ஞாயிறு, மார்ச் 30, 2014

இளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3





இளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா
நிகழ்ச்சி தொகுப்பு-3


சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியதை இங்கே தருகிறேன் 

என் வாழ்க்கை  பாலைவனத்தில்வற்றாத ஜீவநதி யாய்  நுழைந்தவள் நீ  
இக் கவிதை போல் டிஸ்கவரி அரங்கத்தை ( இவ் விழாவை ) வற்ற விடாமல் அனைவரும் வந்திருக்கிறீர்கள் 

உனக்கும் எனக்குமுள்ள இடைவெளியை நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் என்ற கவிதை போல் அரசனுக்கும் மைக்குக்கும் உள்ள இடைவெளியை தன் வரவேற்புரையில் வார்த்தைகள் இட்டே நிரப்பியிருக்கிறார்

எனை தென்றலாய் தான் கடந்து செல்கிறாய் இருந்தும் புயல் கடந்த பூமியாகிறேன்புத்தகத்தில் நிறைய ஹைகூ இருப்பதாலோ என்னவோ பேசும் அனைவரும் ஹைகூ மாதிரி பேசி முடிக்கிறார்கள்

என் சாம்ராஜ்யத்தையே துறக்கிறேன் உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி
இப்படி நாவலுடன் கவிதைகளும் இணைந்திருப்பதால் இந்த புத்தகம் டூ இன் ஒன் போன்றது 















என் மகன் ஹர்ஷவர்தன் 9 வது படிக்கிறான். முத்துக்குமார் இவ் விழாவுக்கு வருகிறார் என்றவுடன் அவர் எழுதிய பாடல்களை தொகுத்து தந்தான்.
அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் எடுத்து கொண்ட படம்  


ஹர்ஷவர்தன் ஆர்வத்தில் உருவாக்கி கொடுத்த விளம்பர டிசைன் இதோ  





* சீனு நன்றியுரைக்க வந்த போது அவருக்கு ஒரு செல்ல பெயர் உண்டு என்று சுரேகா குறிப்பிடநா.முத்துக்குமார் மற்றும் சங்கர் சொல்ல சொல்லுங்க சரவணன் என்று சுவாரஸ்யமாய் சொன்னார்கள். சுரேகா இது எங்களுக்குள்ளேயே இருக்கட்டும் என்று சொல்லி விட்டார் 

*விழா நடைபெறும் பொது ஸ்நாக்ஸ் கொடுத்தால் அது தொந்தரவாக இருக்கும் என்பதால் வெயிட் பண்ணினார்கள் அதற்குள்  காபி வந்து விடவே அதன் கூட ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கும் ஏற்பாடானது 

 முத்துக்குமார் மற்றும் சந்திரா தங்கராஜ் இவர்களுடன் அமர்வது எவ்வளவு பெரிய விஷயம்  என் பதட்டத்தை சிரித்தவாறே மறைத்து கொண்டேன்   

எனக்கும் மேடைக்கும் ஏழாம் பொருத்தம். நான் ஏற்புரை ஆற்ற வேண்டும்.என்ற போது எழுதி எடுத்து கொண்டு வந்ததை தான் 
பேசுகிறேன் மன்னிக்கவும் என்று சொல்லி விட்டு பேசினேன் 

"இப்படி ஒரு நாள் வருமா என்று ஏங்கியதுண்டு ஆனால் வந்தே தீரும் என்று எதிர்பார்க்கவில்லை. இணைய நண்பர்களது  ஊக்கத்தால்இது சாத்தியமாகி இருக்கிறது.இருட்டில் கிடந்த என் எழுத்துக்கு கிடைத்த  வெளிச்ச கீற்று இது "
என்று என் உற்சாகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினேன்

 ஆரூர்.முனா செந்தில்,மற்றும் மெட்ராஸ் பவன் சிவகுமார்,போலி பன்னிகுட்டி ஸ்கூல் பையன்,கீதா ரங்கன், விழாவில் ஆர்வமுடன் 
கலந்து கொண்டு வாழ்த்தியது சிறப்பு.

கவியாழி கண்ணதாசன்,ராய செல்லப்பா ,கோவை மு.சரளா மேடம் பிரபு கிருஷ்ணா எனக்கு அறிமுகமில்லை இருந்தும் அவர்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்டு வாழ்த்தியது இன்னுமொரு சிறப்பு 




நம் வலையுலக  நண்பர் வலைபதிவர் திரு. கரந்தை ஜெயக்குமார், அவர்கள் 
தன் வலைப்பூவில் http://karanthaijayakumar.blogspot.com/2014/01/blog-post_26.html

இவர் கல்லூரிக் காலத்தில் எந்தப் பெண்ணையும் காதலித்ததாகத் 
தெரியவில்லை. ஆனால் காதலித்தால் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும், என்பதை  திரைப்படம் போலவே, மனதிற்குள்ளாகவே ஓட்டிப் பார்த்தே, பல வருடங்களைச் செலவிட்டிருக்கிறார். மெல்ல, மெல்ல காதலுக்கு உரு கொடுத்து, அதில் லயித்து, கண்மூடி, காதல் காட்சிகளை மனதிற்குள்ளாகவே இயக்கியும் பார்த்திருக்கிறார்.


நம் வலைபதிவ நண்பர் திரு.வெற்றிவேல் இரவின் புன்னகை என்ற 

தன் வலைப்பூவில் 

http://iravinpunnagai.blogspot.com/2014/02/blog-post_18.html


காட்சிகள் மூலம் கதையை அழகாக சலிப்பு தட்டாத வண்ணம் கதையை சாமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்.கதையை விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் செல்வது, பலவித எதிர்பாராத  திருப்பங்கள்

கதையின் சில காட்சிகள் தவறாமல் சில திரைப்படங்களின் நினைவுகளை ஏற்படுத்திவிடச் செய்கிறது. எழுத்துரு சிறியதாக இருப்பதால் தொடர்ந்து படிக்கையில் கண்ணுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.



நம் வலைபதிவ நண்பர் திரு.துளசிதரன் தன் Thillaiakathu Chronicles வலைப்பூவில் 

http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/Kudandhai-RVSaravanan-Novel-IlamaiEzhuthumKavaithaiNee.html 


காதலை ரசிப்பவர்கள், காதலுக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பவர்கள் என்றால் வாசிப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்தக் காதல் கதை “இதயக்கனி ஆகிச் சுவையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! காதல் கைகூடாதவர்களுக்கு, அவர்களின் கல்லூரிக் காதல் தருணங்களின் நினைவலைகளைக் கண்டிப்பாக எழுப்பி விம்மச் செய்யும்! கை கூடாத வருத்தம் வரலாம்! காதல் கை கூடியவர்களுக்கு அதை நினைத்து, செகண்ட் ரவுண்டு வரத் தூண்டும் அளவுக்குப் புரிதலுடன் உருவான கல்லூரிக் காதல் கதை!

புத்தகம் வெளியான பின் ரத்னவேல் சார், ஆரூர் மூனா.செந்தில் படித்து 
விட்டு முகநூலில் புத்தகம் பற்றி பகிர்ந்து  கொண்டார்கள். புத்தகம் 
பற்றிய அனைவரின் விமர்சன பார்வைக்கும் நன்றி. 


இப்படி அனைவரையும் இந்த புத்தக விழா மற்றும் புத்தகம் எப்படி
ஒருங்கிணைத்தது என்று நினைத்து பார்த்தால் ஆச்சரியம் தான் 
மேலிடுகிறது. இதில் இறைவனின் பங்கிருப்பதை உணர்கிறேன் 

புத்தக சோலை டிஸ்கவரி புக் பேலஸ்ஸில் நடைபெற்ற இந்த 
நிகழ்வில்இணைய நண்பர்கள் வந்திருந்த என் உறவினர்களின்  
ஆர்வத்தை பாராட்ட, உறவினர்கள் நண்பர்களின் உதவியை ஊக்கத்தை பாராட்ட வந்திருந்த வி.ஐ.பி க்கள் இதை ரசித்து 
குறிப்பிட , இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் என் இதயம் நிறை நன்றி 




இணைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட படம். 

நூல் கிடைக்குமிடம் 
--------------------------------
டிஸ்கவரி புக் பேலஸ்,கேகே,நகர் மேற்கு,

சென்னை-78
Ph.044-65157525
Cell no.9940446650
Mail id discoverybookpalace@gmail.com
பக்கங்கள் 192, விலை ரூ 100



FINAL PUNCH

 மும்பையில் வசிக்கும் என் தாய் மாமா அத்தை யின் வாழ்த்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். "நம் குடும்பம் பெரியது. எல்லாரும் நல்ல நிலையில் இருந்தாலும் ஆளுக்கொரு இடத்தில் இருக்கிறோம்.  நாங்க எல்லாருமே இன்னாரது குடும்பம் என்று பெருமையுடன் சொல்லி 
கொள்ளும் வகையில் நீ கண்டிப்பாக முன்னுக்கு வர வேண்டும்" 
என்று சொல்லி வாழ்த்தினார்கள். 


அன்புடன் 

ஆர் வி.சரவணன் 





12 கருத்துகள்:

  1. முதல் + இரண்டாம் பதிவர்கள் சந்திப்புக்களில் ரசித்தது போல் சுரேகா அவர்களின் தொகுப்புரை என்றும் ரசிக்கத் தக்கவை...

    முகநூல் உட்பட வலைப்பூ நண்பர்களின் வாழ்த்தையும் இணைப்பையும் குறிப்பிட்டது - "நன்றி எழுதும் கவிதை நீ"ங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மேலும் பல புத்தகங்களை நீங்கள் எழுதி வெளியிட எனது வாழ்த்துகள் சரவணன்.

    மூன்று பதிவுகளாக, நிகழ்ச்சியினை படிப்பவர்கள், விழாவிற்கு வராதவர்கள் கண் முன் கொண்டு வந்தமை நன்று.

    பதிலளிநீக்கு
  3. விழா நிகழ்ந்த போது உன்னிடம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் மீறி ஒருவித பதட்டமும் உடன் இருந்ததை என்னால் நன்றாகவே உணர முடிந்தது சரவணா. இந்த உணர்வுகளின் கலவையை அனுபவித்து மகிழ்வதற்காகவேனும் அனைத்துப் பதிவரும் புத்தகம் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். அழகாக இங்கே தொகுத்துக் கொடுத்த முறை சூப்பர். தொடர்ந்து பல வெற்றிச் சிகரங்களை நீங்கள் தொட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சரவணர்!

    பதிலளிநீக்கு
  4. அருமை நண்பரே
    புத்தக விமர்சனங்களைக் கூட தொகுத்து வழங்கியது பாராட்டத் தக்கது.
    தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி
    புதுப் புது நூல்கள் வெளிவரட்டும்

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வாழ்வின் மற்றுமொரு சிறந்த, மகிழ்வான தினத்தை மீண்டும் இங்கே நினைவு கூர்ந்தீர்கள். சிறப்பு.

    அடுத்த தொடர் எப்போ(து)?

    பதிலளிநீக்கு
  6. ஏன் கவலைப்படுகிறீர்கள் தம்பி? உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் உடனே அடுத்த நூலைத் தயார் செய்யுங்கள். இல்லையென்றால் இந்த விரைவான உலகத்தில் மக்கள் உங்களை மறந்துபோய்விடும் அபாயம் உண்டு. Get up!

    பதிலளிநீக்கு
  7. உங்களின் இடைவிடாத‌ முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் சரவணன் இந்த நூல் வெளியீடு. தொடரட்டும் உங்களின் அடுத்த முயற்சி.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  8. சரவணன் வெற்றிகரமாக புத்தகம் வெளியிட்டு ஒரு சாதனை செய்து விட்டீர்கள். அனைவராலும் இது போல செய்து விட முடியாது. நீங்கள் இதை புத்தமாக கொண்டு வருவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை.. ஆனால் இயல்பான எளிமையான எழுத்தாக இருந்தது படிக்க ரொம்ப நன்றாக இருந்தது.

    நீங்கள் கூறியது போல இதை நடத்தும் போது பதட்டமாகவே இருக்கும்.. எனகெல்லாம் மேடை என்றாலே கை காலெல்லாம் உதற ஆரம்பித்து விடும் :-) நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் :-)

    உங்களின் அடுத்த புத்தக வெளியீடு உங்கள் விருப்ப இயக்குனர் பாக்யா ஆசிரியர் பாக்யராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் போங்க படிக்க படிக்க எனக்கு ஏன்டா நிகழ்ச்சிக்கு போகாம இருந்து விட்டோம் என்றும் நினைக்கத்தோன்றுகிறது. அழகான படக்காட்சிகளுடன் விழா சூப்பரா நடந்திருக்கு வாழ்த்துக்கள். சரி அடுத்த கதை எப்ப ஆரம்பம் ?

    பதிலளிநீக்கு
  10. நன்றாகத் தொகுத்திருக்கின்றீர்கள் நண்பரே! எதுவும் விடுபட்டதாகத் தெரியவில்லை!

    //என் மகன் ஹர்ஷவர்தன் 9 வது படிக்கிறான். முத்துக்குமார் இவ் விழாவுக்கு வருகிறார் என்றவுடன் அவர் எழுதிய பாடல்களை தொகுத்து தந்தான்.// ஆஹா இப்போதே "கம்பன் வீட்டுக் கட்டுதறியும் கவிபாடும்" என்பது போல அடுத்த ஜூனியர் குடந்தையூரார் உருவாகின்றார் என்று சொல்லுங்கள்! சந்தோஷமாக இருக்கின்றது!

    மேலும் ஹர்ஷவர்த்தன் சுவை கூட்டியுள்ளாரே! அவர் வடிவமைத்த விளம்பர டிசைன் மிகவும் அருமையாக இருக்கின்றது! இந்த வயதில் இப்படி ஒரு கற்பனையா?!! தந்தை 8 அடி என்றால் மகன் 16 அடி அதில் வியப்பென்ன?!!!!! பன்முக திறமை மிக்கவராக வளர்ந்து வருகின்றார் என்பது தெரிகின்றது! அவர் மேன் மேலும் வளர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

    தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!! இன்னும் நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும் நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. சார், நான் ஊருக்கு வந்து தங்களை சந்தித்து, புத்தகத்தை வாங்கிக்கொள்கிறேன்... ஆர்வமுடன் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. சார்...
    இந்தக் கதையை சாந்தனு நடிப்பில்...
    திரு. பாக்யராஜ் இயக்கி வெளியிடலாமே?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்