நான் என்ன சொல்றேன்னா 2
பார்த்த படம்
உயிரே உனக்காக
டிவி இல் மோகன் நதியா நடித்த உயிரே உனக்காக பார்த்தேன் ஏற்கனவே பார்த்திருந்தாலும் நதியா மற்றும் பாடல்களுக்காக வே இந்த படம் பார்த்தேன்
காதல் கலந்த இயல்பான ஒரு குடும்ப கதை (எப்பொழுது போட்டாலும் சில
காட்சிகளாவது பார்ப்பதுண்டு)
படித்த புத்தகம்
கலைமகள் தீபாவளி மலர் படித்தேன் சினிமா அரசியல் இசை எழுத்துலகம் என்று அனைத்து துறையிலும் சாதனை படைத்த பெண்களின் அணி வகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள தீபாவளி மலர் (படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு)
பதிவுலக சந்திப்பு
பதிவுலக நண்பர் திரு பாலாசி அவர்கள் சங்கமம் 2010 க்கு கலந்து கொள்ள வருமாறு அழைப்பு அனுப்பியிருக்கின்றார் .அவருக்கும் ஈரோடு வலை பதிவாளர்கள் குழுமத்திற்கும் என் நன்றி
சங்கமம் 2010 விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
இரவு பயணம்
இரவு நேர பயணத்தில் பேருந்தில் ஏறி வசதியான இருக்கையில் அமர்ந்து கொண்டு நாம் அப்பாடா என்று மூச்சு விட முடியாது காரணம் பக்கத்துக்கு இருக்கைக்கு வரும் பயணி யை நினைத்து கொஞ்சம் டென்ஷன் உண்டாகும்
ஒரு முறை இப்படி தான் ஜன்னலோர சீட்டில் நிம்மதியாய் அமர்ந்து விட்டேன் பக்கத்தில் அமர்ந்தவர் தூங்கி தூங்கி என் மேல் சாய்ந்து கொடுத்தார் பாருங்கள் டார்ச்சர்.
நான் எழுப்பி விட்டால் சாரி என்பார் ஆனால் மீண்டும் ஐந்து நிமிடத்தில் சாய தொடங்கி விடுவார் அந்த இரவில் நொந்து இடியாப்பம் ஆகி விட்டேன் (நம்மளை டார்ச்சர் பண்றதுக்குன்னே கிளம்பி வர்றாங்களோ )
அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
படம் : எங்கள் மாமா வீட்டில் இருக்கும் நெல்லிக்காய் மரம்
ஆர்.வி.சரவணன்
சுவையாயிருந்தன.
பதிலளிநீக்குமுதலில் உள்ள படத்திற்கு விளக்கம்
பதிவின் இறுதியில்.
அட, இது நல்லா இருக்கே!
நல்லா நெல்லிக்காய் சாப்பிடுங்க :-), அப்புறம் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்லா இருக்கு பதிவு. நீங்களும் தூங்கி அந்தாள் மேலே விழுந்திருக்கணும்.
பதிலளிநீக்குஅந்த நெல்லிக்காய் மரம் வாய்ல எச்சில் ஊர வைக்குதுங்க.. நல்ல பகிர்வுகள்.. வாங்க சந்திப்போம்..
பதிலளிநீக்குரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்!.
பதிலளிநீக்குமௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!
நல்லா இருக்கு பதிவு.
பதிலளிநீக்குநன்றி நிசாமுதீன்
பதிலளிநீக்குநன்றி ஜீவதர்ஷன்
நன்றி வானதி
நான் தூங்கமே இருக்கணும்னு தான் அவர் என் மேல் தூங்கி விழறார் நான் எங்கே தூங்குவது
நன்றி பாலாசி
பதிலளிநீக்குநன்றி கலையன்பன்
நன்றி குமார்