நகைச்சுவை நானூறு
பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார்
"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தான் வர போகுது "
" அப்ப பாட்டிலுக்கு தலைவலி தைலம் தடவி விடவா "
இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு புரிகிறது. என் சிறு வயதில் வார இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளை எல்லாம் படித்த பாதிப்பில் எனக்கு தோன்றிய இந்த ஜோக்கை போஸ்ட் கார்டில் எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருக்கிறேன்.சிரிப்பு வராத இந்த ஜோக்கை எழுதி அனுப்பியதை இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு
சிரிப்பு வருகிறது. (உங்களுக்கும் அது தொற்றியிருக்கலாம்)
எதற்கு சொல்கிறேன் என்றால் வாசகர்களை சுவாரஸ்யமாக படிக்க வைப்பதுடன் ஜோக் எழுத தூண்டும் எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கும் வண்ணம் நகைச்சுவை துணுக்குகளை எழுதி குவிக்கும் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர் தான் நண்பர் கீழை அ.கதிர்வேல் அவர்கள்.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களம் நிகழ்வில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களுடன் கீழை அ.கதிர்வேல்
எப்படி எனக்கு நண்பராக அறிமுகமானார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் வலையுலக நண்பர் திரு. நிஜாமுதீன் அவர்கள் தான் கீழை அ.கதிர்வேல் அவர்களை பற்றி சொல்லி எனக்கு அறிமுகபடுத்தினார். வார இதழ்களில் அவரது பெயரையும் நகைச்சுவைகளையும் ஏற்கனவே நிறைய படித்திருக்கிறேன் என்பதால் அவருடன் முக நூல் நண்பராக உடனே இணைந்து கொண்டேன்.

நண்பர் கீழை அ .கதிர்வேல் வேலைக்காக சிங்கப்பூரில் இருந்தாலும் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நான் விரும்பி படிப்பதுண்டு. அதிலிருந்து ஒன்று இங்கே
அந்தக்காலத்தில் இந்திய கிரிக்கெட் டீம் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடு டூர் போகும் அதே மாதிரி ஏதாவது ஒரு வெள் நாட்டு அணி ஆண்டுக்கு ஒரு முறை இந்திய சுற்றுப்பயணம் வரும். அப்படி வரும் போது கிரிக்கெட் சீசன் கிரிக்கெட் ஜோக் எழுத ஆரம்பித்து விடுவோம் அப்படி ஒருமுறை நான் எழுதியதுதான்
நட்சத்திர கிரிக்கெட் மாதிரி நம்மூர் அரசியல் வாதிகள் கிரிக்கெட் ஆடினால்... என்ற கற்பனை இதில் எனது ஆறு ஜோக்குகளை தேர்ந்தெடுத்து கல்கி இதழின் நடுப்பக்கத்தில் பிரபல ஓவியர் உமாபதியின் படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி மேட்டருக்கு பத்திரிக்கையிலேயே பணிபுரியும் லே அவுட் ஆர்டிஸ்ட்டுக்களுக்குதான் கொடுப்பார்கள். எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு ஒரு பொக்கிஷம்! அது இங்கே.....
அவ்வபோது முக நூல் சாட்டிங்கில் பேசினாலும் போன் செய்தும் பேசுவார். சிங்கப்பூரில் இருந்த படி, இங்கே புத்தகம் அச்சிட்டு
வெளியிடுவது சாதாரண ஒன்று அல்ல.அவரது குடும்பத்தினரும்
அவரது எழுத்தார்வத்திற்கு உதவி ஊக்கமளித்து வருவது பாராட்டப்பட
வேண்டிய ஒன்று.

சாவி இதழில் வெளி வந்த அவரது பேட்டி
அவர் பத்திரிகைகளில் வெளிவந்த தனது நகைச்சுவை துணுக்குகளை
எல்லாம் சேர்த்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நகைச்சுவை தொகுப்பு
நகைச்சுவை நானூறு.
எல்லாம் சேர்த்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நகைச்சுவை தொகுப்பு
நகைச்சுவை நானூறு.
திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்
காசு கேட்காமல் நல்ல மன நிலையை தருபவர்கள் மருத்துவர்கள்
அல்ல. நல்ல நகைச்சுவையாளர்களே என்று தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்
அல்ல. நல்ல நகைச்சுவையாளர்களே என்று தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்
சக்தி விகடன் ஆசிரியர் ரவி பிரகாஷ் ஒரு நீண்ட நாவல் எழுதுவதை விடவும் கடினம் ஒரு சிறுகதை. அதையும் விட கடினம் ஒரு ஜோக் எழுதுவது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.இந்த புத்தகம்
ஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம் என்று உரைக்கின்றார்
ஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம் என்று உரைக்கின்றார்
புகழ் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையளர்கள், பத்திரிகைகள் உண்டு.புகழ் மிக்க வாசகர்கள் உண்டா எனில் உண்டு. அந்த வரிசையில் குறிப்பிட தகுந்தவர் கீழை அ கதிர்வேல் என்று தன் அணிந்துரையில்
பாராட்டியிருக்கிறார் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்
எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி வாழ்த்துடன் சிரிப்பரங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் அட்டை ஒரு நகைச்சுவை துணுக்கை கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது. மற்ற 399 ஜோக்ஸ் உள்ளே என்ற அறிவிப்புடன். படிக்க ஆரம்பிக்கும் நம்மை அட என்று ஆச்சரியப்படவும், புன்னகைக்கவும் வைக்கின்றன. (ஒரு ஜோக் இரண்டாம் முறையும் இடம் பெற்றிருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்)
நான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்.
அரசியல் பற்றிய ஒரு ஜோக் எண் (44)
மாமியார் மருமகள் பற்றிய ஒரு ஜோக் (85)
பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோரின் நிலையை
சொல்லும் ஜோக் (160)
சொல்லும் ஜோக் (160)
டாக்டர் நர்ஸ் பற்றிய ஜோக் (185) அதே டாக்டர் பற்றிய இன்னொரு
ஜோக் (355) நிஜத்தை சொல்கிறது.
ஜோக் (355) நிஜத்தை சொல்கிறது.
வார்த்தையால் விளையாடியிருக்கும் ஜோக் (156)
கணவன் மனைவி ஜோக் (105,272)
உதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக
"எதுக்காக உங்க ஆபீஸ் கோபுவை கோப்பு கோப்பு னு கூப்பிடறீங்க"
"இருக்கிற இடத்திலிருந்து ஒரு இன்ச் நகர மாட்டானே"
-----
"அதோ போறவர் சமய சொற்பொழிவாளர்"
"பார்த்தா அப்படி தெரியலையே"
"அட சமயத்துக்கு தக்க படி பேசுவார்"
------
------
தயாரிப்பளர் : படத்தில் கோர்ட் சீன இருக்கா ?
கதாசிரியர் : இல்லே ஒரு வேலை படம் வெளி வந்ததும் வரலாம்
------
"உனக்கு பிடிச்சதுன்னு அமர்த்தின வேலைக்காரியை ஏன் விலக்கிட்டெ"
"அவளை என் புருஷனுக்கும் பிடிச்சு போனதால் தான்"
------
அவ்வபோது எனக்கும் ஜோக் எழுதி பார்க்கும் மூட் வரும் அதிலிருந்து
ஒன்று.
ஒன்று.
"அலுவலகத்தில் நாங்க எல்லாம் தூங்கிட்டு
இருக்கிறப்ப முதலாளி வந்துட்டார்"
"அப்புறம் என்னாச்சு"
"எங்களை எல்லாம் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு
அவர் தூங்கிட்டார்"
இப்படி கஷ்டப்பட்டு (மற்றவரையும் கஷ்டபடுத்தி) எழுதுவதை விட நகைச்சுவை எழுத்தாள நண்பர்களின் நகைச்சுவைகளை ரசித்து விடலாம் என்று தோன்றும்.
நம்மை ரசிக்க வைப்பதில் முன்னிலை வகிக்கும் எழுத்தாளர் கீழை அ.கதிர்வேல் அவர்களின் மென் மேலும் சுவை கூடிய நகைச்சுவை துணுக்குகள் அவரது அடுத்த புத்தக வெளியீட்டில் (பக்கங்களில்) அணி திரளட்டும்
அவரது மின்னஞ்சல் முகவரி
kathir.ananthi@gmail.com
75 ரூபாய் விலையுள்ள இந்த நூல் கிடைக்குமிடம்
டிஸ்கவரி புக் பேலஸ்
கே.கே.நகர்,சென்னை
FINAL TOUCH
தாரளமாக நகைச்சு வைக்கலாம் இந்த நானூறு
தாரளமாக நகைச்சு வைக்கலாம் இந்த நானூறு
ஆர்.வி.சரவணன்
நல்லதொரு எழுத்தாளரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...
பதிலளிநீக்குஅவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி குமார்
நீக்குநன்றி தம்பி தங்கள் மதிப்புரைக்கு ! இன்னும் எழுதுவோம் !
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குசென்னை வரும்போது வாங்கிடுவோம்..!
பதிலளிநீக்குஓகே கோவை ஆவி
நீக்குஉங்கள் பதிவு ,உங்களின் அணிந்துரையில் என் ஜோக்குகளையும் நூலாய் வெளியிட்டால் என்ன எண்ணத்தை உருவாக்கி விட்டது !
பதிலளிநீக்குகீழையாரின் நகைச் சுவையை நானும் விரும்பி படிப்பதுண்டு !
தங்களின் புத்தக எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சார்.
நீக்குமிக்க நன்றி
நீக்குகீழை அ. கதிர்வேல்
எனது பள்ளிப் பருவத்திலிருந்தே திரு. கீழை. அ. கதிர்வேல் அவர்களுடன் பேனா நண்பர் தொடர்பில் இருந்து வந்தேன்.
பதிலளிநீக்குஅதை முகநூலில் புதுப்பித்துக் கொண்டேன். அவரது
சுவாரஸ்யமான ஸ்டேட்டஸ்களை தங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
(1) .....
கல்கியின் இரு முழு பக்க ஜோக் பகுதியையும் சாவியில் வந்த
பதிலளிநீக்குஅவர்தம் பேட்டியையும் படத்துடன் இங்கு வெளியிட்டது மிக்க
சிறப்புக்குரியதாகும்.
(2).....
//நான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்//
பதிலளிநீக்குஎங்கே ...
10-ஆம் இடம்
9-ஆம் இடம்
8-ஆம் இடம்
என்றெல்லாம் 'வரிசை'ப் படுத்தக் காணோமே?
(சும்மா ஜோக்குக்கு...)
தங்களுக்குப் பிடித்த ஜோக்குகள் சிலவற்றை பட்டியலிட்டதற்கு
நன்றி! மற்றவர்களை, இந்த நூலை வாங்க வைக்கும் இது!
(3).....
//உதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக//
பதிலளிநீக்குகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கீழை. அ. கதிர்வேல் அவர்கள்
இந்த முழு நூலையும் pdf வடிவில் எனக்கு அனுப்பித் தந்தார்.
"நூல் அறிமுகம் செய்ய வேண்டும்; அதனால், நூலின் சில
பக்கங்களை எனது பதிவில் வெளியிட்டுக் கொள்ளவா?" என்று
நான் அவரிடம் கேட்டபோது, " முழுவதையுமே நீங்கள்
வெளியிட்டுக் கொள்ளலாம்... உங்களுக்கு நான்
மறுக்கவே மாட்டேன் தம்பி! " என்று அன்போடு
இசைவு தந்தார்கள். அந்தப் பதிவு எனது,
'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது.
(4).....
எனது, 'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது
பதிலளிநீக்குஅந்தப் பதிவு இணைப்பு இதோ:
கீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்! + குடந்தையூரார் புதினம்!
சீரிய எழுத்தாளர் ஒருவரை நன்கு அறிமுகம் செய்துள்ளீர்கள்
பதிலளிநீக்குஅவசியம் புத்தகத்தை வாங்கி ரசிக்கின்றேன்
நன்றி நண்பரே
நல்ல ஒரு நகைச்சுவை எழுத்தாளரை அறிந்து கொண்டோம்! நன்றி சரவணன்......போற போக்குல நீங்க சொல்லியிருக்கும் ஜோக்கும் அருமை!
பதிலளிநீக்குநன்றி சார். நகைச்சுவை எழுத்தாளர்களின் நகைச்சுவை தந்த பாதிப்பில் நானும் எழுதி பார்க்க முயற்சித்ததை தான் குறிப்பிட்டேன்
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா திரு. சரவணன் அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். நகைச்சுவை எழுத்தாளர் கிடைத்துள்ளார்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in