வியாழன், நவம்பர் 24, 2011

இளமை எழுதும் கவிதை நீ....6


இளமை எழுதும் கவிதை நீ....6

அத்தியாயம்
6


உன் கண்ணீர் துளியை தாங்கும் வலிமை கூட இல்லாதது
என் கருங்கல் இதயம்

தான் வந்தது பற்றி அலட்டி
கொள்ளாமல் அலட்சியமாய் சாய்ந்திருக்கும் சிவாவை பார்த்த போது இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு அப்படியே நாலு மிதி மிதிக்கலாமா என்று தான் தோன்றியது

"கேட்கறேன்லே சொல்லு" என்று அதட்டினார்

சிவா அவருக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் விரல்களால் அவசரமாக தன் நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பினான். இதை கவனித்த அவர் உடனே செல் போனை பிடுங்கினார்

"உங்களுக்கு இங்கே என்ன வேணும் எதுக்கு வந்தீங்க "

"தவறு எங்கே நடந்தாலும் நாங்க வருவோம் "

சிவா உடனே "நீ கிளம்பு" என்று அந்த பெண்ணை பார்த்து சொன்னான்

"போக கூடாது ஏய் நில்லு" என்று அவர் சொன்னவுடன் அந்த பெண் அங்கேயே நின்று விட்டாள்.

"பழி வாங்கறீங்க இல்லே "

"உனக்கு அப்படி தோணலாம் எனக்கோ இது கடமை"

"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை"

"நீங்க கெட்டது பண்ணுவீங்க அதை தடுத்து பிடிக்கலாம்னு வந்தா உங்களுக்கு நல்லாயில்லை யா வெட்டி பேச்சு பேசாதே கிளம்பு"

"வரலைனா"

"சட்டையை கொத்தா பிடிச்சு தர தர னு இழுத்துட்டு போவேன் மீடியாவை கூப்பிட்டு உன்னை சந்தி சிரிக்க வச்சுடுவேன்"

எழுந்த சிவாவுக்கு அப்பொழுது தான் உரைத்தது. கார்த்திக் மாட்டிற போறானே என்று. தான் மாட்டினாலும் பரவாயில்லை தம்பிக்கு எந்த இழுக்கும் வர கூடாது என்று கொஞ்சம் பதைப்புடன் அவசரமாக வெளி வந்தான்



தொடரும்


நண்பர்களே நிறைய பேர் இந்த எனது தொடர்கதையை படிக்கிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி நீங்கள் மனதில் நினைப்பதை கருத்துரையிடுங்கள

ஆர்.வி.சரவணன்

The story copyrighted to kudanthaiyur may not be reproduced on other websites.

சனி, நவம்பர் 19, 2011

இளமை எழுதும் கவிதை நீ .... 5



இளமை எழுதும் கவிதை நீ .... 5






அன்பே உன் சொந்தங்களால் எனை நீ கூறு போட்டாலும்
என் ஒவ்வொரு கூறும் உன் பெயர் சொல்லும்



உமா வகுப்பறையிலிருந்து வெளிவந்து செல் போனில் தன் தந்தையிடம் விவரம் சொல்லி அவரை கல்லூரிக்கு உடனே வர சொன்னாள். அவர் வந்து சேர்வதற்கு முன் நாம் கொஞ்சம் பிரின்சிபால் ரூம் சென்று வந்து விடுவோம்

கோபமுடன் கிளம்பிய பேராசிரியர் பிரின்சிபாலிடம் சென்று நடந்த விவரங்களை கோபமுடன் தெரிவித்தார்

"எப்படி சார் இங்க வேலை பார்க்க முடியும் "என்றார்

அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்த பிரின்சிபால்

"என்ன பண்றது பிரச்னை இல்லாத இடம் ஏது நமக்கு முக்கியம் காலேஜ் தான் சேர்மனும் சரி மினிஸ்டரும் சரி ரொம்ப நல்லவங்க அவங்களுக்காக தான் நாங்க இங்கே வேலை பார்க்கிறோம் நாங்க அவங்களை கண்டுக்கிறதில்லை நீங்களும் கண்டுக்காதீங்க நாளைக்கு சேர்மன் வரார் அவர்கிட்டே சொல்லுவோம் அப்புறம் அவர் பாத்துக்குவார் நீங்க அவர் வர வரைக்கும் அந்த கிளாஸ் போக வேண்டாம் "

என்று சமாதானம் செய்தார்

சுப்ரமண்யன் ஒரு பெருமூச்சுடன் தனது அடுத்த வகுப்பு என்ன என்று பார்த்து அங்கே செல்ல ஆயத்தமானார்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், நவம்பர் 15, 2011

புத்தகம் பேசுது



புத்தகம் பேசுது


சென்ற வாரம் தீபாவளி சினிமா படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன் படம் ஆரம்பிக்கும் போது பக்கத்தில் உள்ளவர் ப்லொக்கில் டிக்கெட் ஐம்பது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்ததாக சொன்னார் .நான், நல்ல வேலை கவுன்டரில் ஒரு டிக்கெட் ஓர சீட் தான் இருப்பதாக சொன்னார்கள் பரவாயில்லை என்று வாங்கி கொண்டு வந்து விட்டேன் எனக்கு லாபம் தான் என்றேன் கொஞ்சமே கொஞ்சம் பெருமையுடன்.

சரி விசயத்திற்கு வருகிறேன்

எப்போதும் என் கையில் புத்தகம் இருக்கும் அன்றும் எடுத்து சென்றிருந்தேன் படம் பார்க்கும் போது சீட்டில் வைத்து விட்டு படம் பார்த்தேன் இண்டர்வெல்லின் போது புத்தகத்தை மறந்து விட்டு எழுந்து சென்று விட்டேன் அப்புறம் நினைவு வந்து உடனே அவசரமாய் வந்து பார்க்கையில் புத்தகம் சீட்டில் இல்லை. சரி கீழே விழுந்திருக்கும் என்று அந்த வரிசை முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. அது ஒரு நாவல்
லைப்ரரி புத்தகம் வேறு.

ஒரு புத்தகத்தை ஒழுங்காக வைத்து கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கொஞ்சம் மூட் அவுட் ஆகி அந்த சூழலிலேயே படம் பார்த்து விட்டு வெளி வந்தேன். சரி என்று லைப்ரரி சென்று அதற்குண்டான பணம் நாற்பது ரூபாய் செலுத்தி விட்டு வந்தேன். பணம் செலுத்தியதற்காக நான் கவலைப்படவில்லை நுலகத்திற்கு பணம் செலுத்துவது எனக்கு சந்தோஷமே.


இதில் மன கஷ்டம் என்னவென்றால் ,

அந்த புத்தகம் பத்து நிமிஷத்தில் கண்டிப்பாக இன்டர்வெல்லில் யார் கையிலாவது
கிடைத்திருக்கும். அதை உரியவரிடம் சேர்க்காமல் அவர்கள் எடுத்து கொண்டது எனக்கு நியாயமாக தோன்றவில்லை. ஒரு புத்தக விசயத்தில் கூடவா இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
மேலும் அந்த கதை நான் முக்கால்வாசி தான் படித்திருந்தேன். கிளைமாக்ஸ் இன்னும் படிக்கவில்லை.த்ரில்லர் ஸ்டோரி சுபா அவர்கள் எழுதியது.

இதில் கற்ற பாடம்

ஐம்பது ரூபாய் மிச்சமாகிவிட்டது என்று பெருமைப்பட்ட (சரி கர்வப்பட்ட) கொஞ்ச நேரத்திலேயே அந்த நாவலை நான் விட்டு விட்டு அதற்குண்டான அபராத தொகை செலுத்த நேர்ந்தது தான்
கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு கரெக்டா வருதுல்ல

இதிலே ஒரு காமெடி என்ன தெரியுமா

நான் திரைஅரங்கில் மறந்து விட்ட அந்த நாவல்

மறக்காத நெஞ்சம்

ஆம் அந்த நாவலின் பெயர் இது தான்


ஆர்.வி.சரவணன்



வியாழன், நவம்பர் 10, 2011

இளமை எழுதும் கவிதை நீ-4



இளமை எழுதும் கவிதை நீ -4








அத்தியாயம் 4



அன்பே உன் கோபம் புறப்படுவது புயலாய்
இருந்தும் அது என்னிடம் வரும் போது மட்டும் தென்றலாய்


சிவா கார்த்திக் வருகைக்காக காத்திருந்த அந்த அடியாள் கும்பல் தனியார் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு டாக்டர் வருகைக்காக காத்திருந்தார்கள் கூடவே அவர்களை ஏவிய மாணவன் சுரேஷும் அங்கே காயங்களுடன் அனுமதிக்கபட்டிருந்தான்

மறுநாள் எதுவும் நடக்காதது போல், சிவா கார்த்திக் இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பைக்கை தங்கள் நண்பர்கள் நிற்கும் வழக்கமான இடத்தில நிறுத்திய போது சூழ்ந்து கொண்ட மாணவர்களிடம்,

"டேய் நம்ம தல அஜித் படத்திலே சொல்ற மாதிரி இனிமே ஜென்மத்திற்கும் தண்ணியே அடிக்க கூடாது னு தோணுதுடா" என்றான் கார்த்திக்

"ஆனா சாயந்தரம் பாரேன் அடிச்சா என்ன னு தோணும்"
இது சிவா

ஜோக் கேட்டது போல் சிரித்த நண்பர்கள்

"டேய் மச்சான் நேத்தி நைட் போட்டிங்களே ஒரு சண்டை, யப்பா இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது எங்களுக்கு. கொஞ்சம் தவறுச்சு நாம இருந்திருப்போம் ஹாஸ்பிடல் லே"

"டேய் இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்டா"

"அது சரி வீட்டுக்கு தெரிஞ்சுதுன்னா டின் கட்டிடுவாங்க அதான் பயமா இருக்கு"

டேக் இட் ஈஸி இப்ப வருது பார் நியூஸ்

என்று சிவா சொன்னவுடன் மின்னலென வந்து நின்றான் பயோடேட்டா பாலு


தொடரும்

ஆர்.வி.சரவணன்


கருத்துரையிடுங்கள் நண்பர்களே
அது தான் என் படைப்புக்கான ஊக்கம்

வியாழன், நவம்பர் 03, 2011

இளமை எழுதும் கவிதை நீ -3


இளமை எழுதும் கவிதை நீ -3

அத்தியாயம் 3


இறுகிய என்னை இளக வைக்கும் ஆற்றல்
உன் சினத்திற்கு இருக்கிறது


கல்லூரி மணி ஒலிக்கவும் தனது BSC zoology துறை வகுப்பிலிருந்து
உமா வெளி வந்த போது அவளது முகம் வாடியே இருந்தது. அப்போது அவளருகே வந்த அருள்,

" வெல்கம் உமா எப்படி இருக்கே காலையிலேயே உன்னை பார்க்க முடியலை சாரிப்பா "என்று அவள் கை பிடித்து குலுக்கினான்

"ஹாய் அருள் எப்படி இருக்கே" என்றாள் உமா சுரத்தில்லாமல்

நல்லாருக்கேன் இதெல்லாம் என் பிரண்ட்ஸ் என்று தன் நண்பர்களை அறிமுகபடுத்தினான் "அது சரி நீ ஏன் டல்லா பேசறே"

"இந்த காலேஜ் ஏன்டா வந்து செர்ந்தோம்னு இருக்கு அருள்"

"என்னாச்சு உமா"

"சரியான ரவுடிஸ் காலேஜ் ஜா இருக்கு"

"ஏய் அப்படி சொல்லாதே சூப்பர் காலேஜ்"

"நீ தான் மெச்சிக்கணும்"

"சிவா எதுனா தகராறு பண்ணானா"

"ஆமாம்" என்றாள் சலிப்புடன்


தொடரும்


ஆர்.வி.சரவணன்

ஓவியம் வரைந்தது என் நண்பர் தேவராஜ்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.