கடவுளின் குழந்தை ?
எங்கள் குடும்ப நண்பர் தஞ்சாவூரில் இருக்கிறார். அவர் முஸ்லீம் அவருக்கு பேத்தி பிறந்தது . (மகளின் மகள்) பெயர் நபீலா நிஹார்.
இந்த பெயருக்கு அர்த்தம் என்னவென்று அந்த குழந்தையின் தாயிடம் கேட்டேன்
நபீலா நிஹார் என்றால் பனித்துளி என்று பொருள் என்று கூறினார்கள்.
பெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் குழந்தையிடமும் ஒரு வித்தியாசம் இருந்தது
அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் அதற்காக அவர்கள் சென்னை வந்து பிரபல மருத்துவமனை யில் குழந்தைக்கு சிகிச்சை மேற் கொண்டார்கள்
மருத்துவமனையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கிராம் கணக்கில் மாத்திரை பொடி செய்து ஒரு வேளைக்கு இவ்வளவு என்று தருவார்கள் அதை நான் வாங்கி வந்து கொரியர் செய்வேன்ddd ஊருக்கு .
குழந்தைக்கு ஆபரேசன் செய்ய முடிவெடுத்தார்கள்.
எனது நண்பர்கள் மூன்று பேர் ரத்த தானம் அளித்தார்கள்.
முதல் நாள் மருத்துவமனை சென்றேன் ஒன்றும் வாங்கி கொண்டு வரவில்லைஎன்றேன். குழந்தையின் தாய் நீங்க வந்திருக்கிறதே போதும் எங்களுக்கு என்றார்கள். சந்தோசமாக . குழந்தை மெத்தையில் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தது .
நான் இறைவனை வேண்டினேன் அந்த குழந்தை குணமாகவேண்டும் பூரண நலம் பெற வேண்டும் என்று
வெற்றிகரமாய் முடிந்தது ஆபரேசன் . குழந்தையின் தாய்க்கும் அவரது அம்மாவுக்கும் குடும்பத்திற்கும் மிக்க சந்தோசம்.
சில மாதங்கள் கழித்து ஒரு மழை காலத்தில் எனக்கு போன் வந்தது அவர்களிடமிருந்து
குழந்தை இறந்து விட்டது என்று
என் மனது பதை பதைத்தது
எப்படி என்றேன்
மாமியார் வீட்டுக்கு சென்றிருந்த போது மழையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த குழந்தை இறந்து விட்டது என்றும் தாய் காயங்களுடன் தப்பித்தார் என்றும் சொன்னார்கள் . கடவுள் மேல் கோபம் வந்தது. மிகுந்த வருத்தப்பட்டேன்
அப்பொழுது என் மனம் எனக்கு சொன்ன சமாதானம் என்ன தெரியுமா .
அந்த குழந்தை கடவுளின் செல்ல குழந்தை என்பதால் தான் வளர்ப்பதற்கு தன்னோடு அழைத்து கொண்டார்.
ஆம் அது கடவுளின் குழந்தை என்று எனக்கு சமாதானம் சொன்னது.
இருந்தும், நான் சமாதானமாகவில்லை
என் மனசு சொன்னது சரிதானா என்று
நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்
ஆர்.வி .சரவணன்
சரவணன், முதல அழகான குழந்தை படத்தை பார்த்து சந்தோஷமா படிக்க ஆரம்பித்தேன், ஆனா முடிக்கும் முன்னே கண் கலங்க மனது வலிக்கிறது.
பதிலளிநீக்குஇதைப்பற்றி நிறைய பேச வேன்டும் போல் உள்ளது;உங்க மெயில் ID தேடிப்பார்த்தேன். இல்லை என்பதால் இங்கேயே சில வரிகளை எழுதி விடுகிறேன்.
நீங்க கேட்டிருந்த கேள்விக்கு என்ன விடை... நானும் இதற்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க மனது சொன்னதை போலவே எல்லோரும் எனக்கு சொன்ன சமாதானமும் அதுதான்.
சந்தோசமாக நினைத்து சோகத்தில் முடித்து விட்டீர்களே சரவணன்.. சென்ற வாரம் தான் யோகி என்ற விளங்காத படத்தை பார்த்தேன் அதில் ஒரு குழந்தையை படாதபாடு படுத்தி இருப்பார்கள். அதை பார்த்தே மனது சரி இல்லாமல் இருந்தேன்.. இப்ப நீங்க வேற இதைக்கூறி இன்னும் மனது கணக்க வைத்து விட்டீர்கள் :-(
பதிலளிநீக்குகிரி,ப்ரியா நன்றி உங்கள் பின்னூடத்திற்கு
பதிலளிநீக்குஒரு வருடமாக என் மனதில் இருந்த சோகத்தை
தான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
இதைப்பற்றி நிறைய பேச வேன்டும் போல் உள்ளது;உங்க மெயில் ID தேடிப்பார்த்தேன்.
என் மெயில் முகவரி
kmrvsaravanan@hotmail.com
sad?
பதிலளிநீக்குmakdns.blogspot.com
சந்தோஷமாக ஆரம்பித்து துக்கத்தில முடிச்சுட்டீங்க
பதிலளிநீக்கு:-(((
sila vishayangalukku kaaram thedak koodaathu..
பதிலளிநீக்குappadi thedinaal..vithi ngira pathil thaan kidaikkum.
vithi - yai iraivanin theerppunnum sollikkidalaam.
maranam thukkaththirkuriyathuthaan........:(
[word verification - i yeduththidungalen......plz]
word verification எடுத்து விட்டேன்
பதிலளிநீக்குசிரமத்திற்கு அனைவரும் மன்னிக்கவும் நன்றி
Sir,
பதிலளிநீக்குVery touching. how much the mother will feel. As a mother i can feel it.