வியாழன், டிசம்பர் 16, 2010

கடி யை கொஞ்சம் படி


கடி யை கொஞ்சம் படி

ரொம்ப நாளாச்சு ஒரு ஜாலியான இடுகை எழுதி என்ன எழுதலாம் என்று உட்கார்ந்து யோசிப்பாங்களோ என்ற டைப்பில் யோசித்த போது

நான் கல்லூரி காலத்தில் எழுதி வைத்த ஒரு கதையில் ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க என்று வருத்தப்படும் அம்மாவிடம் கதாநாயகன் எதுகை மோனையில் அதாங்க டி .ராஜேந்தர் பாணியில் கலகலப்பாக பேசுவதாக எழுதியிருந்தேன்

அதை இப்போது படித்த போது சிரிப்பு வந்துருச்சு சிரிப்பு

இதோ இடுகையாகவும் வந்துருச்சு

அம்மா

ஊரார் சொல்லும் பழி

நமக்கு காட்டாது ஒரு வழி

அவங்க வெட்டுவாங்க நமக்கு அவதுறு ங்கிற குழி

அதுக்காக உன் மனசிலே ஏன் கிலி

அது என்றும் தீராத வலி

அவங்க சொல்றதை உன் மனசிலேருந்து அழி

அவங்க பேச்சுக்கு நாம் ஏன் ஆகணும் பலி

அவங்களுக்கு காலம் தரும் கூலி

நம் குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோம் ஒரு வழி

ஆகவே மன அமைதியை குடும்பத்திற்கு அளி

இதை படிச்சவுடன் உங்களுக்கு வருவது சிரிப்பா இல்லை வெறுப்பா என்பதை எதுகை மோனை யில் கருத்துரையிடுங்கள் பார்ப்போம்

சிறந்த கருத்துரைக்கு நான் தரும் பரிசு

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் அல்ல

வேறென்ன இதே போல் இன்னொரு இடுகை தான் ஹா ஹா ஹா ஹா

ஆர்.வி.சரவணன்

3 கருத்துகள்:

  1. தம்பி டி.ஆர் நீ போயி முதல்ல தாடியை வழி :-)

    பதிலளிநீக்கு
  2. ட்டீ.ஆரே பரவாயில்லை.
    ஏன்ன்ன்ன் நல்லாத்தானே
    போய்க்கிட்டிருந்துச்சி????
    (சும்மா....)

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜீவதர்ஷன்

    சும்மா வித்தியாசமா இருக்கட்டுமே னு தான் நன்றி நிஜாமுதீன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்