ஞாயிறு, அக்டோபர் 23, 2011

இளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)

முன்னுரை

நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந்த இடுகையில் ஆரம்பமாகிறது.
இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது


நான் கல்லுரி படிக்கும் காலத்தில் ஒரு சினிமா பணியில் உருவாக்கிய இந்த கதையை இப்போதைய சூழ்நிலைக்கேற்ப தொடர்கதையாக மாற்றியிருக்கிறேன். இதில் ஏதேனும் லாஜிக் மீறல் இருக்கலாம் தவறுகளும் இருக்கலாம் எனது கன்னி முயற்சி இது என்பதால் அவற்றையெல்லாம் பொறுத்து கொள்ள வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்

இந்த தொடர்கதை கேட்டு நான் எழுத ஊக்கமளித்து வரும் எனது அலுவலக நண்பர்களுக்கும் கரைசேரா அலை அரசன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி


----------

இளமை எழுதும் கவிதை நீ ....முதல் அத்தியாயம்


அன்பே உனை பார்க்கும் வரை என் பொழுதே போகவில்லை
பார்த்த பின்னோ என் பொழுதே போதவில்லை
விநாயகர் சன்னதியில் நின்று தோப்புகரணம் போட்டு சாமி கும்பிட்ட உமா பிரசாதத்தை எடுத்து நெற்றியில் இட்டு கொண்டு கல்லூரிக்கு செல்ல கோவிலை விட்டு வெளி வந்தாள்.
கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் இன்று. ஆகவே, சரியான நேரத்திற்குள் காலேஜ் செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவளது நடையில் இருந்தது.

அப்பொழுது அவளுக்கு எதிரே வந்த இளைஞன் ஒருவன், " மேடம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் ரோடு கிராஸ் பண்ணனும் எனக்கு பார்வை தெரியாததால் சிக்னல் எப்ப ப்ரீயாக இருக்குனு சொல்லுங்க நான் போய்க்கிறேன்" என்றான்.

உமா அவனை பார்த்தாள் அவன் கண்களில் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தான். கையில் வாக்கிங் ஸ்டிக் இருந்தது

வாங்க நானே கொண்டு போய் விடறேன்

"பரவாயில்லீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றான்.

"இந்த ஹெல்ப் கூட பண்ணாமல் இந்த உலகத்திலே நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் வாங்க" என்று அக்கறையாய் அவன் கையை பிடித்து கொண்டாள்

சிக்னல் விழ காத்திருந்தாள்

------

கும்பகோணம் நகரின் காவிரி கரை ஓரம் வானளாவிய கட்டடங்களால் எழும்பியிருந்த கிருஷ்ணாலயா காலேஜ் என்ற தனியார் கல்லூரி கோடை விடுமுறைக்கு பின் துவங்கும் முதல் நாள் இன்று.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மாணவிகள் அங்காங்கே நடந்து கொண்டும் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசி கொண்டிருந்தார்கள். விடுமுறையில் நடந்த விசயங்களை இன்றே இப்போதே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்பு அவர்கள் பேச்சில் இருந்தது.

கல்லூரி வாசலை நோக்கி நின்றிருந்த ஒரு மாணவர்கள் குழு ரொம்ப சந்தோசமாக இருந்தது அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஆளுயர மாலைகள் இருந்தன

"என்னடா மச்சான் நம்ப காலேஜ் ஹீரோவை இன்னும் காணும்"

"அவன் தம்பியையும் இன்னும் காணும்"

"டேய் ரெண்டு பேரும் சேர்ந்து தானேடா வருவாங்க"

"டயமாச்சே இன்னும் காணுமே னு தான் கேட்கிறேன்"

"அவங்களுக்கு என்னடா இந்த ஊரில் பெரிய மனுசங்க அவங்க, காலேஜ் அவங்க அப்பவோடது அவர் சென்ட்ரல் மினிஸ்டர் அவங்க மாமா இந்த காலேஜ் சேர்மன் அவங்க நினைச்ச போது வரலாம் நம்ம நிலைமை அப்படியா சொல்லு"

"ஆமாம்டா ராஜா வீட்டு கண்ணுகுட்டிங்கடா அவங்க"

"ம்ஹும் கன்னுக்குட்டி இல்லடா சிங்க குட்டிங்க"

"அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும் அது நம்ம கிட்டே இல்லே சரி சரிஅந்த யோககாரங்களுக்கு ஒரு போன் போடு"

ஒருவன் செல் எடுத்து நம்பருக்கு முயற்சிக்கையில் அவர்களுக்கு நன்கு அறிமுகமான அந்த பைக் சத்தம் கேட்டது . "வந்துட்டாங்கடா நம்ம தளபதிங்க" என்று சொல்லியவாறு அந்த மாணவர்கள் ஆர்வமாய் முன்னேறினர்.

உள்ளே வந்த பைக்கில் பைக் ஒட்டியவாறு வரும் சிவா தான் இந்த கதையின் நாயகன் காற்றில் தலை முடி பறக்க குளிர் கண்ணாடி அணிந்து ஜீன்ஸ் பேண்ட் இன் பண்ணிய அரைக்கை சட்டை மற்றும் கழுத்து கை விரல்களில் நகை கடை யையே அணிந்தவன் போல் திமிரான பார்வை யுடன் வரும் அவன் பின்னே, தோற்றத்தில் உடையில் அவனை போலவே அமர்ந்திருந்தவன் அவன் தம்பி கார்த்திக்.

சிவாவிடம் இருக்கும் ஒரு திமிர் தனம் அவன் தம்பியிடம் இல்லை.பைக் மிக வேகமாக வந்து அவர்களது நண்பர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில நிற்காமல் அவர்களை தாண்டி சென்று கொஞ்சம் முன்னே சென்று கொண்டிருந்த இன்னொரு மாணவர் பட்டாளத்தில் உள்ளே நுழைந்தது. எதிர் பாராமல் நுழைந்த பைக்கை கண்டு நிலை குலைந்து திசைக்கு ஒருவராய் சிதறினர் மாணவர்கள்.

பின்னால் அமர்ந்திருந்த தன் தம்பியிடம் பைக்கை, அம்போ வென விட்டு விட்டு சிவா ஓடி சென்று சிதறிய மாணவர்களில் ஒருவனின் சட்டை காலரை பற்றினான்

------

சிக்னல் விழுந்தவுடன் உமா அந்த பார்வையற்ற இளைஞனைஅழைத்து கொண்டு ரோடை கிராஸ் செய்தாள். ரோடின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில அவனை விட்டு, " இது போதும் லே இனிமே போயிடுவீங்க தானே" என்று அக்கறையுடன் கேட்டாள்.

அவன் உடனே, " இது போதுங்க இன்னைக்கு முழுக்க என் பொழுதே சந்தோசமா போகும்" என்று சொல்லி கண்ணாடியை கழட்டினான் .

கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த சில இள வட்டங்களை நோக்கி "ஹாய் பிரண்ட்ஸ் நான் ஜெயிச்சிட்டேன்" என்றான் .

உமா திகைப்புடன் அவனை பார்த்தாள்

ஒண்ணுல்லே மேடம் உங்க கையை பிடிச்சிட்டு வரேன் பார் என்று பசங்க கிட்டே
சவால் விட்டேன். அதான் இப்படி பார்வையற்றவனா நடிக்க வேண்டியதாயிடுச்சி

உமாவின் பார்வையில் இப்போது அனல் தகித்தது

------

வன் கன்னத்தில் மாறி மாறி அறைந்த சிவா அவன் தலை முடியை கொத்தாக பிடித்து , "பேனா இருந்தா எது வேணா எழுதுவியாடா நீ " என்று கேட்டான் .

அடிபட்ட மாணவன் நிலை குலைந்து பதில் ஒன்றும் சொல்லாமல் சிவாவை பார்த்தான்

என்னடா பார்க்கிறே உன் பேனா தான் பேசுமா நீ பேச மாட்டியா

அதற்குள் அவ்விடத்தை வந்து சூழ்ந்து கொண்ட அவன் நண்பர்கள், " என்னாச்சுடா வந்ததும் வராததுமா சிவா கிட்டே அருள் மாட்டியிருக்கான். கொத்து கறி பண்ற அளவுக்கு என்னடா பண்ணான் அவன் " என்று கார்த்திக்கை கேட்டார்கள்

பைக்கில் அமர்ந்து நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்த அவன் தம்பி கார்த்திக்
இவர்களிடம் திரும்பி , "அவன் நடத்தற காலேஜ் மேகசின் லே எங்க ரெண்டு பேர் பற்றியும் தப்பா எழுதியிருக்கான்"

இந்த காலேஜ் லே எங்க சர்வாதிகாரம் தான் நடக்குதாம் எங்க கிட்டேருந்து இந்த காலேஜை காப்பாற்ற கடவுள் தான் அவதாரம் எடுத்து வரணும்னு கவிதை எழுதியிருக்கான்

மெகசின் பப்ளிஷ் பண்ணிட்டானா

இல்லை பிரிண்டிங் காக போயிருக்கு. பிரிண்டிங் பிரஸ் லே இருந்து போன் போன் பண்ணி இந்த மாதிரி எழுதியிருக்கு உங்களுக்கு தெரியுமா பிரிண்ட் பண்ணலாமா னு கேட்டாங்க அதான் வந்து உதைக்கிறான் சிவா

பிரிண்டிங் பிரஸ் தப்பிச்சுது இல்லேனா அது இந்நேரம் தரை மட்டமாகி இருக்கும்

"அருள் உனக்கு ஏன்பா இந்த வேலையெல்லாம் இந்நேரம் நீ நம் மன்னரை போற்றி கவிதை எழுதியிருந்தால் ஏதேனும் பொற்காசு கிடைச்சிருக்கும்லே"

என்று ஒருவன் சொல்ல

அந்த நேரம் அங்கு வந்த ஒரு ப்ரொபசர் இதை பார்த்து,

"விடுப்பா சிவாகூட படிக்கிற பையனை இப்படி எல்லாரும் பார்க்கிறப்ப அடிக்கலாமா"

"அப்ப தனியா வச்சி அடிக்கலாமா " கார்த்திக்

"என்னப்பா இப்படி பேசறே நம்ம காலேஜ் லே ஸ்போர்ட்ஸ் லே எவ்வளவு பெரிய ஆள் அவன் அதுக்காகவாவது விட்டுடேன்"

"ஸ்போர்ட்ஸ் லே விளையாடட்டும் சார் என் கிட்டே விளையாடலாமா" சிவா

இத்தனை பேர் வேடிக்கை பார்க்கிறப்ப நீங்க மட்டும் ஏன் இங்கே வந்து குரல் கொடுக்குறீங்க முடிஞ்சா வேடிக்கை பாருங்க இல்லே போய்கிட்டே இருங்க

என்று சொல்லவும் அவ் விடத்தை விட்டகன்றார் அவர்

சிவா அருளிடம் திரும்பி

"இத பார் இந்த காலேஜ் இப்படி தான் இருக்கும் நாங்களும் இப்படி தான் இருப்போம் இருக்க முடிஞ்சா இரு இல்லே னா காலேஜை விட்டு ஓட்ரா" என்றான்

கசங்கிய சட்டையை நீவி விட்டவாறு அவ்விடத்தை விட்டு அகன்றான் அருள்

------

வன் சட்டையை கொத்தாக பற்றிய உமா ஓங்கி அவன் கன்னத்தில் அடித்தாள். இதில் நிலை குலைந்தவனை பார்த்து

"ராஸ்கல் பொண்ணுன்னா கிள்ளு கீரையா உனக்கு உன்னை நான் அறைஞ்சது, நீ என் கையை பிடிச்சிகிட்டு வந்ததுக்காக இல்லே ஏன்னா அதனாலே ஒன்னும் என் கற்பு பறி போயிடாது ஆனா இப்படி மாற்று திறனாளி மாதிரி நடிச்சு ஏமாத்தினே பாரு அதற்காக தான் அடிச்சேன் நீயும் ஒரு ஆண் மகன்னு வாழ்ந்திட்டு இருக்கே ச்சே"

என்று வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ்ந்தாள்

அந்த கோபம் தணியாமலே கல்லூரிக்கு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்

"இந்த வருடத்தின் நம் கல்லூரியின் மாணவர் தலைவன் சிவா வாழ்க" என்று கோஷமிட்ட படி ஒவ்வொருவரும் சிவாவுக்கு மாலை அணிவித்தனர்

டேய் எதுக்குடா இவ்வளவு மாலையெல்லாம்
நான் கேட்டனா

சிவா உனக்கு மாலை போடணும்னு ஆசைப்பட்டு நாங்க எங்க வீட்டில் தெரிஞ்சு கொஞ்சம் தெரியாம கொஞ்சம் னு காசு எடுத்துட்டு ஆசையாய் வாங்கி வந்திருக்கோம் நீ என்னடான்னா இப்படி சொல்றே

"ஓகே ஓகே சாரி" என்று மாலைகளை வாங்கி கொண்டவன்
இந்த மாலைகளையெல்லாம் வேற நான் கழட்டனுமா" என்று சலித்து கொண்டான்

"என்னடா அவனவன் மாலை மரியாதை கிடைக்காதா னு ஏங்கறான் நீ சலிச்சுக்கிறே ஒவ்வொன்னா மாலையை கழட்டி எல்லா பக்கமும் வீசுடா " கார்த்திக்

சிவா ஒவ்வொன்றாக மாலைகளை கழட்டி திசைக்கொன்றாய் வீசினான்

அவன் வீசிய மாலைகளில் ஒன்று கல்லூரிக்குள் வந்து கொண்டிருந்த உமாவின் கழுத்தில் சென்று விழுந்தது உமா அதிர்ச்சி மேலிட மாலை வந்த திக்கை பார்த்தாள்.

அங்கே மாலைகளை வீசி கொண்டிருந்த சிவாவை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது . கழுத்தில் விழுந்த மாலையை வெறுப்புடன் கழற்றியவள் அதை தன் இடது கையில் அருவெறுப்புடன் பிடித்தவாறே சிவா இருந்த இடம் நோக்கி வந்தாள்.

இதை கண்ணுற்ற நண்பர்கள் சிவாவிடம் சைகை செய்யவே பைக்கில் அமர்ந்திருந்த
சிவா திரும்பி பார்த்தான்.

தூய வெண்மையில் சுடிதாருடன் சிகப்பு சால் அணிந்து, தேவதையாய் வரும் அவளை கண்டு பிரமித்தான்

தென்றல் அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறதா இல்லை தென்றலை இவள் கை பிடித்து அழைத்து கொண்டு வருகிறாளா என்று அவன் மனசுக்குள் பட்டிமன்றம் ஆரம்பாயிற்றுதொடரும்


படம் : நன்றி ஓவியர் இளையராஜா


ஆர்.வி.சரவணன்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

20 கருத்துகள்:

 1. கணபதி சன்னதியிலிருந்து துவங்கும் தொடர்
  ஆரம்பத்த்லேயே படு வேகம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சார் கன்னி முயற்சி மாதிரி தெரியவில்லை ..
  முதல் அத்தியாயமே ஆவலை தூண்டி விட்டுள்ளது ..
  மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 3. தொடர் ஆரம்பத்தலேயே படுவேகம்...
  தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. சரவணன்,

  முயற்சி திருவினையாக்கும். வரும் அத்தியாயங்கள் இன்னும் மிளிரும்.

  பதிலளிநீக்கு
 5. விறுவிறுப்பான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள்.
  தீபாவளி நல்வாழ்த்துக்கள.

  பதிலளிநீக்கு
 6. நல்ல கதை.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 7. நல்ல ஆரம்பம்!தீபாவளி இனிப்பு சாப்பிட்ட மாதிரி அருமையா ஆரம்பிச்சாச்சு... நல்லா தொடரனும்னு வாழ்த்துக்கள்.
  வீட்ல எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிச்சுடுங்க.

  பதிலளிநீக்கு
 8. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ரமணி சார்

  பதிலளிநீக்கு
 9. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அரசன்

  பதிலளிநீக்கு
 10. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 11. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சத்ரியன் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்

  பதிலளிநீக்கு
 12. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி கருண்

  பதிலளிநீக்கு
 13. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்

  பதிலளிநீக்கு
 14. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ரத்னவேல் சார்

  பதிலளிநீக்கு
 15. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தென்றல் சரவணன்

  பதிலளிநீக்கு
 16. தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்...

  கதை மிக அருமை... நல்ல தெளிவான பாதையில் பயணிக்கும் விதம் கதையின் பலம்...

  என் இனிய தீபாவளி வாழ்த்துகள்... நண்பரே...

  பதிலளிநீக்கு
 17. கதை தெளிவாகவே இருக்கிறது. இளமையான ஒரு காதல் படம் பார்க்கும் அனுபவத்தை பெறலாம் என்று நினைக்கிறேன். எடுத்தவுடனே சண்டை காட்சிகள் தூள் பறக்கின்றனவே?

  உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. சரவணன் சார்... 80களில் வந்த திரைப்படம் போல ஆரம்பம் இருக்கிறது. போகப் போக என்ன செய்கிறீர்கள் பார்க்கலாம். சுவாரஸ்யமாகத் தொடங்கியுள்ள உமக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்