புதன், அக்டோபர் 19, 2011

ஹாப்பி தீபாவளி


ஹாப்பி தீபாவளி



எங்கள் வீட்டில் கார்த்திகை திருநாள் அன்று எடுத்த படம்


நகைச்சுவை


அமைச்சர் : மன்னா இன்றைக்கு உங்களுக்கு இரண்டு ப்ரோக்ராம் இருக்கிறது

அரசர் : என்னென்ன சொல்லுங்கள்

அமைச்சர் : நீங்கள் மகாராணியோடு தீபாவளி ஷாப்பிங் செல்ல வேண்டும்


அரசர் : நான் வரவில்லை என்று சொல்லிவிடு அடுத்து என்ன

அமைச்சர் : எதிரி நாட்டு மன்னன் போரிட அழைப்பு அனுப்பியிருக்கிறான்

அரசர் : வருகிறேன் என்று ஓலை அனுப்பி விடு அதற்கு இதுவே மேல்


----------


ஓவியம்

என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த தீபாவளி வாழ்த்து


----------


கவிதை

தொலைகாட்சி தொடரில் மனைவியும்

கணினியில் கணவனும்

ஒளித்தோற்ற விளையாட்டில் குழந்தைகளும்

தனித்தனியே அடிமைப்பட்டு இருக்கையில்

அவர்களை ஓரிடத்தில் சேர்த்தது

நின்று போன

மின்சாரம்


----------


என் கேள்விக்கு எனது பதில்


நம்மிடம் வேடிக்கையாக பேசுபவர்களை எப்படி எதிர் கொள்வது ?

ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் தாஜ்கந்த் சென்ற போது ஒரு பத்திரிகை நிருபர் நீங்கள் ரொம்ப குள்ளம் என்று வேடிக்கையாக கூறினாரம்


அதற்கு அவர், இருக்கலாம் அதனால் எனக்கு நன்மை தான் நான் மற்றவர்களிடம் பேசும் போது நிமிர்ந்து இருப்பேன் அனால் மற்றவர்கள் என்னிடம் பேசும் போது தலை குனிய வேண்டும் என்றாராம் சிரித்து கொண்டே



----------

எனது க்ளிக்


திருபரங்குன்றம் கோவில் சென்றிருந்த போது எடுத்த படம்


----------



தீபாவளி போனஸ் ஒரு சுவாரஸ்யம்

தீபாவளி என்றால் புது துணிமணி , ஸ்வீட், பட்டாசு கட்டாயம் உண்டு ஆனா இதையெல்லாம் வாங்கி சந்தோசமா தீபாவளியை கொண்டாடனும்னா அதுக்கு தேவை தீபாவளி போனஸ். இதை பற்றி ஒரு சுவாரசியம் சொல்றேன் கேளுங்க

நான் முன்பு வேலை பார்த்த ஷேர் புரோக்கர் கம்பெனி நொடித்து போகவே முதலாளி எங்களை அழைத்து கம்பெனி நஷ்டமானதினால் நீங்க வேற வேலை தேடிக்குங்க நீங்க எல்லாரும் வேற வேலைக்கு போகும் வ
ரை இங்கு இருக்கலாம் அது வரைக்கும் என்னால் முடிந்த அளவு சமாளிக்கிறேன் என்றார் வேலை செய்தவர்கள் (கொஞ்சம் பேர் தான் ) வேறு கம்பெனி யில் வேலை கிடைத்து சேர்ந்து விட்டோம் .

அதற்கு பிறகு தீபாவளி மூன்று மாதத்தில் வந்தது தீபாவளிக்கு ஒரு வாரம் முன் அந்த முதலாளி போன் செய்து உங்கள் போனஸ் ரெடியாக இருக்கு வந்து வாங்கிக்குங்க என்றார் எப்படி இருக்கும் எனக்கு. சந்தோசத்துடன் சென்று வாங்கி கொண்டேன் போனஸ் எத்தனை பெர்சென்ட் தெரியுமா 20 பெர்சென்ட் தீபாவளி வரும் போதெல்லாம் அவரது நினைவு தான் எனக்கு வரும் காரணம் அவர் போனஸ் கூப்பிட்டு கொடுத்தார் என்பதல்ல.

கம்பெனி நல்ல நிலைமையில் இருந்து அவர் கொடுத்திருந்தால் அது சாதாரண விஷயம் தான். ஆனால் நஷ்டப்பட்ட நிலையிலும் அவர் நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவரை நல்ல முதலாளி என்று இன்றும் சொல்ல வைக்கிறது


---------------


உங்கள் கனிவான கவனத்திற்கு





நான் எழுதும்

இளமை எழுதும் கவிதை நீ ....

தொடர்கதை

24-10-2011 அன்று தொடங்குகிறேன் என்பதை

நான் தொடரும் நண்பர்களுக்கும்
என்னை தொடரும் நண்பர்களுக்கும்

அன்போடு தெரிவித்து கொள்கிறேன்


ஆர்.வி.சரவணன்


தொடர்கதைக்கான படத்தை வடிவமைத்த நண்பர்
கரை சேரா அலை அரசன் அவர்கள்

12 கருத்துகள்:

  1. கலக்கல் நண்பரே!
    வரவேற்கிறேன் #தொடர்கதை.

    பதிலளிநீக்கு
  2. பட்ங்களும் செய்திகளும் அருமையாக உள்ளது
    உங்கள் பழைய முதலாளியின் தற்போதைய
    நிலையைச் சொல்லவில்லையே
    நிச்சயம் நல்ல் நிலைக்கு உயர்ந்திருப்பார் என
    நினைக்கிறேன்
    தொடர் கதையை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் நிறைந்த சுவையான பதிவு ...
    தீபாவளி என்று தொடங்கி பட்டாசாய் வெடித்து
    குளிர்ச்சியாய் படங்களை வழங்கி
    இனிப்பாய் தொடர்கதை செய்தியை சொன்ன விதம் அருமை ..
    தொடங்குங்கள் நாங்கள் தொடருகிறோம் ..

    பதிலளிநீக்கு
  4. நண்பரே உங்கள் குடும்பத்திற்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நீங்கள் சொன்ன மாதிரி, போன வருடம் மின்தடைதான் எங்களை நிம்மதியாக தீபாவளி கொண்டாட செய்தது.

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வீட்டில் கார்த்திகை திருநாள் அன்று எடுத்த படம்



    அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  6. என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த தீபாவளி வாழ்த்து

    தீபாவளி வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. திருபரங்குன்றம் கோவில் சென்றிருந்த போது எடுத்த படம்
    சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பல்சுவை தொகுப்பு ,அருமை .கவிதையின் கருத்து சூப்பர். அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவுகள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  10. Super post Saravanan... Colorful Photo and your Son Art very Beautiful.. Convey to my congrats to him.. :)

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி பலகாரம் மாதிரி வித விதமான பதிவு.அனைத்தும் அருமை .தொடரும் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்!ராஜா தம்பியும் சேர்ந்தாச்சா...கலக்குங்க !

    பதிலளிநீக்கு
  12. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்