வியாழன், நவம்பர் 24, 2011

இளமை எழுதும் கவிதை நீ....6


இளமை எழுதும் கவிதை நீ....6

அத்தியாயம்
6


உன் கண்ணீர் துளியை தாங்கும் வலிமை கூட இல்லாதது
என் கருங்கல் இதயம்

தான் வந்தது பற்றி அலட்டி
கொள்ளாமல் அலட்சியமாய் சாய்ந்திருக்கும் சிவாவை பார்த்த போது இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு அப்படியே நாலு மிதி மிதிக்கலாமா என்று தான் தோன்றியது

"கேட்கறேன்லே சொல்லு" என்று அதட்டினார்

சிவா அவருக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் விரல்களால் அவசரமாக தன் நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பினான். இதை கவனித்த அவர் உடனே செல் போனை பிடுங்கினார்

"உங்களுக்கு இங்கே என்ன வேணும் எதுக்கு வந்தீங்க "

"தவறு எங்கே நடந்தாலும் நாங்க வருவோம் "

சிவா உடனே "நீ கிளம்பு" என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னான்

"போக கூடாது ஏய் நில்லு" என்று அவர் சொன்னவுடன் அந்த பெண் அங்கேயே நின்று விட்டாள்.

"பழி வாங்கறீங்க இல்லே "

"உனக்கு அப்படி தோணலாம் எனக்கோ இது கடமை"

"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை"

"நீங்க கெட்டது பண்ணுவீங்க அதை தடுத்து பிடிக்கலாம்னு வந்தா உங்களுக்கு நல்லாயில்லை யா வெட்டி பேச்சு பேசாதே கிளம்பு"

"வரலைனா"

"சட்டையை கொத்தா பிடிச்சு தர தர னு இழுத்துட்டு போவேன் மீடியாவை கூப்பிட்டு உன்னை சந்தி சிரிக்க வச்சுடுவேன்"

எழுந்த சிவாவுக்கு அப்பொழுது தான் உரைத்தது. கார்த்திக் மாட்டிற போறானே என்று. தான் மாட்டினாலும் பரவாயில்லை தம்பிக்கு எந்த இழுக்கும் வர கூடாது என்று கொஞ்சம் பதைப்புடன் அவசரமாக வெளி வந்தான்



தொடரும்


நண்பர்களே நிறைய பேர் இந்த எனது தொடர்கதையை படிக்கிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி நீங்கள் மனதில் நினைப்பதை கருத்துரையிடுங்கள

ஆர்.வி.சரவணன்

The story copyrighted to kudanthaiyur may not be reproduced on other websites.

14 கருத்துகள்:

  1. முக்கியமான இடத்தில் தொடரும்னு போட்டு சுவாரஸ்யம் கூட்டிடீங்க்களே நண்பரே ,விரைவில் அடுத்த பாகம் தாருங்கள்

    வாக்களித்தேன்

    பதிலளிநீக்கு
  2. கதையின் வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது ,,
    அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆவலை நிறையவே தூண்டுகிறது ,,,

    தொடரட்டும் இனிய இளமை பயணம் ... வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  3. செம விறுவிறுப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஐம்பது வயதை தொட்டிருந்த அவர் சினிமாக்களில் வரும் பணக்கார அப்பாக்களை நினைவு படுத்தினர். அவர் சாதரணமாக சாப்ட் டைப்
    ரொம்பவும் மென்மையானவர் அதிர்ந்து கூட பேசாதவர்.ஆனால் இப்போது
    அவர் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. இவர்களின் செயல் தான் அவரை ஆத்திரப்பட வைத்திருக்கிறது/

    அருமையான வர்ணனை. விறுவிறுப்பான கதை. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அருமை... நிறைய யோசித்து எழுதியுள்ளீர்கள். தொடரட்டும்..... நல்வாழ்த்துக்கள்..... நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமாய்ச் செல்கிறது..

    பதிலளிநீக்கு
  7. நல்ல தொடர்.
    விறுவிறுப்பாகிறது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேடலை தருகிறது உங்கள் எழுத்து....அருமையாய் நகர்கிறது கதை...வாழ்த்துக்கள்...தொடருங்கள் r.v.s.

    பதிலளிநீக்கு
  9. நான் யாருங்கிறதை இப்ப காட்றேன் வாங்கடா என்று எழுந்தவன் தன் நண்பர்களிடம் என்ன செய்ய போகிறோம் என்பதை விளக்கினான்.


    என்ன செய்தார்கள்??

    பதிலளிநீக்கு
  10. வாங்க வாங்க!
    நீங்கள்ளாம் வந்து
    கருத்து சொல்லாட்டி எப்பூடி?
    அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!

    பதிலளிநீக்கு
  11. அடிச்சு தாக்குங்க! :-)

    முடிவில் சிவாவும் உமாவும் ஒன்றாகி விடுவார்களா!. இது போல எழுத்தாளர் ரமணிச்சந்திரன் கதைகளில் வரும் .. சும்மா ஒரு டவுட்டு ;-)

    பதிலளிநீக்கு
  12. Hi Saravanan,
    You have named your blog as Kudanthaiyur but you put Thanjavur Big Temple photo. Any particular reason? This is just out of my curiosity.
    My greatest appreciation for the nice and tempting story. We just wait for the next chapter publication. - Best wishes

    பதிலளிநீக்கு
  13. இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்பரே!

    பதிலளிநீக்கு
  14. இதற்கு நான் எழுதிய பின்னூட்டம் விடுபட்டுள்ளது, நண்பரே!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்