கண்மணி நீ வர காத்திருந்தேன் ....
மனம் கவர்ந்த பாடல்கள்
நான் கும்பகோணம் சென்ற போது ஒரு கடை தெருவுக்கு சென்றேன் அங்கே ஒருமியூசிக் ஷாப் இருக்கிறது
என் கல்லூரி காலங்களில் நான் மாலை வேளைகளில் அந்த மியூசிக் கடையில்வாசலில் நின்ற படி எனக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பும் போது
நின்று கேட்டுவிட்டு நகர்ந்த காலங்களை நினைத்து கொண்டேன்
பாடல் கேட்பதற்காக இப்படியெல்லாம் நின்றிருக்கிரோமே என்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது
இப்போது செல்போனில் பாடல்களை பதிவு செய்து
பாக்கெட்டில் வைத்துகொண்டு இருக்கும் இந்த காலத்தில் கூட
இசையின் மீதுள்ள ஆர்வம் குறையவில்லை
சரி நம் இசை அரசர் இளையராஜா அவர்களின்
இசையில் என் மனம்கவர்ந்த அடுத்த பாடலுக்கு வருவோம்
தென்றலே என்னை தோடு படத்தில் வரும்
கண்மணி நீ வர காத்திருந்தேன்.... பாடல்
இந்த பாடலை எங்கு எப்போது கேட்டாலும் எனக்கு அந்த மியூசிக் ஷாப் தான் நினைவுக்கு வரும்
இரவில் சாப்பிட்டு விட்டு பால்கனி யில்ஒரு ஸ்மால் வாக் சென்று கொண்டிருக்கும் போது இந்த பாடலை ஒரு முறையேனும் கேட்டு பாருங்கள் இளையராஜா, நம்மை ஒரு ரம்யமான காதலர் உலகுக்கு அழைத்து சென்று விடுவது போல் இருக்கும் மீண்டு வர மனம் மறுக்கும்
எப்படிப்பட்ட டென்ஷன் ஆக இருந்தாலும் இந்த பாடல் கேட்ட பிறகு ஒரு அமைதியான மன நிலைக்கு நம்மை கொண்டு வந்து விடுவார் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா
நான் மிக விரும்பும் ரொமாண்டிக் பாடல் இது
இதோ அந்த பாடல்
இந்த படத்தின்
நாயகன் நாயகி மோகன் ஜெயஸ்ரீ
பாடியவர்கள் ஜேசுதாஸ் உமா ரமணன்
படம் வெளியான ஆண்டு 1985
இயக்குனர் ஸ்ரீதர்
ஆர்.வி.சரவணன்
//இயக்குனர் ஸ்ரீதர்
பதிலளிநீக்குஆர்.வி.சரவணன்//
ஓ.. ரெண்டு பேரு இயக்குன படமா???!!!
(ஹி..ஹி..!)
நல்ல பாடல்.
பதிலளிநீக்குமற்றுமொரு சிறந்த பாடல்.
பதிலளிநீக்குnalla pakirvu..
பதிலளிநீக்குமற்றுமொரு சிறந்த பாடல்
பதிலளிநீக்குரொம்ப நல்லபாடல் சரவணன். எனக்கும் மிக பிடிக்கும்...
பதிலளிநீக்கு//எப்படிப்பட்ட டென்ஷன் ஆக இருந்தாலும் இந்த பாடல் கேட்ட பிறகு ஒரு அமைதியான மன நிலைக்கு நம்மை கொண்டு வந்து விடுவார் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா//
பதிலளிநீக்குஅதுதான் ராகதேவன்.....
அருமை நண்பரே எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
இன்னும் எதிர்பார்க்கிறேன் நம்ம ராகதேவனின் இசைத்தாலாட்டை.....
தொடருங்கள்........
அருமையான பகிர்வு...
பதிலளிநீக்குநல்ல பாடல்.. அதில் மயங்காதவர் எவரும் உண்டோ...
இசை அரசரின் மகுடங்களில் மிளிரும் வைரங்களில் இந்த பாடலும் ஒன்று நண்பா...
தொடரட்டும் உங்கள் சிறந்த பணி... வாழ்த்துக்கள்
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன், நேரேம் கிடைத்து விருப்பமிருந்தால் எழுதவும்.
பதிலளிநீக்குhttp://eppoodi.blogspot.com/2010/12/blog-post_15.html
நன்றி கலையன்பன்
பதிலளிநீக்குநன்றி சுசி
நன்றி ஜீவதர்ஷன்
நன்றி ஜெயந்த்
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி பாலாசி
நன்றி மாணவன்
நன்றி அரசன்