இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா
நிகழ்ச்சி தொகுப்பு- 2
இங்கே பாலகணேஷ் பற்றி குறிப்பிட வேண்டும். நான் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகரிடம் முன்னுரை வாங்க வேண்டும் என்று தெரிவித்த போது தயங்காமல் உடனே அழைத்து சென்று அறிமுகபடுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பணிகள் நிறைய இருந்தன. இருந்தும் நூல் வடிவமைப்பில் என்னோடு ஒத்துழைத்தார்.
தனது பணிகளுக்கு இடையில் எனக்காக நேரம் ஒதுக்கி பி.கே.பி அவர்களும் படித்து முன்னுரை எழுதி கொடுத்தது இந்த நூலுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.
அதிலிருந்து சில வரிகள்
ஒரு சிறுகதையோ கவிதையோ கட்டுரையோ முதலில் வாசகரை
படிக்க வைக்க வேண்டும். அந்த தன்மைக்கு ரீடபிளிட்டி என்று பெயர்.
அது உங்கள் எழுத்தில் இருக்கிறது.தங்களிடம் எழுத்து திறமையும்
காட்சியமைப்பு சாமர்த்தியமும் வசனங்கள் எழுதும் திறனும்
நிறையவே இருப்பதை இந்த படைப்பு அடையாளப்படுத்துகிறது.
(இந்த நூலுக்கு அவரது முன்னுரை ஒரு மகுடம் தானே)
சந்திரா தங்கராஜ் உரை
அடுத்து பேசிய திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் இந்த புத்தகம் திரைக்கதை வடிவத்தில் எழுதபட்டிருக்கிறது. உரையாடலும் அப்படியே. புதிதாக படிக்க வருபவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று சொன்னதோடு சினிமாவிற்கு வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று வாழ்த்தினார்
நவீன இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் சந்திரா தங்கராஜ்
அவர்களை யும் அவர் கணவர் வி.கே.சுந்தரையும் சங்கர் அழைத்து
சென்று அறிமுகபடுத்திய போது வி கே சுந்தர், நாங்க இருக்கோம் என்று ஊக்கமளித்தார். இருவரும் உற்சாகமுடன் வந்து கலந்து கொண்டு
விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்
சங்கர்,விகே.சுந்தர்,சந்திரா தங்கராஜ்,நா .முத்துக்குமார்
அடுத்து பேச வந்த விழாவின் சிறப்பு விருந்தினர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள்
வலை பதிவர்களும் சரவணனின் உறவினர்களும் வந்திருக்கிறீர்கள்.
நான் சொல்ல நினைத்ததை நாவலில் வரும் கவிதைகளை எல்லாம்
சுரேகா சொல்லி விட்டார்.இது கதையா திரைக்கதையா என்று குழப்பம் கொள்ள ஏதுமில்லை. சினிமாவுக்கான நாவலாக இது உருவாகி இருக்கிறது.
எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரின் முன்னுரை இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. கனவுகள் மட்டுமே ஒருவனை உயர்த்தி விடுவதில்லை. உழைப்பும்,தொடர்ந்த வாசிப்பும், தேடலும் தொடர்ந்து தக்க வைத்து கொண்டால் அந்த கனவு நனவாகும்.சரவணன் சினிமாவில் சாதிக்க நினைத்ததை அடைவார். தொடர்ந்த வாசிப்பு அவரை அடுத்த தளங்களுக்கு கொண்டு செல்லும் என்று வாழ்த்தினார்
முத்து குமார் அவர்களை நான் சங்கருடன் சென்று சந்தித்து விழாவுக்கு அழைத்த போது "கண்டிப்பாக கலந்து கொண்டு புத்தகம் வெளியிடுகிறேன்" என்று ஊக்கமளித்ததுடன் விழாவுக்கு முன்னமே வந்திருந்ததோடு மட்டுமில்லாமல் விழா முடியும் வரை பொறுமையாய் இருந்து ஆர்வத்துடன் போட்டோ எடுத்து கொள்ள வந்த அனைவருடனும் சலிக்காமல் பங்கேற்று விழாவை மெருகூட்டினார்
இந்த இடத்தில ஒரு சின்ன கட் சாட் நண்பர் சங்கர் விழாவுக்கு கலந்து கொண்டு சென்றவுடன் முகநூலில் இதை பற்றி எழுதியிருந்தார்.
அதிலிருந்து சில வரிகளை இங்கே தருகிறேன்
சரவணன் என்ற ஆரம்ப எழுத்தாளரை ஊக்குவிக்க வந்திருந்த சக வலைப்பதிவர்களும், அவரது உறவினர்களும் ஒரு இனிய ஆச்சர்யம். தொடரட்டும்!
நா முத்துக்குமார், சந்திரா இருவரும் வாழ்த்திய விதம் அத்தனை
பக்குவமாக இருந்தது. தன்னை மதிப்பவர்களின் முயற்சி எப்பேர்ப்பட்டது என்பதைப் புரிந்து வாழ்த்துவதுதான் நல்ல மனிதர்களின் தனிச்சிறப்பு.
அந்த அனுபவத்தை காணப் பெற்றேன்... எனது பங்களிப்போடு இதுவரை
நடந்த நிகழ்வுகளிலேயே எனக்கு மிகப் பிடித்தமான நிகழ்வாக அமைந்தது இந்த எளிய - இனிய புத்தக வெளியீடு!
சிலர் வெளியிட்டால் மட்டுமே ஒரு புத்தகத்திற்கு பெருமை. அந்த
வகையில் ராசியான கைகளால் வெளியிடப்பட்டு ராசியான கரங்களால் பெறபட்டிருக்கிறது. இது வெற்றி பெறும். எங்கள் குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றார் எனது சித்தப்பா திரு. எம்.பாலசுப்ரமணியன் அவர்கள். இவர் தஞ்சாவூர் உமா மகேஸ்வரனார் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.(எனது அம்மாவின் தங்கை கணவர். எனது சித்தியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்)
எனது சித்தப்பா பாலசுப்ரமண்யம் பேசுகிறார்
புலவர் அய்யா திரு.ராமானுஜம் அவர்கள் வாழ்த்துரைக்க வந்தார். அவர்
பேசும் போது இந்த புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தவன், தொடர்ந்து படித்து முடித்து விட்டு தான் எழுந்தேன். சரவணன் எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிக்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும். புலவனின் வாக்கு பொய்க்காது என்று வாழ்த்தினார்
புலவர் அய்யா உரை
விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் புலவர் அய்யா வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று புத்தகத்தை கொடுத்து விட்டு வந்தேன். திரு.கவியாழி கண்ணதாசன் மற்றும் திரு.ராய செல்லப்பா வுடன்
வந்து கலந்து கொண்டார். கவியாழியும் செல்லப்பா சாரும் வந்திருந்து
வாழ்த்தியதில் சந்தோஷம் எனக்கு.
புலவர் அய்யா
உடன்
கவியாழி கண்ணதாசன் மற்றும் ராய செல்லப்பா அடுத்து சீனு நன்றியுரைக்க வந்தார். அவர் பேசும் போது அனைவரையும் குறிப்பிட்டு நன்றியுரைத்தது சிறப்பாக இருந்தது. அப்படியும் கோவை மு .சரளா மேடம் மற்றும் ஸ்கூல் பையன் பெயர் விடுபட்டதை உணர்ந்து தன் திடங் கொண்ட போராட்டத்த்துடன் மீண்டும் மைக் பிடித்து நன்றி சொல்லி கலகலப்பாக்கினார்
நன்றியுரைத்த அன்பின் நாயகர்கள்
தொகுப்புரை தந்த சுரேகா
நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகாவின் குரலுக்கு ரசிகன் நான். முதல் முறை பதிவர் திருவிழாவில் பார்த்த போதே நாம் ஏதேனும் விழா நடத்தினால் இவரை தான் சிறப்பித்து தர அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் அதன் படி ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் அவரை அழைத்த போது வருகிறேன் என்று சொன்னதுடன் வந்திருந்து சிறப்பாக நடத்தி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் நாவலில் உள்ள கவிதைகளை சொல்லி தொகுத்தது ரசிக்கும் படி இருந்தது
மன்னிக்கவும் நண்பர்களே. நிகழ்ச்சி தொகுப்பு நாளையும் தொடர்கிறது
எனது ஏற்புரை என்ற கலாட்டா,
நூல் பற்றி பதிவுலக நண்பர்களின் விமர்சன பார்வை
மற்றும் கலந்து கொண்ட இணைய நண்பர்களின் படங்கள்
இவற்றுடன் எனது கருத்தையும் நாளைய பதிவில் சொல்லி நிறைவு செய்கிறேன்
அன்புடன்
ஆர்.வி.சரவணன்
நிச்சயம் நாளையும் எழுதுங்கள் அண்ணா... சிறப்பாக செல்கிறது...
பதிலளிநீக்குபடங்களுடன் ஒவ்வொன்றாக தொகுத்து தந்தமைக்கு நன்றி...
பதிலளிநீக்குபுலவரின் வாக்கும் பொய்க்காது + திருமதி. சந்திரா தங்கராஜ் சொன்னதையும் ஞாபகம் வைத்து கொண்டு யோசியுங்கள்... வாழ்த்துக்கள்...
பதிவைப் படிக்க படிக்க
பதிலளிநீக்குமனம் மிக்க மகிழ்ச்சி கொண்டது
(நேரில் வரமுடியாத வருத்தம்
ஒருபுறம் இருந்தாலும் )
சாதனைகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
விரிவாக ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்தமை சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குநிகழ்ச்சி பற்றிய பதிவின் மூலம் நாங்களும் விழாவில் கலந்து கொண்டோம்..
பதிலளிநீக்குவெகு சீராக வந்து கொண்டிருக்கிறது. நான் பார்த்த வரையில் பிரபலங்கள் விழாவுக்கு அழைக்ப்பட்டால் (தாமதமாக வருதலே மதிப்பு என்ற எண்ணமோ இல்லை அப்படி வந்தால்தான் கவனிக்கப்படுவோம் என்ற எண்ணமோ) லேட்டாகத்தான் வருவார்கள். கவிஞர் நா.முத்துக்குமார் நாம் சொன்ன விழா நேரத்துக்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்தது எனக்குப் பெருவியப்பு. இறுதிவரை நம்மோடு இருந்து விழாவை அழகாக்கியது பெருமகிழ்வு.
பதிலளிநீக்குஇலக்கிய ஆளுமைகள் நிறைய பேரை உங்கள் வசம் வைத்திருக்கிறீர்கள் . இதுவே சாதனைதானே! சினிமாவில் உங்களுக்கு நாட்டம் இருந்தாலும் இன்னும் 4 நாவல்களை யாவது உடனே எழுதிவிடுங்கள் . சினிமாவில் பிசி யாகிவிட்டால் நல்ல எழுத்து வராமல் போகலாம் .
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது நண்பரே
பதிலளிநீக்குமறந்து போயிருந்த விஷயங்கள் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன... நாளைய பதிவை எதிர்நோக்கி...
பதிலளிநீக்குதங்களின் முந்தின ஒரு பதிவில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளின் வேறு சில பகுதிகளையும் இங்கு தொகுத்து தந்ததற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குநான் நேரில் வந்து கலந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஓடி மறைந்தது.
அடுத்த பகுதியையும் நாளை எதிர்பார்க்கிறேன் (இறை நாட்டம்).
பதிலளிநீக்குதிரு. ராய. செல்லப்பா அவர்கள் குறிப்ப்ட்டதுபோலவே இன்னும் சில தொடர்கதைகளை அவசியம் ஆரம்பியுங்கள். அன்பு வேண்டுகோள்!
மற்றவர்களுக்கு எப்படி இருந்தாலும் புத்தக ஆசிரியரான உங்களுக்கு இது நினைக்க நினைக்க இன்பம் தரும் நிகழ்வு இதனை எத்தனை தாமதமாக எழுதினாலும் இப்படித்தான் நினைத்து ரசித்து எழுதுவீர்கள் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது உங்கள் வர்ணனை.. சிறப்புங்க வாழ்த்துக்கள் தொடருங்கள்.
பதிலளிநீக்கு"கனவுகள் மட்டுமே ஒருவனை உயர்த்தி விடுவதில்லை. உழைப்பும்,தொடர்ந்த வாசிப்பும், தேடலும் தொடர்ந்து தக்க வைத்து கொண்டால் அந்த கனவு நனவாகும்.சரவணன் சினிமாவில் சாதிக்க நினைத்ததை அடைவார். ".... சிறப்பான விழா...அருமை சார்!
பதிலளிநீக்கு