ஞாயிறு, நவம்பர் 25, 2012

இளமை எழுதும் கவிதை நீ-14

இளமை எழுதும் கவிதை நீ-14





உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  

மையம் கொண்ட புயல் ஒன்று எந்த திசை நோக்கி திரும்பும் என்று பயத்துடன் எதிர்பார்த்திருக்கையில் அது வலுவிழந்து போனால் எப்படி இருக்கும் அப்படி தான் இருந்தது அந்த வகுப்பறையில் இருந்தவர்களுக்கு. சிவா  எதுவும் நடவாதது போல் டெஸ்க்கிலிருந்து 
தன் புத்தகங்களை எடுத்து கொண்டு கடைசி பெஞ்சுக்கு செல்ல கிளம்பினான்.  தன் கோபத்தை வெளி காட்டாது மறைக்கவும் அதை கட்டுபடுத்தவும் மிகவும் பிரயத்தனப்பட்டான். அந்த பதட்டத்திலேயே  அவன் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி தரையில் விழுந்து திசைக்கொன்றாய் சிதறின. அதை பார்த்த பயோ டேட்டா பாலு உட்பட சில மாணவர்கள் அவசரமாய் எழுந்து வந்தனர்.

 தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

 ஓவியம் : நன்றி திரு.இளையராஜா 

 

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

  

ஞாயிறு, நவம்பர் 18, 2012

இளமை எழுதும் கவிதை நீ -13



இளமை எழுதும் கவிதை நீ -13





இளமை எழுதும் கவிதை நீ இது வரை வந்த முன் கதை http://www.kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது சிவாவுக்கு. அதாவது  ஆறு மணி 
அவனை பொறுத்த வரை  அதுவே சீக்கிரம். விழித்ததும் தான், இருக்கும் இடம் தன் 
இப்போதைய நிலை, நேற்றைய நிகழ்வுகள் என்று ஒவ்வௌன்றும் அவன் மன திரையில் காட்சிகளாக அரங்கேற ஆரம்பித்தன. 

யோசனையுடன் படுக்கையில் அமர்ந்திருந்த சிவாவை ஓர கண்ணால் கவனித்தபடியே கல்லூரிக்கு செல்ல தன் சட்டையை சலவை செய்து கொண்டிருந்தான் அருள் 


சிங்கம் கம்பீரமாக அமர்ந்திருப்பதை  பார்க்கின்றவர்களுக்கு என்ன 
 தோன்றும் .ஒரு பயம் கூடவே அதன் கம்பீரமும் நம்மை கவரும்  .ஆனால் அதே சிங்கம்  அமைதியாக ஒரு ஓரத்தில்  ஒடுங்கி போய் அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது அருளுக்கு, சிவா வை பார்த்த போது .நிஜமாவே இவன் மாறி விட்டானா இல்லை மாறியது போல் நடிக்கின்றானா என்றும் அவன் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

தொடரும் 

ஆர் .வி.சரவணன் 

படம் நன்றி : ஓவியர் இளையராஜா 




திங்கள், நவம்பர் 12, 2012

தீபாவளி சிறப்பிதழ்

 தீபாவளி சிறப்பிதழ்



 



இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும்  என்னை தொடரும் நண்பர்களுக்கும் 
மற்றும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


கடவுள் தரிசனம்

கும்பகோணம் அருகே உள்ளது  தாராசுரம் இங்கே வரலாற்று சிறப்பு மிக்க ஐராவதேஸ்வர் கோவில் உள்ளது எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட இக் கோவிலின் ஒரு படம்  இங்கே கடவுள்   தரிசனம்  பகுதியில் இக் கோவிலின் தகவல் படங்கள்   பின்  ஒரு  பதிவில்)





------


நகைச்சுவை







ஒருவர் அல்வா கிண்டுவதற்காக சமையல் கலை புத்தகத்தை வைத்து கொண்டு அதில் சொல்லியுள்ள படி அல்வா கிண்டி கொண்டிருந்தார். அல்வா கிண்டி முடித்தவர் தீடீரென்று ஒரு கிலோ நூறு ரூபாய் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் மனைவி அவர் கத்துவதை   பார்த்து என்னங்க ஏன் இப்படி குரல்  கொடுக்கறீங்க என்று கேட்டார் அதற்கு அவர் புத்தகத்தில் அல்வா கிண்டி முடித்தவுடன் ஏலம் போடவும் னு சொன்னங்க அதான் ஏலம் போட்டுட்டிருக்கேன் என்றார் ( இது எனது அனுபவம் அல்ல எனது உறவினர் தான் கேள்விப்பட்ட இந்த ஜோக்கை என்னிடம் பகிர நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் )

------


தீபாவளி கவிதைகள் 










செல்வ   சிறார்கள் பட்டாசை வெடித்து மகிழ 
ஏழை சிறுவன் மட்டும் அதை பார்த்து  மகிழ்ந்தான் 


ஏழை பணக்காரன் எனும் பேதம் எல்லாம் பார்த்து  
பட்டாசு வெடிப்பதில்லை 



இரவு எனும் நந்தவனத்தில் இன்று மட்டும் 
ஓராயிரம் வெளிச்ச பூக்களின் மலர்ச்சி 


இரவு  எனும் கரும் பலகையில் வித விதமாய்  மத்தாப்பு கொண்டு
வர்ணம் தீட்டுகிறோம் 



------
என் சமையலறையில்

தீபாவளி சிறப்பிதழ் எனும் போது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு பங்கு தர வேண்டும் அல்லவா  எனவே இதோ எனக்கு மிகவும் பிடித்த  பலகாரமான சீப்பு முறுக்கு . இதன் செய்முறை பற்றி எனது அம்மா,மனைவி தெரிவித்ததை இங்கு தந்திருக்கிறேன் 

சீப்பு  முறுக்கு 








தேவையான பொருட்கள் 

ஒரு  ஆழாக்கு பச்சரிசி மாவு , கால் ஆழாக்கு வறுத்து அரைத்த பயித்தம்பருப்பு மாவு,வெண்ணெய் 50 கிராம், சர்க்கரை 100  கிராம்,தேங்காய்  ஒரு மூடி, ஏலக்காய் , வெள்ளை எள், உப்பு ,எண்ணெய் தேவையான  அளவு 

 ஒரு  பாத்திரத்தில் அரிசி மாவு பயித்த மாவு  இரண்டையும் கலந்து கொண்டு எள் உப்பு இவற்றுடன் வெண்ணெய் போட்டு  பிசறி வைத்து கொள்ளவும்  அடுத்து தேங்காய் பால்  ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு   சர்க்கரை ஏலக்காய் போட்டு சர்க்கரை கரையும் வரை மட்டும் மிதமான  சூட்டில் அடுப்பில் (சிம் கண்டிசன் ) வைத்து உடனே இறக்கி , பிசறி வைத்த மாவில் அதை ஊற்றி பிசைந்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ளவும்.  பின் டிசைனிங் தட்டு ஏதேனும் எடுத்து கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து   அப்பள பூவுக்கு இடுவது போல்  இட்டு  விரல்களில் சுற்றி ஒரு பிளேட்டில் (மேலே படத்தில் உள்ளது போல்) ஒரு பத்து  நிமிடம் காய  வைக்கவும். பின் வாணலியில்  எண்ணை ஊற்றி காய வைத்து மிதமான சூட்டில் போட்டு வறுத்து எடுக்கவும் இதோ சீப்பு முறுக்கு தயார் இங்கே தஞ்சாவூரில்  இது தீபாவளி ஸ்பெஷல்  (எனக்கும் இது ஸ்பெஷல் )





------


என் கேள்விக்கு எனது பதில்

இலவசங்களை பற்றி என்ன நினைக்கீறீர்கள் ?

இப்ப நம்ம கிட்டே ஒருத்தர் வந்து இலவசமா எனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்து 
கொடுங்கனு கேட்கிறார் .அதுக்கு நாம என்ன  சொல்லுவோம்.  நான் எதுக்கு உனக்கு எடுத்து கொடுக்கணும் 
நீ என்ன என் கிட்டே கொடுத்தா வச்சிருக்கே இப்படி அடுத்தவங்க காசிலே வாழணும்னு நினைக்கறியே உனக்கு வெட்கமா இல்லே இப்படி தானே  கேட்போம். இல்லே மனசிலேயாவது  நினைப்போம்  இல்லீங்களா. இதுவே  இப்படி தின்க்  பண்ணி பாருங்களேன்  இலவசமா நமக்கு யாரோ டிரஸ் தர்றதா சொல்றாங்க. அப்ப சந்தோசமா வாங்கலாம் னு நினைக்கிறோம் அப்ப    மேலே சொன்ன  வரிகள் நம்ம முன்னாடி வந்து  நின்னு கை கொட்டி  சிரிக்குமே 

------
திரையுலகம் 






பீட்சா படம் பார்த்தேன் எனக்கு அவ்வளவாக பேய் படங்கள் பிடிக்காது. இருந்தும் இப் படத்தை பற்றி வந்த பாசிடிவ் ரிப்போர்ட் என்னை ஆர்வமுடன் படம் பார்க்க வைத்தது.  படம் பார்க்க ஆரம்பித்து  இருபது நிமிடங்களுக்கு படம் சாதாரணமாக செல்வது போல்  எனக்கு  தோன்றியது   ஆனால் அதற்கு பின் படம் எடுக்கிறது பாருங்கள் வேகம். அந்த வேகம்  படத்தின் முடிவு வரை இருக்கிறது.    அந்த பங்களாவில் ஒரு மணி நேரம் ஹீரோ விஜய் சேதுபதிக்கு கிடைக்கும் பயம், திகில், சஸ்பென்ஸ் அனைத்தும் படம் பார்க்கும் நமக்கும் கிடைக்கிறது. குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே கொண்டு இந்த  த்ரில்லர் படத்தை  தந்திருக்கும்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.குறும்படங்கள்  மூலம் கவனம் ஈர்த்தவரின் முதல் முயற்சி இது. சினிமாவா,வேலையா எனும் போது சினிமா தான் என்று முடிவெடுத்து  தான் சினிமாவுக்கு வந்து விட்டதாக இயக்குனர்  விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார்.  சரியான பாதையை தேர்ந்தெடுத்த அவருக்கு ஒரு நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள். (பீட்சா இருக்கு பேஷா ) 


------


தீபாவளி சிந்தனை

தினந்தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு சூரிய உதயம்  என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு பௌர்ணமி என்று பெயர் வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது  அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம். ஆவளி என்றால்  வரிசை என்று பொருள்  ஸ்வரங்களை  வரிசைபடுத்தினால் ஸ்வராவளி ஆண்டவனை அர்ச்சிக்கும்  போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி அது போல் தீபங்களை வரிசைபடுத்தினால்  தீபாவளி.கண்ணை மறைக்கும் புற இருளை  மாற்ற தீபம் ஏற்றுவது போல் கருத்தை மறைக்கும் அக இருளை நீக்க ஞான தீபம் ஏற்ற வேண்டும் (மாலை மலர் 2010 தீபாவளி மலரில்  திரு . சுகிசிவம் அவர்கள்)  


------




 பேசும் படம்





------


ஹர்ஷவர்தன்  கார்னர் 

எங்கள் மகன்   ஹர்ஷவர்தன் தீபாவளி வாழ்த்துக்களை  உங்களுக்கு சொல்லும்  ஓவியம் 






கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் 



FINAL PUNCH

தீபாவளியை சந்தோசமாய்  கொண்டாடுவோம் நம்மை சுற்றி உள்ளவர்களும் அதே சந்தோசத்துடன்  கொண்டாட அக்கறை கொள்வோம் 



ஆர்.வி.சரவணன் 

புதன், நவம்பர் 07, 2012

இளமை எழுதும் கவிதை நீ....follows



இளமை எழுதும் கவிதை நீ....follows








இளமை எழுதும் கவிதை நீ  என்ற இந்த தொடர்கதை சென்ற தீபாவளிக்கு 
நம் குடந்தையூர் தளத்தில் நான் மிகுந்த உற்சாகத்துடன் எழுத ஆரம்பித்தேன் மேலும் இணைய நண்பர்கள் அளித்த உற்சாகம்  என்னை பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சிறப்பாய் எழுத வைத்தது. இருந்தும் கதையின் இடைவேளை  வரை வந்த பின்  கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொண்டு தொடரலாமே  என்று   இடைவேளை விட்டேன். பின் மீண்டும் நான் தொடர்ந்த  போது தொடர்கதை தொடங்கிய போது இருந்த ஆதரவு இப்போது இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது . காரணம் கருத்துக்களும்  வருபவர்கள் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கவே சரி என்று தொடர்கதையை நிறுத்தி கொண்டு விட்டேன்.

எங்கள் வீட்டில் ஏன் தொடர்கதையை நிறுத்தி விட்டீர்கள் என்று டோஸ் விட்டார்கள்.  நான் ஆரம்பத்தில் இருந்த  ஊக்கம் கம்மியானது  போல் தெரிகிறது அதனால் தான் என்று சொன்னேன்.

நண்பர் கிரி தொடர்கதைக்கு அதிக இடைவெளி விட்டுட்டீங்க போல என்று கேட்டிருந்தார்

இணைய நண்பர் நிசாமுதீன் அவ்வபோது கருத்துரையிலும் போனிலும் தொடர்கதை எப்ப என்று கேட்டு கொண்டிருந்தார்.மேலும் அவர் கூறும் போது சார் உங்கள் பதிவுகளில் மெகா பட்ஜெட் என்றால் அது இளமை எழுதும் கவிதை நீ தான். ஆகவே அதை நல்ல படியாக முடித்து விடுங்களேன் என்றார்

இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும், நண்பர் அரசன்  எப்ப சார் தொடர போறீங்க என்று சந்திக்கும் பொழுதெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்

ஒரு செயல் ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்கலாம் ஆரம்பித்த பின்
யோசிக்கலாமா என்று என் மனது கேள்வி கேட்க ஆரம்பித்தது 



சகோதரி தென்றல் சரவணன் இந்த தொடர்கதைக்கு படம் வரைந்து கொடுத்து 
தொடர்கதைக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்.



இன்னும் சிலர் (அல்லது பலர்) ஏன் இவன் தொடர்ந்து எழுதவில்லை 
என்று நினைத்து கொண்டிருந்திருக்கலாம். இது வரை தொடர்கதையை 
படித்து வந்த  அனைவரும் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்வதுடன் தொடர்கதையை தொடர்ந்து எழுத போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


படித்தவர்கள்  கதையை கொஞ்சம் புரட்டி ஞாபகம் செய்து  கொள்வதற்கும் இது வரை படிக்காதவர்கள் தொடர்கதையை படித்து கொள்ள லிங்க் இளமை எழுதும் கவிதை நீ....

இளமை எழுதும் கவிதை நீ 2

இளமை எழுதும் கவிதை நீ-3

இளமை எழுதும் கவிதை நீ-4

இளமை எழுதும் கவிதை நீ-5

இளமை எழுதும் கவிதை நீ-6

இளமை எழுதும் கவிதை நீ-7

இளமை எழுதும் கவிதை நீ-8

இளமை எழுதும் கவிதை நீ-9

இளமை எழுதும் கவிதை நீ-10

இளமை எழுதும் கவிதை நீ -11

இளமை எழுதும் கவிதை நீ-12

கதையை இது வரை படித்தவர்களுக்கு ஒரு ட்ரைலர்  இனி வரும் அத்தியாயங்களில் இருந்து  சில வரிகள் 


"சிவா நீங்க உலகத்திலே யாரும் செய்யாத தப்பை ஒன்னும் பண்ணிடலே வீட்டுக்கு அடங்காது இருந்தீங்க அதுக்கு போய் தலை குனிஞ்சு எல்லாம் நிக்கணும்னு அவசியமில்லை " என்றாள் உமா 

"சரிங்க உமா" என்று அதற்கும் தலை குனிந்தவாறே பதில் சொன்னான் சிவா 

"தலை நிமிர்ந்து நில்லுங்க" என்று உமா அதட்டியவுடன்  தலை நிமிர்ந்தான் சிவா 

"ஒன்னு தெரியுமா நீங்க மறந்தாலும் நான் மறந்துடலே" 

எதை என்று குழம்பிய முகத்துடன்  சிவா உமாவை பார்க்க 

"சவால் விட்டீங்களே என்னை விட ஒரு மார்க் கூட வாங்கி காட்டறேன்னு மறந்துடுச்சா" 

"நான் ஒரு வேஸ்ட் பீஸ்ங்க உமா போட்டிலேருந்து விலகிக்கிறேன் அதெல்லாம் மறந்துடுங்க"

இந்த வார்த்தைக்கு உமா மட்டுமில்லாது கூட இருந்த அருளும் கூட திடுக்கிட்டான் 

"என்ன நீங்க ஒரு தோல்விக்கு போய் இவ்வளவு வெக்ஸ் ஆகிட்டீங்க, சவால் னா சவால் தான் நீங்க படிக்கிறீங்க நான் உங்களை தேர்தல்லே தோற்கடிச்ச மாதிரி பதிலுக்கு நீங்க இப்ப என்னை எக்ஸாம் லே தோற்கடிகீறீங்க பார்க்கலாமா "என்று உத்வேகமாய் சொன்னாள் உமா 

அதை சிரத்தை இல்லாமல் கவனித்து கொண்டிருந்தான் சிவா 


கதையை இது வரை  படிக்காதவர்கள் பார்வைக்காக கதையை படித்த இணைய நண்பர்கள் சிலரின் கருத்துரைகள் இங்கே கொடுத்திருக்கிறேன்

சிவா இனி என்ன பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது சார் ...
வாழ்த்துக்கள் ...  அரசன் - கரைசேரா அலை 


கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேடலை தருகிறது உங்கள் எழுத்து....அருமையாய் நகர்கிறது கதை...வாழ்த்துக்கள்...தொடருங்கள் r.v.s. 

தென்றல் சரவணன் 


முதலில் சுவாரசியம் இல்லாமல் தான் படித்தேன். படிக்க படிக்க அட போட வைத்து விட்டீர்கள். 

சிவகுமாரன் 


சரவணன் நன்றாக எழுதி இருக்கீங்க.. இதை படிக்கும் போது எனக்கு 80 களில் வந்த படங்களின் நினைவு வந்து சென்றது. சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள். கிரி 



சுவ‌ராஸ்ய‌ம் கூடுது..தொட‌ருங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. க‌ட்டாய‌ம் ப‌டித்திட‌னும் முடிவை.. அகமது இர்ஷாத் 


"இளமை எழுதும் கவிதை நீ" தொடர்கதையை மீண்டும் தொடர்ந்திட கேட்டுக் கொள்கிறேன். 
நிசாமுதீன் 



இந்த தொடர்கதைக்கு வந்த கருத்துரைகளை நான் சமீபத்தில் மீண்டும் ஒரு முறை பார்வையிட்ட போது என் மேல் அக்கறை கொண்டு கதையின் மேல் ஈடுபாடு கொண்டு படித்தவர்களை நினைத்த போது கொஞ்சம் பெருமையும் நிறைய சந்தோசமும் அடைந்தேன்.


FINAL PUNCH 
இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை 19-11-2012 அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வெளியாகும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்

நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்


ஆர் .வி.சரவணன் 


திங்கள், நவம்பர் 05, 2012

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்....


வெற்றி தொட்டு விடும் தூரம் தான்....




சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா நான் உணர்ந்திருக்கிறேன்.  ஒரு நிறுவனத்தில் நான் மேலதிகாரியாக இருக்கும் போது எம்.டி யின் மனைவி நிறுவனத்தின் அந்த பிரிவுக்கு  இன்சார்ஜ். நான்
வேலைக்கு சேர்ந்த புதிதில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டேன் .ஆனா பாருங்க ஒரு பிரெஷ் காண்டிடேட் வேலைக்கு சேர்ந்தார். எனக்கு அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம் நான் விடுமுறை எடுக்கும் நாட்களில் எனக்கு மாற்றாக என்றும் சொல்லலாம் (நான் எப்போதுமே எனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை மரியாதையில்லாமல் நடத்தியதும்  கிடையாது அதே 
போல் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர்களிடம் கும்பிடு போடுவதும் பிடிக்காது). அவருக்கு நான் காஷ் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தினமும் உள்ள வேலைகள் என்று சொல்லி கொடுத்து அவரை தயார் செய்து கொண்டிருந்தேன். நான் கவனிக்காமல் விட்ட சில வேலைகள் தவறுதலாகி விடவே  செம டோஸ் எனக்கு மேடத்திடம் கிடைத்தது." இது கூட சரியாய் செய்யாம இந்த சேர் லே எதுக்கு நீங்க" என்று மேடம் கேட்டது எனக்கு ஜென்மத்திற்கும் மறக்காது. 


அதற்கு அடுத்து வந்த நாட்களில் நான் அவர் வந்தவுடன் குட் மார்னிங் சொன்னால் பதிலுக்கு அவர் மார்னிங்  என்று சொல்லாதது மட்டுமில்லாமல் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். இது என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது இதை விட கொடுமை என்னவென்றால் புதிதாக சேர்ந்த அந்த பையனையே முன்னிறுத்தி என்னை பின்னுக்கு தள்ளிய தும் நடந்தது எல்லா வேலைகளும் அந்த பையனிடமே ஒப்படைப்பார். அந்த பையன் நான் செய்ய வேண்டிய  வேலைகளை கொடுப்பார். அதாவது மேடத்திற்கு அந்த பையன் ஒரு பி.ஏ   போல் ஆகி  விட்டார். வேலையை விட்டு வெளியேறி விடலாம் என்றால் என்னை அங்கே வேலையில் சேர்த்த உறவினருக்கு   என்ன பதில் சொல்வது என்ற தயக்கம் எழுந்தது. மேலும்  இப்படி என்னை அவமானபடுதியதற்க்கு பதிலடி கொடுக்காமல் திரும்பவும் நல்ல பெயரை வாங்காமல் அங்கிருந்து செல்ல கூடாது என்ற  உறுதி எடுத்தேன்


அடுத்து வந்த நாட்களில் எனது வேலை நேரத்தை இரு மடங்காக்கி கொண்டேன் எப்படி தெரியுமா காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு வரை வேலை நேரம். நான் இரவு இரண்டு மணி வரை தொடர்ந்து அமர்ந்தேன். ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று பட்டியலிட்டேன் உற்று நோக்கினேன் அந்த பையன் எப்படி மேடத்திடம் நல்ல பெயர் வாங்கினான் என்பதை கவனித்தேன் ஒன்று புரிந்தது அது முக ராசி என்று. அது நமக்கு இல்லை, ஏனெனில் நான் செய்த தவறுகளை விட அவர் அதிகம் செய்தார் ஆனால்  இட்ஸ் ஓகே என்று அதை டேக் இட் ஈசி யாக நிர்வாகம் எடுத்து கொண்டது.இது என்னை இன்னும்  காயப்படுத்த, வெறி கொண்டு உழைத்தேன் நிறுவனத்தின் அனைத்து துறை பற்றியும் எனது விரல் நுனிக்கு கொண்டுவந்தேன்.எனக்கான நேரம் வருவதற்கு காத்திருந்தேன்.   

அந்த பையன், வீட்டில் திருமணம் என்பதால் பதினைந்து நாள் விடுமுறையில் சென்றார் 
மேடம் இப்போது என்னை நம்பியாக வேண்டிய கட்டாயம் வந்தது. அவர் என் மீது நம்பிக்கையில்லாமலே என்னிடம் வேலைகளை ஒப்படைக்க, நான் அவர் என்னிடம் எதிர்பார்த்ததுக்கும்  மேலே நல்ல படியாய் ரிப்போர்ட் தர ஆரம்பித்தேன். அவர் சொல்லாத வேலைகள் கூட செய்து அவரை ஆச்சரியப்பட வைத்தேன். அன்று குட் மார்னிங் சொன்னதற்கு கூட பதில் தர மறுத்தவர் இப்போது  (அங்கே இரவு பகலாக ஷிப்ட் முறையில் வேலை நடக்கும் ) இரவில் போன் செய்து நடைபெறும் வேலைகளை தெரிந்து கொண்டு விட்டு குட் நைட் சரவணன் என்று அவர் சொல்லும் அளவுக்கு நன் மதிப்பை பெற்றேன் இதன் மூலம் வாழ்க்கை பாடங்களில் ஒன்றை கற்று கொண்ட திருப்தி கிடைத்தது.

FINAL PUNCH

ஏற்கனவே நான் முடிவு செய்திருந்த படி நல்ல பெயர் பெற்ற திருப்தியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன் 

ஆர் வி.சரவணன்