புதன், ஆகஸ்ட் 29, 2012

பதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவிதை



பதிவர் திருவிழாவில் கவியரங்கில் வாசிக்க மறந்த கவிதை

நதிகள் பல
ஒன்று சேர்ந்து
புது கடலொன்று உதயம்


பல திசைகளில் இருந்தும்
புறப்பட்ட
படையொன்று
ஒன்றாய்
புதிய திசை நோக்கி

குன்றுகள் பலவற்றின் அணி
வகுப்பில் ஒரு மலை தொடர்ச்சி
இதோ


எங்கெங்கோ பூத்த
மலர்கள் சேர்ந்து
அமைத்த
நந்தவனம் இதோ

மத்தாப்புகளின்
கூட்டணியில்
ஒரு மாபெரும்
வாணவேடிக்கை

நூற்றுகணக்கில்
தீபங்கள் ஒன்றிணைந்து
தந்திருக்கும்
யாகமொன்று

மழை துளிகள்
பல ஒன்றிணைந்து
அருவியாய்
இறங்கிய
அதிசயம்


புள்ளிகள்
பலவற்றை
ஒன்றிணைத்து
உருவான
அழகிய கோலம்


கனிகளின்
கூட்டமைப்பில்
ஒரு பழமுதிர்சோலை


எழுத்துக்கள் பல
கை கோர்த்து
உருவாக்கிய
கவிதை


இவை
அனைத்தும்
உணர்த்துவது
இந்த வலை பதிவர்
திருவிழாவை
தான்
என்பது
இங்கு
நான் சொல்லாமலே
அனைவருக்கும்
புரிந்திருக்கும்


இந்த
பதிவர் சந்திப்பின்
வெற்றியை
இவ் வையம்
இந்நேரம்
உணர்ந்திருக்கும்

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்


பதிவர் திருவிழாவில் கவியரங்கில் எல்லோரும் கவிதை வாசிக்கையில் எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்தது இருந்தும் நான் பெயர் கொடுக்கவில்லை என்பதால் வாசிக்க முடியவில்லை ஆகவே தான் அதை இங்கு இதோ இணைய மேடையில் வாசித்து விட்டேன்


ஆர்.வி.சரவணன்

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி


பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

பதிவர் திருவிழாவை பற்றி ருபத்து ஐந்து குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க கொஞ்சம் ஈஸியா இருக்கும் லே உங்களுக்கு (தலைப்புக்கு காரணம் கொடுத்திட்டேன்)

1. பதிவர் திருவிழாவுக்கு முதல் நாளே வந்து விடுங்கள் என்று நண்பர்கள் அரசனும், மோகன் குமாரும் அன்பான ஆர்டர் போட்டதால் நான் அலுவலகத்திலிருந்து கிளம்பி நேராக மண்டபத்தில் ஆஜர். வருண பகவானும் தன் வேலையை ஆரம்பித்தார் மழையில் நனைய சிறு சலிப்பு ஏற்பட்டாலும் ஒரு வேளை அவரும் விழாவுக்காக அவரும் தனது வருகையை பதிவு செய்ய வந்து விட்டாரோ என்றே தோன்றியது அவரது தூரலை திருவிழாவுக்கு கிடைத்த அட்சதையா எடுத்துக்க வேண்டியது தான் ( ஆகா என்ன ஒரு பாசிடிவ் சிந்தனை )

2. இரவு நான் சென்ற நிமிடத்திலிருந்து வீடு திரும்பல் மோகன்குமார், திண்டுக்கல் தனபாலன் , சர்புதீன் ,பாலகணேஷ் ,மெட்ராஸ்பாவன் சிவகுமார், கோகுல்,ஜெயக்குமார் சங்கவி, என்று பலருடன் பேசி மகிழ்ந்தது ஒரு சுவையான அனுபவமாய் இருந்தது

3. நான் சென்றதிலிருந்து விழா முடிந்து திரும்பும் வரை திண்டுக்கல் தனபாலன் சார் கூடவே இருக்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் ஊருக்கு சென்று சேர்ந்து விட்டதை நலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ,எனக்கு போன் செய்து தான் நலமுடன் வந்து சேர்ந்து விட்டதை தெரிவித்தார் ( பின்னூட்டத்தில் மட்டுமல்லாமல் இதிலும் முன்னோடியை இருக்கிறார் )

4. காலை பதிவர் அறிமுகம் நிகழ்ச்சியை கேபிள் சங்கர் , சி.பி.செந்தில்குமார் நகைச்சுவை இழையோட தொகுத்து வழங்கினர்

5. பதிவர் அறிமுகத்தில் பங்கு பெற்றோரில் சிலர் மிக சுருக்க
மாகவும் சிலர் விளக்கமாகவும் இன்னும் சிலர் கவரும் விதமாகவும் பேசினார்கள்

6. எனக்கு பொதுவாக மேடையில் ஏறி பேசுவது என்றாலே உதறல் உண்டு நன்றாக பேச வேண்டும் என்று நான் தயார் செய்தாலும் உதறல் காரணமாக பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன். இருந்தும் ஏதோ ஒருவாறு பேசி சமாளித்தேன்( நான் எனது அறிமுகத்தில் ஒரு நிமிடம் பேசுவதற்காக மனதிற்குள் ஒரு மணி நேரம் ஒத்திகை பார்த்தேன்)

7. மதிய சாப்பாட்டிற்கு பின் தொடர்ந்த திருவிழாவில் பட்டுகோட்டை பிரபாகர் சிறப்பு விருந்தினர் ஆக பங்கேற்றார் அவர் எனக்கு பிடித்த எழுத்தாளர் எனவே அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினேன். பாலகணேஷ் அறிமுகம் செய்து வைத்தார்அவரது தொட்டால் தொடரும் நாவல் எனது விருப்பமான ஒன்று என்பதை அவரிடம் சொன்னேன். ( அந்த பரபரப்பான சூழலிலும் அவர் என்ன பண்றீங்க என்று அக்கறையுடன் விசாரித்தது என்னை சந்தோசபடுத்தியது)

8. அவரது உரையில் பதிவர்கள் எப்படி வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் எனபதையும் பதிவர்கள் பொறுப்புடன் எழுத்து பணியை செய்ய வேண்டும் என்றும் அவரது உரையில் எடுத்துரைத்தார்

9. கையெழுத்து பிரதி தான் இப்போது வலைத்தளம் ஆக உருமாறி இருப்பதை அவர் குறிப்பிட்டு பேசினார் ( நான் கல்லுரி நாட்களில் நடத்திய கையெழுத்து பத்திரிகை அந்த சமயம் என்னுள் நிழலாடியது )

10. மதியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா அவர்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் சாப்பாட்டுக்கு பின் வரும் தூக்கத்தை இப்போது வரும் கவியரங்கம் வர விடாமல் செய்து விடும் என்றார் அது உண்மைதான் கவியரங்கம் நன்றாக இருந்தது. தூக்கமும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்றாலும் சுரேகா அவர்களின் பேச்சால் அது விரட்டியடிக்கபட்டது . சில பேரை பார்க்கிறப்ப பொறமை வரும் இவர் பேசுவதை பார்க்கையில் எனக்கு கொஞ்சம் லைட்டா வந்தது (சார் இது ஆரோக்கியமான பொறாமை )

11. கவியரங்கத்தில் கவிதை வாசித்த மயிலன் வார்த்தைகளை வலை போல் வீசி மொத்தமா எல்லோரது பாராட்டுக்களையும் அள்ளிட்டார் (ரொம்ப நல்லா இருந்துச்சு மயிலன் வாழ்த்துக்கள்)

12. திருமதி சசிகலா சங்கர் அவர்கள் எழுதிய தென்றலின் கனவு நூலை பட்டுகோட்டை பிரபாகர் வெளியிட சேட்டைக்காரன் பெற்று கொண்டார். (வாழ்த்துக்கள் )

13. சேட்டைக்காரன் தான் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் அப்படியே என்பதை அவர் பேச்சில் தெளிவுபடுத்தினார். (அவரது தளத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் வாசகம் "உட்கார்ந்து யோசிப்போம்லே" ஆனால் அவர் பேசும் போது உட்கார்
ந்து யோசிச்சு பேசற மாதிரிலாம் தெரியலை )

14. மூத்த பதிவர்களுக்கு சக பதிவர்கள் பொன்னாடை போற்ற, பட்டுகோட்டை பிரபாகர் நினைவு பரிசுகள் வழங்கினார்(அவர்கள் முகங்களில் தென்பட்ட அந்த உற்சாகத்தை பார்க்க கண் கோடி வேண்டும்)

15. சில பதிவர்களுடன் பேசும் போது இவர் ப்ளாகை இன்னும் படிக்காமே இருக்கோமே என்ற ஆதங்கம் இருந்தது

16.திடம் கொண்டு போராடு சீனு (வாட் எ டைட்டில் ) விழாவில் திடம் கொண்டவராய்சுறுசுறுப்பாய் செயல்பட்டு கொண்டிருந்தார்

17. மதுமதியை மண்டபத்தில் வைத்து கொண்டே நான் மதுமதி எங்கே என்று கேட்க நினைத்தேன் ஏனெனில் அவரை போட்டோ வில் தாடியுடன் பார்த்திருந்ததால் அவரை எனக்கு தெரியவில்லை பின்பு அவர் தான் மதுமதி என்று அறிந்த போது ஒரே சிரிப்பலை எங்களுக்குள்



பதிவர் அறிமுகத்தை தொகுத்து வழங்கும் ஜாக்கி சேகர், சி.பி.செந்தில்குமார், கேபிள் சங்கர்

பட்டுகோட்டை பிரபாகர் புலவர் சா.ராமானுஜம், சுரேகா இவர்களுடன்
கவியரங்கத்தில் கரை சேரா அலை அரசன்
18. வீடு திரும்பல் மோகன்குமார் என்னிடம் ஏன் இன்னும் நீங்கள் உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என்று அக்கறையுடன் விசாரித்தார்

19. வலைச்சரம் சீனா ஐயா அவர்களிடம் வலைச்சரம் பற்றி ஆர்வமாய் குறிப்புகள் கேட்டேன்

20. ஜாக்கி சேகருடன் பேசிய போது ஈரோடு பதிவர் சந்திப்புலே பார்த்தது அடுத்து இப்ப தான் பார்க்கிறோம் இல்லே என்றார் தொடர்ந்த சிநேகத்துடன்

21. கேபிள் சங்கர் சிரித்த முகமாய் அனைவரையும் அணுகியது என்னை அவரிடம் அணுக வைத்தது அறிமுகம் செய்து கொண்டு பேசினேன்

22. சா.ராமானுஜம் ஐயா ,அவர்கள் பேசும் போது விழாவின் வெற்றியை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்

23. தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார், சென்னை பித்தன்,வேடந்தாங்கள் கருண்,கவிதை வீதி சௌந்தர் முதல் முறையாய் நேரில் சந்தித்தது மகிழ்ச்சியை தந்தது

24. ஒரு சில பதிவர்கள் குடந்தையூர் என்றவுடன் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள் பலர் அப்படியா என்றார்கள்
(ஒரு வேலை ஆளில்லாத கடையில் டீ ஆத்திட்டிருக்கோம் போலிருக்கு )

25. நண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் இந்த விழாவுக்கும் எனக்கும் ஒரு பாலமாய் (பலமாய்) இருந்தார் அவருக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்



பட்டுகோட்டை பிரபாகர் அவர்களுடன் நானும்

எல்லோரையும் ஒரே இடத்தில பார்த்ததில் ரொம்ப சந்தோசமாய் இருந்தது ஒவ்வொருவர் தளத்தின் பெயரை பற்றி கேள்விப்படும் போது எவ்வளவு தளங்கள் எவ்வளவு வித்தியாசமான பெயர்கள் என்று ஆச்சரியம் தோன்றியது .எல்லோரது தளங்களுக்கும் சென்று படிக்கும் ஆவல் இப்போது வந்திருக்கிறது கூடவே இவங்க எல்லோரும் வந்து நம்ம தளத்தை படிக்கிற அளவுக்கு நாம இன்னும் நல்லா எழுதணும் னு அக்கறையும் வந்திருக்கு அதாவது ஒரு உத்வேகம் வந்திருக்கு (பார்க்கலாம்)

விடா முயற்சி விஸ்வரூப வெற்றின்னு ஒரு famous டைலாக் இருக்கு அந்த டைலாக் இந்த பதிவர் திருவிழாவுக்கு பொருந்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல

ஆர். வி.சரவணன்


வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

வெற்றி எனும் இலக்கை நோக்கி.... (பதிவர் சந்திப்பு)


வெற்றி எனும் இலக்கை நோக்கி.... (பதிவர் சந்திப்பு)

இணைய நண்பர்களே பதிவர் சந்திப்பு திருவிழா இதோ நெருங்கி விட்டது ஆம் இதோ கவுன்ட் டௌன் ஸ்டார்ட் ஆகி விட்டது. இன்னும் மூன்றே நாட்கள். விழா வெற்றி யின் இலக்கை தொட, இனிதே நடைபெற, பங்கேற்று உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கும் அதே வேளையில் விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்க இருக்கும் அனைத்து நண்பர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

92. மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
97. அகிலா (கோயம்புத்தூர்)
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்
102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105. Puratchi Mani
106. பாண்டியன்ஜி(வேர்கள்)
107. கிராமத்து காக்கை
108. ராஜா (அடங்காத அக்கப்போரு
109. உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது??????????)
110. சாம் மார்த்தாண்டன்(பக்கி லீக்ஸ்)
111. குருபிரசாத் - சென்னை
112. உளவாளி
113. ஷர்புதீன்(வெள்ளிநிலா)


கவியரங்கில் பங்குபெறுவோர்

1. சசிகலா(தென்றல்)சென்னை
3. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
9. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
10.சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
11.தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301


மின்னஞ்சல் முகவரி

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்


ஆர்.வி.சரவணன்
வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் "லப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே .


வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல்

புதன், ஆகஸ்ட் 15, 2012

நட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா


நட்புக்கு பாலமிடும் வலை பதிவர்கள் திருவிழா

நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது என்னை விட வயதில் மூத்தவர் ரவி என்பவர் எனக்கு நண்பரானார்.(எங்கள் வீட்டில் சொல்வார்கள் இவனுக்கு இவன் வயசு ஆளோட பழக்கம் இருந்தால் பரவாயில்லே ஆனால் இவனோட வயசுலே சின்னவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் இவனோட பெரியவன் கிட்டேயும் பழக்கம் வச்சிக்கிறான் என்பார்கள். நட்புக்கு தான் வயதேது) அவர் லாண்டரி கடையில் முழு பொறுப்பை ( காஷியர் கம் பில்லிங்) ஏற்று வேலை பார்த்து வந்தார் நான் எங்கள் வீட்டு சலவை துணி போட செல்லும் போது அறிமுகமானார். பின் நன்பேண்டா பாணியில் நெருக்கமாகி விட்டோம். அண்ணே என்று தான் நான் கூப்பிடுவேன் கல்லுரி இல்லாத நேரங்களில் அவர் கடையிலேயே என் பொழுது சென்றது

ஒரு முறை அவரிடம் பத்து ரூபாய் கடன் கேட்டேன் சினிமா செல்வதற்காக. அவர் இரு வரேன் என்று சொல்லி விட்டு அங்குமிங்கும் சென்று வந்தார் நான் எங்கே சென்று வருகிறீர்கள் என்றேன் அவர் முதல் முறையா என் கிட்டே நீ காசு கடன் கேட்கிறே எனக்கு மறுக்க மனசு வரலே, என்னிடம் இல்லை என்பதால் தெரிந்தவர்களிடம் சென்று கேட்டு வாங்கி வருகிறேன் என்றார் ( வருடம் 1987 ) எனக்கு மனசு ஒரு மாதிரி ஆகி விட்டது எதுக்காக இப்படி கஷ்டபடுறீங்க அப்படி ஒண்ணும் அவசியம் இல்லே என்றேன். அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமில்லே நீ ஜாலியா படம் போயிட்டு வா என்றார். நான் படம் சென்று விட்டு வந்தேன். காசை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பி கொடுத்தேன் (நான் என் வாழ்க்கையில் வாங்கிய முதல் கடன் இது என்பதால் எனக்கு மறக்கவில்லை என்று நினைக்கிறேன் ) அவர் கண்டிப்பானவரும் கூட நான் படிக்காமல் சுற்றி கொண்டிருந்தாலும் கேள்வி கேட்பார் நான் மன கஷ்டத்தில் இருந்தாலும் ஆறுதல் சொல்வார். சினிமா அரசியல் புத்தகங்கள் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தீர்க்கமாக பேசுவோம்.

இப்படிப்பட்ட ஒரு நண்பரை, நான் படித்து முடித்து சென்னை வந்த பிறகு, அவருடனான நட்பை தொடர வழியில்லாமல் போய் விட்டது. அவர் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டதால் நான் பல இடங்களில் விசாரித்தும் அவரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய இருபது வருடங்களாவது இருக்கும் அவரை பார்த்து. எப்போதாவது அவரது ஞாபகம் வரும் போது விழியில் சிறு துளி கண்ணீர் நான் எட்டி பார்க்கவா என்று எனை நச்சரிக்கும். அப்போது செல் கிடையாது ஈமெயில் பேஸ் புக் கிடையாது அப்படி இருந்திருந்தால் அவரது நட்பு கண்டிப்பாக இன்று வரை தொடர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்

சரி இதை எதுக்காக நீ இப்ப சொல்றே னு கேட்கறீங்களா.விஷயம் இருக்கிறது நண்பர்களே. செல் , ஈமெயில், பேஸ் புக் இல்லாத நாட்களில் ஏற்பட்ட ஒரு நட்பை தொடர முடியாத போது ,இப்போதைய வளர்ச்சியில் இணைய தளம் மூலம் கிடைத்த நட்புக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்.யோசித்து பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பை தான் 26-08-2012 அன்று சென்னை தமிழ் வலை பதிவர் திருவிழா ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது


கூடவே நண்பர் திரு.வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக புத்தக கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


இணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை
நேரில் கண்டு நட்பை வளர்க்கும் ஒரு விழா

ஏனைய திசைகளில் பொங்கி பிரவகிக்கும் நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து
கடலாய் சங்கமிக்கும் ஒரு விழா

நம் நட்புக்கு பாலமிடும் ஒரு விழா

நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து
கொண்டாடுவோம் வாருங்கள் தோழர்களே

ஆர்.வி.சரவணன்