புதன், அக்டோபர் 27, 2010

பூபாளம் இசைக்கும் ....














பூபாளம் இசைக்கும் ....

மனம் கவர்ந்த பாடல்கள் 6

என் அலுவலகத்தில் எவ்வளவு வேலை குவிந்திருந்தாலும் சரி ஆரம்பத்தில் ஒரு சலிப்பை தோற்றுவித்தாலும் நான் கேட்கும் இசை களிப்பை கொடுக்க ஆரம்பித்து விடும்

செல் ஆன் செய்து பாடல்களை ஓட விட்டு நான் பாட்டுக்கு வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்அந்த வேலைகளை சிரமபடாமல் முடிப்பதற்கு உதவுவது இசை தான்

சரி விசயத்திற்கு வருவோம் பாக்யராஜ் நடித்து இயக்கிய தூறல் நின்னு போச்சு படத்தில் இடம் பெற்ற பூபாளம் இசைக்கும் என்ற பாடல் எப்போதுமே எனக்கு பிடித்த பாடல்

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது இளையராஜா அவர்களின் மனதை வருடும் இசையுடன் தொடங்கி தந்தனதானா என்று கோரஸ் ஒலிக்க ஜேசுதாஸ் உமாரமணன் குரல்களில் தொடரும் இசை ஜாலத்தில் பல்லவி வரும்போது மட்டும் பின்னணியில் வரும் இசை எப்போதுமே எனை ஈர்க்கும்
எனக்காக ஒருமுறை அந்த ஈர்ப்பை கேளுங்கள்

படம் தூறல் நின்னு போச்சு

நாயகன் நாயகி பாக்யராஜ் சுலக்க்ஷனா

பாடலின் வீடியோ லிங்க்
http://www.google.co.in/url?sa=t&source=web&cd=3&ved=0CB0QtwIwAg&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DJ8tN8HfyL0U&ei=JjXITI_yIIzQccDz6LEF&usg=AFQjCNG01l-ze2MruDEkfwD4Jg3SSPyrdA

படம் வெளியான வருடம் 1982

நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. எனக்கும் பிடித்த பாடல், இந்த சுலக்சனாவா இன்று விஜய் டிவியில் மகாரணியில் நடிப்பது என நினைத்தால் ஆச்சரியம்தான் :-)

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே,
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

    பதிலளிநீக்கு
  3. பாடலின் யூடுப் லிங்கை உங்கள் தளத்திலேயே இனைத்திருந்தால் பார்ப்பதற்கு வசதியாய் இருந்துருக்கும்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்
    [மேஸ்ட்ரோஸ் ஃபேன்ஸ் கிளப்]

    பதிலளிநீக்கு
  4. பழையவை என்றுமே இனியவை தான்.. நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
  5. ராஜா ராஜாதான்....

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஜீவதர்ஷன்
    நன்றி சைவ கொத்து பரோட்டா
    நன்றி மாணவன் தங்கள் வருகைக்கு நன்றி
    நன்றி ஜெயந்த்
    நன்றி குமார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்