பெற்றோர்
இன்னிக்கு சாயந்தரம் அப்பா அம்மா வராங்களாம் என்று சொல்லிய படி
வந்த கணவன் ராஜா வை பார்த்த கீதா
"உங்க அப்பா அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா " என்று சீறினாள்
அவள் சீற்றத்தை பார்த்த ராஜா
"என்ன சொல்றே நீ" என்றான்
"பின்னே என்ன நீங்க மட்டும் தான் பிள்ளையா உங்க அண்ணன் ரெண்டு பேரு இருக்காங்க தம்பி ஒருத்தர் இருக்கார் ஆனா எப்ப பாரு இங்கேயே தான் வர்றாங்க"
"ஏன் இப்படி பேசறே"
"வேற எப்படி பேசறதாம் அவங்களுக்கு வடிச்சு கொட்டறது தான் என்னோட ஒரே வேலையா"
"உன் கிட்டே மனுஷன் பேச முடியுமா"
"உங்க குடும்பத்தை பற்றி பேச ஆரம்பிச்சால்
உடனே உங்க கிட்டே இருந்து வர்ற டயலாக் இதானே "
அவளது பேச்சுக்கு ராஜா பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை ஸ்டார்ட்
செய்து கிளம்பினான் அலுவலகத்திற்கு
மாலை வீட்டு வாசலில் வந்து இறங்கியவர்களை
பார்த்ததும் கீதாவுக்கு திக்கென்றது
"என்னம்மா நல்லாருக்கியா "
என்ற படி நுழைந்தவர்கள் அவளது அப்பா அம்மா
கூடவே உள் நுழைந்த கணவனை ஏறிட்டு
பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் உடனே நிமிர்ந்து
"வர்றது எங்க அப்பா அம்மா தான் னு சொல்லியிருக்கலாம் லே நீங்க" என்றாள்
"உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா னு பிரிச்சு பேசறது என்னோட வழக்கமில்லையே எனக்கு நம்ம ரெண்டு பேர் அப்பா அம்மாவும் ஒன்று தான் "
என்றான் ராஜா மிக அமைதியாய்
ஆர்.வி.சரவணன்
மன நெகிழ்வைத் தந்த முடிவுடன் நல்ல சிறுகதை!
பதிலளிநீக்குஇருப்பினும் ஏற்கெனவே பத்திரிகையில் படித்த
பதிலளிநீக்குகதைதான்.
அப்படி போடு அருவாள
பதிலளிநீக்குநல்லா இருக்கு சரவணன்.
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குநல்ல கதை!
பதிலளிநீக்குஇயல்பு சரவணன் இது..பொதுவான வீடுகளில் நடப்பவைதான்.. நல்ல கதை..
பதிலளிநீக்கு'நச்'னு இருக்கு, கதை.
பதிலளிநீக்கு"எந்த இரவு முதலிரவு?" பாடல்:
http://kalaiyanban.blogspot.com/2010/12/entha-iravu-song8.html
அசத்தல் சிறுகதை.பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகுட்டிக் கதையா இருந்தாலும் குட் கதை :)
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிசாமுதீன்
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமாரன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சைவ கொத்து பரோட்டா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயந்த்
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன் மாயம்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகமது இர்ஷாத்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலையன்பன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாதிகா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி
கதை நல்லாருக்கு..
பதிலளிநீக்குநல்ல கதை.
பதிலளிநீக்குஅட்டகாசமா இருந்தது ... தொடர்ந்து கலக்குங்க...
பதிலளிநீக்குஅருமை நண்பரே,
பதிலளிநீக்குஇதுபோன்ற சிறுகதைகள் இன்னும் எழுதுங்கள்
அருமையான முடிவுடன் உங்கள் பதிவு.
பதிலளிநீக்குஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்