செவ்வாய், ஜூன் 28, 2011

கஷ்டப்பட இஷ்டப்படு






கஷ்டப்பட இஷ்டப்படு


வான் வழியே நானும் தலைப்பில் என் அனுபவத்தை உங்களிடம் சென்ற இடுகையில் சொன்னேன் அல்லவா. ஒரு விஷயம் சொல்லாமல் விட்டு விட்டேன்


அதாவது நான் அலுவலக வேலையாக சென்றேன் என்று சொன்னேன் அல்லவா எனது துறை சம்பந்தப்பட்ட வேலை அது என்பதால் நான் சென்றேன் எனது துறை பற்றி நான் அடிக்கடி சலிப்பாகவும் கோபமாகவும் இப்படி சொல்வதுண்டு ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் வேலை போதாதா இந்த துறையை வேறு நான் பார்க்க வேண்டுமா இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே இது தேவையா . இதனால் எனக்கு என்ன பயன் இந்த துறைக்காக எனக்கு தனியாக சம்பளம் தருகிறார்களா என்று சக ஊழியர்களிடமும் ஏன் எம் .டி யிடமே நான் கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தான் இந்த வேலை முடிக்க வேண்டும் என்ற அளவுக்கு எனக்கு இந்த துறை நான் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது எனும் போது கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற வரிகள் உண்மை என்பதை தான் எனது இந்த பயணம் தெளிவு படுத்தியிருக்கிறது

ஒரு நிமிஷம்


நான் எனது தாத்தா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் அதுக்கு என்ன இப்ப அப்படிங்கறீங்களா விஷயம் இருக்கு என் அம்மாவுடன் பிறந்தவர்கள் தாய் மாமா நான்கு ,பேர் சித்தி ஒருவர் இவர்கள் தான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தார்கள் நான்கு மாமன்களில் ஒருவர் மும்பையில் பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறார் அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் நான் என் வாழ்க்கையில் முன்னேற, எடுத்து கொண்ட ரோல் மாடல்களில் அவரும் ஒருவர் அவர் சிறு வயதில் என்னை தோள் மீது வைத்து பாட்டு பாடி தூங்க வைப்பார் என்று எங்கள் வீட்டில் எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன் எனக்கும் நினைவிருக்கிறது அவர் நன்றாக பாடுவார் அவர் பாடுவதை பார்த்து தான் நானும் பாட பழகினேன் (எதோ கொஞ்சம் ஓரளவு பாடுவேன் என்று வைத்து கொள்ளுங்கள் ) அவர், எனது மன்னிக்கவும் நமது குடந்தையூர் தளம் பார்த்து படித்து விட்டு அனுப்பிய கருத்துரையை உங்களோடு பகிர்கிறேன்


ஒரு சிறு வயது குழந்தை பள்ளியில் ப்ரைஸ் வாங்கி கொண்டு வந்ததை, தாய் உச்சி முகர்ந்து எப்படி பாரட்டுவாரோ அந்த பாராட்டில் குழந்தை எப்படி மகிழுமோ அதே மகிழ்ச்சியில் இந்த கருத்துரையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்




படம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் குளம்

ஆர்.வி.சரவணன்
















5 கருத்துகள்:

  1. எவ்வளவு நல்ல விசயமெல்லாம் வெளியில வருது!அதான் r.v.s., நீங்க பாடுவீங்கன்றதுதான்!
    உங்கள் மாமாவிற்கு எங்கள் வணக்கத்தை சொல்லுங்கள்.கஷ்டபட்டது இஷ்டமானது ...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அப்படி ஒன்றும் எனக்கு சிறப்பாக பாடும் அளவுக்கு எல்லாம் குரல் வளம் இல்லை ஏதோ பாடுவேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  3. இதை விட ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும். வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. சார் நினைக்கவே ரொம்ப பெருமையா இருக்குங்க சார்...
    இந்த மாதிரி ஊக்கம் நிச்சயம் தேவை..
    இன்னும் நிறைய சாதிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ..

    பாடுவிங்களா... இதுவரைக்கும் தெரியாம போச்சே //

    பதிலளிநீக்கு
  5. இசையை ரசிப்பது ஒரு அருமையான விஷயம் என்றால் இசையை பாடி எல்லோரையும் மகிழ்விப்பது இன்னும் அருமையான விஷயம்... இறைவன் எல்லோருக்குமே எல்லா திறமைகளையும் தந்துவிடுவதில்லை. ஆனால் இசையால் மனதை லேசாக்கும் வரத்தை எல்லோருக்கும் இறைவன் தருவதில்லை... உங்களுக்கு அந்த வரத்தை இறைவன் தந்திருக்கிறார்... அதை முறைப்படி இன்னும் வளர்த்து மென்மேலும் வளர என் அன்பு வாழ்த்துகள்..

    நேர்மையுடன் உழைத்து முன்னுக்கு வரும்போது ஒரு சில இடர்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதை எல்லாம் தாண்டி வெற்றி சிகரத்தை தொடுவது தான் சேலஞ்ச் என்பது...

    என் அன்பு வாழ்த்துகள் சரவணன். உங்கள் தளம் அருமையாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்