வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா
கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான்.இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் பாடை கட்டி மகா மாரியம்மன்கோவில். இங்கு வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் பாடை காவடி திருவிழா புகழ் வாய்ந்த ஒன்றாகும்.
08-03-2013 அன்று பூச்சொரிதல் விழாவும்,10-03-2013 அன்று காப்பு கட்டுதலும்,17-03-2013 அன்று திருவிழா தொடக்கமும் நடைபெற்று, இன்று 24-03-2013 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக 31-03-2013 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும்,07-03-2013 அன்று கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது
இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால், உடல் நலம் சரியில்லாதவர்கள், வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடை காவடி எடுத்து உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். இது பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும்
அற்புத காட்சி நான் எடுத்த சில படங்களை இங்கே உங்களுக்கு தந்திருக்கிறேன்
இரவில் மின் வெட்டில் ஜொலிக்கும் கோவில் வாசல்
பகலில் கோவில் நுழைவாயில்
அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள்
தெருவில் எங்கும் அலகு காவடி
ஊரெங்கும் பாடை காவடி
ஈம கிரியை போன்ற வேண்டுதல்
மகா மாரியம்மனின் திரு வீதி உலா
மகா மாரியம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும் என்று உளமார வேண்டுகிறேன்
ஆர்.வி.சரவணன்
படங்கள் அருமை... ஓம் சக்தி...
பதிலளிநீக்குபுதிய தகவல் அண்ணா...
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்வு அருமை.