செவ்வாய், மே 11, 2010

நிலவு ஒரு அட்சய பாத்திரம்


நிலவு ஒரு அட்சய பாத்திரம்

அம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு

அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
நிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்

என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
என் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா

அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை
நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ

நிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே
நம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்

நிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்
அன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்



ஆர்.வி .சரவணன்











7 கருத்துகள்:

  1. உங்க‌ளுடைய‌ அட்ச‌ய‌ பாத்திர‌த்தில் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  2. சிறிதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

    கடினவார்த்தைக் கோர்ப்புகள் இல்லாமல்,
    எளிமையான வார்த்தைகளோடு,
    சுவையாய் கவிதை.

    படத்தில் அட்சயப்பாத்திரமான நிலவுதான்
    எங்கே என்று காணவில்லை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நாடோடி

    போட்டோ மாற்றி விட்டேன் nizamudeen நன்றி

    பதிலளிநீக்கு
  4. நிலவுக்கு கிடைத்த ஒளிபோல நல்ல வடிவம் இந்த கவிதைக்கு... செதுக்கலும் சிறப்பு.... தொடருங்கள்...வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. //அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ /

    அட்டகாசமான வரிகள்!!

    பதிலளிநீக்கு
  6. naadodi, நன்றி
    nizamutheen நன்றி
    priya நன்றி
    jailaani நன்றி
    paalasi நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்