சில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு
எனது எழுத்து இயக்கத்தில் உருவான ஜனனி ஆர்ட்ஸ் சின் சில நொடி சிநேகம் குறும்படம் நேற்று மதுரையில் நடைபெற்ற 3 வது வலைபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. திரு. கோபால் அவர்கள் (துளசிதளம்) வெளியிட திரு.பாலகணேஷ் அவர்கள் பெற்று கொண்டார். குறும்படம் உடனே அரங்கில்
திரையிடப்பட்டது. உடனே இணையத்திலும் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன், திரு.கோபால், திரு பாலகணேஷ்,
தமிழ்வாசி பிரகாஷ்,சீனா அய்யா மதுரை சரவணன்,கோவிந்தராஜ் ,மற்றும் திரு.கனகராஜ் அவர்கள்
மேடையில் நான் பேசிய போது
படத்தில் நடித்திருப்பவர்கள்
திரு.துளசிதரன்
திரு.அரசன்
திரு.கோவை ஆவி
&
S.பிரபாகரன்
K.குணசேகரன்
MASTERS
S.P.வாசன்
E.குமரகுரு
K.K.S.ராஜா
ஒளிப்பதிவு
ஜோன்ஸ்,கார்த்திக்
எடிட்டிங்
ஜோன்ஸ்
டப்பிங் சவுண்ட் மிக்சிங்
சாமுவேல்
V.STUDIO TECH
DIRECTOR'S CREW
துளசிதரன்
அரசன்
கோவை ஆவி
உதவி இயக்கம்
திருமதி.கீதா ரங்கன்
குறும்பட நேரம்
7 நிமிடம் 6 வினாடிகள்
தயாரிப்பு
R.V.அரவிந்த்
திருமதி .ராஜி கனகராஜ்
S.A.ஹர்ஷவர்தன்
எழுத்து- இயக்கம்
குடந்தை ஆர்.வி.சரவணன்
நாயகர்கள்
ரத்னவேல் அய்யா அவர்களுடன் அரசனும் நானும்
இதற்கு உறுதுணையாய் இருந்த என் குடும்பத்தினருக்கும், குறும்படத்தில் பங்கெடுத்து சிறப்பித்த நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி
குறும்படம் லிங்க்
https://www.youtube.com/watch?v=i7uhw4-qgZ8&feature=youtu.be
FINAL TOUCH
திரைப்பட நுணுக்கங்களை கற்று கொள்ளும் எனது முயற்சியில் உருவான
முதல் குறும்படம் இது. உங்கள் அனைவரின் ஆதரவுடன் எனது கற்று கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.
ஆர்.வி.சரவணன்
சில நொடி சிநேகத்தை
பதிலளிநீக்குசிறப்பான காட்சியாக்கியதற்குப் பாராட்டுக்கள்.!
நன்றி சகோதரி
நீக்குஆர்வம் என்றும் தோற்காது சரவணன் சார்...
பதிலளிநீக்குஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றிகள் பல...
நன்றி தனபாலன் சார்
நீக்குஉங்களுடைய “சில நொடி சிநேகம்” – குறும்படம் சில நிமிடங்களே மேடையில் இருந்த திரையில் ஓடினாலும் , அரங்கத்தினுள் இருந்த அனைவரது உள்ளங்களிலும் ஒரு ஆர்வமிக்க எதிர்பார்ப்பினை உண்டக்கிவிட்டது. சிறப்பாக இயக்கி இருந்தீர்கள். நடித்தவர்களும் இயல்பாக நடித்து இருந்தார்கள். வளரும் கலைஞரான தாங்கள் திரையுலகிலோ சின்னத் திரையிலோ பெரிய இயக்குநராக வருவதற்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்திற்கு நன்றி சார்
நீக்குஉங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
பதிலளிநீக்குமதுரை வலைப்பதிவர் விழாவில்
பதிலளிநீக்குதங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். தங்களது குறும்படம் நல்ல படிப்பினையாக உள்ளது. தெர்டர்ந்து தாங்கள் பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சார்
நீக்குஅருமையான படம்...
பதிலளிநீக்குநட்பு எனும் கருத்தை எடுத்து படமாக்கியது நட்பின் வலிமையை உணர்த்துகிறது...
படம் பார்த்த எங்களுக்கும்.....
கருத்துள்ள படம். முகநூலில் ஞாயிறு அன்றே பார்த்தேன்.
பதிலளிநீக்குமேலும் பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட எனது வாழ்த்துகள்.
நன்றி சார்
நீக்குசரவணன் சார்! வாழ்த்துக்கள்! நம் படம் பற்றிய அனுபவப் பதிவு நாளை மறு நாள் எங்கள் வலைத்தளத்தில் போடுகின்றோம்! அதனுடன் படத்தையும் சேர்க்கின்றோம். கீதா எழுதிமுடிக்கின்றார். துளசி இன்றோ நாளையோ முடித்து டிக்டேட் செய்து வெளியிடலாம் என்றிருக்கின்றோம்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குவனக்கம் குறும் படம் எதிர்பார்பை தூண்டிவிடும் வகையில் அருமையாக இருந்தது .வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்
நீக்குசரவணன் சார். கையை கொடுங்கள். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய படைப்புகளை படையுங்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கு நேரம் இருந்தால், "தலைவா" திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். படித்து பாருங்கள் - http://unmaiyanavan.blogspot.com.au/2013/04/blog-post.html
(அடுத்தடுத்த பகுதியின் லிங்க்கை அந்த பகுதியின் கீழே கொடுத்திருக்கிறேன்)
நன்றி சார் தங்கள் அனுபவத்தை படிக்கிறேன்
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். ‘சில நொடி சிநேகம் - குறும்படம் ’ பார்த்தேன்.
முதல் குறும்படம் இது என்பது போல இல்லை...கைதேர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் இயக்கியதைப் போன்று படம் அருமையாக இருக்கிறது.
‘கோவை ஆவிப்பா’ போலவே அழகான ஆனந்த் விஜயராகவன், நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். “பஸ்டாண்டு...வந்திருச்சுன்னு சொல்லாதிங்க...வரப்போகுதுன்னு சொல்லுங்க...”
அரசன் அவர்களும் ‘பிரண்ட்தான் மாமா’ நடிப்பில் இயல்பாக சிரித்து நடித்து அசத்தி இருக்கிறார்.
அய்யா துளசிதரன் அவர்கள் இன்டிகா காரை நன்றாக ஓட்டி வந்து கை அசைவுகள் எல்லாம் அருமையாகச் செய்து நன்றாகப் பேசி நடித்துள்ளார். (அவரைப் பார்த்த பொழுது எனக்கு ‘16 வயதினேலே’ வரும் டாக்டரைப் பார்ப்பது போல இருந்த்து).
‘தேட்ஸ் குட்...!’
எடிட்டிங் மற்றும் சவுண்ட் எபக்ட் ஜோன்ஸ் அவர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ‘அப்படித்தான் இருக்கனும்’ என்று அரசன் சொல்லி காருக்குள் அமர்வதுக்குள் கார் கதவைச் சாத்தும் சத்தம் கேட்கிறது.
‘மன்னார்குடி பஸ்‘ வந்து விட்டது என்று பட்டுக்கோட்டை பஸ்ஸில் கேவை ஆவி ஏறுகிறார்? பட்டுக்கோட்டை பஸ் மன்னார்குடி போகுமா என்று தெரியவில்லை!
எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் இயக்குநர்
குடந்தை ஆர்.வி. சரவணன் தம் பணியைச் செம்மையாகவும்...
நேர்த்தியாகவும் செய்து இருப்பது அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே குறும்படம் இருக்கிறது. சில நொடி சிநேகிதத்தில் மனிதாபிமானத்தை...நேயத்தை நிசப்படுத்திக் காட்டியிருப்பது சபாஷ். மிகுந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
Manavaijamestamilpandit.blogspot.in
நன்றி சார் தங்கள் வாழ்த்திற்கும் படம் பற்றிய கருத்துக்கும்
பதிலளிநீக்குகும்பகோணதில் இருந்து பட்டுகோட்டை செல்ல மன்னார்குடி வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் படத்தில் ஒரு குரல் மன்னார்குடி வழி பட்டுகோட்டை என்று சொல்லி கொண்டிருக்கும் வாய்ஸ் வரும்
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குவணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.
குறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.
ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி! ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.
எங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன்.
நொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
குறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.
தொடரட்டும் தங்களின் பணி...!
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
Manavaijamestamilpandit.blogspot.in
சார் தங்களது உழைப்பினால் உருவான 'சில நொடி சினேகம்' கடந்த ஞாயிறன்றே கண்டு வலையில் எனது கருத்தையும் தந்தேன்.
பதிலளிநீக்குசிறப்பாக, பாராட்டும் வண்ணம் இயக்கியுள்ளீர்கள்!
வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்!
'சில நொடி சிநேகம் - பல குறிப்புகள்' தொடர் இன்னும் வருமா?
'திருமண ஒத்திகை' ஒரு பகுதிதான் வந்தது. இரண்டாம் ஒத்திகை எப்போது சார்?
மீண்டும் பார்த்து ரசித்தேன்
பதிலளிநீக்குமுடிவு அற்புதக் கவிதை
சாதனைகள் உச்சம் தொட வாழ்த்துக்கள்