வியாழன், ஏப்ரல் 23, 2015

ஓ காதல் கண்மணி


ஓ காதல் கண்மணி 


"என்ன படம் பார்த்தே ?"

"கண்மணி"

"பிடிச்சிருக்கா ?"

"ம். முதல் பாதி"

"ஏன் இரண்டாம் பாதி"

"ஒரு முடிவெடுக்க, ரொம்ப தான் பேசறாங்க"

"என்ன முடிவு"

"கல்யாணம் பண்ணிக்கலாமா னு பேசிக்கிறாங்க"

"அப்ப முதல் பாதியில"

"கல்யாணம் பண்ணிக்கணுமானு யோசிக்கிறாங்க"

"பிளஸ் என்ன அதை சொல்லு"

"கண்ணுக்குள்ளேயே நிக்கிற நித்யா,துள்ளலாய் துல்கர், மறக்க முடியாத லீலா சாம்சன், மறுக்கவே தோணாத கணபதி சாரி பிரகாஷ் ராஜ், சர்ச்ல ரெண்டு பேரும் சந்திச்சு பேசிக்கிற சீன், வசனங்கள்"

"மைனஸ்"

"முந்தைய படங்களின் (கேரக்டர்களின்) ஞாபகங்கள் , பரபரப்பில்லாத கிளைமாக்ஸ்"

"பி.சி ஸ்ரீராம்"

"மழையில் நனைய விட்டிருக்கார். காபி ஷாப் சீன அழகுபடுத்தியிருக்கார்"

"ரகுமான்"

"(மெண்டல்) மனதில் நம நம'

"ஆமா நீ ஏன் ரெண்டு வார்த்தைல பதில் சொல்லிட்டு இருக்கே ?"

"மணி படம் பார்த்த எபெக்ட்"

"அதுக்குன்னு படத்தோட டைட்டில கூட பாதியா சொல்வியா"

"ஓகே வை மட்டும் தானே விட்டேன்"

"அப்ப படம் உனக்கு ஓகே இல்லியா"

"ஓகே கண்மணி னு சொல்ல வச்சிருக்கணும்."


ஆர்.வி.சரவணன் 

திங்கள், ஏப்ரல் 20, 2015

திருமண ஒத்திகை-15





திருமண ஒத்திகை-15


சினத்துடன் வந்திருகிறான்.பரவாயில்லை 
சினேகத்துடனே  எதிர் கொள்கிறேன் 



செல்போன் பேசி கொண்டிருந்த விஜயன், தன்  எதிரே வந்து நின்ற  வருண் மற்றும் மதியை ஜன்னல் பக்கம் பார்த்த படி பேசி கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. வருண் உட்கார்  என்ற படி மதிக்கு சைகை காட்டி அமர்ந்த 
போது எழுந்த  நாற்காலி யின் ஓசை கேட்டு திரும்பிய விஜயன், வருணை கண்டதும் அதிர்ச்சியாகி அப்புறம் பேசறேன் என்று எதிர் முனையில் இருந்தவரிடம் சொல்லி விட்டு போனை ஆப் செய்து வைத்தான்.



ஆர்.வி.சரவணன்

ஓவியம் நன்றி  ஷ்யாம் 

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

திருமண ஒத்திகை -14






திருமண ஒத்திகை -14

விடியலின் முகவரியை  இருளிடம்  
கேட்டு கொண்டிருக்கிறேன் 

ருண் பல்லை கடித்த படி  அடுத்த நாளே அவனை சந்திக்க நாள் குறித்தான். ஆனால் சஞ்சனாவின் அக்கா புருஷன்  விஜயன் அன்றே தன் வேலையை ஆரம்பித்து விட்டான் . 
ஆர்.வி.சரவணன்

நன்றி : ஓவியர் ஷ்யாம்

© The  story is copyrighted to kudanthaiyur and may not be reproduced 
on other websites.