எனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன்
காதலி (காதலை அழி)
எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங்கும் மாணவன். கல்லூரியில் காதல் கொண்டேன் தனுஷ் தோற்றத்தில் இருந்த நான் அசல் அஜித் போல் மாறி விட்டேன் .
காரணம் ஒரு பொண்ணு தான் அப்படிங்கிறதை நான் சொல்லவும் வேண்டுமோ. அவள் பெயர் கீதா என் கல்லூரியில் அவள் ஒரு இளவரசி (தமன்னா போல் இருப்பாள்)
அவள் கடைக்கண் பார்வைக்கு தவம் கிடப்போர் பலர் அவள் அழகுக்கு மயங்காதவர் எவரும் இலர் என்னை தவிர
நீ என்ன ரொம்ப யோக்கியமா அப்படின்னு கேட்காதீங்க வறுமைக்கு சொந்தமான குடும்பத்தில் பிறந்தவன் தினமும் கல்லுரி நேரம் போக வேலை செய்து சம்பாதித்து வீட்டுக்கு கொடுப்பவன் நான் படித்து முன்னுக்கு வந்து தான் குடும்பத்தை காப்பாற்றி யாக வேண்டியவன் எப்படி அழகுக்கு அடிமையாக முடியும்.
ஆகவே நான் அடிமையாகவில்லை மற்ற மாணவர்கள் போல் ஏங்கவில்லை ஆனால் ஏங்கும் காலமும் வந்தது .
எனது வகுப்பறையிலேயே அவளும் படிப்பதால் அந்த கீதாவே ஒரு நாள் என்னை தேடி வந்தாள் பாடத்தில் சந்தேகம் கேட்டு பாடத்திலுள்ள சந்தேகங்களை அவளுக்கு தீர்த்து வைத்தேன். என் இளமை ரொம்ப விரும்பி கேட்டதால் அவளை என் மனதினில் வைத்தேன்.
அவளது அழகும் அவள் பேச்சும் என் மேல் கரிசனம் கொண்டு அவள் விசாரிக்கும் அன்பும் என்னை கவரவே நாளுக்கு நாள் அவள் மீது ஈர்ப்பு அதிகமானது எனக்கு வேலை செய்து சம்பாதிக்கும் காசை வீட்டில் கொடுக்காமல் செலவழித்து நானே அசத்தலான டிரஸ் களில் வலம் வந்தேன் கல்லூரியில் எல்லோரும் என் மேல் ஆச்சர்யப்பட்டனர் அவளிடம் நான் பேசுவது கண்டு பொறாமை பட்டனர் .
எனக்கு அது மேலும் உற்சாகத்தை கொடுக்கவே அவள் எப்போது பேசுவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தேன் . அவளும் பேசினாள் என் தோற்றத்தை கண்டு ரசித்தாள் எப்படி டிரஸ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று டிப்ஸ் கொடுத்தாள்.
நான் ஆகாயத்தில் மிதந்தேன் அல்ல அல்ல பறந்தேன் .
அவள் மேல் காதல் வந்தது எப்பொழுது காதலை சொல்லலாம் என்று நாள் பார்த்தேன் . அப்பொழுது வந்த செமெஸ்டர் எக்ஸாம் நாள் கூட பார்க்கவில்லை. எக்ஸாம் சரியாகவும் எழுதவில்லை
எக்ஸாம் ரிசல்ட் வந்தது .
கீதா முதலிடம் வந்தாள். நான் இரண்டாமிடம் வந்தேன் . அதற்காக நான் கவலைப்படவில்லை காதலில் பாஸ் ஆக வேண்டும் என்பதே அப்போது என் கவலையாக இருந்தது .
ப்ரோபசர் அவளை பாராட்டினார்
என்னை " ஏன் எப்பொழுதும் முதலிடம் வரும் நீ இரண்டாமிடம் வந்தாய்" என்று திட்டினார்.
அவளை எல்லோரும் பாராட்டினார்கள் அவள் என்னை பார்த்தாள் நன்றி சொல்வது போல
வகுப்பு கலைந்ததும் அவளை தேடி காதல் வந்துருச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று குஷியாக பாடலை பாடி கொண்டே சென்றேன். வாழ்த்துக்கள் சொல்வதற்கு கூடவே காதலையும் சொல்வதற்கு
கீதா தன் தோழிகளிடம் பேசி கொண்டிருந்தாள்
அவள் தோழிகள் " ஏய் நினைச்சதை சாதிச்சிட்டே பெரிய ஆள் தான் நீ உன் கிட்டே பந்தயம் போட்டு நாங்க தோத்து போயிட்டோம் "என்றனர்
"ஏய் நான் தான் சொன்னேனே இந்த செமஸ்டர் லே நான் தான் முதல் ஆளாக வருவேன்னு, சொன்னது போல் முதல் ரேன்க் வாங்கிட்டேன் , "ஆனா ராஜா எனக்கு பாடத்திலே டவுட் எல்லாம் கிளியர் பண்ணியிருக்கார் அதுக்காக நான் அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் . என்று கீதா சொன்னாள்.
மேலும், "ஆனாலும் ராஜா இப்படி மயங்குவார் னு நினைச்சு கூட பார்க்கலை" என்று அவள் சொல்ல "நாங்களும் தான்" என்றனர் தோழிகள் கோரசாக.
நான் சிலையானேன் அவள் காட்டும் நன்றிக்கு சந்தோசப்படுவதா எனை பற்றிய அவளது நினைப்புக்கு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை
என் மீது பொறாமைப்பட்ட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டலாய் சிரிப்பது போலவே எனக்கு தோன்றியது
வெறுத்து போயிற்று எனக்கு
வேறென்ன செய்வது
அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காதே பொண்ணு மேலே ஆசை என்று நொந்து போய் பாடிகிட்டே போனேன்
ஆர்.வி. சரவணன்
கடைசியா தெரிஞ்சதே ..அதுவே போதும் ..இல்லையா?
பதிலளிநீக்குநமக்குள்ளே என்னா சார் வெட்கம் இந்த சிறுகதை உங்களுடைய உண்மை சம்பவம் தானே?...ஹி..ஹி..
பதிலளிநீக்கு//இப்படி கூடவா ஏமாறுவே நீ ஹி ....ஹி .... என்று மனசு கிண்டலடித்தது .//
பதிலளிநீக்குஇது எங்க தாத்தா காலத்து டெக்னிக் .
இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்
பதிலளிநீக்குjailaani
நன்றி ஜெய்லானி அந்த வரியை வேறு விதமாய் மாற்றியுள்ளேன் உங்கள் வருகைக்கு கருத்துக்கு நன்றி
என்னங்க இது வெறும் கதையா...இல்ல ஃப்ளாஷ் பேக்கா:)
பதிலளிநீக்குஉங்க கதையப் படிச்சி ரொம்ப நொந்து போயிட்டேன். (நீங்களும்தான்)
பதிலளிநீக்குபாவமாயிருக்கு உங்க கதைய நெனச்சா.
அதனால வேற எதாவது நகைச்சுவையா அப்படியே சுரீர்னு புது இடுகை
போட்ருங்க.
###########################################
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
இல்லைங்க இது கற்பனை கதை தான் நாடோடி
பதிலளிநீக்குகதை தான் ப்ரியா
உங்க கதையப் படிச்சி ரொம்ப நொந்து போயிட்டேன். (நீங்களும்தான்)
அப்படியா
வருகை தந்த அனைவருக்கும் நன்றி
super
பதிலளிநீக்குநல்லாயிருக்கு தோழரே...
பதிலளிநீக்கு