அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா
(அரசியல் அனுபவத்துக்கு இதை விட பெட்டரா தலைப்பு வேணுமா என்ன.இருந்தும் அண்ணனோட டயலாக் என்பதால் அவரது இமேஜ்)
1991 ஆம் வருடம் சென்னையில் நான் ஒரு ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலை பாத்துகிட்டு இருந்தேன். பேருந்தில் தான் அலுவலகம் வருவேன்.பேருந்தில் தினம் பயணம் செய்பவர்களில் ஒருவர் (பார்த்தா சிரிக்கிறது அவ்வளவு தான் நட்பு ) ஒரு நாள் என்னிடம் பேசி கொண்டிருந்த போது என்ன பண்றீங்க என்றார்.
நான் (சும்மா இருந்திருக்கலாம் வம்பை விலை கொடுத்து வாங்கணுமா) வேலை பார்க்கும் கம்பெனி பற்றி சொன்னேன் சொன்னவுடன் அவர் "எனக்கு விசிட்டிங் கார்டு நூறு போட்டு கொடுங்க" என்றார். .நான் என்னோட வேலை மார்க்கெட்டிங் இல்லை என்று
நழுவினேன். "அதனாலென்ன ஆர்டர் கொடுத்தா வேண்டாம் னாசொல்ல போறாங்க நீங்க போட்டு கொடுங்க என்று என் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டார். தான் உறுப்பினராய் இருக்கும் கட்சி யின் பேர் சொல்லி கட்சி தலைவரின் போட்டோவுடன் விசிடிங் கார்டு போட்டு கொடுத்துடுங்க என்றார்.
நான் எனது கம்பெனியில் இதை பற்றி சொன்ன போது மேனேஜர், "நீ ஆர்டர் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். இருநூறு ரூபாய் ஆகும்னு சொல்லிடு. ஆள் கரெக்டா காசு கொடுப்பாரா என்றும் சரி பார்த்து கொள்" என்று சொல்லவே நான் கொஞ்சம் உஷாராகி, மறு நாள் அவரை
பார்க்கும் போது "இருநூறு ரூபாய் ஆகுமாம்" என்று கழண்டுகொள்ள பார்த்தேன்
அவர் "அதனாலென்ன போட்டுடுங்க" என்று உறுதியாக சொன்னார். நானும் கார்டு போட
சொல்லி விட்டேன். கார்ட் ரெடியானவுடன் எடுத்து கொண்டு சென்று அவரை பேருந்து நிலையத்தில் பார்த்து கொடுத்தேன். நல்லாருக்குப்பா. தாங்க்ஸ் என்றார்.மீதம்
150 ரூபாய் கேட்ட போது அவர் நாளை தருகிறேன் என்றார். மறு நாளிலிருந்து அவரை
பார்க்க முடியவில்லை.
ஒருவாரம் சென்றது. எனது மேனேஜர் என்னை பார்த்து "தப்பா நினைச்சுக்காதே காசு வரலைன்னா உன் சம்பளத்தில் இருந்து பிடிச்சிருவாங்க" என்றார் சிரித்து கொண்டே
நான் டென்ஷன் தாங்க முடியாமல்,அடுத்த நாள் அவரது வீடு எங்கே என்று விசாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் அவர் இல்லை. அவரது தாயிடம் வந்த விபரத்தை சொல்லி விட்டு வந்தேன். அடுத்த நாள் அவரை பேருந்து நிலையத்தில் பார்த்த போது "எப்படி என் வீட்டுக்கு வரலாம் நீ" என்று கோபமாய் கேட்டார். அலுவலகத்தில் என்னை காசுக்காக நெருக்குவதால் வந்ததாக சொன்னேன். "அதுக்காக வீட்டுக்கு வந்துடுவியா நீ. இனிமே வீட்டுக்கு வர்ற வேலை எல்லாம்
வச்சிக்காதே" என்று கறாராய் சொல்லியதன் மூலம் காசு விசயத்தில் தான் கறார் இல்லை என்பதை உணர்த்தி விட்டு காசு தருவதை பற்றி ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டார்.
பிறகென்ன என்கிறீர்களா.அலுவலகத்தில், நான் அந்த மாத சம்பளம் வாங்கும் போது இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள். எனது தவறால் கம்பெனிக்கு நஷ்டம் ஆக கூடாது என்பதால் சம்பள பிடித்தத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டேன்.நம்மால் அடுத்தவருக்கு நஷ்டம் வர கூடாது என்ற நினைப்பு ஏன் அந்த மனிதருக்கு இல்லை
அப்படின்னு டென்சன் ஆக விடாமல் நம்ம கவுண்டமணி அண்ணன் சொன்ன "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" டயலாக் ஞாபகத்துக்கு வந்து விசயத்தை ஈசியாக எடுத்துக்க சொல்லுது
FINAL PUNCH
அப்போது,150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பது அந்த கம்பெனியில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 400 ரூபாய். என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
ஆர்.வி.சரவணன்
ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது
ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது
கண்ணா. அவர் நாளை தருகிறேன் என்றபோதே உஷாயிருந்திருக்கணும்.. ஆனாலும் நீங்க ரொம்ம்ப்ப்ப நல்லவனாத்தான் இருக்கீங்க சரவணன்!
பதிலளிநீக்கு-வினோ
இதுபோன்று நானும் நிறைய
பதிலளிநீக்கு'அரசியலில் இதுவெல்லாம் ரொம்ப சகஜம் "
என்பதை அனுபவித்திருப்பதால் பதிவு
படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது
முடிவில் 150 ரூபாயின் மதிப்பைச்
சொல்லிப்போனது அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இப்பிடி அநியாயத்துக்கு நல்லவனா இருந்து நானும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கஷ்[நஷ்]டப் பட்டதுண்டு...!
பதிலளிநீக்குஇதுதான் உலகம்.
பதிலளிநீக்குபரவாயில்லை நண்பரே
பணம் கிடைக்காவிட்டாலும்
ஒரு பாடம் கிடைத்ததல்லவா?
திருப்தியாக ஏற்றுக் கொண்ட உங்கள் மனது போல் யாருக்கும் வராது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநேரம் கிடைப்பின் - தங்களின் கருத்துரைக்காக : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...
பதிலளிநீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html
அடப் பாவமே.. ம்ம்ம்ம்ம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தான் சார்
பதிலளிநீக்குஹா ஹா ஹா...... வெளியில் இதை படித்தாலும், அன்று உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று புரிகிறது.
பதிலளிநீக்குஇதுதாங்க அரசியல்! நம்ம அரசியல் கட்சிப் பிரமுகர்கள்!!! படிக்கும் போது உங்கள் அன்றைய நிலை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது இது போன்ற ஆட்களிடம் மாட்டிக் கொண்டு நஷ்டம் அடைந்ததைக் குறித்து!
பதிலளிநீக்கு400 ரூபாய் சம்பளத்தில் 150 ரூபாய் இழப்பு என்பது பெரியதுதான்! என்னைப்போலவே நீங்களும் ஏமாளியா இருந்திருக்கீங்களே! நன்றி!
பதிலளிநீக்குஅரசியல்ல இதுவும் சர்வ சாதாரணம்.,... நீங்க ரொம்ப வெகுளி அண்ணே...
பதிலளிநீக்குசென்னை வந்த புதிது வினோ. மேலும் நாளை தருகிறேன் என்று சொல்லும் போது எப்படி மறுப்பது என்று தெரியவில்லை
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்
நன்றி மனோ
நன்றி ஜெயக்குமார் சார்
நன்றி தனபாலன் சார்
நன்றி சீனு
நன்றி சுரேஷ்குமார்
நன்றி துளசிதரன் சார்
நன்றி சுரேஷ்
நான் அப்போது வெகுளி யாக தான் இருந்தேன் சரவணன்
"பல நேரங்களில் சில மனிதர்கள்" என்ற தலைப்பு, இச்சம்பவத்திற்கு பொருந்துகிறதே
பதிலளிநீக்கு