புதன், ஜூன் 23, 2010

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே



சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே




*என்னது உங்கள் வீட்டு பெட்ரூம் ஆபீஸ் ரூம் போல் உள்ளதே


அதுவா ஆபீஸ் ரூம் போல் இருந்தால் தான் என் கணவருக்கு தூக்கமே வருதாம் அதான்








*என்ன இருந்தாலும் உங்க ஆபீஸ் லே இப்படியா போர்டு மாட்டி வைப்பீங்க


எதை சொல்றீங்க


தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன்








*தூக்கத்திலே நடக்கிற வியதியாலே பெரிய தொல்லையா இருக்கு


என்னாச்சு


தூங்கிகிட்டு இருக்கிறப்ப நான் பாட்டுக்கு பக்கத்து ஆபீஸ் போய் தூங்க ஆரம்பிச்சுடுறேன்







*அன்னிக்கு முதலாளி வரப்ப ஆபீஸ் லே நாங்க எல்லோரும் தூங்கிக்கிட்டுருந்தோம்


அப்புறம் என்னாச்சு


எல்லோரையும் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு அவர் தூங்கிட்டாரு








*ஆபீஸ் லே தினம் தூங்குற எல்லாரும் இன்னிக்கு தூங்காம வேலை பார்க்கிறாங்கலே எப்படி


இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்திருக்கு அதான்


ஆர் . வி .சரவணன்

வெள்ளி, ஜூன் 18, 2010

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......


பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......


சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் பாட்ஷா (எங்களுக்கும் தான் அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )



அந்த படத்தில் என்னை கவர்ந்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு (இவ்வளவு தாமதமானு கேட்காதீங்க) பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பதுஒரு இனிமையான அனுபவம் தானே



எனக்கு பிடிச்சது தான் உங்களுக்கும் பிடிச்சிருந்துதா னு நீங்க சொல்லுங்களேன்



இந்த படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படத்தில் ரஜினியின் நடிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த காட்சிகள் சிலவற்றை சொல்கிறேன்



இந்த படத்திலேயே ரொம்ப முக்கியமான காட்சி இன்டர்வெல் க்கு முன்னாடி வர்ற பைட் சீன் தான் அந்த சீனுக்கு முன்னாடி ஒரு சீன் வரும்



அதாவது ரஜினி சார் தம்பிக்கு பதிலா ரஜினி யை கட்டி வச்சி ஆனந்தராஜ் அடிச்சதுக்கு அப்புறம் ரஜினி கிட்டே அவர் தம்பி கேட்பார்



"இப்படி அடிச்சிருக்காங்க உங்களுக்கு கோபமே வரலியா உங்களுக்கு கோபமே வராதா "



அதற்கு ரஜினி தம்பியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க அர்த்தம்u பொதிந்த சிரிப்பு இப்பவும் என் கண்ணிலேயே நிக்குது அவர் சிரிப்பு



அடுத்தது அந்த இன்டர்வெல் பைட் அப்ப ரஜினி தன தம்பி தங்கையை பார்த்து " உள்ளே போ" னு அதட்டலா மிரட்டலா சொல்வார் பாருங்க பார்க்கிற நமக்கு அப்படியே உடம்பு அதிரும்



இன்னொரு முக்கியமான காட்சி காலேஜ் சீன் இந்த சீனை ரசிக்காதவங்க இருக்க முடியாது



"எனக்கு இன்னொரு பேர் இருக்கு " னு ரஜினி சொன்னவுடனே சேது விநாயகம் சீட்டை விட்டு எழுந்து பயத்தோடு நிக்க ரஜினி இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி மெதுவா நடந்துகிட்டே பேசுவார். டயலாக் எதுவுமே இல்லாமல் ஆக்சன் லே ரஜினி சும்மா பின்னி பெடலடுதிருப்பார்

அடுத்த காட்சி நக்மா கல்யாண சீன் ரஜினி வர வர தேவனுக்கு பாட்ஷா வே எதிரில் வருவது போல் தோன்றும்.



இதிலே முக்கியமானது என்னன்னா நக்மா வின் கையை பிடிக்கு முன் ரஜினி தேவன் பக்கம் திரும்பி ஒரு லுக் விடும் போது தேவன் எடுத்துக்கோ எடுத்துக்கோ என்று அர்ப்பணிப்பது போல் செய்வாரே சும்மா கும்முன்னு இருக்கும் அந்த காட்சி கூடவே தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் என்று பாடல் தொடங்குவது அந்த காட்சிக்கு சிகரம் வைத்து போல் இருக்கும் .



அதே போல் ரகுவரன் தான் தொத்து போயிட்டோம் னு தெரிஞ்சவுடன் போனில் "பாட்ஷா "என்று கத்த அதற்கு ரஜினி இங்கு "யா யா யா" என்று ஸ்டைல் ஆக சொல்வார் பாருங்கள் அரங்கமே அதிரும் நம் மனசே அதிர்வது போல் இருக்கும் .



ரஜினியின் ஆட்டோ வை சேதப்படுத்தும் போது பொறுமையாய் நின்றிருப்பார் ,அது பொறுமையின் ஆரம்பம் என்றால் அந்த சேதமடைந்த ஆட்டோ அருகில் நின்று தன் அம்மாவை ஒரு கணம் பார்ப்பார் பாருங்கள் அது பொறுமையின் மையம் .நக்மா சாரி சொல்லும் போது உங்க ஆளுங்க வெயிட் பண்றாங்க பாருங்க நீங்க போங்க என்று சொல்லும் இடம் பொறுமையின் உச்சம் எனலாம்



பாடல்களில் எல்லாமே கேட்கவும் பார்க்கவும் அலுக்காதவை என்றாலும் நக்மா எல்லோரிலும் ரஜினியை பார்க்கும் அழகு பாடல் ஒரு நல்ல கான்செப்ட் இந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது



எனக்கு இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரே ஒரு ஆசை தோன்றும். அது என்னனா இப்படி ஒரு அருமையான படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பில்டிங் லே நடக்கிற மாதிரி வரும் .



அதுவே ஒரு பெரிய கப்பல் அல்லது ஏர்போர்ட் அல்லது கார் பாக்டரி இந்த இடங்கள் லே நடக்கிறது போல் அமைச்சிருந்தா இன்னும் பிரம்மாண்டம் இருந்திருக்குமே என்று தான் .


அதே போல் "நான் ஒரு தடவை சொன்னா நுறு தடவை சொன்ன மாதிரி" வசனம் சூப்பர்

இருந்தாலும் " ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் நல்லவங்களை என்னிக்கும் கை விட மாட்டான்" என்று ரஜினி சொல்லும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கஷ்டம் வரும் நேரங்களில் இதை சொல்லி தான் நான் மனசை சமாதானம் செய்து கொள்வேன் .



இப்படி முழுவதுமே ரசிக்க தக்க எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த படம் இந்த கால கட்டத்தில் எடுக்கபட்டிருந்தால் எவ்வளவு பிரம்மாண்டமாய் வந்திருக்கும் எவ்வளவு சாதனை படைத்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்



நல்லாருக்கும் தானே



ஆர்.வி.சரவணன்

சனி, ஜூன் 12, 2010

மேக திரை விலக்கி......




மேக திரை விலக்கி......


மேக திரை விலக்கி நிலவும் சன்னல் திரை விலக்கி நீயும் பார்ப்பது எனக்கு ஒன்று தான்

ரோஜாவில் பனி துளியும் உன் இதழ்களில் நீர் துளியும் ஒன்று தான்

பட்டாம் பூச்சியின் படபடப்பும் உன் இமைகளின் படபடப்பும் ஒன்று தான்

பொன் நகையின் மினுமினுப்பும் உன் புன்னகையின் மினுமினுப்பும் ஒன்று தான்

ஆப்பிள் சிவப்பும் உன் வெட்க சிவப்பும் ஒன்று தான்

தென்றலின் தொடுதலும் உன் விரல்கள் என் மீது படுதலும் ஒன்று தான்

அன்பே

உன்னால் இன்று என் கவிதைகள் உயிர் பெற்றதும் நன்று தான்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூன் 10, 2010

மன்னா என்னா



நான் திருச்செந்தூர் சென்றிருந்த போது செல் போனில் கிளிக்கிய படம்
கூடவே மன்னர் ஜோக் (கடி)திருக்கிறேன் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்

மன்னா என்னா......

*மன்னா எதிரி நாட்டு மன்னனிடமிருந்து நம் நாட்டை நீங்கள் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது

ஆம் அமைச்சரே படைக்கு தலைமையேற்று மகாராணி போர் புரியும் நேரம் வந்து விட்டது

*நேற்று மன்னனுக்கு சாமரம் விசிய பெண் அந்தபுரம் சென்று விட்டார்

அங்கு மகாராணிக்கு சாமரம் வீசுகிறாரா

இல்லை மன்னர் அவருக்கு சாமரம் வீசுகிறார்

*மன்னா உங்கள் அந்தபுரத்திற்குள் ஒருவன் நுழைந்து விட்டான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்

மகாராணியை அவன் பார்த்ததே பெரிய தண்டனை தான் அவனை விடுதலை செய்து விடுங்கள்

*மன்னனே எனக்கு கப்பம் காட்டுகிறாயா இல்லியா

கப்பம் எல்லாம் கட்ட முடியாது வேண்டுமானால் உன் பெண்ணை கட்டுகிறேன்

*அமைச்சரே நடன பெண்ணை அரசவைக்கு வந்து ஆட சொல்லுங்கள்

மன்னா அவர் இன்று விடுமுறையில் இருக்கிறார் அவர் ஏற்கனவே ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா

ஆர்.வி.சரவணன்

சனி, ஜூன் 05, 2010

கோடையும் குளுமையும்

கோடையும் குளுமையும்

கோடையின் வெப்பம் இன்னும் நம்மை வாட்டியெடுக்கிறது இந்த நிலையில்
சில குளிர்ச்சியான படங்களை என் கமெண்ட்ஸ் களுடன் தந்திருக்கிறேன்
பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்




பல் துலக்க அடம் பிடிக்கும் சிறார்கள் மனதில் இது இடம் பிடிக்குமோ




மலரின் மேல் ஜில் ஒன்று அதன் மேல் ஒரு சுடரொன்று


கோடையின் கடுமையை நீக்குமா இந்த சிறு குளுமை


உருளும் உலகம் இங்கு உருகும் உலகமாக

படங்கள் மின்னஞ்சலில் தந்தவர் நண்பர் TN .ஸ்ரீதர்

ஆர்.வி.சரவணன்














வியாழன், ஜூன் 03, 2010

இசைக்கு பிறந்த நாள்



இசைக்கு பிறந்த நாள்


இசைஞானி இளையராஜாவுக்கு 67 வது பிறந்த நாள் இசையை மிக ரசிக்கும் அல்ல அல்ல சுவாசிக்கும் எனக்கு இளையராஜா வின் இசை ஒரு வரப்ரசாதம்


ராக தேவனே உன் இசை,
தூக்கம் வாராத இரவுகளில் என்னை தாலாட்டுகிறது


துக்கமான நேரங்களில் என் மனதை மயிலிறகாய் வருடுகிறது


உற்சாகமான நேரங்களில் சந்தோச சிகரத்திற்கு என்னை கை பிடித்து அழைத்து செல்கிறது


தோல்விகளில் துவளும் போது தட்டிஎழுப்பி அமர வைக்கிறது


வாழ்க்கையில் நான் வெற்றிகளை தொடும் போது கை தட்டி ஆர்ப்பரிக்கிறது


இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை, வையகத்தை ஆளட்டும்



ஆர்.வி.சரவணன்