சனி, ஏப்ரல் 30, 2011

வளையோசை கல கல கல கல வென ....

வளையோசை கல கல கல கல வென ....

மனம் கவர்ந்த பாடல்கள்


சில பாடல்கள் கேட்கிறதுக்கு மட்டும் நல்லா இருக்கும் சில பாடல்கள் விசுவல்ஆக பார்க்கிறதுக்கும் நல்லா இருக்கும் நான் எப்போதுமே பாடல்களைகேட்கிறதுக்கு ரொம்ப ஆசைபடுவேன். ஆனா பாருங்க நான் விசுவலா பார்க்கிறதுக்கும் ஆசைபடுற பாடல்களில் ஒன்னு தான் இப்ப நான் சொல்லபோறது

சத்யா படத்தில் வரும் வளையோசை கல கல கல வென .... பாடலும் சரி படமாக்கப்பட்ட விதமும் சரி எனக்கு ரொம்ப பிடிக்கும்

கமல் செய்யும் குறும்புகளும் அதை சிணுங்கலோடு அனுமதிக்கும் அமலாவின்நடிப்பும் எனை கவர்ந்த ஒன்று

உதாரணம் சொல்லனும்னா அமலா தன் கை முஷ்டியை உயர்த்தும் போது கமல்முத்தமிட உடனே அமலா கமல் தலையில் குட்டுவார் கவிதை போன்ற காட்சி இது

அதே போல் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருக்கும் கமலைஉள்ளே வர சொல்லி அமலா சைகையில் அழைப்பார் அந்த சைகை, முக பாவனை ரொம்ப நல்லாருக்கும்

அதே போல் கமல் முத்தமிட்டதால் அமலா பொய் கோபத்துடன் சிணுங்க கமல் சமாதானம் செய்வதும், அவர் லா லா என்று ராகம் பாடும் போது கமல் அமலாவின் கழுத்தை கிள்ளுவதும் , அமலா கமலின் தாடியை பிடித்து இழுத்து விளையாடி அவரை தன் கைகளால் தாக்குவதும் கமல் அதை ரசிப்பதும் என்று படு சூப்பர் ஆனா பாடல் இது

எப்பொழுது இந்த பாடல் டிவியில் போட்டாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்

இந்த பாடலிலும் நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் செய்திருக்கும்இசை ஜாலம் பற்றி, செவிக்கும் மனதுக்கும் இந்த பாடல் தரும் இன்பத்தை பற்றிஇதத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ காட்சியாய் கண்டதை என்றும் நம் நினைவில் நீங்காமல் வைத்திருப்பது எது இசை அரசரின் இந்த இசை தான் என்பதும் நீங்கள் அறிந்தது தானே

சரி முடிவா என்ன தான் சொல்றே ன்னு கேட்கறீங்களா

இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த காதலின் மேல் பொறாமையே வந்துடும்


படம் சத்யா

பாடியவர்கள் எஸ் .பி .பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்

பாடல் வாலி

இசை இளையராஜா

இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா

படம் வெளியான ஆண்டு 1988

இதோ அந்த பாடல்





ஆர்.வி.சரவணன்














செவ்வாய், ஏப்ரல் 26, 2011

மழையில் இணைந்த படி .....




இதற்கு முன் நான் எழுதிய

மழையில் நனைந்த படி .... கவிதையின் தொடர்ச்சி என்றும்

இதை எடுத்து கொள்ளலாம்




மழையில் இணைந்த படி .....


மழையில் நனைந்த படி
வரும்
என்னவளை
குடையுடன்
எதிர் கொண்டேன்



மழையில் நனைந்த படி
செல்லலாம் என்று
அவளும்
குடையில் இணைந்த படி
செல்லலாம் என்று
நானும்
தர்க்கத்தில் இறங்க



இது ஏதடா வம்பு
என்று
மழை நின்று விட்டது


ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

திருத்தாளமுடையார்கோவில்

திருத்தாளமுடையார்கோவில் ஸ்ரீ தாளபுரீஸ்வரர் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் திருத்தலம் நுழைவாயில்
இத்தலம் சீர்காழிக்கு மிக அருகில் இரு கிலோ மீட்டர் தொலைவில் திருக்கோலக்கா என்ற ஊரில் உள்ளது

சுவாமி ஸ்ரீ தாளபுரீஸ்வரர்என்ற பெயரிலும் அம்பாள் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் என்ற பெயரிலும் உள்ளார்கள் விநாயகர் பெரிய பிள்ளையார் என்ற பெயருடன் உள்ளார். சுப்பிரமணியர், மகாலட்சுமி சண்டிகேஸ்வரர், சனி பகவான் பிரகாரத்தில் உள்ளனர்

இக் கோயிலின் சிறப்பு திருஞான சம்பந்தர் அவர்கள் சிவன் பார்வதி யிடம்ஞானப்பால் பெற்ற பின் முதலில் இத்தலம் வந்து தான் பாடினார் அவர் தன் கைகளை தட்டி தட்டி பாட சிவன் எங்கே குழந்தையின் கை சிவந்து பொய் விடுமே என்று தாளம் வழங்கினார் அத் தாளங்களுக்கு அம்பாள் ஓசையை வழங்கினார் ஏழாம் நூற்றாண்டில் நடந்த இந்த அற்புதத்தை ,ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ சுந்தரமுர்த்தி சுவாமிகள் தாம் பாடிய இத் தல பதிகத்தில் உள்ள பாடலின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்


மேலும் பேச்சு வராத குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டு பேச்சு வரபெற்றவர்கள் எண்ணிக்கை 207ஆகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பேச்சு வந்த விபரத்தை தங்கள் கையாலேயே எழுதி உள்ளதை ஆலயத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் காணலாம் .


பிரார்த்தனையின் போது தேன் அபிசேகம் செய்து பேச்சு வராதவர்களுக்கு அளித்து அதை தினமும் காலை கொடுத்து வர வேண்டும்



நாங்கள் குடும்பத்துடன் இத்தலம் சென்று வழிபட்டு வந்தோம் நான் எடுத்த சில படங்கள் தந்துள்ளேன்


ஸ்ரீ தாளபுரீஸ்வரர் பிரகாரம்


ஸ்ரீ ஓசை நாயகி அம்பாள் பிரகாரம்
அம்பாள் நுழைவாயில்

ஆலயத்தினுள் வரும் பாதை

தாளம் வழங்கும் சுவாமி ஓவியம்




ஓசை வழங்கும் அம்பாள்

தல விருட்சம் கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக உள்ளது




இவ்வுலகில் பேச்சு வராத அனைவருக்கும் ஸ்ரீ தாளபுரீஸ்வரர் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் பேரருள் கிடைக்கட்டும் அவர்கள் திருவாய் மலர்ந்து அதன் மூலம் அவர்கள் தம் பெற்றோர் மனங்களில் இன்பம் பெருகட்டும்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஏப்ரல் 14, 2011

சித்திரங்கள் சில

சித்திரங்கள் சில


என் மகன் ஹர்ஷவர்தன் கணினியில் வரைந்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு













விநாயகர்




கோடை விடுமுறை



உருகும் ஐஸ்கிரீம்



அமைதியான வீடு





படத்தில் இருப்பது என் மகன் ஹர்ஷவர்தன் என் மகள் ஜனனி


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்
















































செவ்வாய், ஏப்ரல் 12, 2011

நாடு நலம் நாடு


நாடு நலம் நாடு


" நம்ம நாட்டை பற்றியும் கஷ்டப்படுற மக்கள் மேலேயும் கொஞ்சம் கூட அக்கறையே இந்த அரசியல்வாதிகளுக்கு கிடையாது " என்றான் சேகர்

"அப்பா வெளியிலே கட்சிகாரங்க கொடுத்தாங்க " என்று அவனது மகன் கார்த்திக் ஒரு தேர்தல் நோட்டீஸ் கொண்டு வந்து கொடுத்தான் அதை வாங்கி படித்த சேகர் தான் மேற்கண்டவாறு சொன்னான்

ஏம்பா திட்டறீங்க

உன்னை திட்டலை டா செல்லம் இந்த கட்சிகாரங்களை திட்டினேன்

அவனது மகன் "அப்பா அவங்க எவ்வளவு மரியாதையா கையெடுத்து கும்பிட்டுட்டு கொடுத்துட்டு போனாங்க தெரியுமா " நீங்க திட்டறீங்களே "

"இதெல்லாம் தேர்தல் வரைக்கும் தான் கண்ணா பதவிக்கு வந்தவுடன் மாறி விடுவாங்க"

அவனது மனைவி கீதா "ஏங்க அஞ்சாவது படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் புரியுமா ஏன் இதெல்லாம் சொல்லி குழப்பறீங்க" என்றாள்

"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிறதிலே தப்பில்லையே அவன் தெரிஞ்சுக்கட்டும் "

அப்பொழுது செல் போன் ஒலிக்க எடுத்து பேசிய சேகர் "பில் வாங்காதே வேண்டாம்" என்று சொல்லி போனை வைத்தான்

அவன் மனைவி "என்னங்க" என்றாள்

"நம்ம டிரைவர் தான் போன் பண்ணான் நாம வாங்க சொன்னதெல்லாம் வாங்கிட்டானாம் பில் போட்டா டாக்ஸ் ஆகுமாம் பரவாயில்லையா னு கேட்டான் வேண்டாம் னு சொல்லிட்டேன் அவ்வளவு டாக்ஸ் யார் கட்டறது"

இதற்கும் அவன் மகன் "ஏம்பா கட்டினா என்ன "என்றான்

"அவ்வளவு பணம் செலவு பண்ணி பொருள் வாங்கறதே பெரிசு இதிலே டாக்ஸ் கட்டனுமா "

" அம்மா டாக்ஸ் பணம் யாருக்கு போகும் "

"அரசாங்கத்திற்கு "

"அரசாங்கம் அந்த டாக்ஸ் பணம் எல்லாம் வாங்கி என்னம்மா பண்ணுவாங்க" நாட்டுக்குசெலவு பண்ணுவாங்க . மருத்துவமனை, ஸ்கூல் சாலை வசதி , ஆதரவற்றவர்கள் ,ஏழைகள் இதுக்கெல்லாம் செலவு பண்ணுவாங்க "என்று சொன்னாள் அவன் மனைவி

"அப்படினா நல்ல விஷயம் தானேப்பா நீங்க ஏன் டாக்ஸ் கட்ட மாட்டீங்கறீங்க "

அதற்கு அவன் மனைவி "நல்லா மாட்னீங்களா இதற்கு பதில் சொல்லுங்க " என்றாள்

சேகர் "நம்ம காசு போயிடுமே" என்றான்

"அரசாங்கத்திற்கு காசு வராம போயிடுமே "

இதற்கு இருவரும் தங்கள் மகனின் பேச்சில் மெய் மறந்தனர் கூடவே அடுத்து அவர்கள் மகன் சொன்ன சொல் கேட்டு நிலை குலைந்தனர்

"அப்பா நீங்க மட்டும் கட்சிகாரங்களை திட்டறீங்க , ஆனா நீங்க மட்டும் என்னவாம் நீங்களும் அப்படிதான் இருக்கீங்க என்றவன் மேலும் தொடர்ந்து நம்ம நாட்டை பற்றியும் கஷ்டப்படுற மக்கள் மேலேயும் கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது உங்களுக்கு என்றான் அந்த சிறுவன்


ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தோள் கொடுப்போம் வாரீர்


தோள் கொடுப்போம் வாரீர்

இருட்டு இருட்டுன்னு புலமபறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள்


72 வயதான அன்னா ஹஸாரே என்ற சமூகஆர்வலர் ஊழலுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்த கோரியும் உண்ணாவிரதம் துவங்கி இருக்கிறார் அவரது இந்த போராட்டம் மக்களின் ஆதரவுடன் மிகுந்த வலுப்பெற்று வருகிறது



ஊழல் என்ற இருட்டு சாம்ராஜ்யத்தை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற தீபத்தை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றியிருக்கும் இவரது இந்த முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் உறுதியுடன் ஒருமித்த குரல் கொடுப்போம் வாரீர்


அவரது போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்


ஊழலுக்கு எதிராய் ஓர் போர் தொடுப்போம்



உச்சநீதிமன்றம் ,தேர்தல் ஆணையம் போன்று ஜன் லோக்பால் என்ற இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பு. அரசாங்கத்தின் ,எந்த ஒரு அதிகாரியின் குறிக்கீடும் இதற்கு இருக்காது என்பது குறுப்பிடத்தக்கது


எனது நண்பர் கிரி அவர்களின் தளத்தில் இது பற்றிய தெளிவான இடுகை வந்துள்ளது


http://www.giriblog.com/2011/04/anna-hazaare-against-corruption.html


படியுங்கள் நண்பர்களே


ஆர்.வி.சரவணன்