சரி கீழே விழுந்திருக்கும் என்று அந்த வரிசை முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. அது ஒரு நாவல்
லைப்ரரி புத்தகம் வேறு.

ஒரு புத்தகத்தை ஒழுங்காக வைத்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கொஞ்சம் மூட் அவுட் ஆகி அந்த சூழலிலேயே படம் பார்த்து விட்டு வெளி வந்தேன். சரி என்று லைப்ரரி சென்று அதற்குண்டான பணம் நாற்பது ரூபாய் செலுத்தி விட்டு வந்தேன். பணம் செலுத்தியதற்காக நான் கவலைப்படவில்லை நுலகத்திற்கு பணம் செலுத்துவது எனக்கு சந்தோஷமே.


இதில் மன கஷ்டம் என்னவென்றால் ,

அந்த புத்தகம் பத்து நிமிஷத்தில் கண்டிப்பாக இன்டர்வெல்லில் யார் கையிலாவது
கிடைத்திருக்கும். அதை உரியவரிடம் சேர்க்காமல் அவர்கள் எடுத்து கொண்டது எனக்கு நியாயமாக தோன்றவில்லை. ஒரு புத்தக விசயத்தில் கூடவா இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
மேலும் அந்த கதை நான் முக்கால்வாசி தான் படித்திருந்தேன். கிளைமாக்ஸ் இன்னும் படிக்கவில்லை.த்ரில்லர் ஸ்டோரி சுபா அவர்கள் எழுதியது.

இதில் கற்ற பாடம்

ஐம்பது ரூபாய் மிச்சமாகிவிட்டது என்று பெருமைப்பட்ட (சரி கர்வப்பட்ட) கொஞ்ச நேரத்திலேயே அந்த நாவலை நான் விட்டு விட்டு அதற்குண்டான அபராத தொகை செலுத்த நேர்ந்தது தான்
கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு கரெக்டா வருதுல்ல

இதிலே ஒரு காமெடி என்ன தெரியுமா

நான் திரைஅரங்கில் மறந்து விட்ட அந்த நாவல்

மறக்காத நெஞ்சம்

ஆம் அந்த நாவலின் பெயர் இது தான்


ஆர்.வி.சரவணன்



வியாழன், நவம்பர் 10, 2011

இளமை எழுதும் கவிதை நீ-4



இளமை எழுதும் கவிதை நீ -4








அத்தியாயம் 4



அன்பே உன் கோபம் புறப்படுவது புயலாய்
இருந்தும் அது என்னிடம் வரும் போது மட்டும் தென்றலாய்


சிவா கார்த்திக் வருகைக்காக காத்திருந்த அந்த அடியாள் கும்பல் தனியார் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு டாக்டர் வருகைக்காக காத்திருந்தார்கள் கூடவே அவர்களை ஏவிய மாணவன் சுரேஷும் அங்கே காயங்களுடன் அனுமதிக்கபட்டிருந்தான்

மறுநாள் எதுவும் நடக்காதது போல், சிவா கார்த்திக் இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பைக்கை தங்கள் நண்பர்கள் நிற்கும் வழக்கமான இடத்தில நிறுத்திய போது சூழ்ந்து கொண்ட மாணவர்களிடம்,

"டேய் நம்ம தல அஜித் படத்திலே சொல்ற மாதிரி இனிமே ஜென்மத்திற்கும் தண்ணியே அடிக்க கூடாது னு தோணுதுடா" என்றான் கார்த்திக்

"ஆனா சாயந்தரம் பாரேன் அடிச்சா என்ன னு தோணும்"
இது சிவா

ஜோக் கேட்டது போல் சிரித்த நண்பர்கள்

"டேய் மச்சான் நேத்தி நைட் போட்டிங்களே ஒரு சண்டை, யப்பா இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது எங்களுக்கு. கொஞ்சம் தவறுச்சு நாம இருந்திருப்போம் ஹாஸ்பிடல் லே"

"டேய் இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்டா"

"அது சரி வீட்டுக்கு தெரிஞ்சுதுன்னா டின் கட்டிடுவாங்க அதான் பயமா இருக்கு"

டேக் இட் ஈஸி இப்ப வருது பார் நியூஸ்

என்று சிவா சொன்னவுடன் மின்னலென வந்து நின்றான் பயோடேட்டா பாலு


தொடரும்

ஆர்.வி.சரவணன்


கருத்துரையிடுங்கள் நண்பர்களே
அது தான் என் படைப்புக்கான ஊக்கம்

வியாழன், நவம்பர் 03, 2011

இளமை எழுதும் கவிதை நீ -3


இளமை எழுதும் கவிதை நீ -3

அத்தியாயம் 3


இறுகிய என்னை இளக வைக்கும் ஆற்றல்
உன் சினத்திற்கு இருக்கிறது


கல்லூரி மணி ஒலிக்கவும் தனது BSC zoology துறை வகுப்பிலிருந்து
உமா வெளி வந்த போது அவளது முகம் வாடியே இருந்தது. அப்போது அவளருகே வந்த அருள்,

" வெல்கம் உமா எப்படி இருக்கே காலையிலேயே உன்னை பார்க்க முடியலை சாரிப்பா "என்று அவள் கை பிடித்து குலுக்கினான்

"ஹாய் அருள் எப்படி இருக்கே" என்றாள் உமா சுரத்தில்லாமல்

நல்லாருக்கேன் இதெல்லாம் என் பிரண்ட்ஸ் என்று தன் நண்பர்களை அறிமுகபடுத்தினான் "அது சரி நீ ஏன் டல்லா பேசறே"

"இந்த காலேஜ் ஏன்டா வந்து செர்ந்தோம்னு இருக்கு அருள்"

"என்னாச்சு உமா"

"சரியான ரவுடிஸ் காலேஜ் ஜா இருக்கு"

"ஏய் அப்படி சொல்லாதே சூப்பர் காலேஜ்"

"நீ தான் மெச்சிக்கணும்"

"சிவா எதுனா தகராறு பண்ணானா"

"ஆமாம்" என்றாள் சலிப்புடன்


தொடரும்


ஆர்.வி.சரவணன்

ஓவியம் வரைந்தது என் நண்பர் தேவராஜ்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.