மொய் எழுத வாங்க
தலைப்பை பார்த்ததும் பாக்கெட்டை பதம் பார்த்திருமோ னு நினைக்காமே தைரியமா மேல படிக்கலாம் நீங்க
அதாவது எங்களுக்கு சொந்தகாரங்க ரொம்ப ஜாஸ்தி எங்க வீட்டிலே கல்யாணம்னு வந்தா நான் ரெண்டு விசயத்திலே எஸ்கேப் ஆகணும்னு நினைப்பேன் ஒண்ணு சமையல் ஸ்டோர் ரூம் incharge வேலை, இன்னொன்னு மொய் எழுதுவது
ஆனா பாருங்க சமையல் ஸ்டோர் ரூம் incharge வேலையிலிருந்து
நான் தப்பிச்சாலும் மொய் எழுதற விஷயத்துலே தப்பிக்க முடியாது போய் விடும்
ஏன்னா நான் அலுவலகத்தில் காசாளராக இருந்ததாலும் அவ்வபோது இருப்பதாலும் காஷ் கவுன்ட் ஆக இருக்கட்டும் கணக்கு விவரங்களை முடிப்பதாக இருக்கட்டும் விரைவாக முடித்து கொடுத்து விடுவேன் காசு விசயத்தில் நேர்மையாக நாணயமாக இருப்பேன் என்பதால் (நீயே ஒன்னை பத்தி சொல்லிக்கிரியானு கேட்காதீங்க ) என்னிடமே ஒப்படைப்பார்கள்.
அதிலே என்ன கஷ்டம்னா அங்கே இங்கே நகர முடியாது வந்திருக்கும் உறவினர்களிடம் சந்தோசமாய் பேச முடியாது குடும்பத்துடன்
அமர்ந்து சாப்பிட முடியாது மொய் கொண்டு வந்து கொடுப்பவர்களும் நான் கரெக்டா எழுதேறேனா இனிசியல் முதல் கொண்டு சரியா எழுதேறேனா என்று பார்த்து விட்டு தான் நகர்வார்கள். மணமக்கள் கூடவே நான் இருக்க வேண்டும் மாலை வரை மொய் பணத்தை என்னோடு வைத்து கொண்டே திரிய வேண்டும்.
எல்லா வேலையும் முடிந்து கணக்கு வழக்குகளை விவரமாக எழுதி கல்யாணம் நடத்துபவரிடம் கொண்டு போய் கரெக்டா இருக்கானு செக் பண்ணிக்குங்க
என்று ஒப்படைத்தால் அவர் மொய் பையை வாங்கி பீரோவில் அசால்டாக போட்டுவிட்டு அதெல்லாம் எதுக்கு நீ தானே கணக்கு எழுதியிருக்கே எல்லாம் கரெக்டா தான் இருக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் நமக்கு அவர்கள் கணக்கு சரிபார்த்து ஓகே சொன்னால் தான் நிம்மதி யாக இருக்கும் ஆனால் நான் என்ன சொல்லியும் கேட்கவும் மாட்டார்கள்
இப்படி இதுலே இவ்வளவு கஷ்டம் இருக்கு
போன மாசம் உறவினர் வீட்டு function போயிருந்தேன் மொய் எழுத வச்சிட்டாங்க அப்ப உறவினர் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் என்னிடம் சொன்னார் .நீங்க தான் மொய் எழுத போறீங்கனு ஒரு மாசத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும் அவர்கள் என்னிடம் சொன்னங்க அவரை தான் எழுத வைக்க போறோம் அவர் எழுதினால் கரெக்டா இருக்கும் என்று சொன்னதாகவும் சொன்னார் .
ஒரு பக்கம் என் மேல் இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சந்தோசமாக இருந்தாலும் ஆகா போறபோக்கிலே மண்டபம் சமையல்காரர் புக் பண்ணும் போதே என்னையும் சேர்த்து புக் பண்ணிடுவாங்க போலிருக்கே என்று பீல் பண்ணேன்.
என் நண்பர்களிடம் இதையெல்லாம் சொல்லும் போது அவர்கள் பேசாமே இவ்விடம் மொய் நேர்மையான முறையில் எழுதி கொடுக்கப்படும்னு போர்டு வச்சிரு என்று கூலாக சொல்கிறார்கள்
என் தம்பி ,தங்கை, மச்சினி மாமா பொண்ணு, மாமா பையன் என்று சகல பேருக்கும் மொய் எழுதினது நான் தான்
இந்த இடுகை மூலமா என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் என் உறவினர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்
இதிலே முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா என் பையன், பொண்ணுக்கு காதணி விழா நடந்துச்சு. அதுக்கு யார் மொய் எழுதினது தெரியுமா
அதுக்கும் நான் தாங்க எழுதினேன்
என்ன கொடுமை சரவணன் இது
ஆர்.வி.சரவணன்
நம்ம கதையும் இதே தான். இப்ப ஊருக்குப் போனாலும் தொடரத்தான் செய்கிறது அன்புத் தொல்லை.
பதிலளிநீக்குnnanum moi elluthiteanungaaaaaaaaaaa
பதிலளிநீக்கு//மொய் எழுத வாங்க//
பதிலளிநீக்குசரவணன்!
எங்க உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.
நல்லவேளை உங்க இடுகை படித்தேன். சரவணன்,
நிங்க "மொய் எழுத வாங்க"!
(இந்த அழைப்பு வரிசையில் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்
எத்தனையாவது இடம்? )
நல்ல விஷயம் தானே. மற்றவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக இருப்பது எவ்வளவு கஷ்டம். உங்கள் பணியை தொடருங்கோ.
பதிலளிநீக்கு//இந்த இடுகை மூலமா என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் என் உறவினர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்//
பதிலளிநீக்குஇது தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்குறதா! இப்படி அநியாயமா சிக்கிட்டாரே சரவணன்!
//....ஆகா போறபோக்கிலே மண்டபம் சமையல்காரர் புக் பண்ணும் போதே என்னையும் சேர்த்து புக் பண்ணிடுவாங்க போலிருக்கே என்று பீல் பண்ணேன்..//
பதிலளிநீக்கு-ஹாஹாஹாஹா... நல்ல வரிகள். சொந்த அனுபவத்தை சுவையா சொல்லியிருக்கீங்க.
கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா என் பையன் காதுகுத்து விழாவுக்கு சரவணனையே 'புக்' பண்ணியிருப்பேன்!!
:)
-வினோ
நன்றி வினு
பதிலளிநீக்குஎன்னது மொய் எழுத வரணுமா ஆஹா கிளம்பிட்டாங்கையா நன்றி நிஜாமுதீன்
நன்றி வானதி
நன்றி கிரி
மீ எஸ்கேப் சும்மா சொன்னேன் ஹா ஹா நன்றி வினோ
நன்றி குமார் நீங்களும் நம்மள மாதிரியா same blood
பதிலளிநீக்குமெய்யான மொய்யப்பனா நீங்க,
பதிலளிநீக்குஎங்க நம்ம ஊரில நாலு காதுகுத்து, மூணு கல்யாணம் வச்சிருக்கிறாங்க, உங்க றேட்ட சொன்னீங்கென்னா புக் பண்ண சவ்கர்யமா இருக்கும் :-)
எங்க நம்ம ஊரில நாலு காதுகுத்து, மூணு கல்யாணம் வச்சிருக்கிறாங்க, உங்க றேட்ட சொன்னீங்கென்னா புக் பண்ண சவ்கர்யமா இருக்கும் :-)
பதிலளிநீக்குஎங்க நம்ம ஊரில நாலு காதுகுத்து, மூணு கல்யாணம் வச்சிருக்கிறாங்க, உங்க றேட்ட சொன்னீங்கென்னா புக் பண்ண சவ்கர்யமா இருக்கும் :-)
மீ எஸ்கேப்