சனி, செப்டம்பர் 01, 2012

சில நொடி சிநேகம்


சில நொடி சிநேகம்

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்த சரண் கூட்டத்தின் இடையே மிதந்து சென்று, அரியலூர் பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ பிடித்தான்.நான்கைந்து பேருடன் ஆட்டோவில் அமர்ந்து செல்ல கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்து கொண்டான்

ஆட்டோ கிளம்பியவுடன் அவன் அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தவர் "நான் தஞ்சாவூர்
போகணும் பஸ் கிடைக்குமா" என்று கேட்டார்

"பஸ் நிறைய இருக்குங்க" என்று அவருக்கு பதில் சொன்னான்

"தஞ்சாவூர் போய் நைட் சாப்பிட ஹோட்டல் திறந்திருக்குமா" என்ற அடுத்த கேள்வி
அவரிடமிருந்து வெளிப்பட்டது

"திறந்திருக்கும் "

ஆட்டோ பேருந்து நிலையம் அருகில் வந்து நிற்க அதிலிருந்து சரண் இறங்கினான் கூடவே
அவரும் இறங்கினார்

"தஞ்சாவூர் செல்லும் பஸ் எங்கே நிற்கும்" என்று சரனை கேட்டார்

"சரண் நானும் தஞ்சாவூர் தான் போறேன் வாங்க" என்று அவரை அழைத்து கொண்டு பேருந்து
நிற்கும் இடத்தை நோக்கி விரைந்தான்

அப்போது அங்கே புறப்பட தயாராய் இருந்த இரண்டு பேருந்துகளுமே கூட்டத்தால் நிரம்பி
வழியவே"சரண் இதுலே ஏற முடியாது அடுத்த பஸ் உடனே வரும் நாம அதுலே போகலாம்" என்றான்.

அவரும் சரி என்று சொல்லி விட்டு அடுத்த பேருந்துக்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தவர்,
"நாம வாசல் பக்கம் போயிடலாம் பஸ் உள்ளே வரப்பவே ஏறி இடம் பிடிச்சிடலாம்" என்றார்
அவர் சொல்வது சரி எனப்படவே சரண் "சரி வாங்க" என்று அவருடன் சென்றான்.

அங்கு போய் காத்திருக்கையில் அவர் தான் சென்னையிலிருந்து திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார். சரண் நானும் தான் என்று சொன்னான்

அவர் "ஒரு டீ சாப்பிடலாம் வரீங்களா" என்று கேட்க, சரணுக்கு டீ சாப்பிட வேண்டும் போலிருந்தாலும் நம்மால் ஏன் அவருக்கு வீண் செலவு என்பதால் "வேண்டாம் நீங்க
போயிட்டு வாங்க" என்றான்.

அவர் சென்றவுடன் தான் சரண் கவனித்தான். தஞ்சாவூர் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில
புதிதாய் ஒரு பஸ் நிற்பது தெரிய வர அதன் அருகே சென்று கண்டக்டரிடம் விசாரித்தான்
"ஆமாங்க கூட்டம் நிறைய இருப்பதால் திருச்சி போக வேண்டிய பஸ் தஞ்சாவூர் போகுது
ஏறிக்கங்க "என்றார்

அவன் உடனே தாவி ஏறி முன் இருக்கையில் இடம் பிடித்து அமர்ந்து, தன் கூட வந்தவருக்கும் சேர்த்து இடம் போட்டு வைத்து கொண்டு ஜன்னல் வழியே டீ சாப்பிட சென்றவர் வருகிறாரா
என்று அங்குமிங்கும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

டீ சாப்பிட்டு விட்டு வந்த அவர் தன் கூட வந்தவனை காணுமே என்று தேடியவர் கண்ணில்,
ஒரு தஞ்சாவூர் செல்லும் பஸ் உள்ளே வருவது தெரியவே, அவர் உடனே விரைந்து சென்று பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கும் சேர்த்து இடம் பிடித்து வைத்து கொண்டு அவனுக்காக காத்திருந்தார்.

ஆர்.வி. சரவணன்

இந்த கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய சிறுகதை (உண்மை கதையும் கூட)

8 கருத்துகள்:

  1. உண்மை கதை : இடம் பிடித்து வைத்து கொண்டு காத்திருந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அட நம்ம ஊர்ல வந்துதான் பஸ் ஏறிருக்காங்களா!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான உண்மைக் கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன்
    நன்றி உழவன் ராஜா
    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  5. அட சொள்ளவைக்கிறது இந்த கதை.. பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  6. மறுபடியும் படிக்கத் தந்ததில் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சிலநொடி சினேகமும் நட்புக்கு உதவும் ! நல்ல கருத்துள்ள கதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    பதிலளிநீக்கு
  8. உங்க பேரை சுருக்கி வைத்து கொண்டால் எங்களுக்கு தெரியாதா சார் ...
    அனுபம் புதுமை .. நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்