வெள்ளி, அக்டோபர் 28, 2011

இளமை எழுதும் கவிதை நீ - 2 (தொடர்கதை )



இளமை எழுதும் கவிதை நீ - 2
(தொடர்கதை)






அத்தியாயம் - 2

பிரம்மன் உனை மிக அழகாய் படைத்திருக்கிறான் இருக்கட்டும்
என்னை படைத்தது உனக்காக தானா ?


ன் மேல் விழுந்த மாலையை கையில் பிடித்தவாறு கண்களில் கோபத்தை வடித்தவாறு சிவாவின் அருகில் வந்த உமாவை பார்த்த கார்த்திக் கிண்டலாய் , "நீங்களும் மாலை போட வந்தீங்களா போடுங்க " என்றான்

"நான் மாலை போட வரலே கேட்க வந்தேன்"

"இன்னொரு மாலை வேணுமா"

"ஹலோ வார்த்தை இடக்கு மடக்கா வருது மரியாதையா பேசுங்க"

சிவா கைகளை கட்டியவாறு வைத்த கண் வாங்காமல் உமாவையே பார்த்து கொண்டிருந்தான்

"இத பார் மாலை விழுந்துச்சின்னா தூக்கி எறிஞ்சிட்டு போ அதை விட்டுட்டு இங்கே வந்து எதுக்கு விசாரணை பண்றே"

"அதானே சிவா மாலை போட மாட்டானா னு எத்தனை பொண்ணுங்க ஏங்குது தெரியுமா நீ என்னடானா ரொம்ப சிலிர்த்துக்கிறே" ஒரு நண்பன்

"இத்தனை பொண்ணுங்க இருந்தும் உன் மேல மட்டும் மாலை விளுந்துசின்னா என்ன அர்த்தம்"

"சுயம்வரம் மாதிரி சிவா உன்னை பிடிச்சு போய் மாலை போட்டுட்டான்னு அர்த்தம் இந்த கான்செப்ட் லே யோசிச்சி பாரு கணக்கு கரெக்டா வரும் "

என்று ஒரு நண்பன் சொன்ன அடுத்த விநாடி உமாவின் கை அவன் கன்னத்தில் இறங்கியது


"குரங்கு கையில் பூமாலை கிடைச்சா என்ன பண்ணும் தெரியுமா இப்படி தான் விட்டெறியுமாம் இந்த கான்செப்ட் லே நீ நினைச்சு பாரு "

என்று சொல்லி விட்டு மாலையை குப்பை தொட்டி நோக்கி வீசிவிட்டு அங்கிருந்து நகன்றாள்.

அவளது அந்த வார்த்தையால் வெகுண்ட அவனது நண்பர்கள் சிவாவை பார்க்க, கார்த்திக் அவளை நோக்கி முன்னேற, சிவா அவன் கை பிடித்து தடுத்தான்

"விட்ருடா"

"சிவா என்னை அடிச்சிட்டாடா"

"பரவாயில்லே நான் அடிச்சதா நினைச்சுக்க"

டேய் நீயும் அவளும் ஒண்ணா

என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்து கொண்டே, அறை வாங்கிய கன்னத்தை இலேசாக தட்டி விட்டு பைக்கை நகர்த்தினான்

"என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறான்"

"அவ மேலே கண் வச்சிட்டாண்டா சிவா "

"இது எதுலே போய் முடியும்"

"அவனது படுக்கையறைக்கு அவள் வந்தவுடன் முடிவுக்கு வந்துரும்"

------

"கண்டிப்பா முடியாது"

என்று சொன்னான் பாலு

அந்த கல்லூரியில் யாரை பற்றி வேண்டுமானாலும் அவனிடம் நியூஸ் கிடைக்கும் ஆகவே அவனுக்கு கல்லூரியில் பயோ டேட்டா பாலு என்பது அவனது செல்ல பெயர்

"என்னடா சொல்றே" சிவா

"புதுசா இன்னைக்கு வந்திருக்கிற பெண்ணோட பேர் உமா ரெண்டு வருஷம் மதுரையில் படிச்சிருக்கு அவங்கப்பாவுக்கு இந்த ஊர் மாற்றலானதாலே மூணாவது வருஷம் இங்கே வந்து சேர்ந்திருக்கு படிப்புல நம்பர் ஒன் பரத நாட்டியம் ஸ்போர்ட்ஸ் லே யும் இன்ட்ரெஸ்ட் ஜாஸ்தி பொண்ணும் ரொம்ப ப்ரில்லியன்ட் நீ இப்ப அடிச்சியே அருள் அவன் இந்த உமாவுக்கு பிரெண்ட் "

------

"காலேஜ் சூப்பர் காலேஜ் கோச்சிங் டிசிப்ளின் லாம் பக்கா என்ன திருஷ்டி மாதிரி இந்த பசங்க ரெண்டு பேர்"

உமா வகுப்பறையில் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள்


"அவங்க நம்ம காலேஜ் நிறுவனரோட பசங்க சிவாவுக்கு உடம்பு பூரா திமிர் எதுக்காகவும் பயப்பட மாட்டான். அவனுக்கு அவன் தம்பி கொஞ்சம் பரவாயில்லை ரெண்டு பேருமே நம்ம கிளாஸ் தான்"

"அதெப்படி அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் லே"

சிம்பிள் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம் அண்ணன் ஒரு வருடம் பெயில் சோ தம்பி அண்ணன் கூட சேர்ந்து படிக்கும் படியாகிடுச்சு

------

"ண்டிப்பா முடியாது னு சொன்னியே ஏன்டா "

"அவங்கப்பா தான் நம்ம ஊருக்கு transfer ஆகி வந்திருக்கிற புது இன்ஸ்பெக்டர் ரொம்ப நேர்மையானவர் எதுனா அந்த பொண்ணுகிட்டே பிரச்னை பண்ணா முட்டிக்கு முட்டி தட்டிடுவார் அதான் அந்த பெண் கிட்டே வம்பு ஒன்னும் வச்சிக்க வேண்டாம் "

"உன்னை பயோ டேட்டா தானே கேட்டேன் நீ ஏன் பய டேட்டா சொல்றே"

"உன்னை பயமுறுத்த சொல்லலைப்பா நான் பயந்துகிட்டு சொல்றேன் "

"நான் இருக்கேன் dont worry"

"இன்னொன்னு தெரியுமா உங்க கிளாஸ் தான் அந்த பொண்ணு"

"இதை தான் பழம் நழுவி பால்லே விழுதுனு சொல்வாங்களோ"


------

"அவங்கப்பா இவங்களை கண்டுக்கிறதில்லையா "

"அவர் டில்லியிலே இருக்கார் வெரி பிஸி இவங்க பண்ற கலாட்டாக்களை இவங்க மாமா காலேஜ் சேர்மன் சொல்லாமே மறைச்சிடுறார்னு சொல்றாங்க "

"இருந்தும் அப்பாவுக்கு பையனை பற்றி தெரியாமயா இருக்கும் "உமா


'தெரிஞ்சிருக்கலாம், கண்டிக்க முடியாமே விட்டுட்டார் னு நினைக்கிறேன் '

"இந்த வருஷம் முழுக்க இவன் கூட மல்லுக்கு நிக்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்"

"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது பயப்படாதே"

"பயமா எனக்கா ஹ இவன்லாம் எனக்கு சுண்டைக்காய் என்ன பண்ணிடுவான்னு பார்க்கிறேன்"

------

குப்பறைக்குள் சிவா கார்த்திக் உள் நுழைந்தவுடன், வகுப்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து "மார்னிங் சிவா" என்றனர் உமா மட்டும் எழவில்லை

சிவா பதிலுக்கு தலை அசைத்துக்கொண்டே
ஓரகண்ணால் உமாவை கவனித்து, அவள் முதல் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனும் அவளுக்கு நேர் எதிரே உள்ள பெஞ்சில் அமர்ந்தான்

"டேய் சிவா என்னடா முன்னாடி உட்கார்ந்திட்டே"

பின்னாலிருந்து நண்பர்களின் குரல்

"இனிமே என் சீட் இதான், நீங்க அங்கேயே உட்காருங்க"

"என்னடா சிவா அங்கே உட்கார்ந்துட்டான்"

அவளை ஒரு கை பார்க்க முடிவு பண்ணிட்டான்னு நினைக்கிறேன் கார்த்திக்

அந்த நேரம் பார்த்து பேராசிரியர் உள்ளே நுழையவும் சிவாவை தவிர மற்ற எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர்

நடிகர் மனோபாலாவை நினைவு படுத்திய தோற்றத்தில் இருந்த அவர் "என்ன பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஹாலிடே எல்லாம் எப்படி போச்சு"

"உங்களை பார்க்காமல் ரொம்ப கஷ்டமா போச்சு சார் " கார்த்திக்

வேறு மாணவன் என்றால் இதற்கு ஏதேனும் சொல்லியிருப்பார். ஆனால் பேசுவது இந்த காலேஜ் நிறுவனர் பையன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே உமாவை பார்த்தார்

"உமா ரெண்டு வருஷம் ரொம்ப நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கே நீ வந்ததில் எங்க காலேஜ் க்கு ரொம்ப பெருமை நல்லா படிச்சு நீ முதல் மார்க் வாங்கணும் "

"கண்டிப்பா சார் "

என்று உமா எழுந்து பணிவுடன் சொல்லி அமர்ந்தாள்.

இந்த உரையாடல்களை கவனித்து கொண்டிருந்த சிவா வாய் திறக்கும் முன்னேஅவன் தம்பி கார்த்திக் எழுந்து,

"அது என்ன சார் இன்னைக்கு சேர்ந்த உமா மேல மட்டும் அவ்வளவு எதிபார்ப்பு வைக்கிறீங்க" என்றான்

"அதானே புதுசா யாராவது வந்தா அவங்களை தூக்கி தலை மேலே வச்சுக்குவீங்கலே "என்றான் இன்னொரு மாணவன்

"நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா மார்க் எடுக்க மாட்டோமா "

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ப்ரொபசர்,

" எல்லாருமே படிச்சு நல்ல மார்க் எடுக்கனும்னு தான் நான் ஆசைபடறேன் "என்றார்

"அப்புறம் ஏன் அந்த பொண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றீங்க"

உடனே உமா எழுந்து "சார் நீங்க அவங்களை புகழ்ந்து நாலு வார்த்தை பேசுங்க ரொம்ப ஏங்கறாங்க "என்றாள்

கார்த்திக் எழுந்து," என்ன ரொம்ப பேசறே நீ " எகிற ஆரம்பித்தான்

அப்போது சிவா குறுக்கிட்டு இருடா என்று தம்பியை அடக்கினான்

ப்ரொபசரிடம் , " இந்த வருஷம் நம்ம காலேஜ் லே நான் first வர்றேன் முடியாதுனு
நினைக்கிறீங்களா " என்றான்

"யாருப்பா சொன்னது நீ நினைச்சா முடியும்பா"

கூடவே ஒவ்வொரு மாணவனாய் எழுந்து சார் நான், சார் நான் என்று குரல் கொடுக்கவே "எல்லாராலேயும் முடியும்பா " என்று பதில் கொடுத்தார் திணறி போய்

உமாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் உமாவின் காதில் , "பிட் வச்சு எழுதினா யார் வேணும்னாலும் முதல் மார்க் வாங்கலாம் "என்று காதை கடிக்க

உமாவும் உடனே, " சார் நல்லா படிச்சு பிட் எல்லாம் அடிக்காமே மார்க் வாங்கறது தான் உண்மையான கௌரவம் "என்று சொன்னவுடன் கோபமாய் எழுந்த சிவா

தன் கையில் வைத்திருந்த நோட் புக்கை டெஸ்கில் அடித்தான்

வகுப்பறையே அவன் கோபத்தை பார்த்து அதிர்ந்தது

"நீ ரொம்ப யோக்கியம் னு பீத்திக்கிறியா இந்த வருஷம் உன்னை விட ஒரு மார்க்காவது நான் கூடுதலா எடுத்து காட்றேன் பார்க்கறியா" கை சொடுக்கி சவால் விட்டான்

"ஏன் ஒரு மார்க் னு சின்னதா தின்க் பண்ணனும் திங்கிங் பெரிசா இருக்கட்டுமே அப்ப தான் சாதனையும் பெரிசா இருக்கும் " உமா

"உனக்கு அது வேதனையா இருக்கும் பரவாயில்லியா" என்று கார்த்திக் கிண்டலாய் சொல்லவும் வகுப்பறையே சிரித்தது

உமாவின் சிவந்த முகம் அவமானத்தில் இன்னும் சிவந்தது

தொடரும்

ஆர்.வி.சரவணன்


The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

25 கருத்துகள்:

  1. நல்ல கதை.
    தொடருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாய்ச் செல்கிறது கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தொடர் சூடு பிடிக்கிறது ..
    ஓவியம் அழகு .. மின்னல் வேகத்தில் கதை நகர வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  4. Good starting...Keep it up Saravanan. Keep up the tempo

    Rajram, Mumbai

    பதிலளிநீக்கு
  5. தொடர் சுவாரஸ்யம் கூடுகிறது. ஆவலுடன்...!

    பதிலளிநீக்கு
  6. முத‌ல் அத்தியாய‌ம் இப்ப‌த்தான் ப‌டிச்சேன்..ரெண்டாவ‌து இன்ட்ர‌ஸ்டிங் ச‌ர‌வ‌ண‌ன்.சூப்ப‌ர் வாழ்த்துக்க‌ள்...

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கு நன்றி நிஜாமுதீன் இப்படி ஒரு பெயருக்கு நான் முயற்சிக்கையில் இந்த பெயர் தந்தது என் மகன் ஹர்ஷவர்தன்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வருகைக்கு நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கு நன்றி மாதவி

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கு நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கு நன்றி அங்கிள்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வருகைக்கு நன்றி கருண்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் வருகைக்கு நன்றி சத்ரியன்
    உங்கள் வருகைக்கு நன்றி இர்ஷாத்
    உங்கள் வருகைக்கு நன்றி என் ராஜபாட்டை ராஜா

    பதிலளிநீக்கு
  14. தாமதத்திற்கு பொறுக்கவும் ,அருமையான கதை ,நகரும் விதம் பிடித்திருக்கிறது .தொடர்கிறேன் தொடருங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  15. திரைக்கதை போல் மிக அழகாக காட்சியாக
    விவரித்துப் போகிறீர்கள்
    கதை மிக இயல்பாகவும் அதி விரைவாகவும்
    சுவாரஸ்யமாகவும் நகர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பட்டாசு பாலு போல இங்க பயோடேட்டா பாலுவா...
    சூப்பர போகுது... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் தளத்தில் பின்தொடர்பவராக இணைந்துவிட்டேன்..!!

    பதிலளிநீக்கு
  18. எனது வலையில் இன்று:

    தமிழ்நாடு உருவான வரலாறு

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    பதிலளிநீக்கு
  19. கதை அருமையாய் போகுது. வெல்டன்

    பதிலளிநீக்கு
  20. சரவணன் நன்றாக எழுதி இருக்கீங்க.. இதை படிக்கும் போது எனக்கு 80 களில் வந்த படங்களின் நினைவு வந்து சென்றது. சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்