நான் என்ன சொல்றேன்னா .....
பார்த்த படம்
சென்ற வாரம் தான் மைனா படம் பார்த்தேன் சென்ற வாரம் தான் பார்க்க முடிந்தது என் மனதை நெகிழ வைத்த படம் உங்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது பிரபு சாலமன் சார் வாழ்த்துக்கள்
(படம் வந்து ஒரு மாசம் ஆகிடுச்சு இப்ப சொல்லறியே என்று நீங்கள் முறைப்பது தெரியுது
படித்த செய்தி
சமையல் எரி வாயு ரூ 100 உயருகிறது இது செய்தி
(அதற்கும் முன்னே நான் உயர்கிறேன் பார் என்று
உயர்ந்து விட்டதே வெங்காயம் விலை )
படித்த புத்தகம்
எனக்கு பிடித்த சுஜாதா அவர்கள் எழுதிய திரைக்கதை எழுதுவது
எப்படி என்ற புத்தகம் வாங்கி (காசு கொடுத்து தாங்க ) படித்தேன்
புதிதாக சினிமா இயக்க போகின்றவர்களுக்கு வழி காட்டும் நல்லதொரு நூல் இது
(அது சரி நீ எதுக்கு இப்ப படிக்கிறே அப்படிங்கறீங்களா நான் எழுதிய சில கதைகளுக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கலாம்னு தான்)
சுவையான சம்பவம்
நான் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து நீடாமங்கலம் செல்ல அம்மாபேட்டையில் பஸ் பிடித்தேன் கண்டக்டரிடம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பஸ் நிற்குமா என்று கேட்டேன் கண்டக்டர் கேட்டு இறங்கிடுங்க என்றார் நான் நீங்க தானே கண்டக்டர் யாரை கேட்டு இறங்க சொல்றீங்க டிரைவரை கேட்டு இறங்க சொல்றீங்களா என்றேன் அவர் மீண்டும் கேட்டு இறங்கிக்காங்க சார் என்றார் நான் புரியாமல் முழித்து பின் அவர் சொன்னது கேட்டு சிரித்து விட்டேன்
அவர் சொன்னது என்னவென்றால் ரயில்வே கேட் அருகே வண்டி
நிற்கும் அங்கே இறங்கிடுங்க என்பது தான்
(பஸ்சில் எல்லோரும் சிரித்து விட்டனர் )
படம் நான் எடுத்தது தான்
இடம் நாகப்பட்டினம் கடற்கரை
அவ்வப்போது உங்கள் விருப்பத்தை பொறுத்து
இது போல் செய்திகளை பகிர்ந்துக்கிறேன்
ஆர்.வி.சரவணன்
புகைப்படம் நன்றாக உள்ளது, கேட்டு இறங்குங்க :-)
பதிலளிநீக்குநல்ல அலசல்
பதிலளிநீக்குபுகைப்படமும் அருமை.. பகிர்வும் அருமை...
பதிலளிநீக்குபடமும் பகிர்வும் அருமை நல்லாருக்கு
பதிலளிநீக்குபகிர்வும் புகைப்படமும் அருமை.
பதிலளிநீக்குGood..Continue :)
பதிலளிநீக்குஅட... இது புதுசா இருக்கே!!!
பதிலளிநீக்குகலகல கலெக்ஷன்!
பதிலளிநீக்குhttp://kalaiyanban.blogspot.com/2010/12/mauname-song9.html
பேருந்து பயணம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. தினமும் அலுவலகத்துக்கு பேருந்தில் செல்பவர்களிடம் கேட்டால் தெரியும்.
பதிலளிநீக்குநன்றி ஜீவதர்ஷன்
பதிலளிநீக்குநன்றி பனித்துளி சங்கர்
நன்றி ஜெயந்த்
நன்றி தினேஷ் குமார்
நன்றி குமார்
நன்றி இர்ஷாத் தொடர்கிறேன்
பதிலளிநீக்குநன்றி நிஜாமுதீன்
நன்றி கலையன்பன்
நன்றி பாலா நீங்கள் சொல்வது சரி தான்
நான் ஊருக்கு வரும் போது பயணங்களில் எழுதுவதற்கு விஷயங்கள் நிறைய கிடைக்கின்றன