செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மருமகளான மாமியார்
மருமகளான மாமியார்


"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா"

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு எடுத்து கொண்டு தன் மாமியாரின் அறைக்குள் நுழைந்த உமாவை தான் இவ்வாறு வரவேற்றது மாமியாரின் குரல்

இதை கேட்டு திடுக்கிட்ட உமா கடிகாரத்தை பார்த்தாள். ஆறு மணி

"சீக்கிரமே தானே அத்தை காபி போட்டு எடுத்துட்டு வரேன்"

என்று பதில் சொன்னவளை முறைத்து கொண்டே மாமியார்

"பதிலுக்கு பதில் பேசாதே "என்றார்

இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல்

உமா காபி யை கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் பணிவுடன் வைத்தாள்

"என் கண்ணாடியை எடு " என்ற அடுத்த அதட்டலுக்கு செவி சாய்த்தவள் உடனே கொண்டு வந்து நீட்டினாள்.

பாத்ரூமிலிருந்து வெளி வந்த மாமனார் " குட் மார்னிங் மா "என்றவர்

அவள் கொடுத்த காபி யை வாங்கி பருகி கொண்டே

"உன் புருஷன் எழுந்துட்டானா "என்று கேட்டார்

"இல்லை மாமா நைட் லேட்டா தான் வந்தார் தூங்கிட்டிருக்கார்"

"வளவளனு என்ன பேச்சு டிபனுக்கு ரெடி பண்ணிட்டியா" இது மாமியாரின் அடுத்த ஏவுகணை

"இதோ ஆரம்பிக்க போறேன் அத்தை"

"இனிமே தான் செய்யனுமா நானெல்லாம் அந்த காலத்திலே எள்ளுன்னா எண்ணையா நிப்பேன் என் மாமியார் கேட்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் ரெடியாகி டேபிள் லே இருக்கும் இந்த காலத்து பொண்ணுங்களும் தான் இருக்கே ஹூம்" என்றவள்

"என்னை பார்த்துட்டே நின்னா வேலை ஆகிடுமா" என்று சொன்னவுடன் அறையை விட்டு அகன்றாள் உமா கடுப்புடன்


மாமனார் தன் மனைவியிடம் "ஏன் அந்த பெண்ணை போட்டு இப்படி படுத்தறே" என்றார்

"நீங்க சும்மாருங்க மருமகளுக்கு என்ன சப்போர்ட் வேண்டி கிடக்கு" என்று அதட்டினாள்

"இது சப்போர்ட் இல்லே இன்னும் வீட்டிலே யாருமே எழுந்திருக்கலே ஆறு மணிக்கே டிபன் ரெடி பண்ணி யார் சாப்பிட போறா சொல்லு அதட்டனும்னு
நினைச்சுகிட்டு நீயா எதுனா பேசாதே"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அப்படி பேசி தான் மருமகளை அப்பப்ப அதட்டி வைக்கணும் இல்லாட்டி அவங்க கிட்டே நாம தான் கை கட்டி நிக்க வேண்டியிருக்கும்"

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பேரன் விக்னேஷ், " பாட்டி உங்களை பாட்டிம்மா கூப்பிடறாங்க" என்று சொல்லியவாறு அவரது கையை பிடித்து இழுத்தான்

இதை கேட்டவுடன் "வேற வேலை இல்லே" என்று சலிப்புடன் சொல்லி கொண்டே உடனே வேகமாய் எழுந்து தனது தாயாரின் அறை நோக்கி செல்லும் தனது மனைவியின் அவசரத்தை பார்த்து மெல்ல சிரித்து கொண்டார் மாமனார்

தனது வயதான மாமியாரின் அறைக்குள் சென்றவர் காதில் விழுந்தன அந்த வார்த்தைகள்

"நான் கூப்பிடலேன்னா ஒழியட்டும்னு விட்டுடுவா போலிருக்கு என் மருமகள் ஏதோ சொத்து என் கிட்டே இருக்கிறதினாலே என் பொழப்பு இங்கே ஓடுது" என்று கோபமாய் சொல்லி கொண்டிருந்த தன் மாமியாரின் அருகில் சென்று

"என்ன அத்தை என்ன வேண்டும் "என்று பணிவுடன் கேட்டார்

நிமிர்ந்து பார்த்த அந்த வயதான மாமியார் கேட்டார்

"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா"

ஆர்.வி.சரவணன்

18 கருத்துகள்:

 1. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு அழகாய் உணர்த்திய சிறு கதை சிறப்பு கதை ..
  வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா இது எல்லோருக்குமான அனுபவம்தான்.

  பதிலளிநீக்கு
 3. நல்லா இருக்கு சரவணன்...கதையும் சரி--படமும் சரி---குடந்தயுர்..என்ன காரணப்பெயரா?--நீங்க கும்பகோணத்துக்காரரா? சும்மா..ஒரு ஜி.கே.க்குத்தான்

  பதிலளிநீக்கு
 4. சரிதான்...உங்களுக்கென்ன பெண்ணா பிறந்திருந்தா தெரியும்...
  கதையல்ல நிஜம்னு போட்டிருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 5. விதைப்பது தான் முளைக்கும் என்பதின் விரிவாக்கம் தான் இந்த கதை உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

  பதிலளிநீக்கு
 6. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  பதிலளிநீக்கு
 7. ஆம் சேகர் சார் எனது பிறப்பிடமும் வளர்ந்ததும் கும்பகோணம் தான் ஆகவே தான் குடந்தையூர் என்று பெயர் வைத்தேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேகர்

  பதிலளிநீக்கு
 8. மேடம் நான் மருமகளை கஷ்டபடுத்தும் மாமியாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசிக்கையில் உருவானது இந்த கதை நீங்கள் சொல்வது போல் நம் வீடுகளில் நடக்கின்ற கதை தான் இதில் ஆண்களுக்கும் பாதிப்புண்டு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

  பதிலளிநீக்கு
 9. சுருக்கமாக இருந்தாலும் நறுக் கென
  சுவையாகச் சொல்லிப்போயிருக்கும்விதம் அழகு
  இது ஒரு தொடரோட்டம் என்பதை மிக நேர்த்தியாகச்
  சொல்லியிருக்கும் பாங்கு மிக மிக நன்று
  அனேகமாக இந்த தொடரோட்டம் இந்த மருமகளுடன்
  நின்று போகும் என நினைக்கிறேன்
  அதை ஒருசிறுகுறிப்பால் உணர்த்தியிருக்கும் விதம் அழகு
  தரமான பதிவு தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. பொதுவாக பொருளாதாரம் உறவுகளை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது. சுயசார்புத்தன்மை தான் பிரச்சினைக்குத் தீர்வு. வீட்டுக்கும் ஏன் நாட்டுக்கும் இது பொருந்தும் பென்சன் இல்லாத ---பென்சன் கிடைக்காத பெரிசுகள் நிலைமை எப்படி இருக்கும்? நூறு ரூபாய் பென்சன் வாங்கிற பெரியவருக்கும் பிள்ளைகளுக்கு செலவழித்து விட்டு கையில் பாசத்தைத் தவிர எதுவுமில்லாத பெரியவருக்கும் கிடைக்கிற மரியாதை வேறுபடும் பொருளாதாரத்துக்கு அப்பால் பாசம் உறவு என்பதெல்லாம் பொதுவாக எதுவுமில்லை. மாமியாருக்கும் வருங்கால மாமியாருக்கும் இது பொருந்தும். சிறு மாற்றங்களிருக்கும் வீட்டு வாடகை அந்தக்காலத்தில் இப்போது பென்சன் விதி விலக்குகள் இருக்கும். உளவியல் ரீதியாக நல்ல கதை சொல்ல வந்திருக்கீங்க .பாராட்டுக்கள்.-------ஆர்.எஸ்.மணி திண்டுக்கல்

  பதிலளிநீக்கு
 11. பொதுவாக பொருளாதாரம் உறவுகளை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளது. சுயசார்புத்தன்மை தான் பிரச்சினைக்குத் தீர்வு. வீட்டுக்கும் ஏன் நாட்டுக்கும் இது பொருந்தும் பென்சன் இல்லாத ---பென்சன் கிடைக்காத பெரிசுகள் நிலைமை எப்படி இருக்கும்? நூறு ரூபாய் பென்சன் வாங்கிற பெரியவருக்கும் பிள்ளைகளுக்கு செலவழித்து விட்டு கையில் பாசத்தைத் தவிர எதுவுமில்லாத பெரியவருக்கும் கிடைக்கிற மரியாதை வேறுபடும் பொருளாதாரத்துக்கு அப்பால் பாசம் உறவு என்பதெல்லாம் பொதுவாக எதுவுமில்லை. மாமியாருக்கும் வருங்கால மாமியாருக்கும் இது பொருந்தும். சிறு மாற்றங்களிருக்கும் வீட்டு வாடகை அந்தக்காலத்தில் இப்போது பென்சன் விதி விலக்குகள் இருக்கும். உளவியல் ரீதியாக நல்ல கதை சொல்ல வந்திருக்கீங்க .பாராட்டுக்கள்.-------ஆர்.எஸ்.மணி திண்டுக்கல்

  பதிலளிநீக்கு
 12. நகைச்சுவையா நல்லதொரு விஷயத்த சொல்லி இருக்கீங்க :))

  பதிலளிநீக்கு
 13. ச‌ர‌வ‌ண‌ன்..அருமையான‌ ந‌டையில் ந‌கைச்சுவை க‌தை..ந‌ல்லாயிருக்கு.. வாழ்த்துக்க‌ள்..

  பதிலளிநீக்கு
 14. இனி வரும் காலங்களில் இப்படியான நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை என தோன்றுகிறது...ஒன்று கூட்டுக் குடும்பங்கள் அருகி வருகிறது... பெண்களும் தங்கள் மருமகளை நட்பாகக் கொள்ளும் சமூகம் வளர்ந்து வருகிறது...

  பதிலளிநீக்கு
 15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

  வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்