செவ்வாய், மே 31, 2011

நட்புக்குத் தங்க மனசு


நட்புக்குத் தங்க மனசு

நட்பை அவமரியாதை செய்யும் செயல் இது என்று முனுமுனுத்தான் கார்த்திக்

கோவை செல்லும் ரயிலில் மனம் முழுக்க சந்தோசமாய் ஏறியவன் தான், சிறிது நேரத்திலேயே வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சலிப்படைந்து இவ்வாறு கூறினான்

அவன் அப்படி சலிபடைந்ததன் காரணம் என்னவென்றால் கல்லுரி காலங்களில் அவன் கூட படித்த உயிர் தோழி கீதா வுடனான நட்பு படித்து முடித்து வேலைக்காக சென்னை வந்த பின் தொடர முடியாமல் விட்டு போனது. சமீபத்தில் அவளது உறவினர் ஒருவரை பார்க்க நேர்ந்த போது அவர் கோவையில் இருப்பதாக சொல்லவே ,இவன் உடனே செல் நம்பர் வாங்கி போன் செய்து பேசினான்

பதினைந்து வருடங்களாக விட்டு போன நட்பு, ஒரே நாளில் ஒருமாத போன் பில் வரும் அளவுக்கு எகிற வைத்து அத்தனை வருட கதையை ஒரே நாளில் அவர்களை பேச வைத்தது.பின் அவள் இவன் மனைவியிடமும் இவன் அவளது கணவரிடமும் பேசி பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டனர்.

கீதாவும் அவள் கணவரும் எப்பொழுது வருகிறீர்கள் என்று அழைப்பு விடுக்கவே உடனே அவளை பார்க்க வேண்டும் என்று ஆசையில் அவளுக்கு அவள் கணவருக்கு குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் வாங்கி கொண்டு சந்தோசமாய் கிளம்பியவன், தான் கிளம்பி விட்டதை உறுதிபடுத்த போன் செய்தான்

சுவிட்ச் ஆப் என்றதும் டென்சனாகி தொடர்ந்து அரை மணி நேரமாக முயற்சித்தும் அதே பதிலால் சலிப்படைந்து போய் சொன்ன வார்த்தை தான் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது

சரி என்று அவளது கணவர் செல்லுக்கு முயன்றான் அது தொடர்பு எல்லைக்கு வெளியே என்று தெரிவிக்க, அவர்களுக்காக வாங்கி கொண்டு செல்லும் பொருட்கள் அவனை பார்த்து சிரிப்பது போல் அவனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது

"அப்பொழுதே அவன் மனைவி உமா ,நீங்க உங்க தோழியை பார்க்க போவதற்கும் அவர் கூட பழகுவதற்கும் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் கீதாவின் கணவர் இதை எப்படி எடுத்து கொள்கிறார் என்பதை தீர விசாரித்து கொண்டு செல்லுங்கள்" என்று சொன்னாள்

ஒருவேளை தான் யோசிக்காமல் கிளம்பி விட்டோமோ கீதாவின் கணவர் தான் பழகுவதை விரும்பவில்லையா இல்லையே நல்லா தானே பேசினார் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாரே ஒருவேளை ஒப்புக்கு அழைத்திருப்பாரோ தாம் உடனே கிளமிபியது தப்போ என்று எந்த அளவுக்கு குழப்பி கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தன் மனதை குழப்பி கொண்டான். கோவை சென்று இறங்கி அடுத்த ரயில் பிடித்து உடனே திரும்ப வேண்டியது தான் என்று மனசு வெறுத்து போய் முடிவும் செய்து கொண்டான்.

அப்பொழுது பார்த்து போன் அடிக்கவே எடுத்து பார்த்தான். ஏதோ புது நம்பர் ஹலோ சொன்னான்.எதிர்முனையில் பேசியது ஒன்றும் புரியாமல் போகவே கடுப்பாகி போனை கட் செய்தான் மீண்டும் சிறிது நேரம் சென்ற பின் செல் அடிக்கவே எடுத்து பார்த்தால் அது கீதாவின் நம்பர்.

"இது தான் உன் நட்பின் லட்சணமா நான் வர்றது பிடிக்கலைனா வராதே னு சொல்லலாம் இல்லே அதை விட்டுட்டு வர சொல்லிட்டு இப்படி போன் ஆப் பண்ணா என்ன அர்த்தம் "என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தான்

இதையெல்லாம் கேட்ட அவள் "அப்ப இருந்த அந்த உன் முன் கோபம் அப்படியே இருக்கு ஆனால் என் மேலே உள்ள நம்பிக்கை தான் குறைஞ்சிடிச்சு உனக்கு. முதல்லே என்ன நடந்துச்சின்னு கேளு " என்றாள்

"அதான் இப்ப அனுபவப்பட்டேனேஅப்புறம் அதை நீ சொல்லி வேறே தெரிஞ்சிக்கனுமா "என்றான் கடுப்பில்

"இதோ பார் நீயா எதுனா நினைச்சுகிட்டு பேசாதே அப்புறம் உனக்கு வர கோபம் எனக்கும் வரும் நானும் பேசுவேன் "என்றவள்

"என் பையன் செல் போனை கை தவறி தண்ணீரில் போட்டு விட்டான் அதை எடுத்து துடைச்சி என்ன தான் ஆன் பண்ணாலும் ஆன் ஆகலே நீ போன் பண்ணுவியே என்று டென்சன் ஆகி உடனே பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அவங்க போன் வாங்கி உனக்கு பண்ணேன் நீ ஹலோ னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டே நான் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்த என் கணவருக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி உனக்கு போன் பண்ண சொல்லலாம் னு பார்த்தா அவர் லைனும் கிடைக்கலே சரி என்று உடனே எங்க தெரு முனையில் இருக்கும் செல் ஷோ ரூம் போய் புது மொபைல் போன் வாங்கி சிம் கார்டை போட்டு உனக்கு போன் பண்ணி பேசறேன் நீ என்னடான்னா நம்ம நட்பையே கேவலபடுத்தர மாதிரி பேசறே "

என்று அவள் இப்போது எகிற ஆரம்பித்தாள்

இவன் சாரி என்று சொல்ல சொல்ல எனக்கு "சாரி எல்லாம் நீ தர வேணாம் என் கணவர் இருக்கிறார் அதை வாங்கி ஆசையாய் தருவதற்கு "என்று கோபமாய் சொன்னாள்

சரி புது மொபைல் பில் காசு நான் தந்திடறேன் இது தான் எனக்கு
தண்டனை ஓகே யா என்றான் சிரிப்புடன்

அவள் கோபம் குறைந்து சிரித்து கொண்டே

"அட என் நண்பனே நீ என் போனை எதிர்பார்த்து தவிக்க கூடாது என்பதற்காகவும் என் நட்பை அந்த நேரத்தில் உறுதிபடுத்தவும் நான் கொடுத்த விலை தான் இந்த மொபைல் போன் காசு என்று பெருமையாய் சொன்னாள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், மே 24, 2011

விளையாடிய பொழுதுகளில்


விளையாடிய பொழுதுகளில்


அன்பே

சிறுவயதில்

விளையாடிய பொழுதுகளில்

நாம் எங்கு சென்றாலும்

நிலா தொடர்வதை கண்டு

அதிசயித்தோம்


நான் வாசலிலும்

நீ பின் வாசலிலும்

நின்று

நிலவை உற்று

கவனித்தோம்


நிலா

அங்கும் இருந்தது

இங்கும் இருந்தது


இரு பக்கமும் இருப்பதாக

சொல்லி கொண்டதால்

இருவர் சொல்வதும்

பொய்யென்று

சண்டையிட்டு கொண்டோம்


இன்று அதை நினைக்கையில்

நாம் சிரித்து கொள்கிறோம்


நாம் சிரிப்பது இருக்கட்டும்

அன்று

நிலா நம்மை பார்த்தல்லவா

சிரித்திருக்கும்


ஆர்.வி.சரவணன்

**********

ஆடுகளம் படம் பார்த்தேன்
வெற்றி மாறனின் பொல்லாதவன் படம்
பார்த்து விட்டு
ஆடுகளம் படத்தின் மேல்
கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருந்தேன்
வெற்றிமாறன் பெயருக்கேற்றார் போல்
வெற்றி களம்
கண்டிருக்கிறார்
படத்தில்தனுஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்
இல்லை இல்லை
கருப்பு வாகவே
மாறியிருக்கிறார்
வாழ்த்துக்கள் தனுஷ் ,வெற்றிமாறன்

ஆடுகளம் படம் பற்றி நான் ஏற்கனவே இடுகையில் குறிப்பிட்டது இது
தேசிய விருதுகளை குவித்திருக்கும் ஆடுகளம் திரைப்பட குழுவினருக்கு
எனது வாழ்த்துக்கள்

**********

புதன், மே 18, 2011

அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்


அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்


அன்புள்ள ரஜினிகாந்த்
அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்

அபூர்வ ராகமாய் அறிமுகமானாலும்
என்றென்றும் எங்கள் அதிசய ராகம் அல்லவோ நீ

ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்
எங்கள் சாம்ராஜயத்தின் மன்னன் அல்லவோ நீ

விண்ணை முட்டும் புகழ் சுமந்தாலும் பணிவுடன் வலம் வரும் மனிதன்அல்லவோ நீ

உன் நலனுக்காக ரசிகர்களை என்றுமே
அழைத்ததில்லையே நீ

ரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம்
இதோ பரிதவித்து அனாதையாய் நிற்கிறது

ஒவ்வொரு சோதனையையும் சாதனையாய் மாற்றிய
நீ இந்த சோதனையை யும் சாதனையாய்
மாற்றுவாய்

இறைவன் அருளால் இந்த சோதனையையும்
வென்று வா

நோயிலிருந்து விரைந்து மீண்டு
வா

திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திரம் எழுதலாம்
வா

வதந்திகளை தகர்த்தெறிவோம்
வா

கலங்கி நிற்கும் பல கோடி உள்ளங்களுக்கு
மகிழ்ச்சியை தா

காத்திருக்கிறோம்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மே 12, 2011

சும்மா ஜாலிக்கு


சும்மா ஜாலிக்கு....

நான் சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து உரையாடல் ஒன்றை எழுதியுள்ளேன்
படித்து பாருங்கள்

ஏய்

யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா

எவனாயிருந்தா எனக்கென்ன

திமிரு
தானே உனக்கு

உனக்கு தான் வாய் கொழுப்பு

என்னப்பா ஏட்டிக்கு போட்டியாவே பேசறே யாருப்பா நீ

உன்னை போல் ஒருவன்

எங்கிருந்து வரே

அண்ணா நகர் முதல் தெரு லேருந்து

எப்படி வந்தே

கிழக்கே போகும் ரயில் லே

எதுக்கு வந்திருக்கே

நாட்டாமையை பார்க்க

பார்த்து

அவர் கிட்டே வேலைக்காரன் ஆக இருக்க வந்திருக்கேன்

இருந்து

பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி
மிக பெரிய பணக்காரன் ஆக போறேன்

கேட்டவருக்கு அதிர்ச்சி

இருக்காதா பின்னே

ஏன்னா அவர் தாங்க நாட்டாமை

இந்த உரையாடல் நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது நீங்கள் யாவரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் உங்கள் கவனத்திற்கு தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

FINAL PUNCH

******

முயற்சி என்பது ஒரு டம்ளர் பால் அதில்
அதிர்ஷ்டம் என்பது ஒரு ஸ்பூன் சர்க்கரை

ஆனந்த விகடன் வார இதழில் இருந்து
******

புதன், மே 04, 2011

உனை காக்க என் உயிர்.....


உனை காக்க என் உயிர்.....


பருவச் சோலையில் பூக்கள் ஏராளம்

மலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்


தென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில்

பிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில் மலர்ந்தவளே


உன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று

வண்டுகளாய்உனை முற்றுகையிட்டது


சுற்றி சுற்றி வந்து நாள் பார்த்தது

அதிலே நானும் ஒருவன்


உனை அடைய எண்ணமில்லை

காக்க எண்ணமுண்டு


உன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட

முள் பட்டு எனை வருத்திட்டேன்



என் உயிரை மாய்த்தேன்

தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்



ஆடவர் என் நிலை கண்டனர்

உனை விட்டு அகன்றனர்



நீ நினைத்திருப்பாய்

உனை அடைய வந்தவன் நான் என்று

நீ நினைப்பாயா

உனை காக்க என் உயிர் போக்கியதை அறிவாயா

நான் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய கவிதை இது நீங்கள் யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனவே தான் மீண்டும் வெளியிட்டிருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்


ஒரு நிமிஷம்

******
கோ படம் பார்த்தேன் கடைசி வரை ஜீவா அலட்டாமல் அழகாய் நடித்திருக்கிறார் .கலகலப்பாய் வந்து கடைசியில் கதைக்கும் கேரக்டருக்கும் கனம் சேர்க்கிறார் பியா,கார்த்திகா பரவாயில்லை என்றாலும் நடிப்பு பரவாயில்லை என்று சொல்ல முடியவில்லை வேகமான திரைக்கதையின் மூலம் நமை ஈர்க்கிறார்கள் சுபா, கே .வி .ஆனந்த் என்னமோ ஏதோ பாடல் நமக்குள்ளே என்னமோ செய்கிறது .அமளி துமளி பாடல் காட்சியில் வரும் இடங்கள் அனைத்தும் அழகு டைட்டில் வரும்போது வரும் ஸ்டில்கள் இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே என்று ஆர்வத்தைஏற்படுத்துகிறது ஓகோ தான்
******