ஞாயிறு, மே 30, 2010

முரண் பாடுகள்




முரண் பாடுகள்



பாலாபிஷேகம் செய்யப்பட்ட கட் அவுட் கீழே பாலுக்கு அழுது கொண்டிருக்கும் குழந்தை



வயிறார சாப்பிட்டாலும் பிச்சைக்காரனிடமிருந்து வரும் குரல் சாப்பிட்டு நாலு நாளாச்சு பிச்சை போடுங்க



மழை ஆரம்பிக்க தத்தம் குழந்தைகளை வீட்டுக்குள் பெற்றோர் அழைத்து கொள்ள கூட விளையாடிய அநாதை சிறுவன் நனைந்தான் மழையில்



கண்ட படி சிதறியிருக்கும் சர்க்கரையை நோக்கி படையெடுக்கும் வரிசை மாறா எறும்புகள்




குளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வந்தும் பாட்டிலுக்கும் வியர்க்கிறதே



படம் என் நண்பர் TNஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பியது




ஆர்.வி.சரவணன்

9 கருத்துகள்:

  1. நாடோடி
    முர‌ண்.... ந‌ல்லா இருக்குங்க‌... கொஞ்ச‌ம் க‌ரெக்டா ப‌த்தி பிரிச்சா ப‌டிக்க‌ வ‌ச‌தியா இருக்கும்..

    நன்றி நாடோடி

    பதிலளிநீக்கு
  2. எல்லா முரண்பாடுகளும் வியக்க வைக்கின்றன
    padma

    நன்றி padma

    பதிலளிநீக்கு
  3. எல்லா முரண்பாடுகளையும் கவனித்து,
    நல்லா வடித்துள்ளீர்கள், கவிதையில்!

    பதிலளிநீக்கு
  4. சரவணன் ரொம்ப நல்லா இருக்கு!

    முதல் ஹைக்கூ மட்டும் பல முறை பலர் பேசியது! மற்றது அனைத்தும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  5. படமும் கவிதைகளும் நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. சும்மா நச்..நச்..ன்னு இருக்குங்க சரவணன்... ரொம்ப நாளா பார்க்காம விட்டுட்டேன்... அருமை...தொடர்ருங்கள்....

    பதிலளிநீக்கு
  7. 3
    4
    5
    2
    1

    படிப்பவர் மனதில்
    இப்படியான வரிசையில்
    இடம்பிடிக்கிறது உங்களின் சிந்தனை.

    பதிலளிநீக்கு
  8. நன்றி நிசாமுதீன்

    நன்றி ஜெய்லானி

    நன்றி கிரி

    நன்றி ப்ரியா

    நன்றி பாலாசி

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சத்ரியன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்